Friday, July 16, 2010

அண்ணன் தம்பிச் சண்டை திரும்பவும்....

அண்ணன் தம்பிகள் ( © லோஷன் அண்ணா) திரும்பவும் சந்திக்கிறார்கள்.
அலுத்தேபோய்விட்ட இவர்களுக்கிடையிலான போட்டிகளின் நடுவே ரெஸ்ற் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
ரெஸ்ற் போட்டிகள் ஒருநாள் போட்டிகளளவிற்கு அலுப்பை தராது என்பது ஒருபுறமிருக்க, முரளிதரனின் ஓய்வு அறிவிப்பு தொடரை ஓரளவுக்கு கவனிக்கப்படும் தொடராக மாற்றியுள்ளது என்பது யதார்த்தம்.
2008ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதியிலிருந்து இவ்விரு அணிகளும் 41 சர்வதேசப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.
6 ரெஸ்ற் போட்டிகள், 4 சர்வதேச இருபதுக்கு இருபதுப் போட்டிகள் பரவாயில்லை என்றால் 31 ஒருநாள் போட்டிகள் தான் சலிப்பை அதிகரித்தன என்பது உண்மை.

பழையன எல்லாம் ஒருபுறமிருக்க,
முதலாவது ரெஸ்ற் போட்டி எதிர்வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை காலியில் நடைபெற இருக்கிறது.
முரளிதரனின் கடைசிப் போட்டியாக இந்தப் போட்டி இடம்பெற இருப்பதால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு, ஆகக்குறைந்தது உணர்வுகள் ரீதியாகவாவது.

ஆனால் இவற்றைத்தாண்டி, இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

இந்திய அணி வழமைக்கு மாறாக ஏதோ இரண்டாம்தர அணி போல் காட்சியளிக்கிறது.
ஷகீர்கான் என்ற ஒருவர் இல்லையென்றவுடன் அணியின் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படுகிறது.
ஷகீர்கானிற்கு மாற்றாக களமிறங்குவார் என்று கருதப்பட்ட ஸ்ரீசாந் உம் விளையாட முடியாமல் போக இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமற்றதாகக் காட்சியளிக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யாரென்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.
பயிற்சிப் போட்டியில் விளையாடிய மிதுன் விளையாடுவாரா அல்லது முனாப் பட்டேல் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

ஆனால் அதையும் தாண்டி ஹர்பஜன் சிங் இன் உடல்நலக்குறைவு, இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட வேண்டியவர்களான அமித் மிர்ஷா அல்லது பிரக்ஜான் ஒஜ்ஜா ஆகியோர் பயிற்சிப் போட்டியில் இலங்கையின் பதினொருவர் அணியை பெரிதாக அச்சுறுத்தாதது கவலை தந்திருக்கும்.
எனினும் ஒஜ்ஜா விளையாடுவது அவரால் கைப்பற்றப்பட்ட விக்கற்றுகளால் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.




ஆனால் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் அவர்களுக்கு சிறிது கவலையை அளித்திருக்கும்.
மென்டிஸை சிறப்பாக கையாளுவோம் என்று சொல்லிவிட்டு வந்து மென்டிஸூக்கு 6 விக்கற்றுகளை வாரிவழங்கியதை விரும்பியிருக்க மாட்டார்கள்.
எனினும், லக்ஸ்மன், ரெண்டுல்கர், ட்ராவிட் போன்றவர்கள் நிறைய நாட்களுக்குப் பிறகு சர்வதேச வீரர்களை எதிர்கொண்டதால் சிறிது தடுமாறியிருக்கலாம்.
அத்தோடு முக்கியமாக யுவ்ராஜ் சிங் இன் அதிரடி அவர்களுக்கு பெரிய நிம்மதியை வழங்கியிருக்கும். குறித்த form ஐ, அதிரடியை ரெஸ்ற் போட்டிகளில் யுவ்ராஜ் வழங்கினால் இந்திய அணி பிரச்சினைகளில் மாட்டாது.
எனவே ரெஸ்ற் போட்டிகளில் பயிற்சிப் போட்டியை விட சிறந்த துடுப்பாட்டத்தை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்பலாம்.

