கிறிக்கற் உலகில் இதுவரை உருவான மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரா சச்சின் ரெண்டுல்கர் நேற்று ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வரலாற்றில் முதன்முதலாக 200 ஓட்டங்களைக் கடந்து தனது சாதனை எண்ணிக்கைகளில் இன்னொன்றையும் சேர்த்துக் கொண்டார்.
எந்தவித பயமுமின்றி பந்துவீச்சாளர்களை அடித்தாடிய அந்த சுபாவம் அசர வைத்தது.
ஆரம்பத்தில் தட்டையான ஆடுகளம், சிறிய எல்லைக்கோடுகள் என்று திட்டித்தீர்த்துக் கொண்டிருந்த நான் சச்சின் விளாசத் தொடங்கியதும் மெளனமானேன்.
சச்சினுக்கு எதிராக விளையாடும் அணியினரும் சச்சின் விளையாடும்போது ஆடுகளத்தில் இரசிப்பார்கள் என்று சொல்வார்கள், நேற்றைய ஆட்டத்தை உலகில் கிறிக்கற்றை உண்மையாக விரும்பும் அனைவரும் இரசித்திருப்பார்கள்.
இது இவ்வாறு இருக்க, ருவிற்றரில் பிரபலங்கள் வந்து குவிந்து செய்கின்ற அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமில்லை.
சும்மா மொக்கை போட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போல வெட்டிப் பயல்களுக்கே சிலவேளை எரிச்சல் வந்துவிடும்.
இன்று காலையில் நண்பரொருவர் தான் பிரபலங்களை தொடர்வதை நிறுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் பாதுகாப்புப் பற்றி சிறிது சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நேரத்தில் அதற்கு லலித் மோடி அவர்களின் பதில்கள் சினக்க வைக்கின்றன.
இது அவரது ஒரு ருவீற்:
Been told Ricky Ponting pressuring players not to come. Maybe its due to the fact he was dropped from KKR.
கிறிக்கற் உலகில் உருவான சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பொன்ரிங்கை நோக்கி இவர் வசைமாரி பொழிவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
பொன்ரிங் இருபதுக்கு இருபது விளையாடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார், அத்தோடு எனக்கு ஞாபகம் சரியாக இருப்பின் கடந்த தொடரில் பொன்ரிங் தானாகவே விலகிக் கொண்டார்.
ஒரு அணித்தலைவராக அந்த அணியை வழிநடத்தும், அந்த அணியின் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் எல்லாத் தகுதியும் ஒரு அணித்தலைவருக்கு உண்டென நான் நம்புகிறேன்.
உங்களுக்கு எதிராக பொன்ரிங் செயற்பட எந்தக் காரணமும் இல்லை.
அத்தோடு ஒரு செய்தியை உறுதிப்படுத்தாமல் ஒர அணிவீரரை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவது எந்தளவுக்குச் சரியானது?
வெளிநாட்டு வீரர்கள் விலகலாம் என்பதற்கு
"We have no worries at all. You have to understand that the market for us is India"
என்று தெரிவித்திருந்தார் மோடி.
நிச்சயமாக.. ஐ.பி.எல் மட்டுமல்ல இந்தியா விளையாடும் எல்லாப் போட்டிகளுக்கும் market என்பது இந்தியாவில் தான்.
ஆனால் மத்தியூ ஹெய்டன், ஹசி, முரளி, பொன்ரிங், உட்பட பிரபல வெளிநாட்டு வீரர்கள் முதலாவது ஐ.பி.எல் இல் விளையாடாமல் விட்டிருந்தால் வென்றிருக்கும் என்று சொல்ல முடியுமா?
உங்களுக்கான மார்க்கற்றை ஏற்படுத்தித் தந்தது வெளிநாட்டுவீரர்களே...
