Tuesday, April 20, 2010

மோடி அப்படி என்னதான் செய்தார்?

இப்போது ஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விவகாரம் லலித் மோடி ஊழல் (அல்லது ஏதோ சூதாட்டம்) செய்தமை தொடர்பான செய்திகள் தான்.
இன்று தினமலர் பார்த்தேன் (சென்னைப் பதிப்பு), முதற்பக்கத்தில் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது என்ற செய்திக்குரிய இடத்தைத் தவிர்த்து முதற்பக்கம் முழுதும் விளம்பரம் தவிர ஐபிஎல் விவகாரம் பற்றிய 2 செய்திகள் இருந்தன.
மோடிக்கெதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் என நான் ஊடகங்கள் மூலம் அறிவது ஊழல், வருமானவரிப் பிரச்சினைகள், கறுப்புப்பண முதலீடு, சூதாட்டம் அப்படி இப்படி என்று.

இது தொடர்பாக பதிவு போடாவிட்டால் என்னை பதிவராக மதிக்கமாட்டார்கள் என்பதால் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறேன்.

நான் ஒரு பெரும் ஜனநாய்க மன்னிக்கவும் ஜனநாயகவாதி என்பதைக் கருத்தில் கொண்டு இயலுமானவரை முழுமையாக வாசிக்கவும். ;)

ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட்டனவா?
ஒரு செய்தி உறுதிப்படுத்தப்பட முன்னர் அவை உறுதிப்படுத்தப்பட்ட மாதிரியன செய்திகளை எவ்வாறு வெளியிடலாம்?
They should talk about facts and truths, they shouldn't speculate anything. ;)
(ஆங்கிலப் பாவனைக்கு மன்னிக்கவும்)
முழுமையாக உறுதிப்படுத்தப்படாத ஒர செய்தியை ஊடக தர்மம் எதுவுமின்றி அதைப்பற்றி 'பிரக்ஞை' எதுவுமின்றி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு மோடி என்ற தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்? :D

ஏன் மோடி என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்கிறீர்கள்? (யாரது மக்களை ஏமாற்றுவது தனிப்பட்ட விடயமா எண்டு கேக்கிறது? நான் 5,6 பதிவு வாசிச்சன் நித்தியானந்தா விசயத்தில. அவங்க அப்பிடித்தான் சொன்னாங்க. கேள்வி கேட்கப்படாது. :P )
மோடி உங்களுக்கு ஐ.பி.எல் என்றொரு அருமையான அம்சத்தைத் தரவில்லையா?
உங்கள் வீட்டு வரவேற்பறைகளுக்குள் ஐ.பி.எல் வந்து ஆக்கிரமிக்கவில்லையா?

இப்படியான செய்திகள் வந்தவுடன் மோடி எதிர்ப்பாளர்களுக்குப் பெரிய கொண்டாட்டம். மோடியைப் போட்டுத்தாக்கி ருவிற்றரில், அப்பப்பா!, எத்தனை ருவீற்கள்? பேஸ்புக்கில் நக்கல்கள், இணையத்தளங்களில் எத்தனை செய்திகள்.
மோடியை விமர்சனம் செய்யுமளவிற்கு நீங்களெல்லாம் திறமானவர்களா? நீங்கள் உத்தமர்களா?

நான் மோடிக்கு எதிர்பும் இல்லை ஆதரவும் இல்லை.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே மோடியை நம்பவில்லை.
ஆனால் அதற்காக மோடி செய்த நல்லவைகள் இல்லையென்று ஆகிவிடுமா?

நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்களேன்?
நீங்கள் இதுவரை ஏமாந்ததே இல்லையா?
ஏன் இதை மட்டும் இவ்வளவுக்கு எதிர்க்கிறீர்கள்?
பிரபலங்களை எதிர்ப்பதன் மூலம் பிரபலமாக முற்படாதீர்கள்.

எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நீங்களும் எதிர்க்காதீர்கள். கிட்னியைப் பயன்படுத்தவும்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்.......


முக்கிய குறிப்பு: இது நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்ட சீரியஸ் இடுகைகளைப் போல இருப்பின் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. :D

முக்கிய குறிப்பு 2: இதை எழுதியது கன்கொன்/கோபி/கனககோபி என்று நினைத்தால் நினைத்துக் கொள்ளவும். :P

முக்கிய குறிப்பு 3: நான் மோடிக்கு உண்மையாகவே ஆதரவு தெரிவிக்கிறேன் என்று நினைத்தால் வைத்தியரை நாடவும். :)

11 பின்னூட்டங்கள்:

Anuthinan said...

அண்ணா மீண்டும் வந்து விட்டீர்கள் போல!!!

//நான் மோடிக்கு எதிர்பும் இல்லை ஆதரவும் இல்லை.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே மோடியை நம்பவில்லை.
ஆனால் அதற்காக மோடி செய்த நல்லவைகள் இல்லையென்று ஆகிவிடுமா?//

நான் இதை முழுமையாக ஏற்கிறேன் !!

//நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்களேன்?
நீங்கள் இதுவரை ஏமாந்ததே இல்லையா?
ஏன் இதை மட்டும் இவ்வளவுக்கு எதிர்க்கிறீர்கள்?
பிரபலங்களை எதிர்ப்பதன் மூலம் பிரபலமாக முற்படாதீர்கள்.//

இதை மட்டும் செய்ய சொல்லாதிர்கள் அண்ணா! இப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு எழுத விசயமே இருக்காது!! எம்ம்மவர் பண்பே இடம் கிடைத்தால் போட்டு தாக்குவதுதானே!!!


//முக்கிய குறிப்பு: இது நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்ட சீரியஸ் இடுகைகளைப் போல இருப்பின் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. :D//

:)

மருதமூரான். said...

வணக்கம் கோபி…..

இந்தியக் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கை பொது (தனி) நிறுவனமாக இந்திய மத்திய அரசு (எந்தவித தலையீடுகளும் இன்றி) செயற்பட அனுமதித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால், அதற்குள் நடக்கும் ஊழல்கள், குளறுபடிகள், வெட்டுக் குத்துக்கள் தொடர்பில் பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தொடர்ந்தும் அவதானங்களை செலுத்தி வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டதன் பலனே இவ்வாறு கோடிகளில், மில்லியன்களில் ஊழல்கள் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அதிக பணத்தை கொண்டிருக்கிற விளையாட்டு அமைப்புக்களில் முன்னணியில் இந்தியக் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இந்தியன் பிரீமியல் லீக் அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்களின் தலைவர் பதவிகளுக்கு தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முன்னணியிலுள்ளவர்கள் என்று பலரும் போட்டியிடுகின்றனர்.

அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதை விட இந்த அமைப்புக்களின் தலைவர் பதவிக்கு அதிக ஆர்வம் காட்டுவதில் இருந்தே இங்கே எவ்வளவு பணம் புளங்குகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தியக் கிரிக்கட்டும் கறுப்புப் பணம் புரளும் மைதானமாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

அத்துடன், இந்த அமைப்புக்களிலுள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதன் விளைவே இது. ஆகவே, இந்த நிறுவனங்களை அரசு தன்னுடைய மேற்பார்வையின் கீழ் சுயமாக செயற்பட அனுமதிப்பதே சிறந்தது. என்ன இருந்தாலும் ஊழல் என்பது குறையாது.

SShathiesh-சதீஷ். said...

//இது தொடர்பாக பதிவு போடாவிட்டால் என்னை பதிவராக மதிக்கமாட்டார்கள் என்பதால் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறேன்.//

இப்போ எல்லாம் பதிவு போடாமல் விட்டிட்டு அப்பப்போ பதிவு போடிறதுதான் ஜனநாயகமோ?

//முழுமையாக உறுதிப்படுத்தப்படாத ஒர செய்தியை ஊடக தர்மம் எதுவுமின்றி அதைப்பற்றி 'பிரக்ஞை' எதுவுமின்றி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு மோடி என்ற தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்? :D//

மோடி மாமாவிடம் தம்பிக்கு என்ன தீளின்க் ஏதும் ஐ.பி.எல் டீமா அல்லது மாமா?????????

//மோடி உங்களுக்கு ஐ.பி.எல் என்றொரு அருமையான அம்சத்தைத் தரவில்லையா?
உங்கள் வீட்டு வரவேற்பறைகளுக்குள் ஐ.பி.எல் வந்து ஆக்கிரமிக்கவில்லையா//

இதை ஏற்கத்தான் வேண்டும் ஆனால் ஐ.சி.எல்லை வேண்டுமென்றே பல்லுக்கழற்றியது ஏனோ?

//மோடியை விமர்சனம் செய்யுமளவிற்கு நீங்களெல்லாம் திறமானவர்களா? நீங்கள் உத்தமர்களா?//

ரொம்ப நாளாகவே எனக்குள் இப்படி ஒரு கேள்வி இருக்கு நீங்களே சொல்லுங்க

//நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்களேன்?
நீங்கள் இதுவரை ஏமாந்ததே இல்லையா?
ஏன் இதை மட்டும் இவ்வளவுக்கு எதிர்க்கிறீர்கள்?//

ஏமாற்றம் என்பதை விட நம்பிக்கை துரோகம் என்றே சொல்லலாம். காரணம் இத்தனை கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள் ஆக்கினால். நம் எதிர்ப்பை காட்டக்கூடிய இடத்தில் தானே காட்டலாம். இல்லாவிட்டால் நம் ஜனநாயக நாட்டில் நாங்கள் எப்படி வாழ்வது.....

//எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நீங்களும் எதிர்க்காதீர்கள். கிட்னியைப் பயன்படுத்தவும்.//

அட கான்கொன் என் கிட்னியை அண்டைக்கு கடன்வாங்கிட்டு இன்னும தரலையே அப்போ எப்படி நான் பாவிக்கிறது....

