Monday, June 14, 2010

கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?

நாங்கள் சில விடயங்கள கணக்கெடுக்காம விட்டுப் பழகின ஆக்கள்.
ஆனா இந்த ஆசியத் தொடரை கணக்கெடுக்காமல் விடப் போகிறோமா என்பது தெரியவில்லை.
உலகக்கிண்ண கால்பந்து சுற்றுத் தொடர் உலகம் முழுவதும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்க அண்மைக்காலமாக அதிகரித்துவிட்ட சுற்றுத் தொடர்கள் நடுவே இன்னொரு தொடராக இந்த ஆசியக் கிண்ண கிறிக்கற் தொடர் இலங்கையில் நடைபெறப் போகிறது.
அதுவும் தம்புள்ளை மைதானத்தில் மட்டும் இடம்பெறுகிறது, இரவு பகல் ஆட்டங்களாக.

இம்முறை ஆசியக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தானோடு பங்களாதேஷும் விளையாடுகிறது.

எல்லா அணிகளும் மற்றைய அணிகளோடு தலா ஒருமுறை விளையாடி பின்னர் அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் சந்திக்கப் போகின்றன..
15ம் திகதி ஆரம்பித்து 24ம் திகதி முடிவடைகிறது தொடர்.

அணிகளைப் பற்றிப் பார்க்க முதல் மைதானத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
தம்புள்ள மைதானத்தில் கடைசியாக பகலிரவுப் போட்டியொன்று இடம்பெற்றது 2007ம் ஆண்டு ஒக்ரோபர் 7ம் திகதியன்று.
இதுவரை மொத்தம் 13 பகலிரவு 50 பந்துப்பரிமாற்றப் போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.
6 போட்டிகள் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அணியால் வெல்லப்பட்டிருக்கின்றன, 7 போட்டிகள் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியால் வெல்லப்பட்டிருக்கின்றன.
ஆகவே நாணயச் சுழற்றி பெரியளவிற்கு தாக்கம் செலுத்தாது என்று நம்பலாம்.

தம்புள்ள மைதானத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில் ஜெயவர்தனவும், சங்கக்காரவும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் டில்ஷான் 6ம் இடத்தில் உள்ளார்.
 8ம் இடத்தில் மலிக், 9ம் இடத்தில் தரங்க மற்றும் 11ம் இடத்தில் டோணி ஆகியோர் உள்ளனர்.

அதிக விக்கற்றுக்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முரளி 1ம் இடத்திலும், மஹரூவ் இரண்டாவதாகவும், டில்ஷான் 5 ஆவதாகவும், துஷார 7 ஆவதாகவும், சமி, குலசேகர என்று வரிசை தொடர்கிறது.

அணிகளில் முக்கியம் பெறக்கூடிய வீரர்கள் என்று பார்த்தால்,
பாகிஸ்தானில் வழமையைப் போல அப்ரிடி முக்கியம் பெறலாம், ஆனால் அப்ரிடி எந்தளவுக்கு form இல் இருக்கிறார் என்பது சொல்ல முடியாத அளவில் இருக்கிறது.
மெதுவான ஆடுகளத்தில் அப்ரிடியால் பொறுமையாக ஆடமுடியா என்பது சந்தேகமே.
எனினும் உமர் அக்மல், பட் போன்றவர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் வாய்ப்புண்டு.
ஆனால் பாகிஸ்தான் கிறிக்கற்றில் என்ன நடக்கும், நடக்கிறது என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது.
சொய்ப் அக்தர் வேறு அணிக்குத் திரும்புகிறார், அணியில் புத்துணர்ச்சி ஏதும் கிடைத்து சிறப்பாக ஆடுகிறார்களா பார்ப்போம்.

பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பாலின் form பெரிய பலம்.
தமிம் இக்பால் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் அவர்களது ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்களால் வெற்றிகளைப் பெறமுடியும்.
கடந்த இங்கிலாந்துடனான ரெஸ்ற் தொடரில் ஷகிப் அல் ஹசன் பெரிதாக துடுப்பில் பிரகாசிக்காதது அணிக்கு பின்னடைவு.
அஷ்ரபுல்லிற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகவும் இந்தத் தொடர் அமையலாம்.
ஆகவே அஷ்ரபுல் என்ன செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

இந்திய அணி விமர்சனங்களை துடைத்தெறிய பயன்படுத்தக்கூடிய தொடர்.
சச்சின் இல்லாமல் அணி இலங்கை வருகிறது.
ஹர்பஜன் சிங் இன் சுழற்பந்து வீச்சு முக்கியமானதாக அமையலாம்.
அத்தோடு சுரேஸ் ரெய்னா, விராத் கோலி போன்ற இளையவர்களும் சாதிக்க வாய்ப்புண்டு.

இலங்கை அணி சனத் ஜெயசூரியவையும், அஜந்த மென்டிஸ் ஐயும் கழற்றிவிட்டிருக்கிறது.
டில்ஷானின் சரியான நேரத்தில் கிடைத்த form, மஹேல உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் ஆரம்பப் போட்டிகளில் காட்டிய திறமை, சங்கக்கார போன்றவர்கள் முக்கியமானதாக அமையலாம்.
அத்தோடு நீண்ட காலத்திற்குப் பிறகு 50 பந்துப் பரிமாற்றப் போட்டியொன்றை விளையாட ஹேரத்திற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்றும், அப்படிக் கிடைத்தால் என்ன செய்கிறார் என்பதும் சுவாரசியமாக இருக்கும்.

மொத்தத்தில் 4 அணிகளும் ஏதோ ஒரு வகையில் பரீட்சார்த்தத்தில் ஈடுபடுகின்றன, அத்தோடு உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து அணித் தெரிவுகளில் வெட்டுக்கள் செய்ய, இணைப்புக்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றன.

பெரியளவுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாத தொடராக இருந்த போதிலும், உலகக்கிண்ண (கிறிக்கற் உலகக் கிண்ணம்) தயார்படுத்தல்களுக்கு அணிகள் பயன்படுத்தக் கூடிய தொடராக அமையப் போகிறது.

எந்த அணி வெல்லும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற வரிசையில் வெற்றிவாய்ப்புக்களை நான் வழங்குகிறேன்.


இந்தத் தொடரை கணக்கெடுக்கப் போகிறோமா இல்லை கால்பந்தைப் பார்த்து கணக்கெடுக்கவே மாட்டம் இந்தத் தொடரை என்று சொல்லப் போகிறோமா?
கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?
ஆம் என்கிறேன் நான்....
நல்ல தொடரை எதிர்பார்க்கிறேன்... :)

************************************************************************

திரையுலகிற்கு பதிவர்கள் வழங்கும் விருதுகள் என்ற பெயரில் உங்கள் விருப்புக்குரிய நட்சத்திரங்களைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பொன்றை நண்பர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
எதிர்வரும்  வெள்ளிக்கிமை இரவோடு வாக்களிப்பு நிறைவுபெற இருப்பதால் இதுவரை வாக்களிக்காத நண்பர்கள் விரும்பின் இங்கே சென்று உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்....

22 பின்னூட்டங்கள்:

Bavan said...

//இலங்கை அணி சனத் ஜெயசூரியவையும், அஜந்த மென்டிஸ் ஐயும் கழற்றிவிட்டிருக்கிறது.//

I like this..:)

வாழ்க கிறிக்கற் அனலைஸ்ட் கன்கொன்..:P

Subankan said...

நான் கணக்கெடுக்க‍போவதில்லை.

உலக்க‍கிண்ண‍க் கால்ப்ப‍ந்துப்போட்டிகள்தான் பார்க்க‍ப்போகிறேன்.

Bavan said...

நான் கிறிக்கற்டைத்தான் கணக்கெடுப்பேன்..

// Subankan said...

நான் கணக்கெடுக்க‍போவதில்லை.//

தகவலுக்கு நன்றி..:P

Anonymous said...

//"கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?"//

நீங்கள் நமீதாவை "கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?"

Anuthinan said...

அண்ணே நான் இந்த போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் போகிறேன் (உதைபந்தாட்டம்தான் தெரியாதே :P)

LOSHAN said...

