Tuesday, March 23, 2010

கடுப்பைக் கிளப்பும் மனிதர்கள்...

எல்லோரும் கடுப்பைக் கிளப்பும் பெண்கள் பகுதி எழுதும்போது நானேன் கடுப்பைக் கிளப்பும் மனிதர்கள் பற்றி எழுதக் கூடாது என்று யோசித்தேன்...
இது நாளாந்த வாழ்க்கையில் சாதாரண ஒருவனை கடுப்பேற்றும் மனித நடவடிக்கைகள் பற்றிய ஒரு பதிவு... :)

முதலில் நான் அதிகமாக கடுப்பாகுவது 2 இடத்தில்...
1. நடைபாதைகளில்
2. பேருந்துகளில்....

நடைபாதைகளில் இங்கு நடப்பது போன்ற கொடுமை எங்கும் கிடையாது.
பெயர் தான் நடைபாதை, மனுசர் நடக்க முடியாது.
முதலாவது நடைபாதைக் கடைகளின் தொல்லை தாங்க முடியாது, அவன் ஆகக்குறைஞ்சது கால்வாசிக்காவது விற்கிற பொருட்களை அடுக்கி வச்சிருப்பான், எங்கட சனம் அவனிற்ற சாமான் வாங்கிறதுக்கு கூட்டமா நிண்டு தான் வாங்கும். வாங்கிறது ஒரு 10 ரூபாச் சாமான் எண்டாலும் கூட்டமா அதில நிண்டுதான் எங்கட சனம் வாங்கும். சனம் நடைபாதையின் முக்கால்வாசி வரை ஆக்கிரமிச்சு பொருட்கள வாங்கும்.
மிகுதி இருக்கிற கால்வாசிப்பகுதிக்குள்ளால என்னப் போல ஆக்கள் தனியவே போறத கஷ்ரம், அதுக்குள்ள இரண்டு புறமுமிருந்து எதிரெதிதாக வர்ற சனம் போறதெண்டா எப்பிடி?

இது இப்பிடி எண்டா சனம் பண்ணுற அட்டூளியம் தாங்கேலாது.
ஏதாவது அவசரமெண்டு வேகமாப் போறதெண்டா நடைபாதையால போன கோவிந்தா தான்.
சனம் கூட்டம் கூட்டமாத் தான் போகும், அதுவும் நடை பழகிக் கொண்டுதான் போகும்.
உந்தச் சனம் நடக்கிற வேகத்தில மணித்தியாலத்துக்கு 1 கிலோமீற்றர் தான் நடந்து போகும், அந்தளவுக்கு தான் நடக்கும்.
நீ எந்தளவு வேகத்தில நடந்தா எனக்கென்ன, மற்றவனுக்கு வழியை விடுறது தானே. சனம் 3,4 எண்டு கூட்டமா உந்த வேகத்தில போனா மற்றவன் எப்பிடிப் போறதெண்டு சனம் யோசிக்கிறதுமில்ல, யோசிக்கப் போறதுமில்ல...
இன்னொரு கொடுமை சனம் குடைபிடிக்கிறது. குடை பிடிக்கிறதெண்டோண்ண எல்லாரும் காலிமுகத்திடல் பற்றி யோசிக்கப்படாது.
எங்கட சனம் வெள்ளையா இருக்கிறதப் பற்றி நிறைய கவனமெடுக்கிறது, அதால சனம் சின்ன வெயில் எண்டாலே குடை பிடிச்சுக் கொண்டுதான் நடக்கும், அங்கயும் 2,3 பேரா சோடியாத்தான் திரியும். அதுவும் மெதுவாத்தான் நடக்கும். பிடிச்சிருக்கிற குடை பின்னுக்கு வாறவன்ர கண்ணில குத்துமா முன்னுக்குப் போறவன்ர தலைல குத்துமா எண்டதப் பற்றி சனம் கவலைப்படாது.

