Saturday, December 11, 2010

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.

எதிர்வரும் 16ம் திகதி ஆஷஷ் தொடரின் மூன்றாவது போட்டி ஆரம்பமாகிறது.
முக்கியமான போட்டியும் கூட. முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்த பின்னர் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றிருப்பதால், W.A.C.A மைதானத்தில் (பேர்த் என்று இனிக் குறிப்பிடுகிறேன்.) இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே செல்லும், கடைசி இரண்டில் அவுஸ்ரேலியா அதிசயமாக வென்றாலும் கூட, ஏனென்றால் தற்போது ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே உள்ளது, தொடர் சமநிலையில் முடிவடைந்தால் முன்னைய தொடரைக் கைப்பற்றிய அணிக்கே கிண்ணம் உரித்துடையதாகும்.

போட்டிக்கான அவுஸ்ரேலிய குழாம் அறிவிக்கப்பட்டு விட்டது, இங்கிலாந்து அணியில் 10 பேர் ஏற்கனவே விளையாடிய அணியில் விளையாடியவர்கள் என்பதால் அவர்களின் தெரிவும் முடிவடைந்துவிட்டது, அணிகளைப் பற்றிப் பார்க்க முன்னர் பேர்த் மைதானம் பற்றிப் பார்ப்போம்.

வேகம் மட்டுமல்ல, அழகும் தான்.


பேர்த் மைதானம் பொதுவாக அதன் வேகத்துக்கும், பவுண்ஸ் இற்கும் பெயர் போனது. உலகின் மிக வேகமான மைதானங்களில் ஒன்றாக, இல்லையெனில் உலகின் வேகமான மைதானமாகவே, கணிக்கப்பட்ட ஒன்று.
அண்மைக்காலத்தில் அதன் வேகத்தை சிறிது இழந்ததாகக் கருதப்படினும், இன்னும் உலகின் வேகமான மைதானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆனால், அண்மையில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் பழைய பேர்த் மைதானம் போன்று ஆடுகளம் வேகமாக இருந்தது. குறிப்பிட்டுச் சொன்னால் ஆடுகளத்தை வேகமாக அடித்துப் பந்துவீசும் (Bang in type bowlers. கொச்சையாகச் சொன்னால் pitch ஐ வேகமாக குற்றிப் போடுவோர். ஜோன்சன், மோர்னி மோக்கல் போன்றவர்கள் சிறந்த உதாரணம்) பந்துவீச்சாளர்களான பெர்னான்டோ மற்றும் திஸ்ஸர பெரெரா ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினர். அத்தோடு உயரமான சுழற்பந்துவீச்சாளரான ரந்தீவிற்கும் ஆடுகளம் சிறப்பாக உதவி செய்தது.

அப்போது பேர்த் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு மட்டும் சாதகமானதா என்றால் இல்லவே இல்லை.
துடுப்பாட்ட வீரராக நீங்கள் ஓட்டங்களைக் குவிக்க முடியும். அதற்கு நீங்கள் மிகச்சிறந்த back-foot வீரராக இருக்க வேண்டும்.
நானறிந்து தற்போது விளையாடும் வீரர்களில் குமார் சங்கக்காரவை மிகச்சிறந்த back-foot player என்பேன்.
உங்களால் back foot இல் மிகச்சிறப்பாக ஆடமுடியும் என்றால் ஓட்டங்களைக் குவிக்க முடியும்.

அத்தோடு சுழற்பந்துவீச்சாளராக உங்களுக்கு பவுண்ஸ் கிடைக்கும். ஆக இது வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், துடுப்பாட்ட வீரர்கள் ஆகிய எல்லோருக்கும் சாதமான அல்லது உதவும் ஆடுகளம் ஆகும்.

காலநிலை -
பொதுவாக பேர்த் வெயிலான பகுதி ஆகும்.
எனினும் மைதானம் கடலுக்கு அண்மையாக அமைந்திருப்பதால் மாலைநேரக் காற்று மைதானத்திற்கு குறுக்காக வீசும். இது வெப்பத்தைக் குறைப்பதோடு ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதனால் ஸ்விங் பந்துவீச்சாளர்களும் பேர்த் மைதானத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.


என்ன மாதிரிப் பந்துவீசுவார்கள்?
பிரதானமாக back of the length எனப்படும் பகுதியில் அதிகமாகப் பந்துவீசி பெறும் extra bounce மூலம் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிப்பார்கள்.

ஸ்விங் பந்துவீச்சாளர்கள் வழமையைப் போன்று fuller length இல் பந்துவீசுவார்கள்.

