Monday, January 18, 2010
அமிதாப் ஆரோவான கணங்கள்....
படங்களை மடடும் போட்டு பதிவிடுவுதில் எனக்கு உடன்பாடில்லைத்தான் என்றாலும் இன்னும் ஏதாவது ஏழுதப் போனால் பதிவு நீண்டு, 'விஜய் டொம்மா' பதிவாகிவிடும் என்பதால் படங்களை மட்டும் பார்த்து இரசிக்க.... :)
Friday, January 15, 2010
நாணயச்சுழற்சியில் வெல்- போட்டி உனது...
2008ம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி சனத் ஜெயசூரியா என்ற கிழட்டுசிங்கத்தின் அருமையான சதத்தை மறக்கவைத்து இரண்டு விரல்களால் இந்திய அணியை பாகிஸ்தானின் கராச்சி நகரில் அஜந்த மென்டிஸ் துவம்சம் செய்ததன் பின்னர் இவ்விரு அணிகளும் 21 முறை மோதியிருக்கின்றன...
அவற்றில் ஒரு போட்டி பந்தேதும் வீசாத நிலையில்கைவிடப்பட்டது. (26ம் திகதி ஓகஸ்ற் மாதம் 2008ம் ஆண்டு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்...)
ஒரு போட்டி ஆடுகள சீரின்மை காரணமாக அடைநடுவில் கைவிடப்பட்டது. (27ம் திகதி டிசம்பர் மாதம் 2009ம் ஆண்டு டெல்லியில்...)
மிகுதி இருக்கின்ற 19 போட்டிகளில் வெறும் ஆறே ஆறு போட்டிகளில் தான் இலங்கை அணி வென்றிருக்கின்றது.... அதாவது இந்திய இலங்கை அணிகள் கராச்சிப் போட்டிக்கு பின்னர் மோதி விடை கிடைத்த போட்டிகளில் 19 போட்டிகளில் இந்திய அணி 13 போட்டிகளில் அதாவது 68.42 சதவீதமான போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது....
சரி இதுதான் இப்படி என்றால் கராச்சி போட்டிக்குப் பின்னர் விடைபெறப்பட்ட 19 போட்டிகளில் இந்தியாவில் அண்மையில் முடிந்த ஒருநாள் தொடரை தவிர்த்துப் பார்த்தால் 15 போட்டிகளில் 13 போட்டிகளில் நாணயச் சுழற்சியில் வென்ற அணி வென்றிருக்கிறது.
(இந்திய மைதானங்களைப் பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதாலும், சங்கக்காரவும் அவ்வாறேறே இந்திய மைதானங்களைப் பற்றி அறியாமல் முடிவுகளை எடுத்ததாலும் அவற்றை தவிர்த்திருக்கிறேன்.)
சரி அந்த 2 போட்டிகளின் முடிவுகள் எவ்வாறு நாணயச்சுழற்சியில் வென்ற அணிகளுக்கு எதிராக மாறின என்று பார்த்தால் முதலாவது 18ம் திகதி ஓகஸ்ற் மாதம் 2008 ஆண்டு தம்புள்ளயில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்து சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டார். எனினும் அடுத்த போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டு வென்றுகொண்டார்.
இரண்டாவது சம்பவம் இந்த வருடம் இந்த மாதம் 10ம் திகதி மிர்பூரில் நடைபெற்றது.
இறுதிப்போட்டிக்கு நிச்சயமாகத் தெரிவாகிய நிலையில் இறுதிப்போட்டியில் இரண்டாவதாகப் பந்துவீச வேண்டி ஏற்பட்டாலும் என்பதற்காக தனது அணியைச் சோதிப்பதற்காக சங்கக்கார முதலில் துடுப்பெடுத்தாடி சொந்தச் செலவில் சூனியம் வைத்தக் கொண்டார்....
இனி ஒவ்வொரு போட்டிகளையும் பார்க்கலாம்....
