Tuesday, August 17, 2010

ரந்தீவ் இன் நோ போல் உம் என் கருத்துக்களும்....

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
அந்த வெற்றியையும் தாண்டி செவாக் 99 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நின்றமை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபற்றி என் கருத்துக்கள்.

1. ரந்தீவ் செய்தது விதிகளின் படி ஒருபோதும் பிழையாகாது.
2. ஐசிசி இன் spirit of the cricket விருதை 2007, 2008ம் ஆண்டுகளில் வென்ற அணி இலங்கை, 2009இற்கான தேர்வில் நியூசிலாந்திடம் தோற்றது என்று நினைக்கிறேன். ஆகவே இதுவொன்றும் இலங்கை காலங்காலமாக செய்து வந்த ஒன்றல்ல.
3. இலங்கை அணி காலம்காலமாக ஏற்படுத்தி வந்த நல்ல பெயருக்கு ரந்தீவின் இந்தச் செயல் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.
4. இலங்கை அணியின் கனவான் விளையாட்டை, சிறிய அணியாக இருந்து வளர்ச்சியடைந்த அணியின் வீரத்தை இரசித்த எனக்கு ரந்தீவின் செயலை இரசிக்க முடியவில்லை. ரந்தீவ் என்ற வீரனின் சுழற்பந்து வீச்சை இரசிக்கும் என்னால் ரந்தீவின் அந்த செயலை இரசிக்க, ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

5. ஆனால் இது செவாக் இற்கு நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி.
செவாக் என்ற அற்புதமான துடுப்பாட்ட வீரரை இரசிக்குமளவிற்கு அவரின் சில செய்கைகள் எனக்குப் பிடிப்பதில்லை.
செவாக் தென்னாபிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 2ஆவது ரெஸ்ற் போட்டியில் ஹசிம் அம்லா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஹசிம் அம்லா கடைநிலைத் துடுப்பாட்ட வீரருடன் நின்றிருந்தார்.
ஒரு பந்துப் பரிமாற்றத்தின் 5ஆவது பந்து என்று நினைக்கிறேன், அம்லா பந்தை அடித்து விட்டு ஒரு ஓட்டமொன்றைப் பெற்று அடுத்த பந்துப் பரிமாற்றத்தில் தான் துடுப்பெடுத்தாட விரும்ப, எல்லைக் கோட்டை நோக்கிச் சென்ற பந்தை செவாக் எல்லைக் கோட்டிற்கு அங்கால் உதைத்து அம்லா ஓட்டம் பெறுவதைத் தடுக்க முனைந்தார்.
ரந்தீவ் செய்தது has no place in good cricket என்று செவாக்கால் உணர முடிந்தால் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பார்.
இவ்வளவு காலம் கிறிக்கற் விளையாடி வரும் செவாக்கிற்கு உணர முடியாதது வெறுமனே சில போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் ரந்தீவால் உணர முடிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது செவாக் இற்கே வெளிச்சம்.

6. சங்கக்கார தான் அதைச் செய்யச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார், ஆகவே அணி மீது மொத்தமாக குற்றச்சாட்டு எழுப்பப்படலாகாது.



அடுத்தது,
சில கேள்விகள்.
7. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள்.
இறுக்கமான தருணத்தில் துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் பந்து படவில்லை என்று தெரிந்த பின்னரும் பந்து அருகால் சென்றது என்பதால் ஆட்டமிழப்பு கோரமாட்டீர்களா? - இந்தக் கேள்வி எனதல்ல. ஹர்ஷா போக்லே இன்று எழுப்பிய கேள்வி.

9. தனிநபரின் செயல்களுக்கு ஒரு இனமோ, நாடோ குறை சொல்லப்படுவது முடியாதது.
நான் சிலருடன் கதைத்த போது சிங்களவன் தன் குணத்தைக் காட்டிவிட்டான் என்ற அடிப்படையிலான கதைகள் வந்தன.
ரந்தீவ் உண்மையில் வேறு ஒரு மதத்திலிருந்து தான் பெளத்த மதத்தைத் தழுவினார். ஆகவே எந்த மதத்தைக் குறை சொல்வீர்கள்?
இதற்குள் மதம், இனம் எதுவும் கிடையாது. வெறுமனே தனிப்பட்ட மனிதன் ஒருவனின் செயல்.

செவாக் பந்தை எல்லைக் கோட்டிற்கு தட்டிவிட்டபோது செவாக்கின் இனம், மதம், நாடு கொண்டா திட்டியிருப்பீர்கள்?
சில விடயங்களைப் பொதுமைப்படுத்தாமலிருப்பது நலம்.
பொதுமைப்படுத்துவதன் மூலம் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் சகோதரர்களே.

10. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது.
இதுவரை பிரச்சினைக்குள் அகப்படாத வீரரொருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இது தொடர்பாக நான் நேற்று ருவீற்றிய சில ருவீற்றுகள்.

@kangon- Ok... I'm not with Randiv. Unfair... He should've bowled a legal delivery. Shouldn't have done this. Sorry Randiv, u were just wrong.

@kangon - @kaasethu randiv's wrong. but i think sehwag deserves this. i remember his kicking the ball to the boundary of Amla to deny him the single 

@kangon- Nice to see Sehwag's positive. Of course, he can't come and complain that Randiv's denied me a century, but Viru seems positive.

@kangon- @ikarthik_ yeah... nothing gonna lose by giving a well deserved century. he should've bowled a legal delivery.

RT: @kaasethu: If Randiv himself did that then not a big shame -can excuse an youth, but if he was instructed by any senior(s) that's shame 

(@kangon என்பது நான். )

எங்களுக்கு சார்பான விடயங்களுக்கு மட்டுமே கருத்துச் சொல்வதை நிறுத்துங்கள் சகோதரர்களே. 
செவாக் பந்தை உதைத்த போதும் அதை விரும்பவில்லை, இதையும் விரும்பவில்லை.
அப்போது மெளனமாக இருந்தவர்கள் இப்போது கதைத்தால் நீங்கள் பச்சோந்திகள்.

என் முடிவுக் கருத்து:
ரந்தீவ் செய்தது தவறு, பிழை.
இலங்கைக் கிறிக்கற்றை இரசிப்பவன் என்ற ரீதியில் எனக்கு ஏமாற்றமான விடயம்.
ரந்தீவ் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க, அல்லது தன் வருத்தத்தைத் தெரிவிக்க எதிர்பார்க்கிறேன். நான் இரசிக்கும் வீரர் ஒருவர், ஒரு மாபெரும் கனவானின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் வீரர் என்பதால் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமே இல்லை.


பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒன்று:
நேற்று நான் இரசித்த காட்சி இது.
எல்லோருமே இப்படி இருத்தல் நலம்.


படங்களுக்கு நன்றி: கிறிக்கின்போ

(கருத்துக்களை பதிவிடும் இடம்தான் பதிவுலகம் என்றார்கள். அதுதான் என் கருத்தை சிறிய பதிவாகப் பதிந்திருக்கிறேன். :) ) 

பிற்சேர்க்கை: செவாக் இன் ருவீற் இது:
Hi guys Randiv came to my room n apologize

https://twitter.com/sehwagvirender/status/21377872957

(நன்றி Karthik Narayan ) 

45 பின்னூட்டங்கள்:

Bavan said...

எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்பார்கள். அது போலவே சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பந்தை தட்டிவிட்டபோது செய்த போது அது 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டது (FOUR + single. இநத செவாக்கின் செயலுக்கு மறுதாக்கம் இதுவோ?..:)

தவறு செய்யாதவர்களே இல்லை. ஆனால் தனது ஆரம்ப காலத்திலேயே ரன்டிவ் தவறு செய்ததால் எதிர்காலத்தில் தன்னைத்திருத்திக்கொள்வார் என்று நம்புவோம்...:)

ஆதிரை said...

பின்னூட்டங்களுக்காக...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நாட்டை,மொத்த இலங்கை அணியை குறை கூறுவது தவறானது

இந்த செயலுக்கு ரந்தீவ் மட்டுமே காரணம் என்றால்,இதுவரை சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற அவரை பற்றிய என் எண்ணம் சற்று தகர்கிறது,அவ்வளவுதான்

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் ரன்தீவின் செயலில் உடன்பாடில்லை. ஆனால் எல்லா கிரிக்கட்டரிடமும் ஜென்டில்மேன் மாதிரியான விளையாட்டை எதிர்பார்க்கவியலாது. எல்லாரும் ஒரே மாதிரியல்ல

அதுதான் வாழ்க்கை தத்துவமும்..

துமிழ் said...

good post

Subankan said...

Suraj Randiv செய்தது கண்டனத்திற்குரியது. ஆனால் கிரிக்கெட்டுக்கு முற்றிலும் புதிதான ஒன்றல்ல.

ஜெரி ஈசானந்தன். said...

உங்கட தமிழ் எனக்கு பிடிக்கும்

ஆதிரை said...