யார் யார் இங்கு சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?
back of the length என்று வந்த பின் மக்ரா(த்) ஐ தவறவிட முடியாது. 12 போட்டிகளில் 52 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
மக்ரா தவிர லீ, மேர்வ் ஹியூஸ் போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
அண்மைக்காலத்தில் மிற்சல் ஜோன்சன் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.

இதைத் தவிர இதே மைதானத்தில் இதே டிசம்பர் 16ம் திகதியில் நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது.
2009ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ம் திகதி கேமர் றோச் இன் பந்துவீச்சில் றிக்கி பொன்ரிங் காயமடைந்து retired hurt ஆனது மிகமுக்கியமானது.
பொன்ரிங்கின் துடுப்பாட்டத்தில் சரிவை ஏற்படுத்திய நிகழ்வு அது.

அந்தத் தருணம்


அத்தோடு டெனிஸ் லில்லியின் அலுமினியத் துடுப்பு விவகாரமும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அது நடைபெற்றது 1979ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி. (டிசம்பர் 14 தான் ரெஸ்ற் தொடங்கியது. நடைபெற்றது இரண்டாம் நாளில்)

சர்ச்சை இடம்பெறுகிறது. நன்றி இன்டிபென்டன்ற்.


சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷேன் வோண் அவுஸ்ரேலியாவில் விரும்பாத ஆடுகளம் பேர்த் மைதானம் தான்.
12 போட்டிகளில் 37 விக்கற்றுகள். SR: 77.1, சராசரி 36.45
ஆனால் அண்மைக்காலத்தில் பேர்த் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாகச் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2006 ஆஷஷ் தொடரில் மொன்ரி பனசரின் 5 விக்கற் பெறுதி, சுலைமான் பென் ஓரளவு சிறப்பாக வீசியமை குறிப்பிடத்தக்கன.

இனி மைதானத்தில் அணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால்,
அவுஸ்ரேலிய அணி பேர்த் இல் 37 போட்டிகளில் 21 இல் வென்றிருக்கிறது, 9 இல் தோற்றிருக்கிறது, 7 சமநிலையில்.
இங்கிலாந்திற்கெதிராக 11 போட்டிகளில் 7இல் வென்று, ஒன்றில் தோற்று, மூன்றைச் சமப்படுத்தியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் என்று பார்த்தால்,
2009ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக தோற்றமையையும், 2008ம் ஆண்டு டிசம்பரில் தென்னாபிரிக்காவுடன் தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.
அது தவிர, கடந்த ஆண்டு இதே டிசம்பர் 16 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மயிரிழையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
359 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 323 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தவிர தென்னாபிரிக்கா 414 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறுமனே 4 விக்கற்றுகளை இழந்து பெற்றதுவும் மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவது ஒன்றும் பெரிய சிரமமில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.

இனி அணி விபரங்களைப் பார்த்தால்,
இங்கிலாந்தில் கடந்த ரெஸ்ற் இல் விளையாடிய 10 பேர் விளையாடுவது உறுதி. மகள் பிறப்பதற்காக இலண்டன் திரும்பிய அன்டர்சன் தேவையானளவு முன்பே பேர்த் இற்கு திரும்பிவிடுவார்.
அவர்களின் ஒரே பிரச்சினை ப்ரொட் இற்குப் பதிலாக யாரை விளையாட வைப்பது என்பதே ஆகும். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி அன்டி பிளவர், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே தன்னிடம் யோசனை/திட்டமிருக்கதாக சொல்லியிருந்தார்.
அனேகமாக ட்ரம்லெட் விளையாடவே வாய்ப்புண்டு.
தவிர சஷாத் மற்று் ப்ரஸ்னன் ஆகியோரும் விளையாட வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. றிவேர்ஸ் ஸ்விங் எதிர்பார்க்கப்படுவதால் ப்ரஸ்னன், சஷாத் ஆகியோர் பின்னிற்கப் போவதில்லை. எனினும் ட்ரெம்லெட் இன் உயரம் அவருக்கு மற்றையவர்களை விட அதிகமான வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த உயரம் தான் ட்ரெம்லற் இற்கு சாதகமாக...

