Tuesday, April 20, 2010

மோடி அப்படி என்னதான் செய்தார்?

இப்போது ஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விவகாரம் லலித் மோடி ஊழல் (அல்லது ஏதோ சூதாட்டம்) செய்தமை தொடர்பான செய்திகள் தான்.
இன்று தினமலர் பார்த்தேன் (சென்னைப் பதிப்பு), முதற்பக்கத்தில் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது என்ற செய்திக்குரிய இடத்தைத் தவிர்த்து முதற்பக்கம் முழுதும் விளம்பரம் தவிர ஐபிஎல் விவகாரம் பற்றிய 2 செய்திகள் இருந்தன.
மோடிக்கெதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் என நான் ஊடகங்கள் மூலம் அறிவது ஊழல், வருமானவரிப் பிரச்சினைகள், கறுப்புப்பண முதலீடு, சூதாட்டம் அப்படி இப்படி என்று.

இது தொடர்பாக பதிவு போடாவிட்டால் என்னை பதிவராக மதிக்கமாட்டார்கள் என்பதால் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறேன்.

நான் ஒரு பெரும் ஜனநாய்க மன்னிக்கவும் ஜனநாயகவாதி என்பதைக் கருத்தில் கொண்டு இயலுமானவரை முழுமையாக வாசிக்கவும். ;)

ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட்டனவா?
ஒரு செய்தி உறுதிப்படுத்தப்பட முன்னர் அவை உறுதிப்படுத்தப்பட்ட மாதிரியன செய்திகளை எவ்வாறு வெளியிடலாம்?
They should talk about facts and truths, they shouldn't speculate anything. ;)
(ஆங்கிலப் பாவனைக்கு மன்னிக்கவும்)
முழுமையாக உறுதிப்படுத்தப்படாத ஒர செய்தியை ஊடக தர்மம் எதுவுமின்றி அதைப்பற்றி 'பிரக்ஞை' எதுவுமின்றி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு மோடி என்ற தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்? :D

ஏன் மோடி என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்கிறீர்கள்? (யாரது மக்களை ஏமாற்றுவது தனிப்பட்ட விடயமா எண்டு கேக்கிறது? நான் 5,6 பதிவு வாசிச்சன் நித்தியானந்தா விசயத்தில. அவங்க அப்பிடித்தான் சொன்னாங்க. கேள்வி கேட்கப்படாது. :P )
மோடி உங்களுக்கு ஐ.பி.எல் என்றொரு அருமையான அம்சத்தைத் தரவில்லையா?
உங்கள் வீட்டு வரவேற்பறைகளுக்குள் ஐ.பி.எல் வந்து ஆக்கிரமிக்கவில்லையா?

இப்படியான செய்திகள் வந்தவுடன் மோடி எதிர்ப்பாளர்களுக்குப் பெரிய கொண்டாட்டம். மோடியைப் போட்டுத்தாக்கி ருவிற்றரில், அப்பப்பா!, எத்தனை ருவீற்கள்? பேஸ்புக்கில் நக்கல்கள், இணையத்தளங்களில் எத்தனை செய்திகள்.
மோடியை விமர்சனம் செய்யுமளவிற்கு நீங்களெல்லாம் திறமானவர்களா? நீங்கள் உத்தமர்களா?

நான் மோடிக்கு எதிர்பும் இல்லை ஆதரவும் இல்லை.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே மோடியை நம்பவில்லை.
ஆனால் அதற்காக மோடி செய்த நல்லவைகள் இல்லையென்று ஆகிவிடுமா?

நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்களேன்?
நீங்கள் இதுவரை ஏமாந்ததே இல்லையா?
ஏன் இதை மட்டும் இவ்வளவுக்கு எதிர்க்கிறீர்கள்?
பிரபலங்களை எதிர்ப்பதன் மூலம் பிரபலமாக முற்படாதீர்கள்.

எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நீங்களும் எதிர்க்காதீர்கள். கிட்னியைப் பயன்படுத்தவும்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்.......


முக்கிய குறிப்பு: இது நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்ட சீரியஸ் இடுகைகளைப் போல இருப்பின் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. :D

முக்கிய குறிப்பு 2: இதை எழுதியது கன்கொன்/கோபி/கனககோபி என்று நினைத்தால் நினைத்துக் கொள்ளவும். :P

முக்கிய குறிப்பு 3: நான் மோடிக்கு உண்மையாகவே ஆதரவு தெரிவிக்கிறேன் என்று நினைத்தால் வைத்தியரை நாடவும். :)