அதைப் போல நேற்று ஒரு இரசிகர் 'உலகில் மிகச்சிறந்த வீரர் சச்சின் தான், யாரும் பொன்ரிங்கோடு சச்சினை ஒப்பிட மாட்டார்கள்' என்று சொன்ன போது லலித் மோடி ருவிற்றரில் சொன்ன பதில் 'பொன்ரிங்? யார்?' என்று...
ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரைப் பார்த்து அது யார் என்று கேட்பது எந்தளவுக்குச் சரியானது என்பது எனக்குப் புரியவில்லை.
(எனக்கு சச்சினைப் பிடிக்காது என்று எண்ண வேண்டாம்.
எனக்குப் பிடித்த வீரர்களில் சச்சினும் ஒருவர். நேற்று சச்சின் 200 அடிக்கும் போது நாங்கள் ருவிற்றரில் கொண்டாட்டமே நடத்தினோம்...)
ஒரு பிரபலம் என்றால் தனது சொந்தக் கருத்துக்களை வைத்திருந்தால் அவற்றை பொது இடத்தில் இன்னொருவரைப் பழித்து வெளியிடுவதும் அதை கிறிக்கற்றின் தாயகம் என்று தங்களை முன்னர் அழைத்துக் கொண்டவர்கள் ஒரு செய்தியாகவும் வெளியிடுவதும் எந்தளவுக்கு சரியானது என்றும் புரியவில்லை.
மோடிக்கு கிறிக்கற் தெரியாது என்பது உலகறிந்த விடயம். இரண்டாவது ஐ.பி.எல் இல் 10 ஆவது பந்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் பெரிய இடைவெளி விட்டு கிறிக்கற்றை சொதப்பியதன் கூலம் அது நிரூபணமானது என்றாலும் அவருக்கு மனிதத் தன்மை, பொறுப்பு போன்றவனவும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.
பணம் ஆள்கிறது, நான் ஆத்திரப் படுகிறேன்... அவ்வளவும் தான்....
Thursday, February 25, 2010
சச்சின், லலித் மோடி, பொன்ரிங், ஐ.பி.எல் மற்றும் பலர்...
Wednesday, February 24, 2010
அலட்டல் நகைச்சுவைகள்....
நிறையக் காலங்களாக எதுவுமே பதிவிடவில்லை...
எதையாவது எழுதலாம் என்றால் ஒன்றைமே எழுதத் தோன்றவில்லை.
கடுமையாக யோசித்தாலும் முடியவில்லை.
சரி... எதையாவது முதலில் பதிவிட்டால் ஏதாவது எழுத மனம் வருமென்று ஏதோ கிறுக்கித் தள்ளுகிறேன்...
உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல...
1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்...
திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள்.
அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...
2. உங்கள் பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்...
உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..
உடனே...
'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...
3. பெண்ணிடம் சென்று 'உன் கால்கள் வலிக்கின்றனவா?' என்று கேளுங்கள்...
பெண் 'ஏன்' என்று கேட்பார்...
உடனே... 'இல்லை... நேற்று முழுதும் என் மனது முழுவதும் நீ தான் நினைவாக ஓடிக் கொண்டிருந்தாய் அதனால் தான்' என்று சொல்லுங்கள்...
4. பெண்ணிடம் சென்று 'உனது இதயத்திற்கான பாதையை எனக்குச் சொல்வாயா? உன் கண்களிலேயே என் பாதையைத் தவறவிட்டுவிட்டேன்' என்று சொல்லுங்கள்..
5. பெண்ணிடம் செல்லுங்கள்.. சென்று 'நீங்கள் கிரேக்கத்திலிருந்தா வருகிறீர்கள்?' என்று கேளுங்கள்...
அவர் இல்லை என்றதும்,
'ஓ! எல்லாத் தேவதைகளும் கிரேக்கத்திலிருந்து வருபவர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொல்லுங்கள்...