இங்கிலாந்து அணி:
குக், ஸ்ட்ரோஸ், ட்ரொட், கெவின் பீற்றர்சன், கொலிங்வூட், பெல், ப்ரயர், ஸ்வான், ட்ரெம்லட், அன்டர்சன், ஃபின்

இதில் அலஸ்ரயர் குக் சிறந்த backfoot வீரர் என்றபடியால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒருவர் ஆகிறார்.
குக் இன் pull shot/hook shot விளையாடும் திறன் பேர்த் மைதானத்திற்கு உதவும்.
கடந்த பேர்த் ஆஷஷ் போட்டியில் இங்கிலாந்து 206 ஓட்டங்களால் (படு)தோல்வியடைந்த போதிலும், அப்போட்டியில் நான்காம் இனிங்ஸ் இல் குக் போராடிப் பெற்ற 116 ஓட்டங்கள் மிகமுக்கியமானவை, மிகப் பெறுமதிவாய்ந்தவை.
அத்தோடு தற்போதைய form இல் குக் மிகமுக்கிய நபராகிறார்.

2006ஆண்டு சதத்தைக் கொண்டாடும் குக்.


பந்துவீச்சில் ட்ரெம்லட், ஃபின் மற்றும் அன்டர்சன் ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவமுடையவர்களாக மாறுகிறார்கள்.
அன்டர்சனின் form உம், பேர்த் இல் கிடைக்கும் ஸ்விங் ஐயும் பயன்படுத்த வேண்டியது அன்டர்சனின் பொறுப்பாகும்.
ப்ரோட் இல்லாத காரணத்தில் பந்துவீச்சை தொடக்கிவைக்கப் போகும் ஃபின் தனது உயரத்தின் காரணமாக பெறும் பவுண்ஸை சரியாகப் பயன்படுத்தினால் விக்கற்றுகளைக் கைப்பற்றலாம்.
ட்ரெம்லட்டின் உயரம் அவருக்கு சாதகத்தன்மையை வழங்கும்.


அவுஸ்ரேலியா சார்பாக ஹியூஸ், வொற்சன், பொன்ரிங், கிளார்க், ஹசி, ஹடின், ஸ்மித், ஜோன்சன், ஹரிஸ், ஹில்பன்ஹோஸ், சிடில் என்ற அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரரான மைக்கல் பியர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அரிது.
நோர்த் ஐ கழற்றிவிட்ட தேர்வாளர்கள் அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர்கள் யாரையும் அறிவிக்காத நிலையில், ஏற்கனவே அடிலெய்ட் இல் இலகுவாக ஆட்டமிழந்த 7 பேர் கொண்ட துடுப்பாட்ட வரிசைக்குப் பதில் 6 பேர்கொண்ட துடுப்பாட்ட வரிசை களமிறக்கப்படமாட்டாது என்பதால் ஸ்மித் விளையாடுவது நிச்சயம்.
மற்றையது ஸ்மித், பியர் இருவரும் பேர்த் ஆடுகளத்தில் விளையாடுவது அவுஸ்ரேலியக் கிறிக்கற்றில் நடப்பதற்கு சாத்தியமற்றது.
ஆகவே 5 துடுப்பாட்ட வீரர்கள், விக்கற் காப்பாளர், ஒரு சகலதுறை வீரர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற அணியே களமிறங்கும்.

எனினும் பியரின் தெரிவு அவுஸ்ரேலியத் தெரிவாளர்கள் மீதான விமர்சனத்தைக் கிளப்பிவிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
சுழற்பந்துவீச்சாளர்களை எந்தவித முன்யோசனையுமின்றித் தெரிவுசெய்து பின்னர் உடனே அவர்களை அணியிலிருந்து கழற்றிவிடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.
பியரை ஷேன் வோண் பிரேரித்திருந்த போதிலும், நதன் ஹொரிட்ஸின் form உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இருக்கும் நிலையில் ஏன் ஹொரிட்ஸைத் தெரிவுசெய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மைக்கேல் பியர், தேர்வாளர்களின் புதிய தெரிவு.

யார் முதல்நிலைச் சுழற்பந்துவீச்சாளர் என்று பார்க்காமல் "நாங்கள் இதுவரை யாரைப் பரீட்சிக்கவில்லை" என்ற மனநிலையில் தேர்வாளர்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில்/தொடருக்கு முன்னைய பயிற்சி ஆட்டங்களில் பிலிப் ஹியூஸ் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்பட்டார்.
முதலிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததன் பின்பு அப்போது தகுதியற்றவர் என்று கருதப்பட்ட ஷென் வொற்சனால் மூன்றாவது போட்டிக்கு ஹியூஸ் பிரதியிடப்பட்டார்.
இன்று அதே ஷேன் வொற்சனோடு சேர்ந்து ஆடப் போகிறார்.
(இதே மூன்றாவது போட்டிக்கு முன்னர்தான் ஹியூஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்பு ருவிற்றரில் தான் தெரிவாகாதாததை அறிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.)