இந்திய அணித் தெரிவுகளில் பெரிதாக வியப்புக்கள் இருக்க வாய்ப்புக்கள் இல்லை.
செவாக், ஹம்பீர், ட்ராவிட், சச்சின், லக்ஸ்மன், யுவ்ராஜ், டோணி, ஹர்பஜன், இசாந், மிதுன்/முனாப் , ஒஜ்ஜா

இலங்கை அணி ஒப்பீட்டளவில் குழப்பங்கள் குறைந்த அணியாகத் தென்பட்டாலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியின்மையை வெளிப்படுத்திவரும் நிலையைக் குறைக்க முயற்சி செய்வார்கள்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான தொடர்ச்சியாக நல்ல ஆரம்பங்களைப் பெற்றுவந்தாலும் இன்னும் பெரிய ஓட்டமொன்றை பெறாமையும், உபுல் தரங்க பயிற்சிப் போட்டியில் அடித்தாடி ஓட்டங்களைக் குவித்தமையும் தரங்க பரணவிதானவிற்கு அழுத்தங்களை வழங்கும்.
இந்தத் தொடரில் பரணவிதானவிற்கு ஆப்பு வைக்காதுவிடினும், இனிவரும் தொடர்களில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் பரணவிதானவிற்கு உண்டு.

அடுத்தது தினேஷ் சந்திமாலின் எழுச்சி.
உலகின் மிகச்சிறந்த விக்கற் காப்பாளர் என்று சங்கக்காரவால் பிரசன்ன ஜெயவர்தன புகழப்பட்டாலும் அவரது துடுப்பாட்டம் பெரும்பாலும் அணிக்கு பெரிதாகத் தேவைப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படும் நிலைமைகளில் தேவைப்பட்ட அளவிற்கு கொடுத்திருக்கிறாரா என்பது கேள்விக்குரியதே.
எனினும் இந்தியாவுக்கு எதிராக அண்மையில் அஹமதாபாத் இல் பெற்ற 154 ஓட்டங்கள் உடனடியாக அழுத்தங்கள் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றும் என்றாலும் தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராக வெளிக்காட்டாவிடில் இன்னும் சில வருடங்களில் சந்திமாலிடமிருந்து நிச்சயமாக அழுத்தங்களை எதிர்கொள்வார்.
இலங்கை கிறிக்கற் சபையும் சந்திமாலை ஆசியக்கிண்ணத்தொடரில் விளையாட விடாமல் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி தாங்கள் சந்திமாலை நீண்டகாலத்திற்குரிய ஒருவராக வளர்க்க விரும்புகிறோம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆகவே இப்படியான இலகுவான தொடர்களில் தன்னை துடுப்பாட்ட ரீதியாக வளர்த்துக்கொள்ள பிரசன்னவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


அடுத்தது வேகப்பந்து வீச்சாளர்கள்.

தம்மிக்க பிரசாத், மலிங்க, சானக வெலகதர, டில்ஹார பெர்ணான்டோ என்று நால்வர் இரு இடங்களைப் பிடிப்பதற்காக...
இதில் தம்மிக்க பிரசாத் இந்தியாவுக்கெதிராக 2 ரெஸ்ற் போட்டிகளை விளையாடி அதில் செவாக் ஐ இருமுறையும், ட்ராவிட், ரெண்டுல்கர், லக்ஸ்மன், ஹம்பீர், டோணி ஆகிய முன்னணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.

மறுபுறத்தில் சானக வெலகதர இந்தியாவிற்கெதிராக இந்தியாவில் தட்டையான ஆடுகளங்களில் ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்.

