உண்மையில் பலருக்கு ஷகீர் கான் ஒருவர் இல்லாமையால் ஏன் இந்தியாவின் பந்துவீச்சை பலமற்றது பலமற்றது என்கிறார்கள், முரளி கூட இரண்டாவது ரெஸ்ற் போட்டியோடு ஓய்வு பெறப் போகிறாரே அப்போது ஏன் இலங்கையின் பந்துவீச்சை பலமற்றது என்று சொல்வதில்லை என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.
ஆனால் அண்மைக்கால இந்திய அணியில் ஷகீர் கான் செலுத்திய ஆதிக்கம் அவ்வாறானது. முரளி அண்மைக்காலமாக அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி உள்ளே ஆராய்ந்துகொண்டு போனால் அது பெரிய விடயமாக மாறிவிடும்.
பதிவெழுத முன்னர் மேலோட்டமாக சில விடயங்களை ஆராயும்போது எனக்கு ஷகீர்கானின் இழப்பு பெரிது என்று பட்டது.
(என் இதற்குமுந்தைய பதிவை வாசித்த பின் இதை வாசிப்பது உத்தமம். இது தனிப்பதிவல்ல... கடந்த பதிவின் ஒருவகைத் தொடர்ச்சியே.
எனினும்,
// {{ இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.//}}
இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு..
சாகிர் இல்லாத இந்தியாவும் முரளி இல்லாத இலங்கையு தம் வலிமையை காட்ட அதிக மும்முரத்தொடு மோதும் என நம்புகிறேன். // என்ற லோஷன் அண்ணாவின் பின்னூட்டத்துக்கு என் கருத்தை ஒரு தனி மடலில் அனுப்பினேன்.
அதை அவர் பதிவாக மாற்றுமாறு சொன்னார்.
லோஷன் அண்ணாவுக்கு நன்றிகளோடு, இந்தக் குட்டி(யான/னை) பதிவு. :P
முரளியின் இழப்பை விட ஷகீர்கானின் இழப்பு அதிகம்:
ஷகீர்கானின் இழப்பின் பின்னர் ஆக்ரோஷமாக பந்துவீச்சால் இலங்கையோடு மோதுமளவிற்கு இந்தியாவால் முடியாது என்று நம்புகிறேன்.
மறுபுறத்தில் இலங்கைக்கு முரளியின் இழப்பு பந்துவீச்சு ரீதியாக பெரியளவில் இருக்காது என்று நம்புகிறேன். ;)
2008ம் ஆண்டு இந்தியாவுக்கெதிரான ரெஸ்ற் தொடருக்குப் பின்னர்,
இந்தியாவுக்கு எதிராக முரளி:
ரெஸ்ற் - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling
முரளி முன்பளவிற்கு அபாயகரமாக இருக்கவில்லை.
ஹேரத்துடன் ஒப்பிடும் போது முரளியின் விக்கற் கைப்பற்றும் வீதத்தைப் பார்க்கவும். (Strike rate)
முரளி - 101.2 பந்துகளுக்கு ஒரு விக்கற்,
ஹேரத் - 81.0 பந்துகளுக்கு ஒரு விக்கற். (20.2 பந்துகள் ஹெரத்தை விட அதிகமாக எடுக்கிறார் முரளி ஒரு விக்கற்றைக் கைப்பற்ற. )
(இந்தியத் தொடர் இது. பந்துவீச்சாளர்கள் அதிகமாக அடிவாங்கிய தொடர்)
ஆனால் மறுபுறத்தில் 2008 இலங்கைத் தொடருக்குப் பின் இலங்கைக்கெதிராக ஷகீர் கான் -
ரெஸ்ற் - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling
ஷகீர்கான் - 62.4 பந்துகளுக்கு ஒரு விக்கற்.
ஹர்பஜன் - 73.0 பந்துகளுக்கு ஒரு விக்கற்.
முரளியை விட 38.8 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன ஒரு விக்கற்றைக் கைப்பற்றுவதற்கு.
( ஸ்ரீசாந், ஒஜ்ஜா ஆகியோர் ஷகீர்கானை விட Strike rate இன் அடிப்படையில் முன்னிலையில் இருந்தாலும், ஸ்ரீசாந் எடுத்த 5 விக்கற்றுகள் ஸ்ரீசாந்தை முன் இடத்தில் நிறுத்துகின்றன. ஒஜ்ஜாவை ஷகீர்கான் அளவிற்கு இலங்கை வீரர்கள் பயப்படப் போவதில்லை என்று நினைக்கிறேன். ஷகீர்கான் கொண்டுவரும் அந்த mass ஐ ஒஜ்ஜாவால் இப்போதைக்கு தரமுடியாது என்று நினைக்கிறேன்.)
