எனக்கு மாற்றுக்கருத்துகளில் மிகுந்த ஏற்றுக்கொள்கை மனப்பான்மை உண்டு, அது தெளிவாக முன்வைக்கப்படுமிடத்து.
கடந்த 9ம் திகதி எக்சார் அல்லது என்ன கொடுமை சார் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சகோதரர் (அவரின் உண்மைப் பெயர் நானறிவேன். அது இங்கு தேவையற்றது) பதிவொன்றை எழுதியிருந்தார்.
எதிர்வரும் பதிவர் சந்திப்பைப் பற்றி எதிர்வினையென்றிராமல் குற்றச்சாட்டு வகையான அந்தப் பதிவு அமைந்திருந்தது.
அந்தப் பதிவின் குற்றச்சாட்டுகளை பார்க்க முன்பு, பேஸ்புக்கில் பதிவர் சந்திப்புத் தொடர்பான நிகழ்வில் எக்சார்,
// Make this event more useful.. Like tweetupsl.. // என்று கருத்தளித்திருந்தார்.
அதற்கு நான்,
// ஏதாவது ஆலோசனைகளிருந்தா ஏற்பாட்டுக்குழுவுக்கு சொல்லலாம். // என்று பதிலளித்திருந்தேன்.
எக்சாரிற்கு பதிவர் சந்திப்பு மேல் அக்கறை அல்லது இவர் காட்டுகின்றதுபோன்ற நல்ல எதிர்பார்ப்பு இருந்திருந்தால் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவினரிடம் அவரது கருத்துக்களைக்கூறி முதலில் விளக்கம் பெற முயற்சித்திருக்கலாம், விளக்கங்கள் எதிர்பார்த்தளவு கிடைத்திராவிட்டால் குற்றஞ்சாட்டிப் பதிவு எழுதியிருக்கலாம்.
இனி எக்சார் குற்றஞ்சாட்ட முற்பட்ட விடயங்கள்.
பதிவர் சந்திப்பு ஏன் கொழும்பில் நடக்கிறது? ஏன் வேறு பிரதேசங்களில் நடப்பதில்லை?
பதிவர் சந்திப்பு என்ற எண்ணக்கரு இலங்கையில் தோன்ற முன்னரே தாங்களாகவே முன்வந்து பதிவர் லோஷன், வந்தியத்தேவன், ஆதிரை மற்றும் புல்லட் ஆகியோர் முதன்முதலில் ஏற்பாடு செய்த சந்திப்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
அது ஏன் கொழும்பில் நடைபெற்றது என்ற கேள்வி இராது என்று நம்புகிறேன். அது கொழும்பிலிருந்தவர்கள் முன்வந்து ஆரம்பித்து வைத்தது.
இரண்டாவது சந்திப்பு திரும்பவும் கெளபோய்மது, சுபாங்கன், மதுவதனன், கீர்த்தி, மு.மயூரன், மன்னார் அமுதன், கனககோபி ஆகியோர் முன்வந்து நடத்தியதே. அந்தச் சந்திப்பு ஏற்கனவே பதிவர்கள் கொழும்பில் ஒரு சஞ்சிகை நடாத்திய சந்திப்பு நிகழ்வின்போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் நடத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பெற்றது.
அது நடந்தது கடந்த வருடம் டிசம்பர் 13ம் திகதி.
அதன் பின்னர் சிறுசிறு சந்திப்புக்கள் இடம்பெற்றாலும் சந்திப்புக்கள் என்று ஒன்றும் நடக்கவில்லை.
பின்னர், இந்த வருடம் மே மாதம் 7ம் திகதி இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
( முழுமையாக வாசிக்க: http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/c53efed659a31252/bf79fe39c8864426?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&lnk=ol& )
அங்கு பதிவர் சந்ரு "பதிவர் சந்திப்பொன்றை நானும் எதிர் பார்க்கின்றேன். இந்த சந்திப்பு எங்கே எப்போது இடம்பெறவேண்டும். கொழும்பில்தானா அல்லது வெளி மாவட்டங்களில் ஏற்பாடு செய்யலாமா" என்று கேட்ட கேள்விக்கு,
பதிவர் ஆதிரை,
"கொழும்பில்தான் நடாத்த வேண்டுமென்று சட்டமா இருக்கின்றது?