மறுபுறத்தில் டில்ஹார பெர்னாண்டோ இந்தியாவில் IPL போட்டிகளில் அசத்தாலாகப் பந்துவீசியமையால் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இப்போது ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார்.
பழைய டில்ஹார பெர்னாண்டோவாக அவரால் வலம்வரமுடியுமா என்பது கவனிப்புக்குரியது.

அடுத்தது லசித் மலிங்க.
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் கலக்கியமையால், தன் உடற்தகுதியை நிரூபித்ததால் ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் எப்படிப் பந்துவீசுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
இருபதுக்கு இருபது போட்டிகள் போலவோ அல்லது கடைசிநேரப் பந்துவீச்சுகள் போலவோ yorker களையும், slower ball களையும், slower bouncer களையும், bouncer களையும் வைத்து தனியே ரெஸ்ற் போட்டிகளில் காலமோட்டிவிட முடியாது.
மலிங்கவின் out-swinger கள் எந்தளவிற்கு சிவப்புப் பந்தில் வேலைசெய்கிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.

இந்த 4 பேரில் மலிங்க நிச்சயமாக விளையாடுவார்.
பெர்னாண்டோ விளையாட வாய்ப்புக்குறைவு.
பிரசாத்திடம் போவார்களா, வெலகெதரவிடம் போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து வெலகெதரவிடம் போவார்கள் என்று நினைக்கிறேன். இடது- வலது கைப்பந்துவீச்சாளர்கள் என்ற வி்த்தியாசமும், ஸ்விங்-வேகம் என்ற வித்தியாசத்தையும் ஏற்படுத்த வெலகெதர, மலிங்க ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்புகள் உண்டு.

சுழற்பந்துவீச்சில் முரளி, ஹேரத் ஆகியோர் களமிறங்குவர் என்று நினைக்கிறேன்.
முரளி நிச்சயம், ஹேரத்தை முந்தி முதலாவது போட்டியில் சுராஜ் ரந்திவ் களமிறங்க வாய்ப்புகள் இல்லை.
இரண்டாவது போட்டியில் மென்டிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டால் சுராஜ் ரந்திவா, மென்டிஸா என்ற கேள்வி எழும்.
சுராஜ் ரந்திவ் விளையாடுவதை நான் விரும்புகிறேன், ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியமையால் ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் மஹ்ரூவ் இற்கு வாய்ப்புக் கொடுத்து அடிவாங்கியதை இலங்கை கிறிக்கற் தேர்வுக்குழு மறக்காது என்று நம்புகிறேன்.

எனது தெரிவுகள்.

துடுப்பாட்டம் -இலங்கை - டில்ஷான் - இந்தியாவின் ஆரம்பப்பந்து வீச்சாளர்களின் சறுக்கல்கள் டில்ஷானிற்கு பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன்.

துடுப்பாட்டம் - இந்தியா - ட்ராவிட் அல்லது லக்ஸ்மன்.

பந்துவீச்சு - இலங்கை - ஹேரத்

பந்துவீச்சு - இந்தியா - ஹர்பஜன்

மொத்தத்தில் இலங்கைக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த சிறந்த ரெஸ்ற் முடிவுகளில் ஒன்றாக இது மாற வாய்ப்புகள் அதிகம்.
காலி - இலங்கை வெற்றிபெறுமென நினைக்கிறேன்.

காலி ஆடுகளம் - கடந்த முறை இலங்கை பாகிஸ்தானை 4ஆவது இனிங்ஸ் இல் புரட்டியெடுத்த மைதானம்.
ஸ்விங் கிடைத்திருந்தது, வழமையைப் போல் ஸ்பின் உம் கிடைக்கும்.
முதலாவதாகத் துடுப்பெடுத்தாடுவது வெற்றிபெற வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இலங்கை வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது.
இரு அணிகளும் உச்சபட்ட திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.



மில்லியன் டொலர் கேள்வி: முரளி 8 விக்கற்றுகளை எடுத்து 800 விக்கற்றுகள் என்ற மைல்கல்லை அடைவாரா?
என் பதில்: அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.