 அவசரப்பட்ட ஹியூஸ். (நன்றி http://www.abc.net.au )

கடந்த ஆண்டு 16ம் திகதி பொன்ரிங் பந்தொன்றால் தாக்கப்பட்டு தனது கிறிக்கற் வாழ்வில் முன்முதலாக retired hurt ஆனார்.
அதன்பின்னர் பொன்ரிங் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்படுவதும், முன்பைப் போலல்லாது பொன்ரிங் தற்போது பவுண்சர்களை அடித்தாடுவது குறைந்து பவுண்சர் பந்துகள் அவரது பிரச்சினைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக பொன்ரிங்கை நோக்கி பவுண்சர் மழை பொழிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அத்தோடு இந்த ஆஷஷ் தொடரில் பொன்ரிங் அவ்வளவு சிறப்பாகச் செயற்படாமை அவர் மீதான அழுத்தத்தை வழங்கும்.
கிறிக்கற் அவுஸ்ரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் "பொன்ரிங் மீது எங்களுக்கு வீரராகவும், அணித்தலைவராகவும் முழு நம்பிக்கையுண்டு. அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு" என்று சொல்லியிருக்கிற போதிலும், மேல்நிலை அதிகாரி ஒருவர் "இந்த வீரருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அவரின் நம்பிக்கை உண்டு" என்று அறிக்கை விடுகிறாரானால் ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் என்பதை அனுபவமிக்க பொன்ரிங் அறியாமலிருப்பார் என்று நான் நம்பவில்லை.

ஜோன்சன் இங்கு விளையாடி 3 போட்டிகளில் 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பதோடு 135 ஓட்டங்களையும் மொத்தமாகப் பெற்றிருக்கிறார்.
பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பந்துவீசுவது யாரென்று நினைக்கிறீர்கள்? (தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்ரேலியா. Cape town இல்)


கடந்த இரண்டு போட்டிகளை விட அவுஸ்ரேலியா புதிய தெம்புடன் களமிறங்கப் போகிறது, தங்கள் களத்தடுப்பை விருத்திசெய்தார்களாயின் இங்கிலாந்திற்கு நிச்சயமாக நெருக்கடி வழங்கமுடியும்.
களத்தடுப்பு என்பது அணியில் வீரர்களின் மனநிலையை இலகுவாக வெளிப்படுத்தும், கடந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய வீரர்கள் 100 வீதம் சிறந்த மனநிலையில் இருக்கவில்லை என்பதை அவர்களின் களத்தடுப்பு உணர்த்தியது.

தனது பந்துவீச்சில் பிடிதவறவிடப்பட்ட பின்னர் பொலிஞ்சர்.


எது எப்படியோ,  அவுஸ்ரேலியா வழமைக்கு மாறாக தங்கள் கோட்டைகளில் ஒன்றான பேர்த் இல் underdogs என்று சொல்லப்படுகின்ற, வெற்றிபெற வாய்ப்புக் குறைந்த அணியாகக் களமிறங்குகிறது, இது அவர்களுக்குப் புதிதானது, எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.கு 1: தனியாகக் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய படங்கள் ESPNcricinfo.com இலிருந்து பெறப்படடவை.  

பி.கு 2: தலைப்பு சொல்கிறபடி ஆய்வேதும் இல்லை. சுருக்கிய தலைப்பிற்காக ஆய்வு என்று பயன்படுத்தினேன்.

22 பின்னூட்டங்கள்:

LOSHAN said...

நல்லதொரு பூரணமான அலசல்..

ஆனால் //பி.கு 2: தலைப்பு சொல்கிறபடி ஆய்வேதும் இல்லை. சுருக்கிய தலைப்பிற்காக ஆய்வு என்று பயன்படுத்தினேன்// இந்தத் தன்னடக்கம் தேவையற்றது.


உலகின் வேகமான ஆடுகளமான பெர்த் பற்றி தமிழில் இவ்வளவு விரிவாகா யாரும் ஆராய்ந்திருப்பார்களா என்று ஆச்சரியப்படுகிறேன்.

தமிழுக்கு சிக்கலான ஆங்கிலப் பதங்களையும் (தொழிநுட்ப) லாவகமாகக் கையாண்டஈருப்பது அருமை.

குக் பற்றியும் ற்றேம்லேட்,ஜோன்சன் பற்றியும் சொல்லியுள்ள விஷயங்களை ஆமோதிக்கிறேன்.