அனைவருக்கும் வசதியான இடமொன்றை தெரிவு செய்யலாம். " என்று பதிலளித்திருந்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்திருந்த பதிவர் லோஷன்
" உள்ளேன் ஐய்யா அம்மாமாரே..
கொழும்பில் சந்திப்பில் கலந்து கலந்து அலுத்துவிட்டது..
எங்கேயாவது குளு குளு இடத்திலே அல்லது கனடா லண்டன் மாதிரி இடங்களில் வைப்பது பற்றி யாராவது யோசியுங்களேன்.. ;) " என்று தெரிவித்திருந்தார்.
பதிவர் லோஷனின் கருத்தை வழிமொழிவதாக பதிவர் சுபாங்கனும் தெரிவித்திருந்தார்.
பின்னர், பதிவர் சந்ரு மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு நடத்தினால் யார் யார் கலந்தகொள்வீர்கள் என்று கேட்டதற்கு,
பொருத்தமான நாளில் நடத்தப்பட்டால் கலந்துகொள்ளத் தயார் என்று பதிவர்கள் கன்கொன், ஆதிரை, லோஷன், சுபாங்கன், பவன், பால்குடி, கெளபோய் மது ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
அதன்பிறகு ஏதோ காரணத்தால் மட்டக்களப்பில் சந்திப்பு நடத்துவது பற்றிய கதையை பதிவர் சந்ரு தொடர்ந்து முன்வைக்கவில்லை.
பின்னர் வதீஸ், அனுதினன், பவன் ஆகியோர் முன்வந்து தாங்கள் திருகோணமலை அல்லது கொழும்பில் பதிவர் சந்திப்பை நடத்த முன்வருவதாகச் சொல்லியிருந்தார்கள்,
அதற்கும் திரும்ப பதிவர் லோஷன், ஆதிரை, கன்கொன், சுபாங்கன், சந்ரு, யோவொய்ஸ், மயூரேசன், ரமேஸ் ஆகியோர் வருவதாகவும், இறுதியில் திருகோணமலை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்த ஏற்பாட்டுக்குழுவும் ஏதோ காரணங்களால் தாங்களாகவே பின்வாங்கிக் கொண்டது.
அதன்பின்னர் பதிவர் சந்திப்பு நடத்துங்கள் என்று பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டாலும் பொதுவாக யாருமே முன்வரவில்லை.
இதன் பின்னர் அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வடலி வெளியீடுகள் அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தபோது இலண்டனிலிருந்து அப்போது தான் கொழும்பு திரும்பியிருந்த பதிவர் பதிவர் மாலவனை சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அவரும் பதிவர் சந்திப்பிற்கு ஆர்வமாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். அன்று அதில் வைத்து பதிவர் சந்திப்பொன்றை நடத்துவது என்று ஓரளவுக்கு உறுதியான நிலைப்பாடெடுத்தோம்.
அதன்பின்னர் அவரை சந்திக்கும்போது நானே எதிர்வரும் 19ம் திகதி பதிவர் சந்திப்பொன்றை நடத்துங்களேன் என்று பிரேரித்தேன்.
டிசம்பர் 5, 12 ஆகியனவற்றில் நடத்த நாட்போதாது என்பதோடு டிசம்பர் 26 சுனாமி தாக்கிய நாள் என்பதால் அந்த நாளை அதை அனுஷ்டிக்க விடுவது நல்லது என்பதால் டிசம்பர் 19 மட்டுமே தெரிவாக இருந்தது.
