நாங்கள் சில விடயங்கள கணக்கெடுக்காம விட்டுப் பழகின ஆக்கள்.
ஆனா இந்த ஆசியத் தொடரை கணக்கெடுக்காமல் விடப் போகிறோமா என்பது தெரியவில்லை.
உலகக்கிண்ண கால்பந்து சுற்றுத் தொடர் உலகம் முழுவதும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்க அண்மைக்காலமாக அதிகரித்துவிட்ட சுற்றுத் தொடர்கள் நடுவே இன்னொரு தொடராக இந்த ஆசியக் கிண்ண கிறிக்கற் தொடர் இலங்கையில் நடைபெறப் போகிறது.
அதுவும் தம்புள்ளை மைதானத்தில் மட்டும் இடம்பெறுகிறது, இரவு பகல் ஆட்டங்களாக.
இம்முறை ஆசியக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தானோடு பங்களாதேஷும் விளையாடுகிறது.
எல்லா அணிகளும் மற்றைய அணிகளோடு தலா ஒருமுறை விளையாடி பின்னர் அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் சந்திக்கப் போகின்றன..
15ம் திகதி ஆரம்பித்து 24ம் திகதி முடிவடைகிறது தொடர்.
அணிகளைப் பற்றிப் பார்க்க முதல் மைதானத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
தம்புள்ள மைதானத்தில் கடைசியாக பகலிரவுப் போட்டியொன்று இடம்பெற்றது 2007ம் ஆண்டு ஒக்ரோபர் 7ம் திகதியன்று.
இதுவரை மொத்தம் 13 பகலிரவு 50 பந்துப்பரிமாற்றப் போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.
6 போட்டிகள் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அணியால் வெல்லப்பட்டிருக்கின்றன, 7 போட்டிகள் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியால் வெல்லப்பட்டிருக்கின்றன.
ஆகவே நாணயச் சுழற்றி பெரியளவிற்கு தாக்கம் செலுத்தாது என்று நம்பலாம்.
தம்புள்ள மைதானத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில் ஜெயவர்தனவும், சங்கக்காரவும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் டில்ஷான் 6ம் இடத்தில் உள்ளார்.
8ம் இடத்தில் மலிக், 9ம் இடத்தில் தரங்க மற்றும் 11ம் இடத்தில் டோணி ஆகியோர் உள்ளனர்.
அதிக விக்கற்றுக்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முரளி 1ம் இடத்திலும், மஹரூவ் இரண்டாவதாகவும், டில்ஷான் 5 ஆவதாகவும், துஷார 7 ஆவதாகவும், சமி, குலசேகர என்று வரிசை தொடர்கிறது.
அணிகளில் முக்கியம் பெறக்கூடிய வீரர்கள் என்று பார்த்தால்,
பாகிஸ்தானில் வழமையைப் போல அப்ரிடி முக்கியம் பெறலாம், ஆனால் அப்ரிடி எந்தளவுக்கு form இல் இருக்கிறார் என்பது சொல்ல முடியாத அளவில் இருக்கிறது.
மெதுவான ஆடுகளத்தில் அப்ரிடியால் பொறுமையாக ஆடமுடியா என்பது சந்தேகமே.
எனினும் உமர் அக்மல், பட் போன்றவர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் வாய்ப்புண்டு.
ஆனால் பாகிஸ்தான் கிறிக்கற்றில் என்ன நடக்கும், நடக்கிறது என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது.
சொய்ப் அக்தர் வேறு அணிக்குத் திரும்புகிறார், அணியில் புத்துணர்ச்சி ஏதும் கிடைத்து சிறப்பாக ஆடுகிறார்களா பார்ப்போம்.
பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பாலின் form பெரிய பலம்.
தமிம் இக்பால் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் அவர்களது ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்களால் வெற்றிகளைப் பெறமுடியும்.
கடந்த இங்கிலாந்துடனான ரெஸ்ற் தொடரில் ஷகிப் அல் ஹசன் பெரிதாக துடுப்பில் பிரகாசிக்காதது அணிக்கு பின்னடைவு.