6. என்னிடம் 11 றோசாப் பூக்களும் நீயும் இருந்தால் என்னிடம் மொத்தமாக 12 றோசாக்கள் இருக்கும்' என்று சொல்லுங்கள்....
(அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.
அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது)
*******************************************************************************
அப்படியே பார்த்தால் சில நகைச்சுவைகள் கிடைத்தன.
அப்படியே மொழிமாற்றம் செய்து இடுகிறேன்.
வழக்கறிஞர்கள் நகைச்சுவை.
இவை உண்மையாக நடந்தவை என்று தான் சொன்னார்கள். எனக்குத் தெரியாது. உறுதிப்படுத்தவும் முடியாது.
மொக்கையாக இருப்பதால் பொய் போலவே தோன்றுகிறது.
வழக்கறிஞர்: அந்தப் பெண்ணுக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள், அப்படித்தானே?
சாட்சி: ஆமாம்.
வழ: அதில் எத்தனை ஆண் பிள்ளைகள்?
சாட்: ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை.
வழ: அப்படியானால் எத்தனை பெண்பிள்ளைகள்?
சாட்: கனம் நீதிபதி அவர்களே... தயவுசெய்து வேறொரு வழக்கறிஞரை நியமியுங்கள்.
வழ: உங்கள் முதலாவது திருமணம் ஏன் செயலிழந்து போனது?
சாட்: மரணத்தால்?
வழ: யாரின் மரணத்தால்?
சாட்: யாரின் மரணம் அதை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
வழ: அந்த நபரை உங்களால் அடையாளப்படுத்த முடியுமா?
சாட்: பொதுவான உயரம், கறுப்பான தோல், தாடி வைத்திருந்தார்.
வழ: அது ஆணா இல்லை பெண்ணா?
சாட்: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
வழ: நீங்கள் எத்தனை மணிக்கு பிரேத பரிசோதனை செயதீர்கள்?
வைத்: இரவு 8.30 இற்கு
வழ: அந்த நேரத்தில் திரு. ராஜா இறந்திருந்தாரா?
வைத்: இல்லை... எனக்குப் பக்கத்துக் கதிரையில் இருந்து கொண்டு நான் ஏன் ஏன் பிரேத பரிசோதனை செய்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
வழ: உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மறதி நோயினால் உங்கள் ஞாபக சக்தி பாதிக்கப்படுகிறதா?
சாட்: ஆம்.
வழ: எவ்வாறான வழிகளில் பாதிக்கிறது?
சாட்: நான் மறந்துவிட்டேன்.
வழ: மறந்துவிட்டீர்களா? சரி அப்படியானால் நீங்கள் இதுவரை மறந்த சிலவற்றை எனக்கு சொல்ல முடியுமா?
வழ: உங்கள் கணவன் உங்களிடம் அன்று காலையில் முதலாவதாகக் கதைத்தது என்ன?
சாட்: பியுமி! நான் எங்கேயிருக்கிறேன்.
வழ: அதில் உங்களுக்கென்ன பிரச்சினை?
சாட்: எனது பெயர் ராணி
வழ: வைத்தியரே! நீங்கள் பிரேத பரிசோதனை செய்ய முன்னர் அவரது நாடித் துடிப்பை பரிசோதித்தீர்களா?
வைத்: இல்லை.
வழ: இதய அழுத்தம்?
வைத்: இல்லை.
வழ: மூச்சு?
வைத்: இல்லை.
வழ: ஆகவே அந்த நபர் அப்போது உயிருடன் இருக்க ஏன் வாய்ப்பில்லை?
வைத்: ஏனென்றால் அவரது மூளை எனது மேசையில் ஒரு பாத்திரத்துள் இருந்தது..
வழ: ஓ அப்படியோ.. சரி அப்படியென்றாலும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்புக்கள் இல்லையா?
வைத்: இருக்கிறது... உயிருடன் இருந்து சட்டம் பயின்று கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளன...