அவரும் உடன்பட்டதன் பின்பு பதிவர் பவன், அனுதினன், வதீஸ் மற்றும் பதிவர் வரோ ஆகியோர் முன்வந்து ஏற்பாட்டுக்குழுவில் இணைந்து செயற்பட்டார்கள்.
இதில்,
பவன், அனுதினன் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள், மாலவன் இலண்டனிலிருந்து அண்மையில் கொழும்பு திரும்பியவர்.
பதிவர்களிடையே அதிகார மையம்:
முன்பு ஒருமுறை பதிவர் சங்கம் அல்லது அமைப்பாக பதிவர்கள் வளரவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டபோது அங்கு சங்கத்திற்கு எதிராக வைக்கப்பட்ட முதலாவது விடயம் "சங்கமென்று வந்தால் தலை, கால் என்ற பாகுபாடு வரும், அதனால் குழுவாகவே இயங்குவோம்" என்பது தான்.
பதிவர்களிடையே அதிகார மையமென்று உருவாகினாலும் அதைவைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலையில், இல்லாத ஒன்றைக் குறிவைத்து உள்ள விசமமான கருத்து அது.
எக்சார் கருதுகிற, சொல்ல வருகிற அதிகார மையத்தோடு அண்மைக்காலத்தில் மிகவும் கடுமையாக முரண்பட்டுக்கொண்ட பதிவர் வரோ இந்தமுறை ஏற்பாட்டுக்குழுவில் இருப்பது அதிகார மையம் என்ற பேச்சை இல்லாமல் செய்துவிடுகிறது.
// தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். //
உண்மையில் எக்சார் கொழும்பை பதிவர்கள் மையப்படுத்தக்கூடாது என்று விரும்பினால் யாழ்ப்பாணத்தை வெறுப்பது ஏன்?
யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையின் பின்புலத்திலுள்ள இவரது கொள்கை என்ன?
ஆக,
அதிகார மையம் என்று சொல்லப்படுகிற கொழும்புவாழ் பதிவர்களிடம் இருப்பதாகச் சொல்கிற பிரதேசவாதம், உண்மையில் எக்சாரிடமே இருக்கிறது.
இவரிற்கு யாழ்ப்பாணத்தின் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஏற்கனவே தெரிந்தது தான். (யாழ் நூலகம் பற்றிய பதிவு இதற்கு சான்றானது).
அடுத்து இவரது இன்னொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு பதிவர் அகிலன் கொழும்பிற்கு வந்திருந்தபோது குறிப்பிட்ட அதிகார மையமே சந்தித்ததாகவும், ஏனைய பதிவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் கூகிள் குழுமத்தில் பதிவர் அகிலனை சந்திப்பதற்கான அறிவிப்பு பகிரங்கமாக இடப்பட்டே சந்திக்கப்பட்டது.
இந்தச் சுட்டியை நாடவும்.:
http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/a781bafb3dfe76a0/6912c7c138e6cdfc?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D#6912c7c138e6cdfc
ஆக,
அர்த்தமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பதிவின் மூலமாக வைத்து புதிதாக இணைந்த/இணைகிற பதிவர்களுக்கு நச்சு விதையை விதைக்க நினைக்கிற இவருக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்,
நாங்கள் இங்கு அரசியல் நடத்த வரவில்லை, எங்கள் எண்ணங்களையும், விருப்புக்களையும் பகிரவே வந்திருக்கிறோம். உங்கள் குழப்பகரமான எண்ணங்களும், புத்திகளையும் எங்கள் மீது காட்ட முற்படவேண்டாம்.
இதுவரை நீ்ங்கள் குழப்பங்கள் விளைவித்தபோதெல்லாம் அமைதியாக இருந்த நாங்கள், இம்முறை பதிவர் சந்திப்பையொட்டி அதை வைத்து sensitive ஆன விடயங்களை வைத்து பதிவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தமையால் தான் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது.