அஷ்ரபுல்லிற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகவும் இந்தத் தொடர் அமையலாம்.
ஆகவே அஷ்ரபுல் என்ன செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.
இந்திய அணி விமர்சனங்களை துடைத்தெறிய பயன்படுத்தக்கூடிய தொடர்.
சச்சின் இல்லாமல் அணி இலங்கை வருகிறது.
ஹர்பஜன் சிங் இன் சுழற்பந்து வீச்சு முக்கியமானதாக அமையலாம்.
அத்தோடு சுரேஸ் ரெய்னா, விராத் கோலி போன்ற இளையவர்களும் சாதிக்க வாய்ப்புண்டு.
இலங்கை அணி சனத் ஜெயசூரியவையும், அஜந்த மென்டிஸ் ஐயும் கழற்றிவிட்டிருக்கிறது.
டில்ஷானின் சரியான நேரத்தில் கிடைத்த form, மஹேல உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் ஆரம்பப் போட்டிகளில் காட்டிய திறமை, சங்கக்கார போன்றவர்கள் முக்கியமானதாக அமையலாம்.
அத்தோடு நீண்ட காலத்திற்குப் பிறகு 50 பந்துப் பரிமாற்றப் போட்டியொன்றை விளையாட ஹேரத்திற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்றும், அப்படிக் கிடைத்தால் என்ன செய்கிறார் என்பதும் சுவாரசியமாக இருக்கும்.
மொத்தத்தில் 4 அணிகளும் ஏதோ ஒரு வகையில் பரீட்சார்த்தத்தில் ஈடுபடுகின்றன, அத்தோடு உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து அணித் தெரிவுகளில் வெட்டுக்கள் செய்ய, இணைப்புக்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றன.
பெரியளவுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாத தொடராக இருந்த போதிலும், உலகக்கிண்ண (கிறிக்கற் உலகக் கிண்ணம்) தயார்படுத்தல்களுக்கு அணிகள் பயன்படுத்தக் கூடிய தொடராக அமையப் போகிறது.
எந்த அணி வெல்லும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற வரிசையில் வெற்றிவாய்ப்புக்களை நான் வழங்குகிறேன்.
இந்தத் தொடரை கணக்கெடுக்கப் போகிறோமா இல்லை கால்பந்தைப் பார்த்து கணக்கெடுக்கவே மாட்டம் இந்தத் தொடரை என்று சொல்லப் போகிறோமா?
கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?
ஆம் என்கிறேன் நான்....
நல்ல தொடரை எதிர்பார்க்கிறேன்... :)
************************************************************************
திரையுலகிற்கு பதிவர்கள் வழங்கும் விருதுகள் என்ற பெயரில் உங்கள் விருப்புக்குரிய நட்சத்திரங்களைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பொன்றை நண்பர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
எதிர்வரும் வெள்ளிக்கிமை இரவோடு வாக்களிப்பு நிறைவுபெற இருப்பதால் இதுவரை வாக்களிக்காத நண்பர்கள் விரும்பின் இங்கே சென்று உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்....
Monday, June 14, 2010
கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?
Labels:
ஆசியக் கிண்ணம்,
கிறிக்கற்,
தொடர்
Saturday, June 5, 2010
இரசிகன் வாழ்த்துகிறான்...
எனக்குத் தெரிந்து நான் பிரபலங்கள் பின்னால் அலைந்தது என்று பெரிதாக இல்லை. சில துறைகளில் பிரகாசிப்பவர்களை அவர்களின் துறைகளைத் திறமைகளை இரசித்திருக்கிறேன், ஆனால் ஒரு சிலர் அதையும் தாண்டி ஏதோ ஒரு விதத்தில் என்னைத் தங்களின் இரசிகனாக மாற்றிக் கொள்கிறார்கள்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாங்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மென்பந்து விளையாடும் போது வழமையாக 7 மணிக்கு முடிக்கப்படும் விளையாட்டு சனிக்கிழமைகளில் மட்டும் 5.45 அல்லது 6 மணிக்கு முடிக்கடும். வழமையாக விளையாடி முடிந்த பின்னர் அலட்டும் செயற்பாடும் சனிக்கிழமைகளில் நடைபெறாது.