**********************************************************************************
இன்றைய படம்...
( ஆதிரை அண்ணாவிற்கு சமர்ப்பணம்...
இது வெறும் எச்சரிக்கைக்காக என்றும் சொல்லி வைக்க விரும்புகிறேன். :P :D )

Labels:
நகைச்சுவை,
மொக்கை,
வெட்டிக் கதை
Sunday, February 14, 2010
காதலர் தினத்தை பிறந்தநாளாக மாற்றிவிட்ட (பிரபல:P)பதிவர்
முற்குறிப்பு: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் 100 வீதம் உண்மையானவை. எதுவித கலப்படமுமில்லாதவை.
நம்பாதவர்களின் தலையில் அடித்து சத்தியம் பண்ணத் தயாராக இருக்கிறேன்.
இன்றைக்கு 14ம் திகதி... வலன்ரைன்ஸ் தினம்...
எங்களைப் போல பச்சிளம் பாலகர்களுக்கு முக்கியமில்லாத விடயம் என்றாலும் இம்முறை இது எங்களுக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது...
நம் பதிவர்களில் ஒருவர், நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்தவர் தனது காதலை தனது காதலியிடம் சொல்லப் போகிறார்... சரி அதென்ன பெரிய விடயம் என்று கேட்கலாம்... பெப்ரவரி 16ம் திகதி பிறந்த அண்ணல் காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடுவதற்காக 2 நாட்கள் முன்னகர்த்தி அதை இன்று, அதாவது பெப்ரவரி 14ம் திகதி, கொண்டாடுகிறார்.
அதனால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்க ஒரு பதிவு...
அவர் யார் யார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
ஆனால் நேரே அவர் பெயரை சொல்வதை விட அவரது அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
5 வயதிலேயே பக்கத்து வீட்டு கமலாவை சரிசெய்வதற்காக எடுத்துக்கொண்ட புகைப்படம்.
பக்கத்துவீட்டு கமலா இவரைப் பார்க்காமல் திரிய கமலாவை சமாளிக்க, தன்பக்கம் இழுக்க இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
இதைக் கொடுத்ததும் இவரது அழகில் கமலா மயங்கி காதல் கீதல் கருமம் எல்லாம் நடந்தது வேறு விசயம்.
5 வயசிலயே இப்பிடி எண்டா இப்ப மனுசன் எப்பிடி இருப்பார் எண்டு யோசிச்சுப் பாருங்கோ...
சரியெண்டு,
ஒரு 10 வயசிருக்கும்...
அப்ப இவருக்கு இன்பக்குமரன் எண்டொரு நண்பனிருந்தாராம். ஒருநாள் இவர் பாடசாலைக்கு செல்லாமல் விட அன்று பாடசாலையில் என்ன நடந்தது என அறிவதற்காக அந்த நண்பர் வீட்டுக்குச் செல்ல நம்ம கதாநாயகனின் தந்தை 'அடேய் தம்பி! இன்பக்குமரன் வீடு எங்கயடா கிடக்குது?' எண்டு கேட்டாராம்.
நீங்களா இருந்தா என்ன சொல்லுவியள்? இந்த நிற கேற், இந்த நிற பெயின்ற், அது இது எண்டு தானே சொல்லுவியள்?
ஆனா தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?
'அப்பா! உதால போங்கோ... எதால போக ஒரு சொறிநாய் படுத்திருக்கும்... அதுக்கு நேர் முன் வீடு தான் இன்பக்குமரன் வீடு' எண்டார் நம்ம தலைவர்.
சொறிநாய் மூலம் வீடு அடையாளம் சொன்ன முதல் மனிதர் எங்கள் தலைவர் தான்.
தலைவர் வளர்ந்து பதிவராகினாப் பிறகு எங்களோட எல்லாம் கதைப்பார் தானே?
அப்ப தான் தலைவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிற விசயம் தெரிஞ்சுது. (அப்ப இதுக்கு முதல் தலைவர் காதலிச்சதுக்கெல்லாம் என்ன நடந்திற்று அறிவுபூர்வமாக் கேட்டா உங்கட மொனிற்றருக்கால எட்டிக் குத்துவன்)