முன்பு பெர்த் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியப் போட்டிகளை வேகத்துக்காகவும் அந்த வேகத்தை எதிர்த்தாடும் துணிகரத் துடுப்பாட்டவீரருக்காகவும் ரசித்துளேன்.

பின்னர் டொனால்ட் காலத் தென் ஆபிரிக்கப் போட்டிகளையும்.

இன்னும் வேகம் குறையவில்லை என்பது பெர்த் பற்றிய ஆர்வத்தை மேலுக் கூட்டுகிறது.


ஆஸ்திரேலியாவுக்கு பெர்த் டெஸ்ட் வாழ்வா சாவா போட்டி. இங்கே வெல்லாவிட்டால் எங்கேயும் முடியாது.
பொன்டிங் & ஜோன்சன் மீண்டும் உயிர்த்தெழ இந்தப் போட்டியை விட்டால் வேறு நல்ல வாய்ப்பில்லை.

// மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவது ஒன்றும் பெரிய சிரமமில்லை // அதே :)

//ஆகவே இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக பொன்ரிங்கை நோக்கி பவுண்சர் மழை பொழிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.//
எதிர்பார்க்கும் விஷயமே

//பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது...//
எனக்கும் எனக்கும்


ஆர்வத்துடன் இருக்கிறேன்.


மீண்டும் You have proved you are the Analyst. :)

sinmajan said...

நல்ல ஆய்வு ;).. பொண்டிங்கை இம்முறை அதிகமாகவே எதிர்பார்க்கிறேன்..பார்ப்போம்..

வந்தியத்தேவன் said...

வாவ் பெருமை உன்னை நினைத்துப் பெருமை அடைகின்றேன். கூகுள்கள் காணத தேடல்களை பலர் காதலிகளிடம் தேடியபோது நீ கிரிக்கெட்டில் தேடி அசத்தி இருக்கின்றாய் வாழ்த்துக்கள் சிஷ்யா.

அது சரி ரந்தீவின் மேல் ஏன் இவ்வளவு காதல் முதல் பதிவிலும் ரந்தீவ் இரண்டாவது பதிவிலும் ரந்தீவ் வந்துபோகின்றார் #தடை எடுத்தாச்சோ.

சில இடங்களில் தன்னடக்கம் தேவையற்றது.

Bavan said...

வாவ், கன்கொனும் போர்முக்குத் திரும்பியிருக்கிறார் போல..;)

பார்க்கலாம்,
மிக விரிவான தெளிவான அலசல்..:D

//மீண்டும் You have proved you are the Analyst. :)//

Yes Yes u proved..:D

Jana said...

தங்கள் ஆய்வகளைப்பற்றி சொல்லவேண்டியதேவை இல்லை. மிகவும் விரிவான தெளிவான அலசல். லோஷன் கூறியதுபோல சில கஸ்டமான ஆங்கிலப்பதங்களைக்கூட தமிழில் இலாவகமாக கையாண்டுள்ளீர்கள்.
உண்மையில் இது அவுஸ்ரேலியாவுக்கு வாழ்வா சாவா போட்டிதான். அனைவருக்கும் இந்தப்போட்டி ஆர்வலத்தை அதிகரித்தள்ளது.

viththy said...

பேர்த் போட்டி பற்றிய உங்கள் ஆய்வு மிகவும் அருமை ...
வாழ்த்துக்கள்

Ashwin-WIN said...

அருமை கண்கொன்..
கண்கொனின் திறமையான ஆய்வுகளில் இது மகுடம் போன்ற ஆய்வு.. ரசித்தேன்.. தெரிந்துகொண்டேன்,,

ம.தி.சுதா said...

அருமை கோபி...

முழுமையாக ஆராய்ந்துள்ளீர்கள்.. அண்டி புளொவருக்கு தமிழ் தெரிந்தால்
இந்த லிங்கை அனுப்பலாம் என நினைக்கிறேன்...

ம.தி.சுதா said...

/////நானறிந்து தற்போது விளையாடும் வீரர்களில் குமார் சங்கக்காரவை மிகச்சிறந்த back-foot player என்பேன்.////

சரியாகச் சொன்னீர்கள்.. எனக்கு அவர் தலைமையில் தான் எப்போதும் கடுப்பு அனால் அவர் துடுப்பாட்டத்தில் ஒரு ஈடுபாடு உண்டு அவரது சில போட்டிகளை திருப்பிப் பார்க்கையில் கண்ணாடி வைத்து அதில் தான் பார்ப்பதுண்டு (நான் வலது கை துடுப்பாட்டக்காரன்..)