நீங்கள் குறிப்பிட்ட அதிகார மையத்திலிருந்தவர்கள் தான் பதிவர் சந்திப்புக்கள் வேறு இடங்களில் நடத்துவோம் என்றதும் முதன்முதல் பதிலளித்திருக்கிறார்கள், வெளிப்படையாகச் சொன்னால் அவர்கள் மட்டுமே பதிலளித்திருக்கிறார்கள்.
ஒரு விடயத்தில் செயற்பாட்டு நிலையில் (active) இருப்பது அவர்கள் அந்த விடயத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை உங்களுக்குத் தருமாயின் உங்களுக்காக மனவேதனைப்படுவதைத்தவிர எனக்கு வேறு வழிகள் கிடையாது.
அங்கு இருந்த பின்னூட்டமொன்றிற்கான பதில்,
குழுமத்தில் யாரும் பதிலிடலாம், யாரும் கருத்துத் தெரிவிக்கலாம்.
ஈ சீக் பதிவர் குழுமத்தில்
// என்னையும் எனது இணைய தளத்தையும் எனது பல்கலைக் கழகத்தினையும் பிரபலப்படுத்தும்
நோக்கில் ஒரு இணைய தளத்தில் வெளியாகியுள்ள விளம்பரத்தையும் கீழுள்ள முகவரிக்கு
சென்று காணுங்க மக்கள்ஸ்..
செய்யக்கூடாது என்று சொன்னதற்கு எனக்கு கிடைத்த பரிசு.. இப்படியும் மனிதன்
இருக்கிறான் எனபுரியவைத்த இறைவனுக்கு நன்றி.. நான் அந்த இணைய தளத்தை முடக்க
முயன்றேனாம்.. இது தொடர்பான மேலதிக விளக்கம் வேண்டுமென்றால் என்னைக் கேளுங்க..
நான் செய்த உதவிகளுக்கு அந்த குறிப்பிட்ட நபர் தந்த பரிசு..
http://sammanthurainews.com/?p=726&isalt=0
என்று குழுமத்தில் இணைத்ததற்கே அவ்வாறு செய்வது சரியல்ல என்று அறிவிப்பு வழங்கப்பட்டது.
அது அஸ்பர் என்பவர் இன்னொருவரின் தளத்தை ஹக் செய்துவிட்டதாகத் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றி இன்னொரு தளத்தில் வெளியான பதிவு.
அதைக்குழுமத்தில் என்ன காரணத்திற்காக இணைத்தார் என்பது விசித்திரமானது.
அவர் அந்தப் பதிவுக்கு மறுப்பொன்றை தன் பதிவில் எழுதிவிட்டு அதைக் குழுமத்தில் புதிய பதிவுகள் பகுதியில் இணைத்திருந்தால் அது வேறு விடயம்.
குழுமத்தில் இல்லாத பதிவுகளை இணைப்பதில்லை என்ற கொள்கை ஒருபுறமிருக்க, அந்த இணைப்பு குழுமத்தில் வரக் காரணமே இல்லை.
அதை அந்தப் பதிவரும் ஏற்றுக்கொண்டார்.
சர்ச்சையான பின்னூட்டங்களும், காழ்ப்புணர்ச்சி மிக்க பின்னூட்டங்களும் எக்சாரின் பதிவில் மட்டும் எப்போதுமே வருவதும் வியப்பானது தான்.
பதிவுலக அரசியல் வாழ்க.
நன்றி.
பின் குறிப்பு: 1: நான் hits இற்காக எழுதுகிறேன் என்ற கூச்சல் வேண்டாம், என் தளத்தில் hits counter கிடையாது.
சர்ச்சைகளால் புகழடைய நினைக்கிறேன் என்ற கூச்சலும் வேண்டாம், நான் மாதமொன்றுக்கு 1 அல்லது 2 பதிவு போடும் ஒருவன்.
பின் குறிப்பு: 2: என்னைத் தவிர வேறு பதிவர்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கிவருகிற பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
அவை தவிர எல்லாப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறேன்.