கன்கொன்,

சேவாக் எதிர் கொண்ட பந்துகளில் கடைசியாக வீசப்பட்ட முறையற்ற பந்தையும் சேர்த்துக் கொள்ளும் விதி, அப்பந்துக்கு அவர் பெற்ற ஓட்டங்களை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது?

கன்கொன் || Kangon said...

கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.


@ஆதிரை அண்ணா:

அந்தப் பந்து செவாக்கை அடையும்போதே போட்டியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டுவிட்டது, அதனால் அதன் பின்னரான ஓட்டங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
அந்தப் பந்து செவாக் சந்தித்த பந்தாகக் கருதப்படுவது சிறிது முரண்பாடானது தான்.
விதிகளை நேற்று வாசித்தேன், விளங்கவில்லை இது தொடர்பாக.

செவாக் அந்தப் பந்தை சந்தித்தார் என்ற ரீதியில் கருத்தில் கொள்கிறார்கள்.

கிறிக்கற்றில் ஒரு பந்துப் பரிமாற்றத்தில் (மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில்) ஒரு பந்தை மட்டுமே தோளிற்கு மேலாக செல்லுமளவிற்கு வீசலாம்.
இரண்டாவது வீசினால் அது முறையற்ற பந்து.
எனினும் இரண்டாவது பந்து முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டாலும் அது துடுப்பாட்ட வீரர் எதிர்கொண்ட பந்தாகவே கருதப்படும்.

ஆகவே விதி இவ்வாறு தான் கருதுகிறது.

படவா தமிழன் said...

ரன்திவ் செய்தது பிழை, தவறு, குற்றம் என்பவற்றுக்குள் அடங்காது

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா? ரன்திவ்வினுடைய செயல் அதுபோன்றது தான். எதிரியின் ஒவ்வொரு வெற்றியையும், அடைவையும் தடுப்பதுதான் ஒரு வீரனின் கடமை அதற்கான சந்தர்ப்பம் அமையும் போது அதற்குரிய கருவியைக் கொண்டு அக்கடமையை ரன்திவ் செய்தார்.

கனவான், ஜென்டில்மேன் எல்லாம் பெரிய வார்த்தைகள், அப்படிப் கனவான் விளையாட்டுத்தான் என்றால் நியாயப்படி அம்பயர்களே தேவையில்லை.

இதைத் தவறு, தப்பு என்று சொல்வதுதான் தவறு. தனது எதிரணியின் அடைவுகளைத் தடுக்கும் ஒரு வீரனின் முயற்சி, அவன் விதிகளுக்கு எதிராகச் செயற்படவில்லை, யுத்த தர்மத்தில் விதிகளுக்கு முரணாகாத சூழ்ச்சிகளுக்கு இடமுண்டு. இதுவும் அதுபோன்ற ஒரு சூழ்ச்சிதான்.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

நல்லா எழுதியிருக்கிறீங்கள். எனக்கு கிரிக்கட்டில் அவ்வளவு விடயங்கள் தெரியாது. ஆனால் நேற்று பார்க்கும்போது ஒரு மாதிரி இருந்தது.

தனிப்பட்ட விடயங்களை பொதுமைப் படுத்தாதீர்கள் என்பது விளங்கிக்கொள்ளவேண்டிய விடயம்.

Anonymous said...

I don’t know what Randiv said about that last no-ball he bowled; only he may know exactly what happened if no one else instructed him to do so. May be he didn’t do that purposely, because he bowled 2 legal delivers before the no-ball and I think no one talk to him before the last delivery either. If he really wanted to avoid the century he could have bowled the no-ball just after the 4 buys. So there is high chance it could happen coincidently. Don’t you guys think so? However, if he did it purposely it is not good sign for an upcoming cricketer in the international level.

About the Sehwag’s incident, if he had put a dive and rolled over the robe then it should had been given as 4, but the way he did was obviously shown as overthrow and it was considered as well. Mostly in all games players try to do something under the rules to win the game, for example in Chess there are some scarifies move in order to win the game. In football they make offside (it is not the offside due to the opponent’s mistake, this making offsite)
Tharshan

Sivaraman said...

neengal srilanka kaararoo

வந்தியத்தேவன் said...

மேட்ச் பார்க்காததினால் ஒன்றுமே தெரியாது. ரந்தீவின் நோபால் லிங் இருக்கா?
சில ஜென்டில்மேன்களுக்கு இடையில் சில அலாப்பிகளும் இருப்பார்கள் லூசிலை விடுங்க.
கிரிக்க்கெட் என்றவுடன் பதிவு எழுத வந்த முன்னாள் பதிவர் கங்கோனுக்கு வாழ்த்துக்கள்.

S.ரமேஷ். said...

அன்பிற்கினிய நண்பரே..,

/ /...எங்களுக்கு சார்பான விடயங்களுக்கு மட்டுமே கருத்துச் சொல்வதை நிறுத்துங்கள் சகோதரர்களே.
செவாக் பந்தை உதைத்த போதும் அதை விரும்பவில்லை, இதையும் விரும்பவில்லை.
அப்போது மெளனமாக இருந்தவர்கள் இப்போது கதைத்தால் நீங்கள் பச்சோந்திகள்...../ /
/ /...1. ரந்தீவ் செய்தது விதிகளின் படி ஒருபோதும் பிழையாகாது
2. ஐசிசி இன் spirit of the cricket விருதை 2007, 2008ம் ஆண்டுகளில் வென்ற அணி இலங்கை, 2009இற்கான தேர்வில் நியூசிலாந்திடம் தோற்றது என்று நினைக்கிறேன்...ஆகவே இதுவொன்றும் இலங்கை காலங்காலமாக செய்து வந்த ஒன்றல்ல
5. ஆனால் இது செவாக் இற்கு நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி
.6. சங்கக்கார தான் அதைச் செய்யச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார், ஆகவே அணி மீது மொத்தமாக குற்றச்சாட்டு எழுப்பப்படலாகாது
9. தனிநபரின் செயல்களுக்கு ஒரு இனமோ, நாடோ குறை சொல்லப்படுவது முடியாதது.
10. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது...../ /

ஒரு சில சகோதரர்களின் (விமர்சன புண்ணாக்குகள்)கருத்துக்கள் உங்களை கோபமடைய செய்திருக்கும் என நினைக்கிறேன்.அவர்களை பெரிதாக எடுத்துகொள்ளாதீர்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் இலங்கை கிரிக்கெட்டை ரசிப்பதைவிட கிரிக்கெட்டை நேசிப்பவர் என்றே நம்புகிறேன்.
முன்பு நானும் இந்திய கிரிக்கெட்டை மட்டும் ரசித்தேன்.(முன்பு ஜெயசூர்யா எப்பொழுது ஆட்டமிழப்பார் என்று முதல் பந்திலிருந்தே எதிர்பார்த்திருப்போம் - ஆனால் வெங்கடேஷ் பிரசாத் பந்தை ஒரு வழி ஆக்கிவிட்டுத்தான் அவுட் ஆவார்.) இப்பொழுது கிரிக்கெட்டை ரசிக்கிறேன். உங்களைபோல கிரிக்கெட் விசயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவனள்ள நான்.
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் - தவறு இருந்தால் குட்டவும்..

1 . விதிகளின்படி தவறல்ல.,விளையாட்டின்படியும் தவறல்ல.,எந்த ஒரு அணியும் & அணிவீரர்களும் எதிரணிவீரர் சதம் அடிக்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.ஆனால்
ரந்திவ் வேறு வழிகளில் சேவாக்கை ரன் எடுக்க முடியாதபடி செய்திருக்கலாம்.

2 . 2007, 2008, 2009ம் ஆண்டுகளில் உள்ள அதே டீம் இப்போதும் இருக்கிறதா? "மாற்றம்" என்ற சொல் மட்டுமே மாறாதது.

3 . நீங்கள் "சேவாக் அன்று தவறு செய்தார்" என்று இப்போது சொல்ல வருவது எதற்காக?
அவர் அன்று தவறு செய்தார் என்பதற்காக இவர்(ரந்தீவ்) இன்று செய்தாரா? நீங்கள் சொல்ல வருவது என்ன? புரியவில்லை.

6 . தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் "Hansie" Cronje விளையாடும்போது எதிரணிவீரர் ஓடி வந்து தடுக்கி விழும்போது தனது வீரர்களை ரன் - அவுட் செய்ய அனுமதிக்க மாட்டார். அவரின் மறுபக்கம் நமக்கு வேண்டாம்.(இவர் போல வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தால் பெயருக்கு தண்டனை என்று சொல்லிவிட்டு மறுபடியும் அணியில் இடம் கிடைத்திருக்கும்)

9 . சர்வதேச கிரிக்கெட் அரங்கில்(ஆசியா) யார் என்ன செய்தாலும் அவரின் நாடு,இனம் பதம் பார்க்கப்படுகிறது.
மேலும் "சுராஜ்" தனி நபர் அல்ல.

10 . உத்தமர்களை உருவாக்க முடியாதா?

நன்றி...

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.

S.ரமேஷ். said...