அதே போல் டிராவிட்டும் சிறப்பாக ஆடக்கூடியவர்...

SShathiesh-சதீஷ். said...

கான்கொன் என்றால் கிரிக்கெட் பதிவு என்று ஆகிவிட்டது. அசத்துகிறாய் அனலிஸ்ட். எனக்கென்னவோ ஆசிக்கு கடவுளின் ஆசி முடிந்துவிட்டது போல தோன்றுகின்றது.

கன்கொன் || Kangon said...

@லோஷன் அண்ணா: :-)
நன்றி அண்ணா. :-)

ஆமாம். மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்ரேலியப் போட்டிகள் முன்பு சிறப்பாக இருந்திருக்கும்.
பேர்த் இல் மேற்கிந்தியத்தீவுகளுடன் அவுஸ்ரேலியா மோசமான பெறுபேற்றைக் கொண்டிருக்கிறது.
என்னுடைய ஞாபகம் சரியானால் 2000 களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவால் மேற்கிந்தியத்தீவுகளை பேர்த் இல் வைத்து வெல்ல முடியாமல் இருந்தது.
கடந்த வருடம் ஒன்று, 2000 அல்லது 2001 இல் ஒன்று என்றே வென்றிருக்கிறார்கள்.
இது பேர்த் இன் தன்மை பற்றி தெளிவாகச் சொல்கிறது.

ஆமாம், இன்னும் வேகம் குறையவில்லை.
ஷெபீல்ட் ஷீல்ட் தொடரிலும் நல்ல பவுண்ஸ் கிடைத்ததாகச் சொன்னார்கள்.

நானும் உங்களைப் போல் ஆவலுடன் இருக்கிறேன், கூடவே நம்பிக்கையுடனும். :-)

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும்.

கன்கொன் || Kangon said...

@Sinmajan: நன்றி. :-)
நானும் எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


@வந்தியண்ணா: நன்றி குருவே. :-)
கூகிள் ஆண்டவர் இதில் கொஞ்சம் குறைவாகத்தான் உதவினார். ;-)


// அது சரி ரந்தீவின் மேல் ஏன் இவ்வளவு காதல் //
;-)
காதலெல்லாம் இல்லை, இலங்கையிலிருந்து முரளிதரனின் பாதியளவு ஒருவர் வரவேண்டுமென்றால் அது ரந்தீவ் இன்னும் சிறிது முன்னேறி அனுபவம் பெற்றால் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தற்போதைய கிறிக்கற் உலகில் ஸ்வானிற்கு பிறகு சிறந்த புறச்சுழற்பந்துவீச்சு வீசும் தகுதி/திறமை உள்ளவராக ரந்தீவைக் கணிக்கிறேன். :-)


(தடை இன்னும் இங்க எடுக்கேல. நீங்கள் இலண்டன் ஞாபகத்திலேயே இருக்கிறீங்கள் போல? :P )

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குருவே. :-)

கன்கொன் || Kangon said...

@பவன்: :-)
நன்றி பவனண்ணே...

நான் மீண்டும் form இற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னதன் மூலம் இதுவரை form இல் இல்லாமலிருந்தேன் என்று சொல்லிவிட்டீங்கள் பாத்தியளா? :P

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பவன். ;-)


@ஜனா அண்ணா: :-)
நன்றி அண்ணா.
ஆமாம், அவுஸ்ரேலியாவிற்கு வாழ்வா சாவா போட்டி.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா. :-)


@வித்தி: :-)
நன்றிகள். :-)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

கன்கொன் || Kangon said...

@அஷ்வின் அண்ணா: :-)
நன்றி. :-)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.


@ம.தி.சுதா: :-)
நன்றிகள்.

ஆமாம், ட்ராவிட் உம் மிகச்சிறந்த வீரர்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


@சதீஷ் அண்ணா: :-)
நன்றி அண்ணே.

ஆசிக்கு கடவுள் ஆசி என்னண்டண்ணே முடியும்? :P

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா. :-)

வந்தியத்தேவன் said...