படங்கள்: நன்றி கிறிக்கின்போ

17 பின்னூட்டங்கள்:

Subankan said...

:)))

SShathiesh-சதீஷ். said...

என்னது கான்கொன் ஒரே மாதத்தில் இரண்டு பதிவா. இதை வன்மையாய் கண்டிக்கிறேன். அதுவும் கிரிக்கெட் பதிவா? அப்புறம் எந்த அணி வென்றாலும் நீங்கள் சொன்னது போல போட்டி விறு விருப்பாய் இருந்தால் சரி. முரளி எட்டு விக்கெட்டுக்கள் எடுக்க வாழ்த்துக்கள்.

வதீஸ்-Vathees said...

தகவலுக்கு நன்றி ஆனாலும் மாதத்திற்கு ஒருதடவை பதிவிடுவேன் என்ற ஒப்பந்தத்தை மீறியபடியால் கங்கோனின் இந்த இரண்டாவது பதிவை கண்டிக்கிறேன்.

Anuthinan S said...

கோபி அண்ணா நல்ல அலசல் பதிவு!!

//மலிங்கவின் out-swinger கள் எந்தளவிற்கு சிவப்புப் பந்தில் வேலைசெய்கிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.//

எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு இந்த போட்டியில் out-swinger வேளை செய்ய அதிக வாய்ப்பு இல்லை!! நிகழ்ந்தால் ஆச்சரியம்!

//பிரசாத்திடம் போவார்களா, வெலகெதரவிடம் போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.//

எனக்கும் வேலகேதர தான் சாய்ஸ்

//முரளி நிச்சயம், ஹேரத்தை முந்தி முதலாவது போட்டியில் சுராஜ் ரந்திவ் களமிறங்க வாய்ப்புகள் இல்லை//

சங்ககார சுராஜ்க்கு கேரத்தை விட முக்கியத்துவம் வழங்குவாரோ!! என்று எண்ண தோன்றுகிறது!


//மில்லியன் டொலர் கேள்வி: முரளி 8 விக்கற்றுகளை எடுத்து 800 விக்கற்றுகள் என்ற மைல்கல்லை அடைவாரா?
என் பதில்: அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.//

அடைய சாத்தியங்கள் இருக்கிறது!!! ஆனால், கொஞ்சம் கஸ்டபட வேண்டியிருக்கும்!!!


போட்டிகளில் சுவாரசியம் எப்போது வருமென்றால் இலங்கை தவறுகளை செய்யும் போதுதான் வரும் என்று நினைக்கிறேன்

Karthikeyan G said...

சேவாக் சேவாக் என்று ஒருத்தர் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.. இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறாரா? இல்லை நுவான் குலசேகராவுக்கு பயந்து ரிட்டையர் ஆகிவிட்டாரா.. அவரைப் பத்தி ஒன்னுமே சொல்லலேயே அதுனால கேட்டேன். :-))

கன்கொன் || Kangon said...

// Karthikeyan G said...

சேவாக் சேவாக் என்று ஒருத்தர் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.. இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறாரா? இல்லை நுவான் குலசேகராவுக்கு பயந்து ரிட்டையர் ஆகிவிட்டாரா.. அவரைப் பத்தி ஒன்னுமே சொல்லலேயே அதுனால கேட்டேன். :-)) //

உங்க நாட்டில சச்சின் சச்சின் எண்டொரு சாதனையாளர் இருக்காரே, அவர் கூட ஓய்வு பெற்றிற்றாரா?
அவரக்கூடத்தான் குறிப்பிடேல, நீங்கள் கேக்கேல...

சங்கக்கார கூட ஓய்வா?
மஹேல?
சமரவீர?

தர்ஷன் said...