அன்பிற்கினிய நண்பரே..,

/ /...எங்களுக்கு சார்பான விடயங்களுக்கு மட்டுமே கருத்துச் சொல்வதை நிறுத்துங்கள் சகோதரர்களே.
செவாக் பந்தை உதைத்த போதும் அதை விரும்பவில்லை, இதையும் விரும்பவில்லை.
அப்போது மெளனமாக இருந்தவர்கள் இப்போது கதைத்தால் நீங்கள் பச்சோந்திகள்...../ /
/ /...1. ரந்தீவ் செய்தது விதிகளின் படி ஒருபோதும் பிழையாகாது
2. ஐசிசி இன் spirit of the cricket விருதை 2007, 2008ம் ஆண்டுகளில் வென்ற அணி இலங்கை, 2009இற்கான தேர்வில் நியூசிலாந்திடம் தோற்றது என்று நினைக்கிறேன்...ஆகவே இதுவொன்றும் இலங்கை காலங்காலமாக செய்து வந்த ஒன்றல்ல
5. ஆனால் இது செவாக் இற்கு நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி
.6. சங்கக்கார தான் அதைச் செய்யச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார், ஆகவே அணி மீது மொத்தமாக குற்றச்சாட்டு எழுப்பப்படலாகாது
9. தனிநபரின் செயல்களுக்கு ஒரு இனமோ, நாடோ குறை சொல்லப்படுவது முடியாதது.
10. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது...../ /

ஒரு சில சகோதரர்களின் (விமர்சன புண்ணாக்குகள்)கருத்துக்கள் உங்களை கோபமடைய செய்திருக்கும் என நினைக்கிறேன்.அவர்களை பெரிதாக எடுத்துகொள்ளாதீர்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் இலங்கை கிரிக்கெட்டை ரசிப்பதைவிட கிரிக்கெட்டை நேசிப்பவர் என்றே நம்புகிறேன்.
முன்பு நானும் இந்திய கிரிக்கெட்டை மட்டும் ரசித்தேன்.(முன்பு ஜெயசூர்யா எப்பொழுது ஆட்டமிழப்பார் என்று முதல் பந்திலிருந்தே எதிர்பார்த்திருப்போம் - ஆனால் வெங்கடேஷ் பிரசாத் பந்தை ஒரு வழி ஆக்கிவிட்டுத்தான் அவுட் ஆவார்.) இப்பொழுது கிரிக்கெட்டை ரசிக்கிறேன். உங்களைபோல கிரிக்கெட் விசயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவனள்ள நான்.
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் - தவறு இருந்தால் குட்டவும்..

1 . விதிகளின்படி தவறல்ல.,விளையாட்டின்படியும் தவறல்ல.,எந்த ஒரு அணியும் & அணிவீரர்களும் எதிரணிவீரர் சதம் அடிக்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.ஆனால்
ரந்திவ் வேறு வழிகளில் சேவாக்கை ரன் எடுக்க முடியாதபடி செய்திருக்கலாம்.

2 . 2007, 2008, 2009ம் ஆண்டுகளில் உள்ள அதே டீம் இப்போதும் இருக்கிறதா? "மாற்றம்" என்ற சொல் மட்டுமே மாறாதது.

3 . நீங்கள் "சேவாக் அன்று தவறு செய்தார்" என்று இப்போது சொல்ல வருவது எதற்காக?
அவர் அன்று தவறு செய்தார் என்பதற்காக இவர்(ரந்தீவ்) இன்று செய்தாரா? நீங்கள் சொல்ல வருவது என்ன? புரியவில்லை.

6 . தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் "Hansie" Cronje விளையாடும்போது எதிரணிவீரர் ஓடி வந்து தடுக்கி விழும்போது தனது வீரர்களை ரன் - அவுட் செய்ய அனுமதிக்க மாட்டார். அவரின் மறுபக்கம் நமக்கு வேண்டாம்.(இவர் போல வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தால் பெயருக்கு தண்டனை என்று சொல்லிவிட்டு மறுபடியும் அணியில் இடம் கிடைத்திருக்கும்)

9 . சர்வதேச கிரிக்கெட் அரங்கில்(ஆசியா) யார் என்ன செய்தாலும் அவரின் நாடு,இனம் பதம் பார்க்கப்படுகிறது.
மேலும் "சுராஜ்" தனி நபர் அல்ல.

10 . உத்தமர்களை உருவாக்க முடியாதா?

நன்றி...

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
ச.ரமேஷ்.

கன்கொன் || Kangon said...

ரமேஷ்:

நான் பதிவில் முன்பே சொன்னது போன்று ரந்தீவின் நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.
எனினும்,

1. ரந்தீவ் அந்த முறையற்ற பந்தை வீச முன்பு இரண்டு சட்டரீதியான பந்துகளை வீசியிருந்தார்.
ஆகவே ரந்தீவ் முழுவனே திட்டமிட்டு இதைச் செய்தார் என்று சொல்ல முடியாது.
அந்தக் கணத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவு தான் இது.
செவாக் 100 அடிக்கக்கூடாது என்று முன்பே கலந்துரையாடியிருந்தாலோ இல்லை முன்பே முடிவெடுத்திருந்தாலோ அந்த 2 பந்துகளையும் சட்டரீதியாக ஏன் வீசியிருக்க வேண்டும்?
ஆகவே இது உடனே வந்த உணர்வுகளால் பெறப்பட்ட முடிவு என்கிறேன்.

2. இல்லைத்தான்.
ஆனால் பெரிய மாற்றங்கள் என்றும் சொல்ல முடியாது.
முரளி இல்லை. சனத் இல்லை.
ஆனால் நான் இலங்கை அந்த விருதுகளைப் பெற்றது என்று குறிப்பிடக்காரணம் இலங்கை காலகாலமாக இதைப் போன்ற நடவடிக்கைகளைச் செய்துவந்த அணி அல்ல என்பதைக் காட்டவே.
அத்தோடு இந்திய - இலங்கைப் போட்டிகளில் பெரிதாக முரண்பாடுகள் ஏற்பட்டதில்லை.

3. செவாக் தவறு செய்த போது தன் தவறை உணர முடியாத செவாக் இன்று 'has no place in good cricket' என்று இதை மட்டும் எவ்வாறு சொல்லலாம் என்று கேட்கிறேன்.
அன்று அதை விமர்சிக்காதவர்கள் இதை மட்டும் விமர்சிப்பது ஏன் என்று கேட்கிறேன்.

6. அந்த நடவடிக்கை இன்றும் பொதுவாக எல்லா அணிகளிலும் இருக்கிறது என்று நம்புகிறேன்.
அன்ஜலோ மத்தியூசை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் அன்ட்ரு ஸ்ரோஸ் மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்தமை குறிப்பிடத்தக்கது.

9. நல்லது செய்கையில் நாடு பாருங்கள்.
ஒரு தனிநபரின் தவறிற்கு ஒருநாடு எப்படி காரணமாகும்?
ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்தால் அது ஹர்பஜன் என்ற தனிநபர் ஸ்ரீசாந் என்ற தனிநபரை அறைந்தது தான்.
சிங் இனத்தவர் ஸ்ரீசாந்தை அறைவதாக எடுத்துக் கொள்ள முடியாது, ஒரு இந்தியன் ஸ்ரீசாந்தை அறைந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் சச்சின் உலக சாதனை படைக்கையில் ஒரு இந்தியன் படைத்ததாக எடுத்துக் கொள்ளலாம் தானே?

10. முடியாதென்று முழுமையாகச் சொல்ல முடியாது.
என்றாலும் உணர்வுகளின்பால் நடத்தப்படுகின்ற மனிதர்களாகத்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள், நான் உட்பட.
ஏதோ ஒரு வகையில் சுயநலவாதிகளாக இருக்கிறோம், சுயநலவாதத்தின் அடுத்த படி உத்தமர் என்ற அளவு இல்லாமல் போவது தான்.

“என்னால் ஒருவனை நோகடிக்காமல் இருக்க முடியுமானால் நான் இந்த உலகில் வாழ்வதற்கு அருகதையுள்ளவன்” எமிலி டிக்கின்ஸன் எழுதிய கவிதை ஒன்றின் பொருள் இப்படி அமைந்திருந்தது.
(நன்றி மருதமூரான் அண்ணா)

இது தான் யதார்த்தம்.

நன்றி ரமேஷ்.

தர்ஷன் said...

செய்வதெல்லாம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் ஆயிற்றா? சேவாக்கை எனக்குப் பிடிக்காதெனினும்
இலங்கையனாக ரநதீவின் செயலுக்கு வருத்தப்படுகிறேன்.

Anuthinan S said...

என்னை பொருத்தவரை இது ஒரு பெரிய விடயமாக தெரியவில்லை. ரண்டிவ் இப்போதுதான் கிரிக்கெட் சர்வதேச உலகுக்கு அறிமுகம்!! மற்றும்படி அவரும் ஒரு இளைஞர்தானே!!

யாருக்குமே தனது பந்தில் ஒருவர் சதம் அடிக்கிறார் என்றால், கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், பக்குவபடாத ரண்டிவ்க்கும் அப்படித்தானே!!! அவர் செய்தது தவறு அதை வைத்து வேறு சில கற்பனை கோட்டைகளை சிலர் கட்டுவது தவறு!!!