குறிப்பு: இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளை அட்டவணையில் சேர்க்கவில்லை.
ஆகவே இதுதான் மந்திரம்...
தம்புள்ள - நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடு.
ஆர்.பிரேமதாசா - பகலிரவுப் போட்டிகளில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடு.
மிர்புர் - நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடு.
7ம் திகதி ஒக்ரோபர் 2008 இற்குப் பிறகு தம்புள்ளயில் நடைபெற்ற 7 போட்டிகளில் 6 போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிபெற்றிருக்கிறது.
13ம் திகதி ஒக்ரோபர் 2008 இற்குப் பிறகு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 14 பகலிரவுப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அணி ஒரே ஒரு மறை மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
அது நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி பெற்ற வெற்றி தான். ஆனால் அதுவும் பெரிதாக சொல்லிக் கொள்ளவதற்கில்லை. காரணம், நியூசிலாந்து பெற்றது வெறும் 155 ஓட்டங்கள், இந்திய அணி 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியடைந்தது.
இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இந்தி, இலங்கை அணிகள் மீண்டும் சந்திக்கப் போகின்றன என்று சங்கக்கார கடந்த போட்டியில் சொல்லியிருந்தார். வேணாமப்பா.... வேண்டவே வேண்டாம்...
இல்லை நடத்தித்தான் ஆகவேண்டுமென்றால் தம்புள்ளயில் போட்டிகள் வேண்டாம், ஆர்.பிரேமதாசாவில் பகலிரவுப் போட்டிகள் வேண்டாம்....
தரவுகள் ஆதாரம்: http://www.cricinfo.com/
நன்றி http://www.cricinfo.com/

| திகதி | இடம் | பகலிரவு/பகல் | நா.சுழற்சி | மு.துடுப்பு | வெற்றி |
| 18.08.2008 | தம்புள்ள | பகல் | இந்தியா | இந்தியா | இலங்கை |
| 20.08.2008 | தம்புள்ள | பகல் | இந்தியா | இலங்கை | இந்தியா |
| 24.08.2008 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 26.08.2008 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | - | - | - |
| 27.08.2008 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 29.08.2008 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இலங்கை | இலங்கை | இலங்கை |
| 28.01.2009 | தம்புள்ள | பகல் | இந்தியா | இலங்கை | இந்தியா |
| 31.01.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 03.02.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 05.02.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 08.02.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இலங்கை | இலங்கை | இலங்கை |
| 12.09.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இலங்கை | இலங்கை | இலங்கை |
| 14.09.2009 | ஆர்.பிரேமதாசா | பகலிரவு | இந்தியா | இந்தியா | இந்தியா |
| 05.01.2009 | மிர்புர் | பகலிரவு | இலங்கை | இந்தியா | இலங்கை |
| 10.01.2009 | மிர்புர் | பகலிரவு | இலங்கை | இலங்கை | இந்தியா |
| 13.01.2009 | மிர்புர் | பகலிரவு | இலங்கை | இந்தியா | இலங்கை |
குறிப்பு: இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளை அட்டவணையில் சேர்க்கவில்லை.
ஆகவே இதுதான் மந்திரம்...
தம்புள்ள - நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடு.
ஆர்.பிரேமதாசா - பகலிரவுப் போட்டிகளில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடு.
மிர்புர் - நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடு.
7ம் திகதி ஒக்ரோபர் 2008 இற்குப் பிறகு தம்புள்ளயில் நடைபெற்ற 7 போட்டிகளில் 6 போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிபெற்றிருக்கிறது.
13ம் திகதி ஒக்ரோபர் 2008 இற்குப் பிறகு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 14 பகலிரவுப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அணி ஒரே ஒரு மறை மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
அது நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி பெற்ற வெற்றி தான். ஆனால் அதுவும் பெரிதாக சொல்லிக் கொள்ளவதற்கில்லை. காரணம், நியூசிலாந்து பெற்றது வெறும் 155 ஓட்டங்கள், இந்திய அணி 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியடைந்தது.
இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இந்தி, இலங்கை அணிகள் மீண்டும் சந்திக்கப் போகின்றன என்று சங்கக்கார கடந்த போட்டியில் சொல்லியிருந்தார். வேணாமப்பா.... வேண்டவே வேண்டாம்...
இல்லை நடத்தித்தான் ஆகவேண்டுமென்றால் தம்புள்ளயில் போட்டிகள் வேண்டாம், ஆர்.பிரேமதாசாவில் பகலிரவுப் போட்டிகள் வேண்டாம்....
தரவுகள் ஆதாரம்: http://www.cricinfo.com/
நன்றி http://www.cricinfo.com/
Tuesday, January 12, 2010
காதலர்கள் தொலைபேசியில் இப்பிடித்தானோ?
இரண்டு காதலர்கள் (அதாவது ஒரு காதலன், ஒரு காதலி ) தொலைபேசியில என்னத்தத்தான் அப்பிடிக் கதைப்பாங்கள் எண்டு மண்டையப் போட்டு பிசையுறாக்களுக்காக....
காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா....
உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்...
அவா: ஹலோ...
இவர்: ஹாய்டா.... சொல்லு...
அவா: இல்ல... சும்மா தான் கோல் பண்ணினன்...
இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்... எப்பயுமே மிஸ்ட் கோல் தானே...
இவர்: ஓ! என்ன பண்றாய்?
அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?
இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்... இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்...
அவா: நல்ல பாட்டு...
(இப்பிடியே சொல்லிக் கொண்டு 'மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்...' எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா...)
இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?
இவர்: ஹேய்... நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?
அவா: சீ... போடா....
இவர்: இன்னொரு தரம் பாடன்....
அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க... எழும்பிடப் போறாங்க....
இவர்: (மனதுக்குள்) உண்மைதான்.... பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்...
இவர்: கமோன் டா.... பிளீஸ்....
அவா: போ.......டா...... நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்....
இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே...
இவர்: ஹேய்... நீ பாடினது நல்லா இருந்திச்சுடா.... பிளீஸ் பாடேன்....
அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா....
இவர்: இதில என்னம்மா இருக்கு.... நீ நல்லாத்தானே பாடுறாய்....?
அவா: அத நீ தான் சொல்லணும்... எனக்கெப்பிடித்தெரியும்?
இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல... சொல்லிற்றன்...
இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?
அவா: ஏன்டா படுத்திறாய்....
இவர்: ஓகே... விடு.... (விருப்பின்றி)
அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல.....லடா.....
இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்...
இவர்: ம்... ம்...
அவா: சரி.... இவ்வளவு கேக்கிறாய்.... உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்....
இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்....
இவர்: கிரேட்...
அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?
இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு.... பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன....
இவர்: ம்ம்ம்ம்ம்ம்.... உன் பேரைச் சொல்லும் போதே' from அங்காடித் தெரு?
அவா: நைஸ் சோங்.... பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா....
இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது.... பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?
இவர்: அப்ப 'சின்னச் சின்ன ஆசை'?
அவா: இல்ல... உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்...
இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன...
இவர்: கூல்...
(க்ம்ம்... எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா... பிறகு ஒரு வரி பாடுறா... பிறகு...)
அவா: இல்ல வேணாம்... நான் shy ஆ பீல் பண்றன்டா....
இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு.... உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே.... பாடு பாடு...
அவா: பாத்தியா... நக்கலடிக்கிறாய் பாத்தியா?
இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே.... பிறகென்ன....
இவர்: இல்லடா.... நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே... அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்....
அவா: ம்... ம்...
இவர்: பிளீஸ் பாடன்....