அருமையான அலசல்
முரளி 800 எடுக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். விக்கெட் காப்பாளராக இருந்தும் துடுப்பாட்ட வீரராக டெஸ்ட் போட்டிகளில் பிரசன்னா போதிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்றே கருதுகிறேன். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை வாசுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமான ஒருவர் இதுவரை சிக்கவில்லை என்பதே என் கருத்து.

வந்தியத்தேவன் said...

தகவலுக்கு நன்றி

LOSHAN said...

அருமையான ஆய்வு +முன்னோட்டம்..

அனேக விஷயங்களை ஆமோதிக்கிறேன்..

அண்ணன் தம்பிகள் ( © லோஷன் அண்ணா)// :) :)


இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.//
இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு..
சாகிர் இல்லாத இந்தியாவும் முரளி இல்லாத இலங்கையு தம் வலிமையை காட்ட அதிக மும்முரத்தொடு மோதும் என நம்புகிறேன்.


முனாப் விளையாடுவார் என்பது மிதுனுக்கு விழுந்த அடியிலேயே தெரிகிறது.. ஐ ஜாலி.. :)


ரெஸ்ற் போட்டிகளில் பயிற்சிப் போட்டியை விட சிறந்த துடுப்பாட்டத்தை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்பலாம்.//
சர்வ நிச்சயம்,. இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது


தம்பி, பிரசன்னா ஜயவர்தனவின் பெயர் விடுபட்டுவிட்டது போல.
என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு சந்டிமாலை டெஸ்ட் களத்தில் இறக்கும் முட்டாள் தனத்தை அரவிந்த தலைமையிலான தேர்வாளர் குழு செய்யாது என்றே நினைக்கிறன்.

பிரசன்னா தேவை ஏற்படும் நேரங்களில் சதமடித்தும் இருக்கிறார்.
டெஸ்டில் அத்தனை நீண்ட துடுப்பாட்ட வரிசை தேவையா?

My SL Team =
Dilshan, Paranavitharana,Sanga, Mahela,Samaraweera, Mathews, P.Jayawardene,Murali, Malinga,Welagedara & Herath.

ஹேரத் தான் விளையாடுவார். கரணம் இடது கை சுழல் பந்துவீச்சாளர். ரண்டீவும் முரளியும் off spin.
வேலாவும் அதே காரணம் தான்.

முரளி - அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.//
அதே அதே..

காலியில் கங்கோனைப் போலவே நானும் இலங்கை வெல்லும் என்கிறேன் :)

ஹீ ஹீ.. விக்கிரமாதித்தன்

LOSHAN said...

சேவாக் நீண்டகால மௌனத்துடன் இருக்கிறார். இது இலங்கையைப் பொறுத்தவரை ஆபத்தானதே. எரிமலையின் உறக்கம் போன்றது இது. இலங்கை சார்பில் மகெலவை எதிர்பார்க்கிறேன்.
அவரது ராசியான மைதானமன்றோ?

முரளி - அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.//
அதே அதே..

காலியில் கங்கோனைப் போலவே நானும் இலங்கை வெல்லும் என்கிறேன் :)

ஹீ ஹீ.. விக்கிரமாதித்தன்

கன்கொன் || Kangon said...

// தம்பி, பிரசன்னா ஜயவர்தனவின் பெயர் விடுபட்டுவிட்டது போல. //

ஆமாம்.
உலகின் மிகச்சிறந்த விக்கற் காப்பாளர் என்று குமார் சங்கக்காரவால் பிரசன்ன புகழப்பட்டாலும் என்று எழுதியிருக்க வேண்டும்.
திருத்தி விட்டேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணா. :)


// என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு சந்டிமாலை டெஸ்ட் களத்தில் இறக்கும் முட்டாள் தனத்தை அரவிந்த தலைமையிலான தேர்வாளர் குழு செய்யாது என்றே நினைக்கிறன். //

உண்மை.
ஆனால் நீண்ட கால நோக்கில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பிரசன்னவிற்கு தேவைப்பாடும் இருக்கிறது.
சந்திமால் சிறந்த விக்கற் காப்பாளரும் கூட.