UFO said...

நல்ல இடுகை... மிஸ்டர். கண்கொன்.

ஆனால், ஒன்றே ஒன்றை தவிர...

சேவாக்கை உங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றே புரிகிறது. அதனால்தான், இப்படி விஷயத்தை திரித்து எழுதி இருக்கிறீர்கள்.

ரன்தீவ் செய்ததும் சேவாக் செய்ததும் ஒன்றல்ல. எதிரெதிரானது.

ரன்தீவ் தன் அணியின் வெற்றிக்காக அந்த செயலை செய்யவில்லை.

சேவாக் தன் அணியின் வெற்றிக்காக செய்தார்.

ரன்தீவ் சரியாக செய்தார்.

ஆனால், விதி...சேவாக் சொதப்பிவிட்டார்.

அந்த தென் ஆபிரிக்க டெஸ்ட் மேட்சில் அப்போது நடந்த சொதப்பல் என்ன?

அது கடைசி விக்கெட ஜோடி. ஹாசிம் அம்லா ஒரு பேட்ஸ்மேன். இன்னொருத்தர் பேட்ஸ்மேன் அல்ல. அவர் அடுத்த ஓவரை சந்தித்தால் அவுட்டாகிவிடலாம் என பயந்த அம்லா, தன் ஷாட்டினால் பவுண்டரி வரை சென்ற பந்துக்கு அநியாயமாய் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்தார்-மீண்டும் அடுத்த ஓவரை சந்திக்க.

எதற்கு இங்கே இரண்டு ரன் ஓடியிருக்க வேண்டிய நிலையில் ஒரு ரன் மட்டும் ஓடி நின்றுவிட்டார்? இது தவறில்லையா?

தவறில்லை.

ஏனெனில் அம்லாவும் அவர் அணியின் வெற்றிக்காக 'சரியற்ற' இச்செயலை செய்கிறார்.

சேவாக் என்ன செய்தார்? பந்து பவுண்டரியை தாண்டட்டும் ---நான்கு ஓட்டங்கள் என்றால், அம்லாவிற்கு பதிலாக அந்த பவுளர் அடுத்த ஓவரை சந்திக்கும்போது அவர் அவுட்டாகி இன்னிங்க்ஸ் முடிய வாய்ப்பு உள்ளதால்--- என்று பந்தை தடுக்காமல் விட்டார்.

அந்தோ அவரின் பரிதாபம்!
சேவாக்கின் விதி!

அப்போது பந்து எல்லைக்கோட்டுக்கு மிக மிக அருகே சென்று நி..ன்..று விட்டது...! நொந்து போன சேவாக் துடுக்கப்போவதுபோல ஓடி தன் காலால் எட்டி உதைத்து அதை நான்காக்கினார்.

ஆட்டவிதிகளுக்குட்பட்டு அது நான்கு ரன்கள்தான். அன்று நடுவர்கள் சேவாகுக்கு எதிராய்... தென் ஆப்ரிக்காவிற்கு ஆதரவாய்... ஐந்து ரன்கள் கொடுத்தனர். அது நடுவர்கள் செய்த தவறு.

எத்தனையோ தடவை எத்தனையோ வீரர்கள் பவுண்டரியில் தொதப்பி தன் காலினாலோ, கையினாலோ, உடலாலோ தள்ளிவிட்டு ஒரு/இரண்டு/மூன்று ரன்னை நான்காக்கி சொதப்பி உள்ளனர். அப்போல்லாம் ஐந்து ரன்களா வழங்கப்பட்டது???

சேவாக் மீது உங்களுக்கு காண்டு வேண்டாம்.

அன்று சேவாக் செய்த தவறு தன் அணியின் வெற்றிக்காக.

அம்லா இரண்டு ரன்னுக்கு பதிலாய் ஒரு ரன் மட்டும் ஓடியதும் தவறுதான். அதுவும் அவர் அணியின் வெற்றிக்காகத்தான்.

ஆனால், ரன்தீவ் செய்தது தன் அணியின் வெற்றிக்காக அல்ல. சேவாக் சதம் போடக்கூடாது என்ற தப்பான எண்ணம்-வெறி மட்டுமே.

இரண்டையும் ஒப்பிட்டது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ரன்தீவின் இச்செயலால் இப்போது கிரிக்கட்டுக்கு என்ன நன்மை தெரியுமா? நோபால் விதிகள் அநேகமாய் மாற்றப்படலாம். விதிகளில் உள்ள தவறு வெளியே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நான் பலநாளாய் சொல்லும் மற்றும் ஒரு 'விதி தவறு' ஒன்றுள்ளது.

அது 'ஹேட்ரிக்'.

ஒரு ஆட்டத்தில், அடுத்தடுத்த கடைசி இரு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்து தன் பவுலிங்கை முடித்த ஒரு பவுலர், அந்த ஆட்டத்திற்கு அடுத்த வேறொரு ஆட்டத்தில் முதல் பாலில் ஒரு விக்கெட் எடுத்து விட்டால் அதுவும் ஹேட்ரிக்காம்...!!!???


அப்போ நேத்திக்கு 99 notout எடுத்த சேவாக் அடுத்த ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்தால் செஞ்சுரி இல்லையா?

ஹலோ ஐசிசி...

என்னாங்கடா உங்க விதிகள்?
பெட்ஸ்மனுக்கு ஒண்ணு... பவுலருக்கு ஒண்ணு...!!!
மாத்துங்க்கடா... உங்க மொக்கை விதிகளை...!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

I am not going into the facts but for arguments sake:

If you are smart, you (Sanga and Randiv) should have said that the six run were denied to "Shewag and India" as this match may go into "Net Run Rate" situation!

No one has any right to blame if a side saved "Six Runs."

கன்கொன் || Kangon said...

@ UFO

எனக்கு செவாக்கைப் பிடிக்காது என்று நீங்களாக முடிவு செய்துகொண்டால் அது என் தவறு கிடையாது.
நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன்.
எனக்கு செவாக்கின் அதிரடி பிடிக்கும், ஆனால் சில விடயங்களில் செவாக் ஐ பிடிக்காது என்று.
பங்களாதேஷை ஓடினறி என்றபோது தொடங்கியது, தென்னாபிரிக்க விடயம் வரை.

முதலில் ஒரு விடயம் தெளிவாக:
ரந்தீவ் செய்தது கிறிக்கற் விதிகளின்படி தவறு கிடையாது.
எனக்கு செவாக் விடயத்தைப் பற்றி அறிய விதிகளைப் படிக்க வேண்டும்.

வெற்றிக்காக செய்தால் சரி, காரணமில்லாமல் செய்தால் பிழை என்று எதுவும் கிடையாது.
நான் ஏற்கனவே சொன்னது போன்று ரந்தீவ் அந்த முறையற்ற பந்திற்கு முன்னதாக 3 பந்துகளை மொத்தமாக வீசியிருந்தார்.
ஒரு பந்தை செவாக் அடிக்க முனைந்து தவறவிட்டிருந்தார்.
இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் ஓட்டங்கள் பெறமுடியவில்லை.
நான்காவது பந்திலேயே இது நடந்தது.


// எதற்கு இங்கே இரண்டு ரன் ஓடியிருக்க வேண்டிய நிலையில் ஒரு ரன் மட்டும் ஓடி நின்றுவிட்டார்? இது தவறில்லையா? //

இல்லை.
இது கிறிக்கற்றில் காலகாலமாக இடம்பெறும் செயற்பாடு.
நீங்கள் கேட்பீர்களா அணியில் 11 பேர் விளையாடுகிறார்களே ஏன் 4 பேர் மட்டும் பந்துவீசுகிறார்கள் என்று?

இதை தென்னாபிரிக்கர்கள் மட்டும் செய்வதில்லை, லக்ஸ்மன் - மிதுன், லக்ஸ்மன் - ஒஜா ஜோடியும் செய்யும்.
ஏனென்றால் ஒஜாவினுடையதோ, மிதுனுடையதோ தொழில் துடுப்பெடுத்தாடுவது அல்ல.
ஆகவே லக்ஸ்மன் இதுவரை எத்தனை தடவைகள் தவறு செய்திருக்க வேண்டும்?

அப்படியானால் நீங்கள் 'ஏன் செவாக்கை நோக்கி வீசப்பட்ட short and wide பந்துகளை செவாக் அடிக்க முயலவில்லை?' என்று கேள்வி எழுப்புவீர்கள் போலிருக்கிறதே?
தான் தப்புவதற்காக அவற்றை அடிக்காமல் விட்டதும் தவறு என்பீர்களா?

(நான் இந்திய அணி வீரர்களை வைத்துக் கதைப்பது உங்களிடம் என் கருத்தை இலகுவாக விளங்க வைக்கவே. எனக்கு லக்ஸ்மன் மீது எந்த வெறுப்பும் கிடையாது.)