அவா: நாளைக்கு பாடட்டுமா?
இவர்: (மனதுக்குள்) அப்பாடா... தப்பிச்சன்....
இவர்: சரிம்மா... உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு....
அவா: ம்.. ம்...
இவர்: குட் நைட் டா...
அவா: குட் நைட் டா...
இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்...
அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்.... பாய்...
இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு...
சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்...
அவா: ஏய்... நித்திரை கொண்டிற்றியா?
இவர்: (மனதுக்குள்) இல்ல.... 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்...
இவர்: இல்லம்மா...
அவா: அப்ப என்ன பண்றாய்?
இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்... என்ன கொடுமை இது...
இவர்: இல்ல... மட்ச் பாத்திற்று இருந்தன்...
அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு... நான் படுக்கிறன்...
அவா: ஹேய்... நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா...
இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி...
இவர்: இல்லடா.... ஒண்டும் இல்லடா...
அவா: ஐ ஆம் சொறிடா...
இவர்: இற்ஸ் ஓகே டா....
(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்.....)

Monday, January 11, 2010
காதலியை இன்ஸ்ரோல் செய்யலாம் வாருங்கள்....
காதலியை ஒழுங்கமைத்த பின்னர்அடுத்தது காதலியை இன்ஸ்ரோல் செய்தல்...
இதுவரை நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகளடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமான, விருப்பமான பெண்ணைத் தெரிவுசெய்திருப்பீர்கள்...
இனி இன்ஸ்ரோல் செய்தல் என்பது 3 படிகளில் தங்கியிருக்கும்....
1. உங்கள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல்.
2. பிரச்சினைகளைத் தீர்த்தல். (Troubleshooting.)
3. காதலைச் சொல்வதை customize செய்தல்.
உங்கள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல்.
செய்யக்கூடினவும், செய்யக்கூடாதனவும்...
1. அவளது குடும்ப உறுப்பினர்களைப்பற்றிக் கேள், ஆனால இதற்கு முன்னர் யாராவது விசேடமான ஆணைச் சந்தித்தாயா என்று கேட்காதே.
2. அவள் தன்னைப்பற்றிக் கதைக்கும் போது கேள், ஆனால் உன்னைப்பற்றி அதிகம் கதைக்காதே.
3. அவளில்லாமல் வருந்தின் அவளுக்கு அழைப்பெடு, ஆனால் அவளில்லாமல் வருந்துவதை தனியாகக் குறிப்பிடாதே.
4. Looking nice/good/better/different பொன்ற சொற்களைப் பயன்படுத்தி வர்ணித்துக்கொள், ஆனால் gorgeous, sexy போன்ற சொற்களைப் பயன்படுத்தாதே. (அவள் கேட்டால் ஒழிய)
5. இன்னொரு பையனை அவள் புகழும்போது கேள் (நீ அவனை விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன), ஆனால் அவனோடு கதைக்க வேண்டாம் என அவளை வற்புறுத்தாதே.
6. அவளை விட பக்குவப்பட்டவனாக இரு, ஆனால் மிக அதிகமாக பக்குவப்பட்டவனாக இராதே. (Mature)
7. அவளை எப்போதும் வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் புகழ், ஆனால் அவள் பிழையாக இருக்கும் போதெல்லாம் புகழாதே.
8. எப்போது கண்களால் தொடர்புகளை வைத்துக்கொள், அனால் அதைத்தாண்டிப் போக முயற்சிக்காதே.
பிரச்சினைகளைத் தீர்த்தல். Troubleshooting...
1. அவளுக்குச் சிறிதளவு மனப்பாங்குக் (attitude) குறைபாடு இருக்கிறது. - இது சிறப்பானது. தீர்வு அவசியமற்றது.
2. உனக்குப் பிடிக்காத நபர்களோடு அவள் கதைக்கிறாள் - பொறுமையாக இரு. அவளை உடனடியாக நிறுத்தாதே.