விளையாடி முடிந்தபின்னர் அனைவரும் நேரே வீட்டுக்குச் செல்வோம்.
அன்றைய காலகட்டத்தில் அட்டகாசம் மட்டுமே எங்கள் விளையாட்டுச் செய்திகளின் ஆதாரமாக இருந்தது. (பத்திரிகைகள் விளையாட்டுச் செய்திகளுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை )
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தனியார் கல்விநிலையங்களிலோ அல்லது மாலை விளையாட்டு மைதானங்களிலோ எங்களது முக்கிய பேசுபொருள் 'நேற்று அட்டகாசத்தில் லோஷன் அண்ணா என்ன கதைத்தார்' என்பதாகவே இருக்கும்.
ஆம்...
லோஷன் அண்ணா அந்தக் காலகட்டத்தில் எங்கள் கதாநாயகன்.
எங்களின் கிறிக்கற் செய்திகளின் ஆதாரம் அவரே.
எனக்குத் தெரிந்து நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது, அதாவது என்னுடைய வானொலிகள் கேட்கும் பழக்கம் ஆரம்பித்தபோது (ஆம். சிறிது பிந்தியே என் ஆர்வம் தொடங்கியது) நான் கேட்டது இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் தான்.
ஒன்று சூரியராகங்கள், மற்றையது அட்டகாசம்.
(இப்போதும் பொதுவாகவே இரண்டு தான். விடியல் மற்றும் அவதாரம் )
எனக்கு சில சமயங்களில் சந்தேகம் வந்ததுண்டு, அந்த நிகழ்ச்சிகள் பிடித்ததால் லோஷன் அண்ணாவைப் பிடித்ததா அல்லது லோஷன் அண்ணாவைப் பிடித்ததால் அந்த நிகழ்ச்சிகள் பிடித்ததா என்று.
அனேகமாக நான் விடைதேட முற்படுவதில்லை என்றாலும் இரண்டாவது தான் சரியென்று நம்புகிறேன் இப்போது.
உண்மையில் தென்னிந்திய நட்சத்திரங்களை எப்போது பலர் பெருமையாகப் பின்பற்றுகிறார்களோ அப்படி சில வேளைகளில் உணர்ந்ததுண்டு.
முதன்முறையாக லோஷன் அண்ணாவின் உருவத்தைக் கண்டது கண்டியில் இடம்பெற்ற சாகித்திய விழாவொன்றில் என்று நினைக்கிறேன்.
அங்கு அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்துக் கொண்டிருந்ததை சனல் ஐ இல் (இப்போது நேத்ரா) செய்தியறிக்கையில் காட்டினார்கள்.
அந்தக் குரல் எங்கோ கேட்டமாதிரி இருந்ததே என்று பின்னர் உணர்ந்து கொண்டேன்.
அன்று நண்பர்கள் பலருக்கு அழைப்பெடுத்து அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டது வேறுகதை.
முதன்முதலில் நேரடியாக அவரைக் கண்டது முதலாவது பதிவர் சந்திப்பில் தான்.
அது தொடர்பாக நான் பெரிதாகப் பதிவிடவில்லை என்றாலும் இட்ட குட்டிப் பதிவில் சொன்னது இதுதான்.
" லோஷன் அண்ணாவிற்குப் பக்கத்து கதிரை வெறுமையாக இருக்க அவர் அதிலே அமரலாம் என சைகை செய்தார்.
(லோஷன் அண்ணாவ எனக்குத் தெரியும் எண்டெல்லாம் தப்புக் கணக்குப் போடக் கூடாது. இந்......தாப் பெரிய உருவம் எழும்பி நிண்டா மற்றவங்களுக்கு மறைக்கும் தானே? அதுக்கு தான் இருக்கச் சொன்னார்.) "
அதன்பின்னர் இருக்கிறம் சந்திப்பு, அப்போது தான் நேரடியாக முதன்முதலில் கதைத்தேன் என்று நம்புகிறேன்.