எவ்வளவு முக்கியமான வேலையெல்லாம் இருக்கு.. உதை சும்மா பார்த்திட்டு கணக்கெடுக்காமல் விட்டிடனும் தம்பி..
ஒவ்வொரு வருஷமும் தானே நடக்குது..
இவங்களுக்கு வேற வேலை இல்லை.

இதே நாலு பேர் எத்தனை தரம் தங்களுக்குள்ளேயே விளையாடுவான்கள்.

நிறையப் பேர் பார்க்கிற இதை விட முக்கியமான கால்பந்து உலகக் கிண்ணம் தான் பார்ப்பேன்.

LOSHAN said...

எவ்வளவு முக்கியமான வேலையெல்லாம் இருக்கு.. உதை சும்மா பார்த்திட்டு கணக்கெடுக்காமல் விட்டிடனும் தம்பி..
ஒவ்வொரு வருஷமும் தானே நடக்குது..
இவங்களுக்கு வேற வேலை இல்லை.

இதே நாலு பேர் எத்தனை தரம் தங்களுக்குள்ளேயே விளையாடுவான்கள்.

நிறையப் பேர் பார்க்கிற இதை விட முக்கியமான கால்பந்து உலகக் கிண்ணம் தான் பார்ப்பேன்.

மருதமூரான். said...

கால்பந்தாட்ட பருவ காலத்தில் பணமழை கொட்டும் கிரிக்கட்டுக்கே ஈயாட்டமா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டென்று இதைத்தான் சொன்னாங்களோ?!

ஆதிரை said...

பாகிஸ்தான் இருக்கல்லோ...

ஏதும் குழப்படி செய்து தடை உத்தரவெல்லாம் வாங்கிப் போவாங்கள்.

அதற்காகவேனும், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Karthik said...

நான் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்தத் தமிழ்.. சான்ஸே இல்லை. அடிக்கடி எழுதுங்களேன். :)

நான் வெட்டியாதான் இருக்கேன். புட்பால் கிரிக்கெட் ரெண்டையும் பார்ப்பேன். :)

யோ வொய்ஸ் (யோகா) said...

கிரிக்கட் போட்டியா? எங்க நடக்குது?

கன்கொன் || Kangon said...

@Bavan:

// I like this..:) //

Me too... ;)

// வாழ்க கிறிக்கற் அனலைஸ்ட் கன்கொன்..:P //

ஆங்... :@
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பவன்...

கன்கொன் || Kangon said...

// Subankan said...

நான் கணக்கெடுக்க‍போவதில்லை. //

ஹி ஹி...
நானும் அப்பிடித்தான் நினச்சன், ஆனா கணக்கெடுப்பன் போல கிடக்கு... ;)

// உலக்க‍கிண்ண‍க் கால்ப்ப‍ந்துப்போட்டிகள்தான் பார்க்க‍ப்போகிறேன். //

பாருங்கோ பாருங்கோ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுபா அண்ணா... :)


// Bavan said...

நான் கிறிக்கற்டைத்தான் கணக்கெடுப்பேன்.. //

நானும்... ;)

//

தகவலுக்கு நன்றி..:P //

பகிர்விற்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

நான் கிரிக்கெட்டும் கால்ப்பந்தும் மாறி மாறி பார்ப்பேன்...ஹீ ஹீ ஹீ ஹீ நான் சச்சின் இல்லை....இரண்டையும் ஒரே நேரம் பார்க்கும் ஐடியா. இம்முறை ஒரு போட்டியை நேரே பார்க்கலாம் என்றால் வச்சிட்டான்கையா ஆப்பு

shan shafrin said...

வெட்டியா தானே இருக்கம்..... இரண்டையும் பார்க்க வேண்டியதுதான்..... இலங்கை அணிக்கு வாய்ப்பு அதிகம் என்பது உண்மை..... :)

கன்கொன் || Kangon said...

@Anonymous:
//
நீங்கள் நமீதாவை "கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?" //

Sorry, wrong number...


@ Anuthinan

// அண்ணே நான் இந்த போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் போகிறேன் (உதைபந்தாட்டம்தான் தெரியாதே :P) //

என் இனமடா நீ...
ஹி ஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுதினன்...