ஒரே ஒரு தொடரில் எப்படி முடிவு செய்வது என்றால் 2008ம் ஆண்டு இந்தியாவுக்கெதிராக ரெஸ்ற் தொடர் முடிவடைந்த பின்னர்,
இந்தியாவிற்கெதிராக முரளி -
ஒ.நா.போ - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling
strike rate - 65.1.
2008ம் ஆண்டு இலங்கைக்கெதிரான தொடரின் பின்னர் இலங்கைக்கெதிராக ஷகீர்கான் -
ஒ.நா.போ - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling
strike rate - 37.6
அதாவது முரளியை விட 27.5 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன விக்கற் ஒன்றைக் கைப்பற்ற.
ஒருநாள் போட்டிகளில் 27.5 பந்துகள் என்பது கிட்டத்தட்ட 5 பந்துப்பரிமாற்றங்கள் என்பதை நினைவுபடுத்துக.
(4 பந்துப் பரிமாற்றங்களும், 3.5 பந்துகளும் சரியாக. :P )
இத்தொடரில் முரளியின் ஓய்வு மனரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை என்றாலும், பந்துவீச்சு ரீதியாக அவ்வளவு இருக்காது.
ஆனால் மறுபுறத்தில் இந்தியாவுக்கு மனரீதியாக பெரிய தாக்கத்தோடு அவர்களின் strike bowler ஒருவரையும் இழக்கிறது.
ஆகவே இந்தியாவின் பந்துவீச்சு, இலங்கையோடு ஒப்பிடுகையில் பாரியளவு பாதிக்கப்படும்.
மோதுவது மோதாதது எல்லாம் ஹர்பஜனின் கையில் மட்டுமே... ;)
ஆகவே இந்தத் தொடரில் ஷகீர்கானின் இழப்பு இந்தியப் பந்துவீச்சுப் பக்கத்தை அதிகமாகப் பாதிக்கும்.
முரளியின் இழப்பு (முதற் போட்டியின் பின்னர்) பெரிதளவில் தாக்கத்தைச் செலுத்தாது என்று நம்புகிறேன்.
(அவ்வ்வ்வ்வ....
பதிவு.... பதிவு பதிவு.... :P )
8 பின்னூட்டங்கள்:
wow கன்கொன் consecutive பதிவுகள் கலக்குறீங்க..:P
இந்தியாவுக்கு இழப்போ இல்லையோ எனக்கு சகீர் இல்லாதது இழப்புத்தான். டெஸ்ட் போட்டிகளில் சிலரது பந்து வீச்சுக்கள் மிகவும் பிடித்தவை. அதற்குள் சகீரினதும் அடக்கம்.
///ஆகவே இந்தத் தொடரில் ஷகீர்கானின் இழப்பு இந்தியப் பந்துவீச்சுப் பக்கத்தை அதிகமாகப் பாதிக்கும்.
முரளியின் இழப்பு (முதற் போட்டியின் பின்னர்) பெரிதளவில் தாக்கத்தைச் செலுத்தாது என்று நம்புகிறேன்///
ம்.. அதே..
வாழ்த்துக்கள் அடிக்கடி எழுதுங்கள் உங்கள் கிறிக்கற் அனலைஸ் பதிவுகளின் ரசிகன் நான்..:P
அண்ணே முதலில் அடுத்தடுத்த பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
உங்களது அணைத்து கருத்துகளையும், உங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் நானும் ஆதரிக்கிறேன்!!! முரளி நாளைய போட்டியில் ஏதும் சாகசம் செய்யாத வரை.....
//ஆகவே இந்தத் தொடரில் ஷகீர்கானின் இழப்பு இந்தியப் பந்துவீச்சுப் பக்கத்தை அதிகமாகப் பாதிக்கும்.
முரளியின் இழப்பு (முதற் போட்டியின் பின்னர்) பெரிதளவில் தாக்கத்தைச் செலுத்தாது என்று நம்புகிறேன்.//
இதில் எனக்கு சிறிய முரண்பாடு இருக்கிறது. முரளியின் இழப்பு நிச்சயம் பெரிய தாக்கத்தை செலுத்தும் அண்ணா!!!
இலங்கைக்கு நீண்ட நேர சுழல் பந்து வீச்சாளராக முரளியை விட யாரும் வீச முடியாது!!!
ஓட்ட விக்தத்தை குறைவாக பேண உதவும் பந்து வீச்சாளர் இருக்கமாட்டார்.
மேற்கூறிய தாக்கங்கள் தவறினாலும், மனரீதியாக ஒரு தாக்கம் நிச்சயமாக இருக்கும்!!!