3. அவள் ஒரு புத்தகப்பூச்சி- தெரிவு ஆதரிக்கப்படவில்லை, மாத்தி யோசி.... :)
4. அவள் கனவுலகத்தில வாழ்கிறாள் - பரவாயில்லை. அவளோடு விவாதிக்கப் போகாதே, இன்னும் கூடுதலாக புரி்துணர்வை வளர்த்துக் கொள்
5. உனது அழைப்புக்களை அவள் இரவு நேரத்தில் எடுத்தக் கதைப்பதில்லை - நல்ல அடையாளம், திர்வு அவசியமில்லை.
6. அவளுக்கு என்னோடு ஈகோ பிரச்சினை உண்டு - இது நடப்பதுண்டு, உங்கள் மனதை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
7. அவளுக்கு இன்னும் என்மேல் ஓர் அக்கறை வரவில்லை- அவளைப் பற்றி இன்னும் நீ படிக்க வேண்டும்.
8. அவள் அதிகமாகக் குழம்பிக் காணப்படுகிறாள்- பெண்களுக்குப் பொதுவாக சுரப்பிகள் (hormones) காரணமாக இந்த குழப்பங்கள் ஏற்படுவதுண்டு, ஆகவே அள் மீது கூடுதலாகப் படிப்புகளை மேற்கொள்.
சொல்லும் விதங்கள்...
1. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதிற்குப் பதில் நீ இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொல்லுங்கள்.
2. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்பதற்குப்பதில் உன்னுடைய நிறைய தகுதிகள்/விடயங்கள் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்.
இவை சிறிது மெதுவான தாக்கத்தையே உண்டாக்கும் என்றாலும் இவை நீண்ட கால நோக்கில் சிறப்பானவை.
கடைசியாக இவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள்....
இவை ஆபத்தானவை....
1. ஒருநாளில் அதிகமாக தொலைபேசியில் உரையாடுகிறீர்களா? (அண்ணளவாக 3 மணித்தியாலத்துக்கு மேல்?)
2. உங்களுடைய காதலி உங்கள் காதலுக்குப் பின்னர் தனது பெண் நண்பிகள் பலரை இழந்துவிட்டாளா?
3. உங்கள் காதல் தொடங்கிய பின்னர் உங்கள் நண்பர்களை நீங்கள் இழந்தவிட்டீர்களா?
4. எங்கள் காதலை எங்கள் குடும்பத்திற்கு எவ்வாறு தெரிவிப்பது என்ற கதையை இருவரில் யாராவது ஒருவர் நழுவப் பார்க்கிறீர்களா?
5. இரவுவேளைகளில் கைத்தொலைபேசிகளில் அதிகம் கதைக்கிறீர்களா?
6. உங்கள் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதை இருவரும் காட்ட முயற்சிக்கிறீர்களா?
7. விலையுயர்ந்த பரிசுப்பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறீர்களா?
8. உடல்ரீதியான தொடர்புகளில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்களா,
9. பெற்றோர்கள் அனுமதித்தாலென்ன விட்டாலென்ன இருவரும் மணம்புரிவது என்று இப்போதே முடிவு எடுக்கிறீர்களா?
10. உங்கள் பெற்றோர்கள் மரபுரீதியானவர்கள், எனவே அவர்கள் திருமணத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று இருவரும் நினைக்கிறீர்களா?
இவற்றில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்....
இந்தப்பதிவின் முதற்பகுதியை இங்கே போய் வாசியுங்கள்...
இனிமையான காதலுக்கும், அதனைத் தொடர்ந்தான வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள்.

Saturday, January 9, 2010
காதலியைத் தெரிவுசெய்ய 3 வழி படிமுறைகள்....
உங்களுக்கெல்லாம் தெரியாத ஒருவிடயம் தான் நான் பெரிய அறிவாளி...