இதச் சொல்லேக்க இண்டைக்கு நான் வகுப்பால திரும்பி வந்து கொண்டிருந்தன், 4 பேர் கையப் பிடிச்சுக் கொண்டு சமாந்தரமா நடந்து வந்திச்சுதுகள். எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. சனம் மற்றவன முட்டாள் எண்டு நினைக்குதோ அல்லது தாங்கள் தான் பெரியாள் எண்டு நினைக்கிறதோ தெரியாது, ஆனா எதிரில ஒருத்தன் வரும்போது 'நாங்கள் 4 பேர் இப்பிடி வாறமே என்னெண்டு போறது எதிரில வாறாக்கள்' எண்டு உங்களால புரிஞ்சு கொள்ள முடியாட்டி உண்மையா நீங்கள் நாகரிமடையேல, மற்றவனின்ர உரிமைகளை மதிக்கத் தெரியாத நீங்கள் நாகரிமடைந்த இனம் எண்டு சொல்லிக் கொள்ளாதயுங்கோ.

உங்களால மற்றவனின்ர உரிமைகளையும், உங்கள் நடவடிக்கைகள் இன்னொருவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதை புரிஞ்சு கொள்ள முடியாட்டி நீங்கள் உங்களை நாகரிகமடைந்தவர்களாக காட்டிக் கொள்ள நவநாகரிக ஜீன்ஸ்கள், புதிய புதிய வகை ஆடைகள், ஆபரணங்கள், விதவிதமான செருப்புகள் எல்லாம் போடுறது அந்த ஆடைகளுக்கு, ஆபரணங்களுக்கு, அணிகலன்களுக்கு அவமானம்...

இதில இரண்டாவது சனம் பேருந்துகளில பண்ணுறது பெருங்கொடுமை.
அதுவும் சனம் நெருக்கமாப் போற பேருந்துகளில எங்கட சனம் தங்கட இராஜதந்திரத்தை வடிவாகவே பாவிக்கும்.
பேருந்தில் நிற்கும்போது இரண்டு வரிசைகள் நிற்கும். ஒவ்வொன்றும் இருக்கைகளை நோக்கி நிற்கும்.
அதில் நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் உங்கள் பக்கத்திலிருப்பவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் சிறு இடைவெளி இருக்கிறது என்றால் சனம் வந்து முதலில அந்த இடைவெளியில கைய நீட்டி இடத்தைப் பிடிக்கும். பிறகு கொஞ்சங் கொஞ்சமா உங்களத் தள்ளித் தள்ளி அதுக்குள்ள புகுந்திடும், உண்மையா நிண்ட நீங்கள் இரண்டு வரிசைக்குள்ளும் நெருக்குப் படுவியள்.
அதுக்குள்ள நீங்கள் அந்தத் தள்ளீற்று வந்த சனத்த தெரியாம இடிச்சிற்றியள் எண்டா ஏதோ நீங்கள் கொலை செய்ய மாதிரி சனம் பாக்கும், இத்தனைக்கும் குறுக்கால வந்து புகுந்தது அவங்களாத் தான் இருக்கும்... :(
ஆனா பேருந்தில இதுக்காக சண்டை போட முடியாது, அதுவும் சனம் நிறைய நிக்கேக்க ஒழுங்கா நிக்கவே முடியாது, இதுக்குள்ள சண்டையா... ம்ஹ்ம்... :(

அடுத்தது சனம் இறங்கேக்க...
முக்கியமா சேலை கட்டின, வேட்டி கட்டின சனம் இதில முக்கியமானது...
சனம் பேருந்தை விட்டு இறங்கியிருக்கும், ஆனா சேலைத் தலைப்போ அல்லது வேட்டியோ இன்னும் பேருந்துப் படிகளில இருக்கும், அத மிதிக்க முடியாதெண்டு நாங்கள் இறங்கவும் ஏலாது, ஆனா எங்களுக்கு பின்னுக்கு நிக்கிறவன் நான் ஏதோ வேணுமெண்டு நிக்கிறமாதிரி தள்ளுவான்...

இத்தனையையும் தாண்டி ஒரு மனுசன் வகுப்புக்குப் போய் திரும்பி வந்தா அவன் எப்பிடி படிக்கிறது?
சீ என்ன அ, ஆ கூட படிக்கேலாது....