பின்குறிப்பு: 3: இந்தப் பதிவை திரட்டிகளில் இணைக்கவில்லை.
நண்பர்கள் யாரும் இணைக்கவும் வேண்டாம்.
17 பின்னூட்டங்கள்:
நியாயமான கோபம்....
பதிவர் சந்திப்புக்கள் என்பது தனிப்பட்ட நபர்களால் ஒழுங்கு செய்யப்படுவது. விரும்பிய பதிவர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள், விரும்பாதவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். சந்திப்பை ஒழுங்கு செய்பவர்கள் தங்களுக்கு வசதியான, விரும்பிய இடத்தில் சந்திப்பை ஒழுங்குசெய்து கொள்ளலாம், கலந்துகொள்வதும், விடுவதும் அவரவர் விருப்பம். கட்டாயம் அடுத்த சந்திப்பு வேறு பிரதேசத்தில் தான் நடத்தப்பட வேண்டும், அனைவருக்கும் கட்டாயம் அழைக்கப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நாங்கள் இங்கு அரசியல் கட்சியோ, அல்லது மன்றமோ, சங்கமோ நடத்தவில்லை. அப்படி சங்கம் என்றால் சந்தா செலுத்திய உறுப்பினர்களுக்கு அறிவித்து, பொது விருப்பின்படி செயற்படுதல் கட்டாயம் - இது சங்கமல்ல.
5, 6 பதிவர்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கிறார்கள், விரும்பியவர்கள் கலந்து கொள்கிறார்கள், ஆக ஒழுங்கு செய்பவர்களை இப்படித்தான் ஒழுங்கு செய்ய வேண்டும், இங்கு தான் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று dictate செய்ய யாருக்கும் உரிமையில்லை. அப்படி குறிப்பிட்டவர்கள் தங்கள் பகுதியில் பதிவர் சந்திப்பை நடத்த விரும்பினால், அவர்கள் ஒழுங்கு செய்துவிட்டு விரும்பிய பதிவர்களை அழைக்கவும், அல்லது விரும்பினால் பொது அழைப்பு விடட்டும், அது ஒழுங்கு செய்பவரின் விருப்பம்.
கன்கொன் உங்கள் கோபம் நியாயமானது, ஆனால் இவ்வளவு சொல்லியெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை - ஏனென்றால் சில விஷயங்களை நிமிர்த்த முடியாது!
அடியேனும் நீண்ட நாட்களாக இந்த பதிவுலகில் இருந்து வருகிறேன்,( நிறைய நண்பர்களுக்கு அது தெரியாது என்றும் எனக்கும் தெரியும்) ஆனால் இதுவரைக்கும் இலங்கை பதிவர்களின் சந்திப்பு ஒன்றில் கூட கலந்து கொள்ள முடியவில்லை வருந்துகிறேன், அதற்கு எந்த வித சாக்கு போக்கும் கூற விரும்ப வில்லை, மாறாக கலந்து கொள்ள நிறைய ஆசை இருக்கிறது , முடிந்தால் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.
அத்தோடு இன்னுமொரு விடயம் , 'சந்திப்பு' என்று கூடும் போது அந்த களத்திலே ஏதாவது கருத்து முரண் பாடுகள் வந்து அவை காத்திரமானவையாக இருந்தால் அதனால் நல்ல பிரயோசனம் கிடைக்கும் , அதையே எல்லோரும் எதிர் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அத்தோடு நான் வாசித்த சில பதிவுகளில் இருந்து சில விசயங்களை புரிந்து கொண்டேன் நண்பர்களே, நாங்கள் இதுவரைக்கும் சேராமல் பிரிந்திருந்து நிறைய இழந்து விட்டோம் , இனியும் ஒற்றுமையாக செயற்படுவோம்.