சரி யாரெண்டு கேட்டா தலைவர் வெக்கப்பட வெளிக்கிட்டிற்றார்.
கடைசியா தானும் தன்ர காதலியும் நிக்கிறதா சொல்லி ஒரு படம் தந்தார்.
ஏதோ எம்மா வொற்சனாம்.... (Emma Watson)
அதப் பாத்து ருவிற்றர விட்டு ஓடின ஒரு பதிவர திரும்பக் கூப்பிட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்...
இது இப்பிடி எண்டா தலைவருக்கு 16ம் திகதி பிறந்தநாள் எண்டு ஏற்பாடுகள் என்ன மாதிரி எண்டு கேக்க அஞ்சாவது பெட்டிக் கடைக்காரர் அலைபேசினாராம். 'அடேய் பவன்.. 16ம் திகதி என்ன மாதிரிக் கொண்டாட்டம்?' எண்டு அப்பாவித்தனமாத் தான் அந்த மனுசன் கேட்டது.
பவன் கடுப்பாகி 'யோவ்... 16ம் திகதி என்னய்யா விசேசம்?' எண்டு கேக்க குழம்பிப் போன நம்ம பெட்டிக் கடைக்காரர் 'உன்ர பிறந்தநாள் தானாரா' எண்டு சொல்ல,
'யோவ்... அது 14ம் திகதிக்கு மாத்தி 2 கிழமையாச்சு... நம்ம ஆளோட காதலர் தினத்தில சேர்ந்து தனியாக் கொண்டாட முடிவெடுத்திருக்கிறன்' எண்டார்...
இது போதாதெண்டு இண்டைக்கு தலைவர் றீ லோட் கடைக்குப் போனார். (இவன் யாருக்கும் அழைப்பு எடுக்கிறதில்லயே, இவன் ஏன் றீ லோட் கடைக்குப் போனான் எண்டு யாரோ கேக்கிற மாதிரிக் கிடக்குது? பிச்சுப் புடுவுன் பிச்சு)
அங்க போக ஒரு 18 வயசு பெண் நிண்டு 'நீங்க தானே போட்டோ கொமன்ற் ***?'
எண்ட நம்ம தலைவரும் 'ஓம்' எண்டார்.
'நான் உங்கட பரம இரசிகை. உங்கட பதிவுகள் எல்லாம் அருமை' எண்டு சொல்லி நம்ம தலைவரின்ர அலைபேசி இலக்கத்தையும் வாங்கிச் சென்றதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன...
நீங்களெல்லாம் கண்டுபிடிச்சிருப்பீங்க எண்டு நம்பிறன்...
எங்கள் எரிந்தும் எரியாமலும் பவன் இன்று காதலர் தினத்தோடு பெப்ரவரி 16ம் திகதிக்குரிய தனது பிறந்தநாளையும் சேர்த்துக் கொண்டாடுகிறார்...
அவருக்கு அனைத்துப் பதிவர்கள் சார்பாகவும் பிறந்தநாள் மற்றும் காதலர் தின வாழ்த்துக்கள்.
இன்று அவர் செய்யும் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள்...
Labels:
காதலர் தினம்,
காதல்,
பதிவர்,
பதிவர்வட்டம்,
பிறந்தநாள்
Wednesday, February 10, 2010
எனக்குப் பிடிக்காத மொன்ரி, இசாந் உட்பட பலர்...
அன்புத் தம்பி எரிந்தும் எரியாமலும் பவன் என்னை தொடர்பதிவொன்றிற்கு அழைத்திருக்கிறார்...
எனக்குப் பிடித்த பகுதி என்பதால் விருப்புடன் ஒப்புக் கொண்டு விதிகளையும் இங்கே குறிப்பிடுகிறேன்...
- உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
- தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
- குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
2.பிடிக்காத கிறிக்கற் வீரர்? முழுமையாக பிடிக்காத வீரரென்று யாரும் இல்லை. பலரைப் பெரிதாகப் பிடிக்காது என்றாலும் அவர்களின் ஏதாவதொரு திறமை பிடிக்கும்.
3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்? கிளெய்ன் மக்ராத்.
4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்? இசாந் சர்மா
5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்? முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வோண்
6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்? மொன்ரி பனசர்