பின்னர் இரண்டாவது சந்திப்புக்கு முன்னர் நடந்த கலந்துரையாடல்கள், இரண்டாவது சந்திப்பு என்று நிறைய முறை சந்தித்திருக்கிறேன்.
அத்தோடு முதன்முதலில் chat மூலம் கதைத்ததை starred ஆக சேமித்து வைத்திருப்பதும் ஒரு உண்மை. ;)
இன்று மின்னஞ்சல்களில் இடக்கிடை (:P) கதைத்துக் கொண்டாலும், இதுவரை அவரோடு ஒரு புகைப்படம் நின்று எடுக்க வேண்டும் என்று திட்டங்கள் போட்டு பல உடைந்து போன வரலாறு உண்டு.
இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்திருந்தாலும் அது கொலைவெறியுடன் இருப்பதால் அதைக் கணக்கெடுக்க முடியாது. ;)
அண்மையில் பதிவர், எழுத்தாளர், கவிஞர் அகிலனுடன் சந்திப்புக் சென்றபோது இன்று புகைப்படம் எடுப்பது என்று நெருங்கிய சகபதிவர் ஒருவருக்கும் சொல்லிவிட்டுப் போய் அங்கு சென்றவுடன் மறந்துவிட்டேன்.
( இதில் சிரிப்பான விடயம் என்னவென்றால் அந்தப் பதிவருக்கும் அதே திட்டமுண்டு, அவர் கொழும்பில் நிற்காதபடியால் அவரால் திட்டமெல்லாம் போடமுடிவில்லை. :D )
பல மூத்த பதிவர்களுடன் கதைத்துக் கொண்டாலும், இவரோடு கதைக்கும்போது மட்டும் கவனமாக, நான் கதைப்பதை சரிபார்த்துக் கதைத்துக் கொள்வேன், ஏனென்றால் என்னதான் நேரடியாகக் கதைத்துக் கொண்டாலும், இரசிகன் என்ற அந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாமல் இருப்பதுவும், அந்த மரியாதையும் ஒரு காரணம்.
அத்தோடு சொல்ல மறந்துவிட்டேன், அண்மையில் என்னைப் பற்றி எழுதிய பதிவில் லோஷன் அண்ணா லேபிளியில் நண்பர் என்ற வார்த்தையை இட்டிருந்தார், ஒரு இனம்புரியாத உணர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆகவே அடுத்த பதிவர் சந்திப்பில் எனக்கு இந்தத் திட்டமிருப்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு (:P) திட்டமிருக்கும் ஏனையோரையும் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளேன்.
சரி....
இதெல்லாம் ஏன் பதிவிடுகிறேன், என்ன அவசியம் ஏற்பட்டது என்றால் இதை நான் பதிவாக இட யோசித்தது நிறையக் காலங்களுக்கு முன்னர், அப்பிடியே பஞ்சி, மற்றும் ஏனைய சில காரணிகளால் மறந்துவிட்டேன்.
இதை இப்போது இடலாம் என்று ஊக்கப்படுத்திய அந்த மூத்த பதிவருக்கும் நன்றிகள்.
ஏன் என்றால்.....
இன்று ஜுன் 5ம் திகதி எங்கள் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளர், பதிவர், அண்ணா லோஷன் அண்ணாவுக்கு பிறந்தநாள்......
அவரை பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி நலமாக வாழ அவரது ஒலிபரப்பின் இரசிகனாக, பதிவுலக வாசகனாக வாழ்த்துகிறேன்.....
வாழ்த்துக்கள் அண்ணா....
( இன்று அவருக்கு எத்தனையாவது பிறந்ததினம் என்று கேட்பவர்களுக்கு.... அவருக்கு இன்று 14 ஆவது பிறந்ததினம். ஆம்... என்னை விட இரண்டு வயது மூத்தவர்... )

இரசிகன்,
பதிவர்,
பிறந்தநாள்,
லோஷன் அண்ணா,
வானொலி
Subscribe to:
Posts (Atom)