மற்றும்படி. உங்கள் பதிவின் அணைத்து விடயங்களும் உண்மை
இன்னொரு பதிவா? முடியவில்லை
நான் இந்த தொடரை புறக்கணிக்கிறேன்.. கிர்க்கெட் அலுப்படிக்குது ச்சசின்சதம் அடிச்சா ஹைலைட் பாப்பம் மத்தபடி எவன் வெண்டா என்ன தோத்தா என்ன ..
அன்பின் கன்கொன்..,
//..ஷகீர்கானின் இழப்பின் பின்னர் ஆக்ரோஷமாக பந்துவீச்சால் இலங்கையோடு மோதுமளவிற்கு இந்தியாவால் முடியாது //
உண்மைதான்...டெஸ்ட் போட்டிகளில் ஜகீர்கானுக்கு இணையாக பந்துவீச இப்போதுள்ள இந்திய அணியில் யாரும் இல்லை. எதிர்கால வேகப்பந்து மற்றும் சுழலில் நம்பிக்கை தரும் வீரர்கள் யாரும் இல்லை என்பதே நிஜம்.
ஒவ்வொரு மாதமும் இந்தியா,இலங்கையோடு விளையாடினாலும் நாம் ரசிக்கத்தான் செய்வோம்.(எப்போதோ "பதிவர் லோஷன்" இப்போட்டிகளை வெறுத்துவிட்டார்.)இப்படியே போனால் சர்வதேச தரத்துடன் கூடிய வீரர்கள் உருவாக முடியாது.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...,
கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்கா,நியூசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ்,இங்க்லாந்து போன்ற நாடுகளும் இருக்கிறது என்பதை இந்திய கிரிக்கெட் சபைக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்.
நன்றி...
ஐயோ அம்மா முடியல கான்கொன் அடுத்தடுத்த பதிவுகளா? என்னால் முடியல சுனாமி வந்தாலும் வரும் போல கிடக்கு.
அப்புறம் கோபி சகீர் இல்லாதது பெரிய இழப்பு தான் ஆனால் அதை ஓரளவு மற்ற வீரர்கள் ஈடு செய்வார்கள் என நம்புகின்றேன். காரணம் இந்தியா இப்போது தனி மனிதனை நம்பும் அணியல்ல என்பதை நாம் ஏற்கவேண்டும். இருப்பினும் காலி போட்டி இலங்கைக்கு வெற்றி பிரகாசமாய் உள்ள ஒரு இடம் என நம்புகின்றேன். அதேநேரம் இரண்டாவது போட்டி சமநிலையில் முடியும் என நம்புகின்றேன்.
தகவல்களுக்கு நன்றி..
பதிவாய் இட்டதற்கு நன்றி..
மாதத்துக்கு ஒரு பதிவு என்ற விதிமுறையை எனக்காக உடைத்து நாளுக்கு இரண்டு பத்விட்ட சாதனைக்கும் நன்றி..
நீங்கள் ஒரு ஸ்டட்ஸ் கடல். ;)
யாரும் எதுவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்..
;)
(எப்பூடி?)
:)
@பவன்:
இது பதிவல்ல..
பின்னூட்ட விளக்கம். ;)
// வாழ்த்துக்கள் அடிக்கடி எழுதுங்கள் உங்கள் கிறிக்கற் அனலைஸ் பதிவுகளின் ரசிகன் நான்..:P //
:-o
நான் எழுதுவதே இல்லையேப்பா இப்படியான பதிவுகளை?
ஏன் ரெம்ப்ளற் பின்னூட்டங்களால் மாட்டுப்படுகிறாய்? ;)
(இதற்கு முன் ஒரே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். )
@அனுதினன்:
:)))
@யோ:
:)))
@வாசகன் அண்ணா:
ஹா ஹா... :)))
ஷகீர்கான் விளையாடவில்லை என்றால் தொடரையே புறக்கணிப்பதா? என்ன சின்னப்பிள்ளைத்தனம் இது? :P
@Ramesh:
ஆமாம். :(
கடிதமொன்று எழுதவேண்டும். :)
@சதீஷ் அண்ணா:
:)))
@Loshan Anna:
மாதத்துக்கு ஒரு பதிவு என்பது விதி எல்லாம் இல்லை.
மாதத்திற்கு ஒரு பதிவாவது போடாவிட்டால் என்னைப் பதிவராக ஏற்கமாட்டீர்கள், பிறகு பதிவர் சந்திப்புகளில் கழற்றிவிட்டுவிடுவீர்கள் என்பதால் தான் மாதமொருமுறை பதிவு போட்டு என் தலையைக் காப்பாற்றிக் கொள்வேன். :)
// நீங்கள் ஒரு ஸ்டட்ஸ் கடல். ;)
யாரும் எதுவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்..
;)
(எப்பூடி?) //
அவ்வ்வ்வ்...
Sarcasm போல் தெரிகிறதே? ;)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் அனைவருக்கும் நன்றி. :)
Post a Comment