''உண்மையான அறிஞனிடம் பிறரை தாழ்மையாக எண்ணும் எண்ணம் இருப்பதில்லை ''
ஆதிரை சொல்லியது போல் நியாயமான கோபம்....
நன்றி கோபி பதிவுலகத்தில் தெரியாத பல சம்பவங்களை தெரிந்து கொண்டேன்...
வழிகாட்டியமைக்கு நன்றி..
உங்கள் கோபம் நியாயமானது, தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத பதிவர், பெயர் குறிப்பிடாத அனானிகள், போலிப் பெயர் சூட்டிக்கொண்டவர்கள் எதையும் கதைப்பார்கள், ஆனால் புதியவர்கள் இவ்வாறானவர்களின் கூற்றுக்களை(கூச்சல்) நம்பி ஏமாந்து விடக்கூடாது.
நான், வதீஸ் அண்ணா, அனுதினன் ஆகியோர் திருமலையில் சந்திப்பு நடாத்துவதற்காக ஏனைய பதிவர்களால் வரமுடியுமா என்று குழுமத்தில் கேட்ட போது, மறுபக்கம் குழுமத்தில் போலி பற்றிய விவாதங்கள் சூடிபிடித்தன/வெறுப்பை உருவாக்கியிருந்தன, ஒரு சிலரைத்தவிர வேறு யாரும் தமது வருகையை உறுதிப்படுத்தவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் எண்ணற்ற மெயில்களால் குழுமத்தை பின்தடமறிதலை நிறுத்தியிருந்தார்களோ தெரியாது.
அந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்த பின்னரும் கூட யாரும் சந்திப்புப் பற்றிய திரியில் பதிலிடவில்லை.
இம்முறை ஏற்பாட்டுக்குழு ஓரளவு சிறப்பாக நடாத்த மும்முரமாக செயற்பட்டு வருகிறது(றோம்).
வேண்டுமென்றே குழப்பம் நிகழ்த்த முனைந்தவர்கள், பிரபலம் தேட முனைந்தவர்கள் எவரும் நிலைத்து நின்றதில்லை, நிற்கப்போவதும் இல்லை. எனவே இதுவும் கடந்து போகும். இம்முறை சந்திப்பு இனியதொன்றாக அமையும்.
உங்கள் கோபம நியாயமானது. இங்கே யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. வயது வரம்புகளையும் மீறி பதிவுகளால் நண்பர்களாக இருக்கும் நாம் எல்லோரும் ஒன்றாக தானே இந்த சந்திப்புக்களில் கலந்துகொண்டோம். எப்படி சந்திப்புக்கள் கொழும்பில் ஏற்ப்பாடு செய்யப்படுகின்றதோ அதேபோல வேறு இடங்களில் ஏற்ப்பாடு செய்யப்படும் போது கலந்து கொள்ள நினைப்பவர்களை அதிகார மையம் என குறிப்பிட்ட பதிவர் சுட்டிக்காட்டிய யாராலும் தடுக்க முடியாது. இங்கே என்ன பதவியா இல்லை சட்டமா இருக்கு ஒருவருக்கு இன்னொருவர் கட்டுப்பட. கருத்தியல் ஒற்றுமையை தவிர பதிவர்களுக்கு இடையில் வேற எந்த மண்ணாங்கட்டியும் அதிகாரமும் இல்லை. எஸ்கார் சொன்னது போல கொழும்பு தவிர யாழ் மட்டக்களப்பு கண்டி ஏன் அனுராதபுறம அம்பாந்தோட்டையில் பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்தாலும் கலந்துகொள்ள நினைப்பவர்கள் தானாக வருவார்கள். கொழும்பில் ஏற்ப்பாடு செய்யும் வேளைகளில் நீ இந்த சந்திப்புக்கு வரவேண்டும் என மிரட்டலா விடுக்கப்பட்டது. பதிவர் சந்துரு கூட ஒருமுறை இந்த சந்திப்பில் கலந்துகொள்ள தானாகவே வந்தவர் மறந்துவிட்டதா? அப்போது யாரும் அவரை கட்டாயபப்டுத்தினார்களா என்ன? விரைவில் லண்டனில் இருக்கும் ஒரு சில பதிவர்கள் சந்திக்கப்போகின்றோம் அப்போதும் சொல்வார்கள் பாருங்கள் லண்டனில் ஏற்ப்பாடு செய்துவிட்டார்கள் இப்போது அதிகார மையத்தில் இருக்கும் சிலர் (அவர்கள் குறிப்பிட்ட வகையில்) அங்கெ இருப்பதால் இப்படி நடக்கிறது எண்டு. அண்ணே கோபப்படுபவர்களே முடிந்தால் ஒரு சந்திப்பை நீங்கள் நடத்துங்கள் அப்போது தான் தெரியும் உங்களுக்கும்.