7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்? றிக்கி பொன்ரிங், மஹேல ஜெயவர்தன மற்றும் சச்சின் ரெண்டுல்கர்.
8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்? விராத் கோலி (அருமையான துடுப்பாட்ட வீரரென்ற போதிலும் பெரிதாகப் பிடிக்காது.)
9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்? குமார் சங்கக்கார
10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்? யுவ்ராஜ் சிங் (இவருக்கும் அதே. திறமையானவர் என்ற போதிலும் இவரைப் பிடிப்பதில்லை)
11.பிடித்த களத்தடுப்பாளர்? திலகரட்ண டில்ஷான்
12.பிடிக்காத களத்தடுப்பாளர்? அஜந்த மென்டிஸ்
13. பிடித்த ALL-ROUNDER? ஷேன் வொட்சன்
14.பிடித்த நடுவர்? சைமன் ரெளபல்
15.பிடிக்காத நடுவர்? டரல் ஹெயார்
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்? இயன் சப்பல், அருண் லால் மற்றும் ரணில் அபேநாயக்கா
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர்? பொதுவாக அனைத்து இந்திய நேர்முக வர்ணனையாளர்கள் மற்றும் ரன்ஜித் பெர்னான்டோ.
18.பிடித்த அணி? இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா
19.பிடிக்காத அணி? இந்தியா
20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி? அவுஸ்ரேலியா எதிர் தென்னாபிரிக்கா
21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி? சிம்பாப்வே எதிர் அவுஸ்ரேலியா
22.பிடித்த அணித்தலைவர்? றிக்கி பொன்ரிங்
23.பிடிக்காத அணித்தலைவர்? மொகமட் யூசுப்
24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)- எப்போதும் ரெஸ்ற் போட்டிகள்
25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? அத்தப்பத்து மற்றும் சனத் ஜெயசூரியா
26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? வசீம் ஜாபர் மற்றும் செவாக்
27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்? முரளிதரன், ஜக்ஸ் கலிஸ், சச்சின் மற்றும் றிக்கி பொன்ரிங்
28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)? முத்தையா முரளிதரன்
நான் அழைப்பது:
(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)
Labels:
கிறிக்கற்,
தொடர்பதிவு
Friday, February 5, 2010
2020 இல் ஜனாதிபதி நான்...
தமிழப்படம் பாடல்கள் கேட்டவர்களுக்கு (கேட்காம யாரும் இருப்பீர்களா என்ன?) அதில் வரும் 2011 நம்ம கையில, சட்டசபையில' எண்டு ஒரு வரி வரும்....
(முழுமையா விளங்கேல எனக்கு அந்த வரி)
அந்த வரியின் உள்குத்துகள் எல்லாம் இருக்கட்டும், ஆனால் அந்த வரி எனக்குப் பிடிச்சிருந்தது.
சரியெண்டு இண்டைக்கு நண்பனொருத்தனோட கதைச்சுக் கொண்டிருக்கும்போது ஏதோ கதையில உந்தப் பாட்ட வச்சு 2020 இல நான் ஜனாதிபதியாகிறன் எண்டன்...
சரி அத வச்சு ஒரு சுயதம்பட்ட, அறுவைப் பதிவு....
நாட்டின் பொருளாதாரம் கீழே போய்க் கொண்டிருப்பதால் அதைத் தடுத்து நிறுத்த இலங்கை ஜனாதிபதி திரு.சுகிந்த அரசபக்ஷ (2020 இல்) அவர்கள் அழைத்து என்னிடம் இதைத் தடுத்து நிறுத்துமாறு கேட்கிறார். ஆரம்பத்தில் அவரது சகோதரரான திரு.வாத்தபோயா அரசபக்ஷ இன் தலையீடு இருக்கலாம் என்று பயந்தாலும் நாட்டின் வேகமாக முன்னேறிவரும் பொருளாதார நிபுணரான நான் அதை ஏற்றுக் கொண்டு கடந்த காலங்களில் எவ்வளவோ முயற்சிகள் இருந்தும் நாட்டில் ஏன் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்று ஆராய்ந்து ஆரம்பப் பிரச்சினைகளை அடையாளம் காண்கிறேன்.