ஆகவே இத்தால் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சீ உம் புட்டுக் கொள்ள அதிக வாய்ப்புண்டு... :P

Tuesday, March 9, 2010

ஆனந்தாக்களும், பகவான்களும், பாபாக்களும்...

அண்மையில் வெளியான நித்தியானந்தாவின் வீடியோவால் ஏற்பட்ட சலசலப்புக்கள் சிறிது சிறிதாக அடங்கிவருகின்றன, வழமையைப் போலவே. இங்கு நான் நித்தியானந்தா அங்கு செய்தது என்ன, அவர் யோகா செய்தாரா இல்லை வேறேதும் செய்தாரா என்று எழுத விரும்பவில்லை.

முதலில் இந்த கடவுள்கள், சாமிகள் எல்லோரும் எவ்வாறு உருவாகிறார்கள் என்றால் நிச்சயமாக மக்களால் தான். மக்கள் தான் இவர்களை வளர்த்துவிடுகிறார்கள். தமிழர்கள் வழமையைப் போலவே இவ்வகையான கடவுள், சமயம், இனம், சாதி போன்ற சொற்களால் இலகுவாக கிளர்ச்சியடையச் செய்யப்படக்கூடியவர்கள். சிறுவயதில் பிள்ளையார் எங்கோ பால்குடிக்கிறார் என்றால் 10 கிலோமீற்றர் தள்ளி இருக்கும் மற்ற ஊரிலும் ஓர் பரபரப்பு பற்றி இந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதையும், அதைப்பற்றியே கதைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். கடவுள், சமயம் என்பன உண்மையில் மனிதர்களை வழிநடத்தத்தான் என்றால் குறிப்பிட்ட சிலர் அதைவைத்து மனிதர்களை பிழையாக வழிநடத்துகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆரம்பத்தில் பிள்ளையார் பால்குடிப்பதைப் பார்க்க பணம் அறவிட்டு பிறகு சிறிய கொட்டிலில் சிறிய கோவில் ஒன்றை உருவாக்கி அங்கு உண்டியல் வைத்து கடவுளின் பெயரால் கெளரவப் பிச்சை எடுக்கத் தொடங்கி பிறகு பெரிய கோவில் ‘உரிமையாளர்’ ஆகுவதிலோ அல்லது சாமியாராகி சிறிய மரத்தடியில் இருந்து குறி சொல்ல அல்லது மெளனம் காத்து மெளன சாமியாராக இருந்து பின்னர் சிறிய ஆசிரமம் அமைத்து அதன்மூலம் 4 பேரை சீடர்களாக வைத்துக்கொண்டு அரசியல் பின்புலங்கள், பிரபலங்களின் ஆதரவுகளைப் பெற்று ஒரு பெரிய சாமியாராக மாறி பிறகு ‘I’m an avatar’ என்று சொல்லும் வரை ஏமாற்று தொடர்கிறது.

இவர்களின் முக்கிய நோக்கம் என்பது எப்போதும் பணமும், புகழும் நோக்கியே இருந்திருக்கிறது. என்னைப் பார்க்கப் பணம், கதைக்கப் பணம், என் ஆசியுரையைக் கேட்கப் பணம் என்று இவர்களின் அழிச்சாட்டியம் தொடர்கிறது. ஆனால் மறுபுறத்தில் பார்த்தால் காசு வாங்காமல் ஒரு சாமியார் ஆசி வழங்குவார் என்றால் உந்தப் பக்தர்கள் அவரை நோக்கிப் போவது குறைவாகத்தான் இருக்கும். மக்களின் மனநிலை அப்படி. இலவசப் பொருட்களைப் பொறுப்போடு பயன்படுத்துவது எம்மவர்களுக்குத் தெரியாத ஒன்று.
பாடசாலைக் கல்வியை பெரிதாக எடுக்காமல் இலவச படிப்பை கணக்கிலெடுக்காமல் பாடசாலைக்கு ஒழுங்காமற் செல்லாமல் பணம் கட்டி தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று அங்கு ஒழுங்காகச் சென்று படிப்பதில் தொடங்கி இந்த இலவசச் சாமியார்கள் வரை எம்மவர்களின் பணக்கொழுப்புத் தொடர்கிறது. (இங்கு இலவசச் சாமியார்கள் நல்லவர்கள், உண்மையானவர்கள் என்ற கருத்தை நான் சொல்லவரவில்லை.)
ஆகவே சாமியார்களுக்கும் பணம் வாங்குதல் என்பது கிட்டத்தட்ட கெளரவப் பிரச்சினையாக மாறிவிடுகிறது.