// சேவாக் என்ன செய்தார்? பந்து பவுண்டரியை தாண்டட்டும் என்று பந்தை தடுக்காமல் விட்டார். //

மன்னிக்க வேண்டும் சகோதரா.
தடுக்காமல் விடுவது வேறு, பந்தைக் காலால் உதைப்பது வேறு.


// ஆட்டவிதிகளுக்குட்பட்டு அது நான்கு ரன்கள்தான். அன்று நடுவர்கள் சேவாகுக்கு எதிராய்... தென் ஆப்ரிக்காவிற்கு ஆதரவாய்... ஐந்து ரன்கள் கொடுத்தனர். அது நடுவர்கள் செய்த தவறு. //

இல்லையே.
தவறான புரிதல்.
அன்று வழங்கப்பட்டது மொத்தமாக 6 ஓட்டங்கள்.
1 ஓட்டம் ஓடிப் பெறப்பட்டமைக்கு, 5 ஓட்டங்கள் தண்டனையாக.

விதி இலக்கம் 42 இன்படி நடுவர் ஒருவரால் தண்டனையாக 5 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கலாம்.
இங்கு தென்னாபிரிக்க சார்பு என்பதெல்லாம் வெறுமனே உங்கள் ஊகம்.
(நல்ல வேளை அன்று விளையாடியது அவுஸ்ரேலியா இல்லை. )


// ஆனால், ரன்தீவ் செய்தது தன் அணியின் வெற்றிக்காக அல்ல. சேவாக் சதம் போடக்கூடாது என்ற தப்பான எண்ணம்-வெறி மட்டுமே. //

இதென்னது.
வெற்றிபெறலாம் என்பதற்காக செய்யலாம்.
தன்பந்தில் சதம் அடிக்கக்கூடாது என்பது மட்டும் தவறான எண்ணமா?
எந்த ஊர் விதி இது?
தன் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்கும் தன் பந்தில் சதம் பெறக்கூடாது என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


மற்றும்படி,
அந்த விதியில் எந்தத் தவறும் கிடையாது.
மாற்றப்படவும் போவதில்லை.
விதிகளின் தவறு பற்றி முடிவு செய்வது ndtv உம், சன்ஜய் மஞ்ரெக்கரும், ஹர்ஷா போக்லேயும் இல்லை.
இந்த விடயம் குறித்து யாருமே அலட்டிக் கொள்ளப் போவதில்லை.


// நான் பலநாளாய் சொல்லும் மற்றும் ஒரு 'விதி தவறு' ஒன்றுள்ளது. //

இதைத் தவறு என்று சொன்னது யார்?
3 விக்கற்றுகளை தொடர்நது எடுத்தால் சரி.


// அப்போ நேத்திக்கு 99 notout எடுத்த சேவாக் அடுத்த ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்தால் செஞ்சுரி இல்லையா?

ஹலோ ஐசிசி...

என்னாங்கடா உங்க விதிகள்? //

அப்போது ஒரு பந்துவீச்சாளர் ஒரு பந்துப்பரிமாற்றத்தில் ஒரே ஒரு பவுண்சர் தான் வீசலாம் என்றிருக்கிறது.
அப்போது ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு பந்துப்பரிமாற்றத்தில் ஒரே ஒரு சிக்ஸ் தான் அடிக்கலாம் என்று ஏன் விதியில்லை?

பந்துவீச்சாளருக்கொரு விதி துடுப்பாட்ட வீரருக்கொரு விதியா?

யோசியுங்கள்.


விதிகளை உருவாக்கியவர்கள் உங்களை/எங்களை விட நிச்சயம் புத்திசாலிகள் தான்.

கன்கொன் || Kangon said...

@ஆட்டையாம்பட்டி அம்பி:

அந்த ஆறு ஓட்டங்களை சங்கக்காரவோ, சுராஜ் ரந்தீவோ மறுக்கவில்லை.
கிறிக்கற் விதிகள் தான் மறுக்கின்றன.
இதற்கு சங்காவும், ரந்தீவும் பொறுப்புக் கூறத் தேவையில்லை.

கன்கொன் || Kangon said...

// ஒரு ஆட்டத்தில், அடுத்தடுத்த கடைசி இரு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்து தன் பவுலிங்கை முடித்த ஒரு பவுலர், அந்த ஆட்டத்திற்கு அடுத்த வேறொரு ஆட்டத்தில் முதல் பாலில் ஒரு விக்கெட் எடுத்து விட்டால் அதுவும் ஹேட்ரிக்காம்...!!!??? //

மன்னிக்கவும்.
இது தவறு.
ஹட் ட்ரிக் என்பது ஒரே போட்டியில் நடக்க வேண்டும்.
வெவ்வேறு இனிங்ஸ்களாக இருக்கலாம், ஆனால் போட்டி ஒரே போட்டியாக இருக்க வேண்டும்.

வெவ்வேறு போட்டிகளில் ஹட் ட்ரிக் எடுக்கலாம் என்று விதி உள்ளதா?
சுட்டி ஏதேனும் தரமுடியுமா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///அந்த ஆறு ஓட்டங்களை சங்கக்காரவோ, சுராஜ் ரந்தீவோ மறுக்கவில்லை.
கிறிக்கற் விதிகள் தான் மறுக்கின்றன.
இதற்கு சங்காவும், ரந்தீவும் பொறுப்புக் கூறத் தேவையில்லை.///

நான் முழுவதும் எழுதப் போவதில்லை என்று சொன்னேன்.
எனக்கும் தெரியும். அப்புறம் ஏன் ரன்திவும் கிரிகெட் போர்டும் மன்னிப்பு கேட்டது?

மன்னிப்பு கேட்கத் தேவை இல்லை. மன்னிப்பு கேட்டது தவறு எனபதற்கு தான் எனது முந்தைய பதில்....

கன்கொன் || Kangon said...

@ ஆட்டையாம்பட்டி அம்பி

// நான் முழுவதும் எழுதப் போவதில்லை என்று சொன்னேன்.
எனக்கும் தெரியும். அப்புறம் ஏன் ரன்திவும் கிரிகெட் போர்டும் மன்னிப்பு கேட்டது?

மன்னிப்பு கேட்கத் தேவை இல்லை. மன்னிப்பு கேட்டது தவறு எனபதற்கு தான் எனது முந்தைய பதில்.... //

{{ should have said that the six run were denied to "Shewag and India" }}

என்று நீங்கள் சொன்னதால் ரந்தீவ், சங்காவிற்குத் தொடர்பு இல்லை என்றேன்.
முறையற்ற பந்து வீசியதற்காகவே வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரந்தீவ் வருத்தம் தெரிவித்தமை நன்று.
குறிப்பாக இதுபற்றி செவாக் அதிருப்தியை வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த பின்பு செவாக் அந்த விடயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்கிறார் என்ற பின் ரந்தீவ் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தமை நன்று.

பவுண்சர் வீசும்போது பந்து துடுப்பாட்ட வீரரில் பட்டு அவர் கீழே விழுந்தால் பந்துவீச்சாளர் மன்னிப்பு கேட்காவிடினும் வருத்தம் தெரிவித்தல் போன்ற ஒருவகையாக சமிக்ஞை செய்வார்களே? அது போல.

ஸ்ரீலங்கா கிறிக்கற் இதை தேவையற்று வருத்தம் தெரிவித்து தேவையற்ற வேலையைப் பார்க்கிறது போல் இருக்கிறது.

பார்ப்போம்.

ஆதிரை said...

//ஸ்ரீலங்கா கிறிக்கற் இதை தேவையற்று வருத்தம் தெரிவித்து தேவையற்ற வேலையைப் பார்க்கிறது போல் இருக்கிறது.//

எந்த அடிப்படையில் இதைச் சொல்கின்றீர்கள்???

UFO said...

ஹாஷிம் அம்லா விஷயத்தில்,

//இது தவறில்லையா?

தவறில்லை. //

--என்று நானே சொல்லிவிட்டேனே... அப்புறம் எதற்கு வீண் விவாதம்?

//தவறான புரிதல்.//--நான் சொன்னதை தவறாக விளங்கிக்கொண்டு விட்டீர்கள்.

முதல் கமென்ட் போட்ட Bavan என்பவர்தான் \\\\சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பந்தை தட்டிவிட்டபோது செய்த போது அது 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டது (FOUR + single.\\\\ என்று சொல்லி இருக்கிறார்... அதுதான் நீங்க சொன்ன தவறான புரிதல்...

நான் அப்படியா சொல்லி உள்ளேன்? மீண்டும் என் கமெண்டை ஒருமுறை friendly-யாக படித்துப்பாருங்கள்.

//விதி இலக்கம் 42 இன்படி நடுவர் ஒருவரால் தண்டனையாக 5 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கலாம்.//--அணி நலனுக்காக வேண்டுமென்றே பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்ட சேவாகுக்கு பொருந்தும் அந்த விதி, சுயநலத்துக்காக வேண்டுமென்றே நோபால் போட்ட ரன்தீவுக்கு ஏனோ பொருந்தாது போலும்...