// கூகுள்கள் காணத தேடல்களை பலர் காதலிகளிடம் தேடியபோது நீ கிரிக்கெட்டில் தேடி அசத்தி இருக்கின்றாய் வாழ்த்துக்கள் சிஷ்யா.
//

சிஷ்யா நீ ஒரு கிரிக்கெட் கூகுள் என்பதுதான் என் இந்த வரியின் அர்த்தம், நீ கூகுளில் தேடினேன் என சொல்லவில்லை. தவறாக விளங்கிக்கொண்டுவிட்டாய் என நினைக்கின்றேன். விரைவில் உன்னை தலைமைக் குருவாக்க நினைத்தேன் ஆனாலும் நீ கற்க இன்னும் சில விடயங்கள் உண்டு ஆகவே அதுவரை தலைமைச் சிஷ்யன் தான்.

கன்கொன் || Kangon said...

// சிஷ்யா நீ ஒரு கிரிக்கெட் கூகுள் என்பதுதான் என் இந்த வரியின் அர்த்தம், நீ கூகுளில் தேடினேன் என சொல்லவில்லை. தவறாக விளங்கிக்கொண்டுவிட்டாய் என நினைக்கின்றேன். விரைவில் உன்னை தலைமைக் குருவாக்க நினைத்தேன் ஆனாலும் நீ கற்க இன்னும் சில விடயங்கள் உண்டு ஆகவே அதுவரை தலைமைச் சிஷ்யன் தான். //

குருவே,
நீங்கள் சொன்ன அர்த்தம் முதலே விளங்கினது.

அதுக்கு என்ன பதில் போடுறது எண்டு விளங்காமத்தான் அப்பிடிச் சொன்னன்.

சிஷ்யனின் ரவுசரைக் கழற்றுவதில் (கிர்ர்ர்ர்... தவறான அர்த்தமில்லை. சிஷ்யனை அவமானப்படுத்துவது பொது இடத்தில் என்று அர்த்தம்) உங்களுக்கு நிகர் நீங்களே... ;-)

மைந்தன் சிவா said...

எப்பிடி நான் மிஸ் பண்ணினேன்...ம்ம்ம்
//இதில் அலஸ்ரயர் குக் சிறந்த backfoot வீரர் என்றபடியால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒருவர் ஆகிறார்.
குக் இன் pull shot/hook shot விளையாடும் திறன் பேர்த் மைதானத்திற்கு உதவும்.//

ஆம் கட்டாயமாக.அதனால் தான் அவரை தொடர் நாயகன் விருதுக்கு சிபாரிசு செய்தேன்..

//அவுஸ்ரேலியா சார்பாக ஹியூஸ், வொற்சன், பொன்ரிங், கிளார்க், ஹசி, ஹடின், ஸ்மித், ஜோன்சன், ஹரிஸ், ஹில்பன்ஹோஸ், சிடில் என்ற அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது//
ஸ்மித் விக்கட் எடுக்கிறாரோ இல்லையோ..கொஞ்சம் ஓட்டங்கள் எடுப்பார் என நம்புகிறேன்..

//ஆகவே 5 துடுப்பாட்ட வீரர்கள், விக்கற் காப்பாளர், ஒரு சகலதுறை வீரர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற அணியே களமிறங்கும்.//
எத்தனை காலத்துக்கு பின்பு??

//
கடந்த ஆண்டு 16ம் திகதி பொன்ரிங் பந்தொன்றால் தாக்கப்பட்டு தனது கிறிக்கற் வாழ்வில் முன்முதலாக retired hurt ஆனார்.
அதன்பின்னர் பொன்ரிங் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்படுவதும், முன்பைப் போலல்லாது பொன்ரிங் தற்போது பவுண்சர்களை அடித்தாடுவது குறைந்து பவுண்சர் பந்துகள் அவரது பிரச்சினைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.//

இது தான் அதிகளவு விமர்சகர்களால் விமர்சிக்கப் படுகிறது.
முன்னர் எல்லாம் பாண்டிங் பௌன்சர் பந்துகளை லாவகமாகக் கையாண்டார் ஆனால் தற்பொழுது அதுவே அவரது எமனாகி விட்டது.

//பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.//
பார்க்க ஆசை தான்..எகிறும் அவரது பந்துகளை பார்க்க ஆசை..
சொல்லி சொல்லி விக்கட் எடுத்த ஜோன்சன் தடுமாறுகிறார்.

//கடந்த இரண்டு போட்டிகளை விட அவுஸ்ரேலியா புதிய தெம்புடன் களமிறங்கப் போகிறது, தங்கள் களத்தடுப்பை விருத்திசெய்தார்களாயின் இங்கிலாந்திற்கு நிச்சயமாக நெருக்கடி வழங்கமுடியும்.//
எந்த வகையில் தென்பு??
ஒரு போதும் இருக்காது.
ஷேன் வார்னே வந்திருந்தாலாவது சொல்லலாம் மனதளவில் தென்பு என்று..
அதுவும் இல்லை..ஆகவே பெரிதாக மாற்றம் இருக்காது.