அதுவும் உந்தக் காதல் கீதல் எண்டா ஓடோடி வந்து அறிவுரை சொல்லுவன்...
நம்மட பவன் திருகோணமலையில பெரிய மன்மதனாம், ஆனா யாருக்கோ காதலச் சொல்லப் போய் செருப்படி வாங்கினதாக் கேள்விப்பட்டதும் எனக்கு ஒரே கவலையாப் போச்சு.
என்னடா இது நமக்குத் தெரிஞ்ச பயபுள்ள இப்பிடி அடிவாங்கிப் போட்டானே எண்டு.
அதுக்கா இது காதல் செய்வதற்கான அறிவுரை.
காதலியொருவரைப் பெறும் வழிமுறைகளில் மொத்தம் 3 படிமுறைகள் உண்டு.
1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring a Girlfriend )
2. காதலியை இன்ஸ்ரோல் செய்தல். (Installing a Girlfriend )
3. நிரலை ஓடச்செய்தல். (Running the program)
ஆகவே, ஒரு பையன் முதில் அறியவேண்டி பாடம் காதலியை ஒழுங்குபடுத்தல்.
அதற்குரிய தேவைப்பாடுகள். (Requirements)
1. தைரியசாலியாக இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமைகளைச் சமாளிப்பதில் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.
2. கதைப்பதில் கெட்டித்தனமாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட கதைப்பதைக் கேட்பதில் பக்குவமுள்ளவனாக இருத்தல் வேண்டும்.
3. பார்வைக்கு அழகாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட சுறுசுறுப்பானவனாக இருத்தல் வேண்டும்.
4. உணர்வுபூர்வமானவனாக (emotional) இருத்தல் வேண்டும், அதைவிட தாங்குதிறன் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.
5. விளையாட்டுத்தனமுள்ளவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட போட்டித்தன்மை உடையவனாக இருத்தல் வேண்டும்.
6. அக்கறை எடுப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட வருமுன் காப்புகளில் சிறப்பாக இருத்தல் வேண்டும்.
7. பரிசுகள் கொடுப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், அத்தோடு அதைவிட சேமிப்பில் அக்கறையுள்ளவனாக இருத்தல் வேண்டும்.
8. முன்னகர்த்தல் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட சுயமாக தயாரித்த குறுஞ்செய்திகள்
அனுப்புவதில் வல்லவனாக இருத்தல் வேண்டுமு்.
9. அவளை மக்டொனாலட்ஸ் இற்கும், MC இற்கும் அழைத்துச் செல்வதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட பணம்
சம்பாதிப்பதில் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.
10. அவளுக்கு வெளிப்படையாக இருப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், அதைவிட பெற்றோர்களுக்கு நல்லவனாக இருப்பது முக்கியமானது.
இவ்வாறான பழக்கங்கள் உங்களிடம் இருக்குமாயின் நீங்களும் ஒருசிறந்த காதலனாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.
அவளிடம் காதலைச் சொல்ல முன்னர் இன்னும் சில விடயங்களை படித்துக் கொள்ளுங்கள்.
1. அவள் அடிக்கடி 'கடவுள் விட்ட வழி, god knows போன்றவற்றைப் பயன்படுத்தின் அவளுக்கு உணர்வுபூர்வ ஆதரவு தேவைப்படுகிறது, ஆனால்
அவளது குடும்ப முடிவுகள் பற்றி அவளுக்குத் தெரியாது.
2. அவள் அடிக்கடி cute, sweet, loving போன்ற சொற்களைப் பயன்படுத்தின் - அவள் உங்களிடம் இவற்றைப் பயன்படுத்தின் அவள் உங்கள் மீது
அன்பாக இருக்கலாம், ஆனால் அது காதலாக இருக்க வேண்டி அவசியம் இல்லை.