@Loshan anna:

// எவ்வளவு முக்கியமான வேலையெல்லாம் இருக்கு.. உதை சும்மா பார்த்திட்டு கணக்கெடுக்காமல் விட்டிடனும் தம்பி.. //

சரியண்ணா...
பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடக்கிறோம். ;)


// ஒவ்வொரு வருஷமும் தானே நடக்குது..
இவங்களுக்கு வேற வேலை இல்லை. //

ஒவ்வொரு வருஷமுமா இதச் செய்யிறாங்கள்?
இந்த வருசம் தான் நான் ஆவலோட பாக்கிறன் அதாவது பார்க்கப் போறன். ;)


// இதே நாலு பேர் எத்தனை தரம் தங்களுக்குள்ளேயே விளையாடுவான்கள். //

3 பேர் 4 பேர் ஆகீற்றாங்களா? :P
ஓ! பங்களாதேஷும் என? ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா... :)

கன்கொன் || Kangon said...

// மருதமூரான். said...

கால்பந்தாட்ட பருவ காலத்தில் பணமழை கொட்டும் கிரிக்கட்டுக்கே ஈயாட்டமா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டென்று இதைத்தான் சொன்னாங்களோ?! //

என்னைப் போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை.... :)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா... :)


// ஆதிரை said...

பாகிஸ்தான் இருக்கல்லோ...

ஏதும் குழப்படி செய்து தடை உத்தரவெல்லாம் வாங்கிப் போவாங்கள்.

அதற்காகவேனும், பார்த்துக் கொண்டிருக்கிறேன். //

ஆகா....
கிறிக்கற் பார்க்கும் இளையவர் வாழ்க... ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரை அண்ணா... :)

கன்கொன் || Kangon said...

@ Karthik

//நான் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்தத் தமிழ்.. சான்ஸே இல்லை. அடிக்கடி எழுதுங்களேன். :) //

இது சாதாரண தமிழ் சகா...
இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. :)
என்றாலும் நன்றி. :P

// நான் வெட்டியாதான் இருக்கேன். புட்பால் கிரிக்கெட் ரெண்டையும் பார்ப்பேன். :) //

நானும் வெட்டி தான்,
ஆகா எனக்கு கால்பந்து தெரியாதே...
ஹி ஹி..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக்.. :)))


@ யோ வொய்ஸ் (யோகா) said...

// கிரிக்கட் போட்டியா? எங்க நடக்குது? //

பதிவு வாசிக்கேலயா....
ஹி ஹி ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோ அண்ணா... :)))

கன்கொன் || Kangon said...

@ SShathiesh-சதீஷ்

// நான் கிரிக்கெட்டும் கால்ப்பந்தும் மாறி மாறி பார்ப்பேன்...ஹீ ஹீ ஹீ ஹீ நான் சச்சின் இல்லை....இரண்டையும் ஒரே நேரம் பார்க்கும் ஐடியா. //

:)))


// இம்முறை ஒரு போட்டியை நேரே பார்க்கலாம் என்றால் வச்சிட்டான்கையா ஆப்பு //

ஹி ஹி...
ம்...
கொழும்பில அடுத்த போட்டி யூலை 18 இல தான்... :(

பார்ப்போம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ் அண்ணா... :)))


@ shan shafrin

// வெட்டியா தானே இருக்கம்..... //

என்னைப் போல நிறையப் பேரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி... ஹி ஹி...

// இரண்டையும் பார்க்க வேண்டியதுதான்..... //

:)))

// இலங்கை அணிக்கு வாய்ப்பு அதிகம் என்பது உண்மை..... :) //

பார்ப்போம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி shan shafrin...

என்.கே.அஷோக்பரன் said...

when there is football worldcup going on, It'll be my least option to watch this cricket tournament!

Waka Waka - this time it's Africa!

Nbavan7 said...

:)

மங்குனி அமைச்சர் said...

ஆஹா , அருமையான இலங்கை தமிழ் , எனக்கு ரொம்ப பிடிக்கும் , இன்னும் கொஞ்சம் சுத்த இலங்கை தமிழில் கதையுங்கள் , நாங்களும் கத்துகிர்றோம்