சரி, பணம் வாங்குவது தான் இவர்களால் சமூகத்திற்கு இழைக்கப்படும் பிழையா என்றால் இல்லை, பணம் என்பது கடைநிலையாகவே மாறிவிட்டது. பணத்தைவிட இவர்கள் சாமியார்கள் என்ற போர்வையில் நிகழ்த்துக்கும் அநியாயங்களும், மோசடிகளும் தான் முக்கியமானவை. இந்தச் சாமியார் என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட கொலைகளும், வன்புணர்வுகளும், தாக்குதல்களும் ஏராளம் ஏராளம். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி ஒரு சுயபுத்தியற்ற, சுயமாகச் சிந்திக்கவியலாத சமூகமொன்றை இவர்கள் உருவாக்கிவருகிறார்கள்.
காய்ச்சல் வந்தால் வைத்தியரிடம் போகவேண்டும் என்ற சாதாரண விடயத்தை மறக்கவைத்து பகவான கும்பிடு, பாபாற்ற கும்பிட்டா எல்லாம் சரியாகீடும் என்ற சுயபுத்தியற்ற அல்லது சுயமாக சிந்திக்கவியலாத சமூகமொன்று எங்களுக்குப் பின்னால், எங்களோடு உருவாகிவருகிறது. இப்படி மக்களை ஒரு அடிமைகள் போல, போதைகளுக்கு அடிமையானவர்கள் போல மாற்றும் இந்த திருடர்களிடமிருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டியது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் கடமை. பொதுவாக நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் சுயநலம் பொதிந்திருக்கும். இப்படி இவர்களை ஒழிப்பதிலும் சுயநலம் உண்டு. நீங்கள் இவர்களை ஒழிக்காவிடில் நாளை இவர்கள் உங்கள் குடும்பத்தில், உங்கள் வரவேற்பறையில் சிரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்து விடுவார்கள். வந்தார்களென்றால் இவர்களைத் துரத்துவது மிகக் கடினம்.