//எனினும் பியரின் தெரிவு அவுஸ்ரேலியத் தெரிவாளர்கள் மீதான விமர்சனத்தைக் கிளப்பிவிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
சுழற்பந்துவீச்சாளர்களை எந்தவித முன்யோசனையுமின்றித் தெரிவுசெய்து பின்னர் உடனே அவர்களை அணியிலிருந்து கழற்றிவிடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.//
ஒரு வேளை பழக்கமில்லாத பந்து வீச்சாளரை பயன்படுத்தினால் இங்கிலாந்தை தடுமாற செய்யலாம் என்று எடுத்திருப்பார்கள்...விமர்சனங்களால் அதனைக் கைவிட்டிருப்பார்கள்..


அனலிஸ்ட் அருமையான அலசல்.ரசித்தேன். வாழ்த்துக்கள் கோபி.

கன்கொன் || Kangon said...

@மைந்தன் சிவா:

// ஆம் கட்டாயமாக.அதனால் தான் அவரை தொடர் நாயகன் விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. //

யாரிடம்? ;-)
ஏற்றுக்கொண்டார்களா? ;-)


// ஸ்மித் விக்கட் எடுக்கிறாரோ இல்லையோ..கொஞ்சம் ஓட்டங்கள் எடுப்பார் என நம்புகிறேன்.. //

அதே...
நோர்த்_அ மோசமாத் துடுப்பெடுத்தாட மாட்டார் எண்டு நம்பிறன். :-)


// எத்தனை காலத்துக்கு பின்பு?? //

பொதுவாக நடப்பதில்லைத்தான்.


// எந்த வகையில் தென்பு??
ஒரு போதும் இருக்காது.
ஷேன் வார்னே வந்திருந்தாலாவது சொல்லலாம் மனதளவில் தென்பு என்று..
அதுவும் இல்லை..ஆகவே பெரிதாக மாற்றம் இருக்காது. //

நான் சொல்ல வந்தது,
ஸ்மித் என்ற ஒரு புதியவரின் உள்வருகை.
அத்தோடு அவர்களின் பிரதான பந்துவீச்சாளர் அவருக்குப் பிடித்த மைதானத்தில் பந்துவீசப்போகிற நம்பிக்கை, பெரிய ஓய்வின் பின்னர் வாழ்வா சாவா என்ற போட்டியினால் வரப்போகிற பதிய தைரியம். :-)
முன்னரை விட சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.


// ஒரு வேளை பழக்கமில்லாத பந்து வீச்சாளரை பயன்படுத்தினால் இங்கிலாந்தை தடுமாற செய்யலாம் என்று எடுத்திருப்பார்கள் //

கெவின் பீற்றர்சனுக்கு என்னையும் பழக்கமில்ல, நானும் போகவா? ;-)
தகுதி என்ற ஒன்று வேண்டுமல்லவா? :-)


நன்றி. :-)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல அலசல் கோபி.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இப்போட்டியில் பொன்டிங் ஒரு சதத்தை பெற போகிறார். போட்டி முடிவு அன்டர்சனா? ஜொன்சனா? வக்கா ஆடுகளத்தில் அதிக பயனெடுக்கிறார் என்பதில் இருக்கிறது. மிட்சில் ஜொன்சன் இந்த மைதானத்தில் இங்கிலாந்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். ஸ்வானும் பவுன்சை சிறப்பாக பயன்படுத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு தலையிடியை கொடுப்பார் என நம்பலாம்.

இதெல்லாவற்றையும் விட அவுஸ்திரேலியா வெல்ல வேண்டுமானால் நம்ம விக்கிரமாதித்தன் இங்கிலாந்திற்கு ஆதரவு தர வேண்டும். செய்வாரா?

LOSHAN said...

Come on England.. Wish you alla the best for Perth Test..
Anderson is going to wreck Aussies..
Cook will score another century and England is going to win Perth test by an innings.

விக்கிரமாதித்தனின் அருள் வாக்குப் பலிக்குக..

#விக்கிரமாதித்தன்

sanjeevan said...

Once again a great analyze from you.it is far better than cricinfo preview..............
Today first hour surface assisted to fast bowlers a lot.Good toss to win for strauss.isnt it?.......
Huges once again failed to use his chance..
I agreed with the statement about sanga,his 197 was here?that was one of the best innings i have seen from him.........................

Rajasurian said...

கிளாசிக்கான அலசல்