நாங்களெல்லாம் புதிய அறிமுக பதிவர்கள்!!
எங்கள் சீனியர் மார்களைக் கண்டு அவர்கள் அறிமுகம் கிடைக்காதா என்றும் அவர்கள் மூலமாக எங்கள் எழுத்துலகத்திற்கு பயிற்சி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.தப்பில்லையே!
பதிவர் சந்திப்பு எங்க நடந்தா என்ன...வசதியும் வாய்ப்பும் இருந்தா கட்டாயம் வருபவர்கள் வருவார்கள்.!!
தங்களுக்கு இருக்கும் பழுக்களுக்கு மத்தியிலும் இப்படியான ஏற்பாடுகளை செய்கிறார்களே பாராட்ட முடியாவிடின் பேசாமலாவது இருங்கள் புண்ணியமாப் போகும்!!
கோபி அண்ணா உங்கள் ஆதங்கம் சரியானதே!!..
சந்திப்பு நல்லபடியாக நடைபெற வாழ்த்துக்கள்.!!!
உங்கள் நியாயமான ஆதங்கம் புரிகிறது.. ஆனால் நீங்கள் அவரது விதண்டாவாதங்களை எல்லாம் பொருட்படுத்திப் பதிலளிப்பதால்த் தான் அவர் உற்சாகமடைந்து தொடர்ந்து தனது விசமக் கருத்துகளை மாற்றுக்கருத்துக்கள் எனும் போர்வையில் முன்வைக்கத் தூண்டுகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது..
கோபி உங்கள் தார்மீகக் கோபம் தேவையானது. முட்டையில் மயிர் பிடுங்கும் என்னகொடுமை சார் போன்ற சைக்கோக்களின் பதிவுகளை சும்மா விட்டுவிட்டுபோகமுடியாது ஏனென்றால் உரக்கச் சொன்னால் பொய் கூட உண்மையாகும் காலமிது. அவரைப் பொறுத்தவரை தன்னை ஒரு இனவாதியாக காட்டிக்கொள்வதில் மகிழ்பவர்.
இதே நேரம் இவர் கூறும் அதிகார மையத்துடன் தன்னுடைய விளம்பரத்திற்காக குற்றம்சாட்டிய வரோ ஏற்பாட்டுக்குழுவில் இருக்கின்றார். இதைக்கூட அவரால் ஏனோ புரிந்துகொள்ளமுடியவில்லை. அத்துடன் அவரின் யாழ்ப்பாண எதிர்ப்பும் விசமத்தனமாக வெளிப்பட்டிருக்கின்றது.
குழுமத்தின் பொறுப்பாளர் மு,மயூரன் என்பதும் எஸ்கருக்கு தெரியாது என நினைக்கின்றேன்.
பெரும்பாலான பதிவர்கள் கொழும்பில் இருப்பது பதிவர் சந்திப்புகளை நடாத்த இலகுவானது என்பது ஏனோ அவருக்கு புரியவில்லை.
எது எப்படியோ இம்முறை சந்திப்புக்கு முன்னரே எஸ்கரின் காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டிருப்பது சந்திப்பை ஒழுங்கு செய்திருக்கும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.