ஆனால் இந்தப் பக்தர்களையும் குறை சொல்வதற்கில்லை. எல்லாமே அவர்கள் என்று மாறிய பின் அவர்களை ஒரு வீடியோவையோ ஒரு செய்தியையோ வைத்து மாற்றுவது அந்தளவுக்கு இலகுவானதில்லை. உதாரணத்திற்கு எனக்கு பொன்ரிங்கைப் பிடிக்கும் என்றால் பொன்ரிங்கை அவ்வளவு இலகுவில் வெறுக்கச் செய்ய முடியாது. அதேபோல் சச்சினை பிடிப்பவர்களிடமிருந்து சச்சினை அவர்களின் விருப்ப வட்டத்திலிருந்து அகற்றுவதற்கு ஒரு செய்தி போதாது என்று நம்புகிறேன்.
ஆகவே இங்கு முதலில் செய்யக்கூடிய தடுப்பு நடவடிக்கை மேலும் பக்தர்கள் அவர்களுக்கு உருவாவதைத் தடுப்பது தான். புதியவர்கள் ஒருவரும் இவர்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான். புதியவர்கள் சேராமல் முழுமையாகத் தடுத்த பின்னே இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அந்தப் பக்தகோடிகளை ஒரு தனிமை அல்லது நாங்கள் பிழையான இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை அவர்களிடம் விதைத்து அவர்களாகவே வெறுக்கச் செய்வது தான் சாத்தியமானது. நீங்கள் ரஞ்சிதா இருக்கும் வீடியோவென்ன, ரகசுதா இருக்கும் வீடியோவென்ன எதைக் கொடுத்தாலும் ‘நான் இன்னும் அவரை நம்புகிறேன்’ என்று தான் சொல்லப் போகிறார்கள்.
இவை எல்லாவற்றையும் என் கணணிக்கு முன்னாலிருந்து நான் 5 பதிவெழுதிப் போடுவதாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. பதிவுலகம் சாதாரண வாழ்க்கையடன் இன்னும் இணையவில்லை என்பதை முழுமையாக நம்புபவன் நான்.
எனக்குத் தெரிந்தவரை சாமியார்களையும், இந்த கடவுளர்களை உருவாக்குவதில் அல்லது வளர்த்துவிடுவதில் ஊடகங்களுக்குப் பாரிய பங்குண்டு. எல்லா ஊடகங்களும் என்று பொதுப்படையாகக் கூறமுடியாவிட்டாலும் பொதுவாக ஊடகங்கள் பலவற்றிற்கு இவர்களை வளர்த்துவிட்ட, வளர்த்துவிடும் பங்கு, பாவம் உண்டு.
இவ்வளவு காலமும் வளர்த்து பிழையான சமூகத்தை உருவாக்குவதில் துணைபுரிந்த ஊடகங்கள் இனியாவது மக்களுக்காகச் செயற்படத் தொடங்கவேண்டும்.
அம்மா பகவானுக்கு பிறந்தநாள் என்றால் முழுப்பக்கத்தில் ஆக்கங்களை வெளியிடும் பத்திரிகைகள் அரைப்பக்கத்திலாவது அவர்களை எதிர்த்து ஆக்கங்களை வெளியிட வேண்டும். எப்படி போதைப் பொருட்களினதும், சட்ட ரீதியற்ற பொருட்களின் விளம்பரங்களை ஏற்பதில்லையோ அதைப் போல இவர்களையும் அந்தப் பிரிவிற் சேர்த்து இவர்களின் விளம்பரங்களையும் ஏற்காமல் விடுங்கள்.
கல்கி பகவானினதும், நித்தியானந்தாவினதும் ஆசிரமங்களை உடைக்க, தாக்க ஒரு தொகுதியினருக்கு வந்த தைரியத்தை நாம் மற்றவர்களும் உணரவேண்டும். தமிழப்படங்களில் சொல்வது போல ஒருத்தர் செய்தால் தண்டனை, 100 பேர் செய்யதால் அது கலவரம்.
அவ்வாறு இல்லையெனில் ‘ஆசிரமத்தை அகற்றும்வரை நாங்கள் மறியல் செய்வோம்’ என்று தொடங்கியிருக்கும் அந்த முறையையாவது தொடங்கலாம்.

இல்லாவிடில் இன்னும் சில மாதங்களில் நித்தியானந்தா சிரித்த படி ‘கதவை மூடு, அசுத்தக் காற்று உள்ளே வரப் போகிறது’ என்றோ ‘என்னுடைய மகன் தான் பணம் வாங்கினான், அது எனக்குத் தெரியாது, ஆனால் நான் கடவுள் - எனக்கு உலகம் முழுதும் என்ன நடக்கிறது என்று தெரியும்’ என்று சொல்லிக்கொண்டு கல்கி பகவானே வரத்தான் போகிறார்கள்.
நாமும் இன்னொரு பதிவை எழுதிவிட்டு சும்மா இருக்கத்தான் போகிறோம்.

Wednesday, March 3, 2010

சாமியார்களுக்கு கிரகநிலை சரியில்லை....

நித்தியானந்தா பற்றி சன் செய்தியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதும் எம்மவர்கள் விழித்துக் கொண்டார்கள்.



நித்தியானந்தாவைக் கிழித்து நம்மவர்கள் நிறையப் பேர் பதிவு போட்டுவிட்டதால் அரைத்த மாவை நான் அரைக்க விரும்பவில்லை.