///தன் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்கும் தன் பந்தில் சதம் பெறக்கூடாது என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.///
---சரி... சரி... நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறீர்கள்.

தன் அணியின் வெற்றிக்காக --தன் அணியின் நலத்துக்காக தவறு செய்வதும்... சுயநலத்துக்காக தவறு செய்வதும் ஒன்றுதான் என சொல்ல வருகிறீர்கள்... அது உங்கள் இஷ்டம். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... அது என் இஷ்டம்.

//விதிகளை உருவாக்கியவர்கள் உங்களை/எங்களை விட நிச்சயம் புத்திசாலிகள் தான்.//----அந்த புத்தி சாலிகள்தான், பலமுறை 'தாங்கள் போட்ட விதி தவறு' என்று முன்னர் போட்ட விதிகளை மாற்றியும் இருக்கின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க சொன்னார்களே... 1992 ஆஸ்திரேலியா உலகக்கோப்பையில்...! அந்த ஐ.சி.சி விதி தவறு என்றுதானே, ஐ.சி.சி-க்கு சம்பந்தமில்லாத டக் ஒர்த் லூயிஸ் சொன்ன விதிகள் அமுலுக்கு வந்தன?

---இது ஒரு சாம்பிள்தான்.

ஆக, " விதிகளை உருவாக்கியவர்கள் உங்களை/எங்களை விட நிச்சயம் புத்திசாலிகள்... அ ல் ல ". சரியாக சிந்திப்பவர்கள் யாரும் நல்ல விதிகளை உண்டாக்க முடியும். எந்த மனிதனும் காலாகாலத்துக்கு பொருந்தும் மிகத்துல்லியமான விதியையும் தர முடியாது. அனைத்து விதிகளும் மனிதர்களால் போடப்பட்டவையே... அதேபோல அது சரியற்றதாயின் மனிதரால் மற்றப்படக்கூடியதுங்கூட... அதேபோல அவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதும் அல்ல, என்பதை மட்டுமாவது அறிந்து கொள்ளுங்கள்.

விவாதித்ததுக்கு மிக்க நன்றி சகோதரா.

S.ரமேஷ். said...

அன்பிற்கினிய நண்பரே..,

"" நல்லது செய்கையில் நாடு பாருங்கள்.
ஒரு தனிநபரின் தவறிற்கு ஒருநாடு எப்படி காரணமாகும்?..""

என்று சொல்லிருக்கிறீர்கள்..,நல்லது.

ஆனால் " http://loshan-loshan.blogspot.com/2010/02/blog-post.html "
"பந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி.. "

என்ற பதிவில் நீங்கள் இட்ட பின்னூடம் இதுதான்..


கனககோபி

விளங்கின மாதிரித்தான்...

பாகிஸ்தான் அணியில் குழப்படி இல்லாத பெடியன் அப்ரிடி என்று நினைத்தேன், எனது நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்...

அந்தக் கலந்துரையாடலில் சொல்லப்படுவது போன்று மைதானம் முழுதும் 27 கமெராக்கள் இருக்கும் போது என்ன யோசித்துக்கொண்டு இதைச் செய்தார் என்று தெரியவில்லை.

றிவேர்ஸ் ஸ்விங்கை எடுக்க இவ்வளவு கேவலமாகச் செயற்படத்தான் வேண்டுமா?

வாழ்க பாகிஸ்தான்....

அப்ரிடி
February 1, 2010 7:56 அம


பந்தை கடித்தது "அப்ரிடி" என்ற தனி மனிதன் தானே ... பிறகு எதற்காக வாழ்க பாகிஸ்தான்....மற்றும் பாகிஸ்தான் மோசடி

சொல்லுங்கள் சகோதரா...

நன்றி...

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.

கன்கொன் || Kangon said...

@ஆதிரை அண்ணர்

// எந்த அடிப்படையில் இதைச் சொல்கின்றீர்கள்??? //

இது வெறுமனே ரந்தீவ் என்ற வீரருக்கும், செவாக் என்ற வீரருக்குமிடையிலான விடயம்.
இதற்குள் ஒருநாட்டின் கிறிக்கற் சபை வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை.

ரந்தீவின் செயலால் அணியொன்றின் வெற்றி பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு சபை வருத்தம் தெரிவித்தல் சரி, ஆனால் ஒரு தனிப்பட்ட வீரரின் பிழைக்காக சபை எதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும், அதுவும் ரந்தீவ் செய்தது விதிகளின்படி பிழை என்று இல்லாத நிலையில்?

கிறிக்கின்போவில் கேட்டது போல அடுத்த முறை ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசி ஒரு துடுப்பாட்ட வீரருக்கு அடி பட்டுவிட்டால் அதற்கும் வருத்தம் தெரிவிக்கப் போகிறார்களா?

K. Sethu | கா. சேது said...

கன்கோன்:
//அன்று வழங்கப்பட்டது மொத்தமாக 6 ஓட்டங்கள்.
1 ஓட்டம் ஓடிப் பெறப்பட்டமைக்கு, 5 ஓட்டங்கள் தண்டனையாக.//

அந்தத் தீர்ப்பும் சொதப்பலானது போலத் தெரிகிறது எனக்கு.

Law 19 - 6. 6. "Overthrow or wilful act of fielder" - http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-19-boundaries,45,AR.html

என்பதன் கீழ் i), ii), iii) எனவுள்ள பத்திகளை வாசிக்கவும். அவற்றில் i) படி Law 42 இன் கீழ் தெ.ஆ. அணிக்கு 5 ஓட்டங்கள் மற்றும் iii) படி அம்லாவின் ஓர் ஓட்டம் என 5+1 ஓட்டங்கள் மட்டும் தெ.ஆ விற்கு சேர்த்துள்ளனர்.

ஆனால் ii) படி சேவாக்கினால் உதைத்து அளிக்கப்பட்ட (;>) 4 ஓட்டங்கள் சேர்க்கப்படாமை தவறு எனக் கருதுகிறேன். அதாவது மொத்தமாக 10 ஓட்டங்கள் என இருந்திருக்க வேண்டும். எனது புரிதலில் தவறிருப்பின் சுட்டிக் காட்டவும்.

அடுத்து Cricinfo வர்ணனையில் [ http://www.cricinfo.com/indvrsa2010/engine/match/441826.html?innings=3;page=3;view=commentary ] சங்கதி நடைபெற்ற பரிமாற்றத்தில் 6 பந்துக்களே போடப்பட்டதாக காட்டப்பட்டுகிறது. 5 வது பந்தில்தான் சேவாக்கின் திருகுதாளம். அப் பந்து Law 42 விதியின் தாக்கப்படி dead ball ஆகியிருந்திருக்க வேண்டியதனால் அப்பந்தையும் 129.4 என cricinfo சுட்டியிருப்பது சரி. ஆனால் அதன் பின் ஒரு பந்து மட்டும் பதியப்பட்டுள்ளது. ஒரு dead ball காரணமாக மொத்தம் 7 பந்துகள் அல்லவா வீசப்பட்டிருக்க வேண்டும். Cricinfo விட்ட தவறா?

வேறு எனது கருத்துக்கள் பின்னர் எழுதவுள்ளேன்.

~சேது

கன்கொன் || Kangon said...

@UFO:

// முதல் கமென்ட் போட்ட Bavan என்பவர்தான் //

பின்னூட்டுபவர்களின் கருத்துக்களுக்கு நான் பொறுப்புக் கிடையாது.
அது தவறான புரிதல் அவரின்.


// நான் அப்படியா சொல்லி உள்ளேன்? மீண்டும் என் கமெண்டை ஒருமுறை friendly-யாக படித்துப்பாருங்கள். //

{{ ஆட்டவிதிகளுக்குட்பட்டு அது நான்கு ரன்கள்தான். அன்று நடுவர்கள் சேவாகுக்கு எதிராய்... தென் ஆப்ரிக்காவிற்கு ஆதரவாய்... ஐந்து ரன்கள் கொடுத்தனர். அது நடுவர்கள் செய்த தவறு. }}

இப்படித்தானே இருக்கிறது?
ஆட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் அது 6 ஓட்டங்களாக வழங்கப்பட்டது.
1 ஓட்டமும், 5 ஓட்டங்கள் தண்டனையாக.


// அந்த புத்தி சாலிகள்தான், பலமுறை 'தாங்கள் போட்ட விதி தவறு' என்று முன்னர் போட்ட விதிகளை மாற்றியும் இருக்கின்றனர். //

நிச்சயமாக.
ஒரு விடயம் பிழை என்று தெரிந்தபின் மதவாதிகள் போல் பழைய ஒன்றையே பிடித்துக் கொண்டிருக்க முடியாது, காலத்திற்கேற்றவாறு எம்மை இற்றைப்படுத்த வேண்டியிருக்கிறதே?

நான் அவர்கள் எம்மை விட புத்திசாலிகள் என்று சொன்னேனே தவிர அவர்கள் முழுநிறைவானவர்கள் என்று சொல்லவில்லை.

குறித்தி விதி தொடர்பாக பிழைகள் இல்லை என்றே சொன்னேன்.


// மழையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க சொன்னார்களே... //

டக் வேர்த் லூயிஸ் முறை தற்போதைய நிலையில் ஓரளவுக்கு சரியான முறை.
தற்போதிருக்கும் நிலையில் ஓரளவுக்கு சிறப்பாக உள்ள விதி இதுதான்.
மழை வந்து குழப்பி, ஆட்ட நேரம் போதாமல் இருக்கும்போது ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு வழியில் revised target ஒன்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அதைச் செய்வதற்கு டக் வேர்த் லூயிஸ் முறை தவிர சிறப்பான முறைகள் இப்போதைக்கு இல்லை.

ஆனால் அந்த முறையில் சில ஓட்டைகள் இருப்பதையும், திருத்தியமைக்க வேண்டியுள்ளதையும் கிறிக்கற் உலகம் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் டக் வேர்த் லூயிஸ் விதி மாற்றப்படும் என்பதற்காக பந்து விக்கற்றில் பட்டால் ஆட்டமிழப்பில்லை என்று விதிகள் வராதே?

// விவாதித்ததுக்கு மிக்க நன்றி சகோதரா. //

உங்களுக்கும் நன்றி. :-)

கன்கொன் || Kangon said...

@ரமேஸ்:

நான் தெளிவாக அதில் சொல்லியிருக்கிறேன்.

// பாகிஸ்தான் அணியில் குழப்படி இல்லாத பெடியன் அப்ரிடி என்று நினைத்தேன், எனது நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்... //

ஆகவே பாகிஸ்தானில் நான் கண்டவர்கள் குழப்படிகாரர்கள், அப்ரிடி இல்லை என்று நினைத்தேன்.
இப்போது அப்ரிடியும் குழப்படிகாரர் என்றபடியால் ஒட்டுமொத்த பாகிஸ்தானுமே குழப்படிகாரர்களென்று ஆகிறதல்லவா?

அப்போது வாழ்க பாகிஸ்தான் என்று நான் சொன்னபோது பாகிஸ்தான் அணியில் குழப்படிகாரர்கள் மட்டுமே (என் பார்வையில்) இருந்திருக்கிறார்களே?

(பாகிஸ்தான் என்று கிறிக்கற் அணி தான். வாழ்க பாகிஸ்தானியர்கள் என்றிருந்தேன் என்றால் அது வேறு விடயம்.)

கன்கொன் || Kangon said...

@கா.சேது ஐயா:

விதிகளில் சோதனையா... ஹி ஹி... ;-)

பந்து எல்லைக் கோட்டை அடைய முன்னர் ஒரு ஓட்டத்தை ஓடியிருக்கின்றனர். அந்த 1.

பந்து நின்றுவிட்டது. பந்து உதைக்கும் கணத்திற்கு முன்னர் வரை ஒரு ஓட்டம் மட்டுமே.
அதன்பின்னர் செவாக் பந்தை உதைக்கிறார். பந்து உதைக்கப்படும்போது அது விதிகளுக்கு எதிரானதாக மாறுகிறது.
கிட்டத்தட்ட dead ball மாதிரி என்று நினைக்கிறேன்.
// the runs completed by the batsmen, together with the run in progress if they have crossed at the instant of the throw or act.//
இது overthrow என்று வராது என்று நினைக்கிறேன்.
பந்தை ஆடுகளம் நோக்கி எறியாமல் மறுபுறத்தில் உதைந்ததால் அதை நான்கு ஓட்டங்களாக எடுக்க முடியுமோ தெரியவில்லை.
தண்டனையாக 5 ஓட்டங்கள் என்பது எனக்குச் சரியாகப் படுகிறது.

விதிகளை இலகுவாக வாசித்த புரிந்து கொள்ள முடியாது.
மீண்டுமொருமுறை திரும்ப முழுவதுமாக வாசித்துப் பார்க்கிறேன். :-)

UFO said...

//ஸ்ரீலங்கா கிறிக்கட் இதை தேவையற்று வருத்தம் தெரிவித்து தேவையற்ற வேலையைப் பார்க்கிறது போல் இருக்கிறது.//---அப்படித்தான் இன்றைய கிரிக்கெட் உள்ளது...

ஒருவேளை இருநூறு கோடி கிரிக்கட் ரசிகர்கள் ஸ்ரீலங்காவில் இருந்திருந்தால், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வாரியமே, சேவாக் பேசியதற்காக ரன்தீவிடம் மன்னிப்பு கேட்டிருக்கும்.

இங்கே எல்லாமே காசுதான். அதை தரும் ரசிகர்கள் முக்கியம். விதிகளாவது... புன்னாக்காவது.

ஆறுபாலும் பவுன்சர் போட்டால் சிக்சரும் இருக்காது, பவுண்டரியும் இருக்காது, ஸ்டேடியத்திலும் யாரும் இருக்க மாட்டார்கள், டி வி ரைட்சும் விற்காது. அதனால்தான் ஒரு பவுன்சர் மட்டும் போடலாம் என்ற விதியை 'புத்திசாலிகள்' போட்டனர். மக்கள், 'சிக்ஸ், ஃபோர் வேண்டாம்; இனி பவுன்சர்தான் பார்ப்போம்' என்றால் ஆறு பாலும் பவுன்சர் போட்டாக வேண்டும் என்றுகூட விதியை மாற்றுவர்...
பணந்திண்ணி பிசாசுகள்!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///கன்கொன் said..முறையற்ற பந்து வீசியதற்காகவே வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.///

எனது விவாதமே அது தான்! முறையற்ற முறையில் அவர் பந்து வீசவில்லை. அவர் செய்து சரி! சரி!! சரி!!!

Please read the following within this context: cricket = fame = endorsements = money! money!! money!!!

When the players and teams claim "out" when they KNOW that the batsman, in question, is "NOT OUT," every other thing pales into insignificance and [THEN] "all are fair in Cricket." Period . All teams and players are equally guilty and culpable. Laws and rules are either enacted or repealed by omissions and commissions. That is how the rules or laws are changed what we call as amendments. You cannot make a captain or a player accountable for following the letters of the law or rules. Will you??? That is absurdity to the core. In that case, scrap all the laws.

An attorney would argue this way and so as the captain of any team who is provided with the rule book. Else, do not provide the rule book! An attorney would say, one SHOULD NOT take an apology or penalized for following the rules. If you think that Randiv should donate a "six" make an amendment that one should wait until a player hits a six!!!

Net run rate alone would justify the no ball. But following arguments would strengthen Randi and Sanga's case.

Shewag wants to gain an upper hand over "RANDIV" by hitting a six to reach his century. That is Shewag! All of us know that. Randiv and Sanga knows that too. Until this time Shewag was on the losing side as Randiv dismissed him several times. Is it wrong to have an psychological advantage over Shewag as there is every possibility that Sri Lanka and India could met in the final?? After all cricket is a mental game. Claiming Shewag's wicket EARLY in the finals means is vital and Sri Lanka could lift the trophy. Half the battle is won if Shewag is gone early.

I (Randiv) would end my argument such as this: Having denied a six and a century to Shewag, he is mad at me, and would do silly things to give his wicket when facing me in the finals. So I did this with the single interest that Sri Lanksa would be able to lift the cup. Because, India - Shewag = Zero, a big Zero. He dictates matches and results.

என்னுடய வருத்தம் ரன்திவ் மன்னிப்பு கேட்டு இருக்கக் கூடாது.

By the same token, Shewag would have won this contest, if he had said three words when Tony Grieg asked him...

"Yes, I expected that." No more comments...

இதற்கு மேல் எனது விவாதம் இங்கு வராது. இங்கு இதைப் படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும், எது சரி எது தப்பு என்று.

I respect the Jury's verdict...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///கன்கொன் said..முறையற்ற பந்து வீசியதற்காகவே வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.///

எனது விவாதமே அது தான்! முறையற்ற முறையில் அவர் பந்து வீசவில்லை. அவர் செய்து சரி! சரி!! சரி!!!

Please read the following within this context: cricket = fame = endorsements = money! money!! money!!!

When the players and teams claim "out" when they KNOW that the batsman, in question, is "NOT OUT," every other thing pales into insignificance and [THEN] "all are fair in Cricket." Period . All teams and players are equally guilty and culpable. Laws and rules are either enacted or repealed by omissions and commissions. That is how the rules or laws are changed what we call as amendments. You cannot make a captain or a player accountable for following the letters of the law or rules. Will you??? That is absurdity to the core. In that case, scrap all the laws.

An attorney would argue this way and so as the captain of any team who is provided with the rule book. Else, do not provide the rule book! An attorney would say, one SHOULD NOT take an apology or penalized for following the rules. If you think that Randiv should donate a "six" make an amendment that one should wait until a player hits a six!!!

Contd...below as part 2.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Part 2. Contd...from above.

Net run rate alone would justify the no ball. But following arguments would strengthen Randi and Sanga's case.