இப்போது தான் கவனித்தேன்.
பிரசன்னவிற்கு 30 வயது. :D
நான் நினைத்ததை விட வயது அதிகம். ;)
என்றாலும் 35 வயதுவரை விளையாட நினைத்தால் நிச்சயம் சந்திமாலிடமிருந்து அழுத்தங்கள் வரும் என்கிறேன் நான். :D

Bavan said...

நல்ல அலசல்,

எனக்குத்தெரிந்து இப்போது இலங்கை அணியில் யாரை அணியில் போடுவது என்பதே பிரச்சினையாக இருக்கும்.

அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த சிறந்த அணிக்கு சகீர்கான், ஹர்பஜன் போன்ற சிறந்த சமபலம் வாய்நத வீரர்கள் இல்லாதது கவலைதான்.

முனாப் பட்டேல் போன்றோரின் வேகப்பந்து வீச்சை ரசிக்கமுடியாது.

//மென்டிஸை சிறப்பாக கையாளுவோம் என்று சொல்லிவிட்டு வந்து மென்டிஸூக்கு 6 விக்கற்றுகளை வாரிவழங்கியதை விரும்பியிருக்க மாட்டார்கள்.//

ஆங்.. ஆனால் மஹ்ருப் ஹட்ரிக் எடுத்த பிறகு அவரை இறுதிப்போட்டியில் இணைத்து வாங்கிக்கட்டியதை இலங்கை மறக்காது என நினைக்கிறேன்.

ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக தயாரிக்கப்படுவதாக எங்கோ படித்த ஞாபகம் எனவே சிலவேளை மென்டிஸ் 11 பேருக்குள் விளையாடுவாரோ??

//மில்லியன் டொலர் கேள்வி: முரளி 8 விக்கற்றுகளை எடுத்து 800 விக்கற்றுகள் என்ற மைல்கல்லை அடைவாரா?//

அடைவார் அடைவார் அடைவார்..:D

Bavan said...

@LOSHAN அண்ணா -

//காலியில் கங்கோனைப் போலவே நானும் இலங்கை வெல்லும் என்கிறேன் :)//

ஏன் இந்தக்கொலைவெறி??? கிர்ர்ர்ர்ர்

சிபி.செந்தில்குமார் said...

நல்ல தலைப்பு,அனுபவத்துடன்கூடிய அலசல்

கன்கொன் || Kangon said...

சிரிப்பான்களுக்கும், தகவலுக்கு நன்றிகளுக்கும், கண்டிப்புகளுக்கும் நன்றி....

தொடர்ந்தும் வருக.


@அனுதினன்:

// எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு இந்த போட்டியில் out-swinger வேளை செய்ய அதிக வாய்ப்பு இல்லை!! நிகழ்ந்தால் ஆச்சரியம்! //

இல்லை.
அப்படி வெறுமனே சொல்ல முடியாது.
ஆசியக்கிண்ணத் தொடரில் மலிங்கவின் பந்துவீச்சு முன்பைவிட நன்றாக மெருகேறியிருந்தது.
எவ்வளவு தூரம் தன்னை ரெஸ்ற் இற்காக மாற்றிக் கொள்கிறார் என்பதே என் கேள்வி.


// சங்ககார சுராஜ்க்கு கேரத்தை விட முக்கியத்துவம் வழங்குவாரோ!! என்று எண்ண தோன்றுகிறது! //

சாத்தியம் மிக மிகக்குறைவு அனுதினன்.
இரு off spinner களை ஒரே போட்டியில் விளையாட விடுமளவிற்கு சங்கா பின்நோக்கிப் போக மாட்டார் என்று நம்புகிறேன்.