முதலில் எங்கள் உழைப்பாளர்கள் அனைவரையும் அழைத்து என்னை அறிமுகப்படுத்தி நாங்கள் ஒற்றுமையாக உழைக்க வேண்டி அவசியத்தை வலியுறுத்துகிறேன்.
கடந்த காலங்களில் இலங்கையின் ஜனாதிபதிகள் பலரும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்தபோதிலும் தீர்க்க முடியாமல் போனதைப் பற்றி நன்றாக ஆராய்கிறேன். எப்போது வெள்ளைக்காரன் நம்நாட்டை விட்டுப் போனானோ அப்போதே நாட்டில் ஒற்றுமை குறைந்து பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாயிற்று. 72 வருடப் பிரச்சினையான இதை எப்படியாவது தீர்க்கவேண்டும் என்பதில் முழு உறுதி காண்கிறேன்.
முதலில் நாட்டில் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுக்கும் ஆட்களை இனங்காண்கிறேன். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது அவர்களுக்கு நாட்டில் அளவான சம்பளம் கொடுக்காமல் விட்டதால் தங்களுக்கு சமசம்பளம் கொடுக்கும்வரை கிளர்ச்சியடைந்து பொருளாதாரத்தை முன்னேறவிடாமல் தாங்கள் சிறப்பான உற்பத்திகளை தனியாக உற்பத்திசெய்து தடுக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன்.
அவர்கள் உண்மையில் சிறுதொகையினர் என்பதால் அவர்களை இலகுவாக சமாளித்துவிடலாம் என்று எண்ணிலாம் அவர்கள் பலம்கொண்டவர்களாக இருந்தமையால் எங்கள் பொருளாதார முன்னேற்றங்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.
என்னதான் இருந்தாலும் அவர்களுக்கு சமசம்பளம் கொடுக்க விரும்பாததால் அவர்களின் தொழிற்சாலைகளை நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்க முடிவுசெய்தோம். சட்டத்தின்படி நாங்கள் இடிக்க முற்பட்டாலும் உண்மையில் சட்டத்தில் ஓட்டைகள் இருந்ததாலேயே அவர்களின் தொழிற்சாலைகளை அழிக்கும் உத்தரவைப் பெறமுடிந்தது.
ஆரம்பத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்களின் தொழிற்சாலைகளை அழிக்க ஆரம்பித்தோம்.
கடைசியில் நீதிமன்ற உத்தரவு தொழிற்சாலைகளை இடிக்க சொன்னதை காதில்போடாமல் உற்பத்திகளையும் அழிக்க ஆரம்பித்தோம்.
இதைச் செய்யுமாறு எனக்கு நிதி அமைச்சின் செயலாளர் திரு வாத்தபோயா அரசபக்ஷ உத்தரவு வழங்கினார்.
இவ்வாறு கடைசியில் சட்டரீதியற்று அந்தக் கிளர்ச்சியாளர்களை எங்கள் விருப்பு நாளான ஏப்ரல் முதலாம்திகதி அழித்து முடித்தோம்.
அதன் பின்னர்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
அந்தக் கிளர்ச்சி பொருளாதார நிபுணர்களை அழித்த கொண்டாட்ட நிகழ்வில் எனக்கு பாதி கேக் மட்டுமே தரப்பட்டது, ஆனால் ஜனாதிபதியும் அவரது குடும்பமும் 5, 6 கேக் களை பிதுக்கி பிதுக்கி உண்டார்கள். இதனால் கடுப்பான நான் அதை எதிர்க்க விரும்பியபோதிலும் அவர்களின் அதிகாரம் காரணமாக அடக்கி வாசித்தேன்.
குறிப்பு: இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்த பாகத்தில் மிகுதியைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்...