இந்தப் பதிவிற்காக ஒரு சல்யூட் கோபி. முகம் காட்டத் திரணியின்றி ஒழிந்திருப்பவர்களின் கருத்துக்களைக் கணக்கிலெடுக்கத்தேவையில்லை. பதிவர் சந்திப்பில் கலக்கலாம் :)
கோபி ரோட்டால போகேக்க சில நாய்கள் எப்பவும் குரைக்கத்தான் செய்யும் அதை அதன்பாட்டிலே விட்டுவிடுவோம். திரும் திரும்ப கல்லெறியதான் அது மீண்டும் மீண்டும் குரைக்கும்.
எப்பொதும் யாரவது ஒருவர் எதாவது நல்ல விசயம் செய்யும்போது ஒரு சிலர் எப்பவும் அதில் பிழைபிடித்துக்கொண்டேயிருப்பார்கள் ஆனால் உருப்படியாக ஏதுவும் செய்யமாட்டர்கள். ஒரு சிறு துரும்பைக்கூட துாக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களிற்கு அதற்கு திராணியில்லை. இது அனுபவத்தில் கண்ட உண்மை.
இவர் போன்றோர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததிற்கும் உண்மைகளை அனைவருக்கும் தெரிவித்ததிற்கும் நன்றிகள்.
தெளிவான விளக்கம்.
பொருத்தமான விளக்கங்களைத் தேடிக் கொடுத்திருபதற்கும், பொறுமையாக விளக்கம் அளித்திருப்பதற்கும் வாழ்த்துக்கள்.
நன்றிகளும் கூட..
இதற்கு மேல் நான் எதையும் தனியாக சொல்லத் தேவையில்லை.
சந்திக்கையில் நாம் எந்தவித மனத் தாங்கலும் இல்லாமல்,மகிழ்ச்சியுடன் சந்திக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.
LOSHAN
www.arvloshan.com
அருமையான விளக்கம் கோபி,
தேவையானதும் கூட.
ஒரு பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்ய படும் பாடு எனக்கு தெரியும் இப்போது.
பலரின் உழைப்பின் பிரகாரம் தான் அது நடைபெறுகிறது.
வெறுமனே வெளியில் இருந்து பார்த்து தேவையில்லாத கருத்துக்கள் வெளியிடுவதும் தவறாக மற்றவர்களை வழிநடத்துவதையும் எதிர்க்கிறேன்.
எந்தக் கருத்தாக இருப்பினும் ஏற்பாட்டுக் குழுவினரோடு கதையுங்கள்.
அதை விட்டு.......
கருத்துத் தெரிவித்த அனைத்த நண்பர்களுக்கும் நன்றி.
கடினமாக உழைத்து பதிவர்கள் நடத்த முற்படும் பதிவர் சந்திப்புக்களை மறைக் கருத்துக்களால், கூச்சல்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது என்றாலும் இந்தக் கூச்சல்கள் அதிகரித்துவருவதாக உணர்ந்தேன், கூச்சலிடுபவர்கள் பற்றி தனிப்பட்டு அடையாளம் காட்டுமளவிற்குக் கொண்டுசெல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
நன்றிகள் அனைவருக்கும்.
என்னைப் பொறுத்தவரை கூகிள் குழுமத்துக்கு மட்டுறுப்பாளர்கள் இல்லை என்பதைத்தான் குறையாக நினைப்பேன்.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
லோஷன் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர்பதிவு அஞ்சலோட்டக் கோலை ஜனா அண்ணர் எனக்குத் தந்தார். இதை நானும் நாலு பேரிட்ட குடுத்து தொடர்ந்து ஓடுவம்... நான் அழைப்பவர்
கங்கொன் கோபி - கிரிக்கட் பதிவுகளில் புகுந்து விளையாடும் இவரை சினிமா பக்கமும் இழுத்து வரவேண்டும்.
Post a Comment