ஆனால் இந்தச் செய்தி கிடைத்த பின்னர் ருவிற்றரில் எனக்குத் தெரிந்தவர்களால் பரிமாறப்பட்ட சில சுவாரசியமான ருவீற்றுகளை பகிரலாம் என்று நினைக்கிறேன்.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும்.
இந்த சாமியார்களுக்கு ஒரே ஒரு தீர்வு தான்.
மக்கள் திருந்தினானொழிய இந்தப் பிரச்சினைகள், ஏமாற்றுக்கள் இல்லாமல் போக வாய்ப்புக்கள் இல்லை.

இனி நம்மவர்கள்....

@thennarasu: நித்தியானந்தர் பேர கேட்டா ட்விட்டரே சும்மா அதிருதுல்ல :-)

@agiilan: அடப்பாவி கதவைத்திற திறன்னானே இதுக்குத்தானா?

@cowboymathu  http://bit.ly/abdNWC #Nithyananda video டவுண்லோடு பண்ணி வச்சிருக்கிறம்.வரலாறு முக்கியம் தலைவரே

@yoghs007  சுவாமி நித்தியானந்தா புகழ் பார்த்து களைப்படைந்து விட்டேன், தூங்க வேண்டும்

@dynobuoy நித்யாவின் அனுபவமின்மை தெளிவாய் தெரிகிறது! தேவ்நாத்ஜியிடம் ட்யூசன் படிக்ககூட லாயக்கில்லாதவர்! http://is.gd/9xNgU

@svpriyan நேரான பிகர் எல்லாம் கோவில் போக ரணகளமான aantikal எல்லாம் மடம் போவினமாம்

@mu75 What a timing to release that video. Sun network knows how to market everything :) Midnight masalavukku pathila :-)

@mu75 shocked to see even google suggests 'swami nithyananda scandal' as soon as u type 'SWAM..' swami Vivekaananda name comes behind that. :))

@kanapraba சாமி! மத்தவங்க வீட்டுக் கதவைத் திறன்னு சொன்னதுமல்லாம உங்க வீட்டுக்கதவையும் திறந்து வச்சிட்டீங்க, வீடியோக்காரன் நுழைஞ்சுட்டான்

@aayilyan இனிய காலை வணக்கம் நித்யம் ஆனந்தம் பெருகட்டும் :)

@kangon கதவைத் திறந்து வை, வீடியோக்காரன் உள்ளே வரட்டும்.... ஹி ஹி.... சொந்த முயற்சி... http://bit.ly/9fzM8X #Nithyananda

@kangon கதவைத் திறந்து வையுங்கள்.... வீடியோக்காரன் உள்ளே வரட்டும்... அடியேன் நித்தியானந்தா....

@kanapraba கதவை இழுத்து மூடு காத்துக்கருப்பு அண்டாது

@kanapraba நித்தியானந்த செய்திகள் வரும்போது அடுத்தது எந்த சாமியார் என்ற எதிர்பார்ப்பே ஒரு த்ரில் அனுபவமாக இருக்கு

@gkarthy இந்த வருஷம் சாரு வெளியிட போற புக் லிஸ்ட்ல ஒன்னு குறையும். அதான் "நித்யா சுவாமியின் மகிமை" புக் கேன்சல் ஆகிடுச்சே.. ;-)

@nkashokbharan பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற படிமுறை ஒழுங்கு மீறப்படுமிடத்து முறைமைகளும் தவறிப்போகும்.

@kanapraba அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஆன்மீகம் பிழைத்தோர்க்கு வீடியோ கூற்றாகும்

@nkashokbharan இந்து மதத்தின் சாபக்கேடு இந்த முறையற்ற சாமியார்கள். மதத்தின் பெயரை விற்று வாழ்ந்துவரும் ஈனர்கள் இவர்கள்

@mu75 எங்கப்பா நம்ம நாட்டாமை, சின்னக் கலைவாணர், சூர்யா etc ? எல்லாம் லைன்ல வந்து நின்னுங்க :) இதுல யாரெல்லாம் ரஞ்சிதாவிற்கு ஆதரவு? :-)

@mu75 தெக்கத்தி பொண்ணுங்களுக்கு எதுக்குய்யா இவ்வளவு சோதனை ? நேற்று புவனேஸ்வரி, இன்று ரஞ்சிதா, நாளை யாரோ?