Tuesday, February 2, 2010
நீ காதலிக்கும் பொண்ணு............!
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படிவிடு...
அவள் உன்னிடம் திரும்பி வந்தால் அவள் உன்னுடையவள்...
அவள் வராவிட்டால் அவள் எப்போதும் உன்னுடையவளாக இருந்ததில்லை...
இது ஒரு பழைய பொன்மொழி.... இதை ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசமாக யோசிக்கிறார்கள் என்று பார்க்கலாம்...
புதிய வகைகள்...
உகமையர் (optimist) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தல் அவளை அவளெண்ணப்படி விடு,
கவலைப்படாதே, அவள் திரும்பி வருவாள்...
படுகையர் (pessimist) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடு,
அவள் எப்போதாவது திரும்ப வந்தால் அவள் உன்னுடையவள்,
அவள் வராவிட்டால், எதிர்பார்த்தது போலவே, அவள் உன்னுடையவள் அல்ல...
சந்தேகக்காரன் -

அவள் எப்போதாவது திரும்ப வந்தால் ஏன் வந்தாய் என்று கேள்...
பொறுமையற்றவன் -

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப வராவிட்டால் அவளை மறந்துவிடு.
பொறுமைக்காரன் -

அவள் மீண்டும் திரும்பி வராவிட்டால், அவள் வரும்வரை தொடர்ந்து காத்திரு...
விளையாட்டுத்தனமுள்ளவன் -

அவள் திரும்ப வந்தால், அப்போதும் நீ அவளைக் காதலித்துக் கொண்டிருந்தால், அவளை திரும்ப போக விடு.... றிப்பீற்றேய்.............
Blue-cross இல் வேலை செய்பவர் -

ஏனென்றால் உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தாங்கள் விரும்பியபடி சுதந்திரமாக உலாவ உரிமை கொண்டவை.
வழக்கறிஞர் -

ஏனென்றால் திருமணச் சட்டத்தின் 3ம் பிரிவின் 4ம் சரத்தின் கடைசிக்கு முதல் பந்தி அதைத் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
பில்கேட்ஸ் -

அவள் திரும்பி வந்தால் மீள சேர்ப்பதற்கான (re-installation) பணத்தை பெறலாம், அத்தோடு விரும்பினால் அவளை upgrade உம் செய்யலாம்.
தரவியலாளர் -

அவள் உன்னை விரும்பினால் அவள் திரும்ப வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
திரும்ப வாராவிட்டால் உனது உறவு பொருத்தமற்றது.
அதிக தன்னுடைமை வாதி (over possessive) -
நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படி விடாதே....
விஜயகாந் -

அப்படிப் போறவங்களில் திரும்பி வந்தது 4 கோடியே 38 லட்சத்து 490 பேரு, அதில 2 கோடியே 8 லட்சத்து 590 பேர் திரும்ப ஓடீற்றாங்க...
அப்பிடி ஓடிப்போன 2 கோடியே 8 லட்சத்து 590 பேரில 50 லட்சத்து 56 ஆயிரத்து 590 பேர் திரும்ப வந்தாங்க...
ஆகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளின்ர அச்சுறுத்தல் இல்லாதவரைக்கும் அவள சுதந்திரமா விடு....
ரஜினிகாந் -
கண்ணா! நீ ஒருத்தியக் காதலிச்சு அவள அவளெண்ணப்படி விடு, கண்ணா! அவள் திரும்ப வந்தா அவள் உனக்கு உனக்கு சொந்தமானவள்.
அவள் திரும்ப வராட்டி அவள் பொம்ம்ம்பிளையே இல்ல. ஏன்னா பொம்பிளைண்ணா அடக்கம் அடக்கம் வேணும்....
இதெப்பிடி இருக்கு.... ஹா ஹா ஹா.....!
கன்கொன் -

விட்டுவிட்டு தப்பியோடி நலமாக இரு. ;)
**********************************************************************************
என்னுடைய தளப்பெயரையும் எனது பயனர் பெயரையும் கன்கொன் || Kangon என்று இன்று முதல் மாற்றிக் கொள்கிறேன்.

இன்று முதல் எனது ஒவ்வொரு பதிவிலும் ஏதாவதொரு புகைப்படத்தை இணைக்கலாம் என்று பார்க்கிறேன்....
இன்றைய படம்....

Subscribe to:
Posts (Atom)