//முக்கிய குறிப்பு: இது நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்ட சீரியஸ் இடுகைகளைப் போல இருப்பின் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. //

நித்தியானந்தாவின் வழித்தோன்றல் பக்தன் கொள்கை பரப்புச் செயலாளர் கான்கொன் வாழ்க.

//முக்கிய குறிப்பு 2: இதை எழுதியது கன்கொன்/கோபி/கனககோபி என்று நினைத்தால் நினைத்துக் கொள்ளவும்//

அப்பு இதையும் மோடியே எழுதிக்கொடுத்திட்டாரா? ஐயோ ஐயோ

//முக்கிய குறிப்பு 3: நான் மோடிக்கு உண்மையாகவே ஆதரவு தெரிவிக்கிறேன் என்று நினைத்தால் வைத்தியரை நாடவும். ://

தம்பி முதலில உன்னை ஒரு சரியான வைத்தியரிட்ட காட்டனும் போல கிடக்கு.

கமல் said...

நான் ஒரு பெரும் ஜனநாய்க மன்னிக்கவும் ஜனநாயகவாதி என்பதைக் கருத்தில் கொண்டு இயலுமானவரை முழுமையாக வாசிக்கவும். ;)//



தலை இதிலை என்ன தற் புகழ்ச்சி வேறை..

கமல் said...

தம்பி முதலில உன்னை ஒரு சரியான வைத்தியரிட்ட காட்டனும் போல கிடக்கு//



இந்தக் கூற்றை ஆமோதிப்பதா? இல்லை மறுத்துரைப்பதா எனப் புரியவில்லை. சும்மா பம்பலுக்கு...

Karthik said...

எல்லாம் கெட்ட நேரம். நித்தியானந்தாவின் காலில் விழுந்தால் எல்லாம் சரியாகிடும். :))

கார்த்தி said...

நீண்ட காலத்துக்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன். என்னதான் இருந்தாலும் எண்ட அனுமதி இல்லாம என்ர பதிவை (http://vidivu-carthi.blogspot.com/2010/03/blog-post.html) உல்டா பண்ணி போடுறதுக்கு முன்னாலா என்னட்ட அனுமதி வாங்கியிருக்கோணும். :D நான் கோட்டில கேஸ் போட போறன். :P

ஏனய்யா சும்மா இருந்த என்னை வம்புக்கு இழுக்கிறியள். உங்கட பெரிய காமண்டுக்கு மறுபதில் அழிக்கவில்லை என்றா? பெரிய பதில் போட நேரம் கிடைக்கவில்லை.

எல்லோருமாகா மோடியை பொட்டுதாக்குவது சரியில்லை. அவர் நல்லவர் வல்லவர்.. Repeatuuuuuuuu Heeeee haaaaa

நிரூஜா said...

முடிவா நீங்க என்ன சொல்ல வாறீங்க...?

EKSAAR said...

//நான் ஒரு பெரும் ஜனநாய்க மன்னிக்கவும் ஜனநாயகவாதி //

I will always defend tht for u

தர்ஷாயணீ லோகநாதன். said...

சொல்லுறதுக்கென்ன....,சரியான பதிவு.....

கன்கொன் || Kangon said...

@Anuthinan

:D :D


@மருதமூரான் அண்ணா:
26ம் திகதிக்குப் பிறகு இது பற்றி சீரியஸாக எழுதலாம் என்று யோசிக்கிறேன்.
:)))

@ சதீஷ் அண்ணா:
பேச்சுப் பேச்சா இருக்கோணும்... ;)
நீங்கள் சீரியஸாப் பின்னூட்டினியளா இல்ல பகிடிக்கா எண்டு கண்டுபிடிக்க முடியேல...
கண்டுபிடிச்சதும் சொல்லுறன். ;)


@ கமல்:
ஹி ஹி...
நேற்றுத்தான் காட்டினன்...
திருத்தேலாது எண்டிற்றார்... ;)


@ கார்த்திக்:
ஹி ஹி...
26ம் திகதி பதவியிறக்கிறது மட்டுமா இல்லாட்டி நித்தியானந்தர மாதிரி அனுப்பிறதா? ;)


@கார்த்தி:
உங்கட பதிவ நான் உண்மையாவே பிரதி செய்யேல...
ஒரு 4,5 பதிவு வாசிச்சன், ஒரே மாதிரி.
அதில உங்கடயும் ஒண்டு. ஆனா இத எழுத எந்தப் பதிவையும் தனியா வாசிச்சு எழுதேல...
:)))
உண்மை...


@நிரூஜா:
அது தான் தெரியேல...
எனக்கு வேல இல்லை எண்டது தெரியும் தானே....? ;)


@எக்சார்:
:)))


@தர்ஷாயினி:
:)))
நீங்க நல்லவங்களா கெட்டவங்களா? ;)

வருகைக்கும் கருத்துக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வழமையைப் போல வெட்டி வேலையில் பிசியாக இருப்பதால் முன்பே பதில் போட முடியவில்லை...