@nkashokbharan @kangon இனி யாராவது அக்கா மாலை, ஐயா மாலை எண்டு மக்களை ஏமாற்ற வெளிக்கிட்டால் முதலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

@mu75 சரி, இத்தனை நடந்தும் அந்த ஆளு கைது ஆகலையா?மன்னிப்பு கேட்டுவிட்டார்களா?கலைஞர் முக வும் மன்னித்து விட்டாரா என்ன?:) ஜெயராம் மாதிரி

@mu75 என்ன ஒரு பணிவு, பணிவிடை அம்மணியிடமிருந்து. இந்தக் காலத்தில் மனைவி கூட இப்படி பார்த்துக்கொள்ள மாட்டாள் :) (ஹ்ம்ம் பெருமூச்சு) :))

@mu75 இதுல கூத்து என்னான்னா, சும்மா தூங்குறவனை பால் கொடுத்து, மாத்திரை கொடுத்து, கால் அமுக்கி, shame shame பண்ணி உசுப்பிவிடுறதே அம்மணிதான்
ஆனா அவளோட மூஞ்ச மறைச்சுட்டு போடுறான் SUNTV :) கலிகாலம்டா சாமி :( இதுல மட்டும் ஏன் சமத்துவம் இல்ல? #டவுட்டு

@mu75 யாருய்யா இதுக்கு ஒளிப்பதிவாளர், அரங்க அமைப்பாளர்? இவ்வளவு பக்காவா எல்லாம் வேலை செஞ்சு இருக்காங்க. என்ன ஒரு ஒளி அமைப்பு, தெள்ளத் தெளிவா:)

@SivaDayalan லேட்டஸ் மேட்டரில் வி.தா. வ கூட அமுங்கிவிடும் போல இருக்கே...?

@Aathirai85 இரவு 12.00 மணி சுமாருக்கு சாருவின் தளத்தில் போஸ் கொடுத்த நித்தியானந்தா மாயமாக மறைந்து போனார் http://bit.ly/a1vKLa

@kanapraba கமராவும் டிவியில் இல்லாத காலத்தில் எத்தனை கம்முனாட்டி சாமிகள் லீலை செய்து பின் யாருக்கும் அந்தரங்கம் தெரியாமல் கிழமாகி மாண்டிருக்கும்?

@aayilyan இறைவா யூடுயுப் வீடியோக்களை நீ டெலிட்டிடு பக்தர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் -நித்ய ஆனந்தம் :)


********************************************************************************

இதே வேளை,
கல்கி பகவான், அம்மா பகவான் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களைப் பற்றி தெலுங்கிலுள்ள TV9 என்று அலைவரிசை சில காணொளிகளை வெளியிட்டிருக்கிறது.
இவற்றைப் பார்த்தாவது இவர்களின் பக்தர்கள் உண்மைகளைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக...


இது தான் அந்த செய்திக் குறிப்பு...
மொத்தமாக 6 பகுதிகள் என்பதால் அவற்றை இங்கேயே பகிர்வது சாத்தியமில்லை என்பதால் சுட்டிகளை மட்டும் தருகிறேன்.

பகுதி 1: http://www.youtube.com/watch?v=jQ6QmiZoZh0&feature=related

பகுதி 2: http://www.youtube.com/watch?v=xkioGVPHzaY&feature=related

பகுதி 3: http://www.youtube.com/watch?v=cTuOiLXgJ8M&feature=channel

பகுதி 4: http://www.youtube.com/watch?v=DJJnOOJvVWg

பகுதி 5: http://www.youtube.com/watch?v=nafGsMihOpY&feature=related

பகுதி 6: http://www.youtube.com/watch?v=n1Poqf0DEMs&feature=channel

இப்படி சாமியார்கள் எல்லாம் மாட்டுப்பட்டால் என்னவாவது?
கடவுள்களுக்கும்,  சாமியார்களுக்கும் கிரகநிலை சரியில்லைப் போலும்.
ஆனால் அதை நிவர்த்தி செய்யத்தான் அவர்களுக்கு மேலானவர்கள் யாரும் இல்லைப் போலிருக்கிறது... :P