Shewag wants to gain an upper hand over "RANDIV" by hitting a six to reach his century. That is Shewag! All of us know that. Randiv and Sanga knows that too. Until this time Shewag was on the losing side as Randiv dismissed him several times. Is it wrong to have an psychological advantage over Shewag as there is every possibility that Sri Lanka and India could met in the final?? After all cricket is a mental game. Claiming Shewag's wicket EARLY in the finals means is vital and Sri Lanka could lift the trophy. Half the battle is won if Shewag is gone early.

I (Randiv) would end my argument such as this: Having denied a six and a century to Shewag, he is mad at me, and would do silly things to give his wicket when facing me in the finals. So I did this with the single interest that Sri Lanksa would be able to lift the cup. Because, India - Shewag = Zero, a big Zero. He dictates matches and results.

என்னுடய வருத்தம் ரன்திவ் மன்னிப்பு கேட்டு இருக்கக் கூடாது. By the same token, Shewag would have won this contest, if he had said three words when Tony Grieg asked him...

"Yes, I expected that." No more comments...

இதற்கு மேல் எனது விவாதம் இங்கு வராது. இங்கு இதைப் படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும், எது சரி எது தப்பு என்று.

I respect the Jury's verdict...

LOSHAN said...

நான் இனி என்ன சொல்வது?
ஊரே உலகமே சொல்லி விட்டது.. :)

ரண்டீவ் வேண்டுமென்றே அந்த செயலை செய்திருந்தால் அது தப்புத் தான்.. அதனால் தானே அவரே மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆனால் பலர் - விமர்சனப் புண்ணாக்குகள் என்று சொல்வோமா? ;) இலங்கை அணியையே பொதுமைப் படுத்தி இருப்பதும் Lankans என்று பொதுமைப் படுத்தி இருப்பதும் கேவலமானது..

அசாருதீன் லஞ்சம் வாங்கிக் கொண்டு போட்டிகளைத் தோற்றத்துக்காக இந்தியாவையும் இந்தியரையும் உலகம் சபித்ததா?

கங்கோன் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தர்க்க நியாயங்களையும் யாரையும் தாக்காமல் நீங்கள் எடுத்த கருத்தை எளிமையாக விளங்கப்படுத்தியதையும் ரசித்தேன். :)

பின்நூட்டிகள் பலரும் விவாதித்த,சந்தேகங்களை எழுப்பிய விதத்தை மற்றும் தம் தரப்பு நியாயங்களை சொன்ன விதங்களையும் பிரமித்தேன்..

ஆரோக்கியமாக இந்தப் பதிவும் பின் விளைவுகளும் அமைந்ததில் மகிழ்ச்சி..

இதையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்..

http://www.cricinfo.com/ci/content/current/video_audio/472881.html

LOSHAN
www.arvloshan.com

K. Sethu | கா. சேது said...

கன்கோன்

எனது பின்னூட்டம் காணவில்லையே?.

ஆனால் அதற்குத் தங்கள் இட்ட மறுமொழியில்:

//இது overthrow என்று வராது என்று நினைக்கிறேன்.//

"overthrow" வேறு "wilful act of fielder" வேறு. விதி 19 - 6 கீழ் பார்ப்பின் :
>>
6. Overthrow or wilful act of fielder
If the boundary results either from an overthrow or from the wilful act of a fielder the runs scored shall be ...
<<

I can only conclude that Shewag's action was also a wilful act from which a boundry had resulted.

அதன் அடிப்பிடையில் தான், ஓடிய ஓர் ஓட்டம்+உதைத்துக் கொடுக்கப்பட்ட 4 ஓட்டங்கள் + penalty 5 என மொத்தம் 10 கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறேன்.

//விதிகளை இலகுவாக வாசித்த புரிந்து கொள்ள முடியாது.//

உண்மைதான். சேவாக் இழைத்த குற்றத்திற்கு penalty 5 தான் என உள்ள இடம் இன்னும் நான் கண்டு பிடிக்கவில்லை.

//மீண்டுமொருமுறை திரும்ப முழுவதுமாக வாசித்துப் பார்க்கிறேன். :-)//

குழம்பிப் போகாமல் இருக்கவும் என வாழ்த்துகிறேன் :>)

கா. சேது

கிருத்திகன் said...

ரந்தீவ் மீது எனக்குப் பச்சையாகக் கோபம் வந்தது. காரணம், இதே ரந்தீவ்தன் சேவாக்கை 99ல் ஆட்டமிழக்கவும் வைத்தவர். திறமை இருக்கிற இடத்தில் இப்படியான கீழ்த்தரங்கள் வந்து சேரக்கூடாது. தயவு செய்து ரந்தீவை முரளியின் இடத்தில் வைத்து நோக்கவேண்டாம் இனிமேல். முரளி கனவில்கூட இதைச் செய்திருக்கமாட்டார்.

Edge of the rule அல்லது சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கிரிக்கெட் ஆடுவது எல்லா இடத்திலும் நடக்கிறது. ஆகவே காலா காலமாக இலங்கை அணி இதைச் செய்வதுபோல் விமர்சிப்பது, தவறு. Neutral Umpires கட்டாயமாக்கப்பட நம்முடைய ஆசிய நடுவர்கள்தான் காரணம் என்பதை மனதார ஒப்புக்கொள்ளவேண்டும்.

ரந்தீவ் 100 அடிக்க விடாமல் பந்து போட்டார்... பிழைதான். விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் உலகின் மிகக் காட்டுமிராண்டித்தனமான செயல் 2007 இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் நடந்தது. பீற்றர்சனுக்கு ஸ்ரீசாந்த் ஒரு beamer வீசினார்.போய்கொட் கூடச் சொல்கிறார் ஸ்ரீசாந்தின் கையில் இருந்து பந்து வழுக்கியது என்று. அந்தக் காணொளி என்னிடம் இல்லை, ஆனால் அந்தப் போட்டியை நான் நேரடியாகப் பார்த்தேன். ஸ்ரீசாந்தின் பின்னங்கால் கிரீசில் இருந்தது. வேண்டுமென்றே பீற்றர்சனைக் காயப்படுத்தும் நோக்கில்தான் ஸ்ரீசாந்த அந்தப் பந்தை வீசினார். ஆனால் ஒருத்தரும் ஒரு மயிரும் பிடுங்கவில்லை. அந்தக் காட்டுமிராண்டி இன்றைக்கும் கிரிக்கெட் விளையாடுகிறது.

இலங்கைக் கிரிக்கெட் சபை வருத்தம் தெரிவித்தது சரியே. ரந்தீவ் ஒரு தனிப்பட்ட மனிதரல்ல. இலங்கைக் கிரிக்கெட் சபையின் ஊழியர். அவரது செயல்களுக்கு நிச்சயமாக அவர்கள் பொறுப்பேற்றாகவேண்டும். So, well done SLC. இந்த ஒரு விடயத்திலாவது தொழில்தர்மத்துடன் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு ஒன்று நடந்து கொண்டது சந்தோசமே.

கிருத்திகன் said...

http://www.youtube.com/watch?v=3a7yMEAH6HQ

இந்த வீடியோவின் 3:02 க்குப் பிறகு கேட்கவும்.

Commentator-1 (Ranil Abenaike?): We told you that he like to do it with a six and that's exactly what he did though it's the n0-ball that counts to the score....

Russel Arnold: But bowled on purpose I'm sure. It's a big step over.

நன்றி ஆர்னோல்ட். சுடச்சுட உண்மை சொன்னதுக்கு. But ஐ Not என்று திரித்தால் ஆர்னோல்ட் உளறினார் என்று வந்துவிடும். ரந்தீவ் வேணுமென்றே செய்தார் (கவனிக்க: திட்டமிட்டு அல்ல) என்பது வெள்ளிடை மலை. அதை மறுக்காமல் விவாதிப்பது நலம்.

கன்கொன் || Kangon said...

@கா.சேது ஐயா:

உங்கள் பின்னூட்டங்களை வெளியிட்டேன்.
ஆனால் வெளியிடப்படவில்லை போலும்.

மின்னஞ்சல் திரும்ப வெளியிட முடியவில்லை.
இப்போதுதான் blogger மூலம் வெளியிட்டேன் திரும்ப.
புளொக்கர் தொழிநுட்பக் கொளாறு. :(


கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
மதியம் பதிலளிக்கிறேன்.

Anonymous said...

"கிரிக்கெற்றில்" அதென்ன நாங்களெல்லாம் "கிரிக்கெட்" என்று கூறும் போது.
நாங்கள் "சொன்னார்", "இயம்பினார் ", "செப்பினார்", "மொழிந்தார்", "கூறினார்", "விளைந்தார்" என்று பல வார்த்தைகள் உபயோகப்படுத்தும் போது , நீங்கள் மட்டும் "கதைத்தார்" என்று ஒரே ஒரு வார்த்தையை மாட்டும் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு தமிழை இழிவாக நினைக்கிறீர்கள். எல்லாம் நேரமடா!

ம.தி.சுதா said...

அப்பாடி இலந்கை கிண்ணம் வென்றதால் இந்தக் கதை அப்படியே அமந்திட்டுது என நினைக்கிறென்..