3. அவள் மென்மையாகக் கதைக்கிறாள் - இது அவள் பக்குமடைந்தவள் என்பதைக் காட்டுகிறது, அத்தோடு உணர்வுபூர்வமாக கெட்டிக்காரி
என்பதையும் காட்டுகிறது, ஆனாலும் அங்கும் சிறிது போலித்தன்மை இருக்கலாம்.
4. அவள் அவசரப்பட்டு, கடுமையாகக் கதைக்கிறாள் - இது அவள் திடீரெண்டு ஒருவனுடன் காதலில் விழ இடமுண்டு எனக்காட்டுகிறது, எனினும்
அவள் அடிக்கடி மாறவும் இடமுண்டு.
அவள் உடையணியும் பாங்குகள்....
1. அவள் நாகரிக்கத்திற்கேற்றவாறு உடையணிபவளாகவும், உடையணியும் நாகரிகத்திற்கேற்றவாறு தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவள்- இது
அவள் தனது தெரிவு பற்றி தெளிவாக இருப்பாள் என்பதோடு தனது ஆண் நண்பர்களோடு போட்டித்தன்மையொன்றை ஏற்படுத்துவாள்.
2. அவள் அடிக்கடி பாரம்பரிய உடைகளை அணிபவள்- இது அவள் தனது தெரிவுகளில் கண்டிப்பானவள் என்பதையும், தன்னோடு அதிகளவு
ஆண் நண்பர்களையும் அனுமதிக்க மாட்டாள் என்பதும் தெளிவு.
3. அதிகளவு முகப்பூச்சுகள், ஆபரணங்கள், அலங்காரங்களையும், உயர் நாகரிகமும் கொண்டவள் - இது அவள் அதிகளவு ஆண் நண்பர்களைக்
கொண்டிருப்பாள் என்றும், தற்காலிக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொண்டவளாக இருப்பாள் என்றும் பொருட்படும்.
4. தனத ஆடைத்தெரிவுகள் பற்றிக் கவலை இல்லாதவள்- இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றும், உணர்வுபூர்வமாக அந்ததந்த
வேலைகளை குறித்த நேரத்தில் செய்பவர்கள் என்றும் பொருள்படும். ஆகையால் இவர்களை உங்களுக்கு பரிந்துரைக்க முடியாது.
நண்பர்களைக் கவனித்துக் கொள்...
1. அவளுக்கு அதிக ஆண் நண்பர்கள் உண்டு - அனேகமாக அவள் ஒரு காதலனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு, இல்லாவிடில் அவள்
தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்க நிறையக் காலம் எடுப்பாள்.
2. அவளுக்கு அதிக பெண் நண்பிகள் உண்டு - இவள் குடும்ப கட்டுப்பாடுகள் அதிகம் கொண்டவள், அதனால் உங்களுக்கு கடினமான இலக்காக
அமைந்துவிடுவாள்.
3. நிறையப் பணக்கார நண்ப, நண்பிகளைக் கொண்வள் - அவள் பொதுவாக இந்தப் பணக்கார சூழ்நிலையிலேயே வளந்தவளாக இருக்க
வாய்ப்புகள் உண்டு, இவ்வாறானவர்கள் மத்திய வர்க்கத்தினருடன் நட்புக் கொண்டாலும் காதலிப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு.
4. அவளிடம் நிறைய நண்ப, நண்பிகள் இல்லை - இவர்கள் தான் உங்கள் தெரிவுகள். இவர்களைக் காதலிக்கும் ஆரம்பத்தில் ஈகோ பிரச்சினைகள்
வரலாம் என்றாலும் அவை சாதாரணமானவை. சத்தியங்களைக் காப்பதில் பொறுப்பானவர்கள்.
தொடரும்....
மறுதலிப்பு: 1. இவை ஒரு மனோவியல் ஆய்வின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டவை. எழுமாற்றானவை அல்ல. எனினும் இவற்றின் உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பல்ல.
மறுதலிப்பு: 2. நிறைய நாட்களுக்குப் பிறகு புதிய தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
Subscribe to:
Posts (Atom)