// அடைய சாத்தியங்கள் இருக்கிறது!!! ஆனால், கொஞ்சம் கஸ்டபட வேண்டியிருக்கும்!!! //

அதத்தானேப்பா நானும் சொல்லுறன். ;)


// போட்டிகளில் சுவாரசியம் எப்போது வருமென்றால் இலங்கை தவறுகளை செய்யும் போதுதான் வரும் என்று நினைக்கிறேன் //

ஆங்...
அதே தான். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுதினன். :)

கன்கொன் || Kangon said...

// தர்ஷன் said...

அருமையான அலசல் //

நன்றி. :)

// முரளி 800 எடுக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். //

உண்மை.
முரளியின் அண்மைக்கால பந்துவீச்சுப் பிரச்சினைகளை கருத்திற் கொள்கையில் சிறிது கடினமே.
ஆனால் இறுதிப்போட்டி என்பதால் உத்வேகமேதும் கிடைத்து சாதிக்க வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுக்கமுடியாது.


//விக்கெட் காப்பாளராக இருந்தும் துடுப்பாட்ட வீரராக டெஸ்ட் போட்டிகளில் பிரசன்னா போதிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்றே கருதுகிறேன். //

இதுபற்றி தனியவே கதைக்கலாம்.
வேறொரு சாதாரண விக்கற் காப்பாளரை அணியில் வைத்திருப்பதை விட பிரசன்னவை வைத்திருப்பது அணிக்கு இலாபகரமானது. அதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் மறுபுறத்தில் சந்திமாலும் அருமையான விக்கற் காப்பாளர்.
ஆனால் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்.
ஆகவே எதிர்காலத்தில் அழுத்தங்கள் வரலாம் என்கிறேன்.


// வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை வாசுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமான ஒருவர் இதுவரை சிக்கவில்லை என்பதே என் கருத்து. //

உண்மை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்ஷன் அண்ணா. :)


// சிபி.செந்தில்குமார் said...

நல்ல தலைப்பு,அனுபவத்துடன்கூடிய அலசல் //

நன்றி. :)
அனுபவமெல்லாம் இல்லை.
நான் சின்னப்பையன். :)


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனைவருக்கும். :)

கன்கொன் || Kangon said...

@Loshan Anna:

நான் இந்தப் பதிவை எழுதும்போது இலங்கைக்கு சார்பாக எழுதுகிறேனோ என்று யோசித்து யோசித்து எழுதினால் கிறிக்கின்போவில் என்னைவிட இந்தியாவை குறைசொல்லியிருக்கிறார்கள். :)

அவர்கள் துடுப்பாட்டத்தையும் குறை சொல்கிறார்கள்.
நானா கிறிக்கின்பொவா என்று பார்ப்போம். :)


// என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு சந்டிமாலை டெஸ்ட் களத்தில் இறக்கும் முட்டாள் தனத்தை அரவிந்த தலைமையிலான தேர்வாளர் குழு செய்யாது என்றே நினைக்கிறன். //

ஆம்.
நம்புகிறேன். :)


என் அணியும் உங்கள் அணியும் ஒன்றுதான். :)


செவாக் - மெளனம் தான்.
ஆனால் இத்தொடரில், அதுவும் முதற்போட்டியில் வெடிக்குமென்று எதிர்பார்க்கவில்லை.
கொழும்பில் வெடிக்க வாய்ப்புண்டு. :)


@Bavan :
:))

// முனாப் பட்டேல் போன்றோரின் வேகப்பந்து வீச்சை ரசிக்கமுடியாது. //

இப்பிடித்தான் ஸ்ரீசாந் இற்கு ஸ்ரீசாந்தின் மீள்வருகைப் போட்டியில் 5 விக்கற்றுகளைக் கொடுத்தீர்கள். :)
பார்த்து, கவனமப்பு...


// ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக தயாரிக்கப்படுவதாக எங்கோ படித்த ஞாபகம் //

யோவ்...
வடிவா வாசியுமப்பா...
சாதாரண ஆடுகளமாம்....


@கிர்ர்ர்ர்...
ஹி ஹி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)