குழப்பங்கள் நிறைந்த பாகிஸ்தான் கிறிக்கற் அணி நேற்று மாபெரும் குழப்பமொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.
News of the world என்ற சிறுபத்திரிகை (tabloid ஐ சிறுபத்திரிகை என்று அழைக்கலாமா?) மஜீத் 150,000 பவுண்ட்களைப் பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் வீரர்களை வேண்டுமென்றே முறையற்ற பந்துகளை(no ball) வீசச்செய்தார் என்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது spot fixing நடந்திருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது.
நேற்று இரவு இலங்கை அணி இந்தியாவை ஓரளவுக்கு இலகுவாகவே வீழ்த்தி மைக்ரோமக்ஸ் முக்கோண ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியில் வழமையை விட சற்று வேளைக்கே உறங்கினால் நேற்றுக் காலை நித்திரையால் எழுந்து போட்டியின் பின்னர் நடக்கும் செய்தியாளர் மாநாட்டில் என்ன கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க கிறிக்கின்போவிற்குச் சென்றால் Lord's Test in spot-fixing allegations என்று முதலாவதாய் ஓர் செய்தி.
நித்திரைக் குழப்பத்தில் spot-fixing என்பது match-fixing என்றுதான் எனக்குத் தெரிந்தது.
ஆரம்பகாலத்தில் நான் மிகவும் இரசித்து பின்னர் தன் நடத்தைகளால் என் விருப்பை இழந்திருந்த ஸ்ருவேர்ட் ப்ரோட் அடித்த 169 ஓட்டங்களை முன்பு இரசித்திருந்தபோதும் திடீரென அந்த ஓட்டங்கள் முன்பைப்போல் பெரிதாகத் தெரியவில்லை.
மஜீத் வெளியிட்ட விடயங்களில் சிட்னி போட்டி நிர்ணயிக்கப்பட்ட போட்டி என்று கூறியிருப்பது இன்னும் யோசிக்க வைத்திருக்கும்.
நான் அவனில்லை (பாகம்1) படத்தில் ஜீவன் கேட்பது போல 'அவனே ஒரு களவு செய்பவன். அவன் சொல்பவற்றை எவ்வாறு நம்புவது?' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும் பாகிஸ்தானின் வரலாற்றையும், அவர்களின் அண்மைக்கால திறமை வெளிப்பாடுகளையும் வைத்துப் பார்க்கும்போது நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இங்கிலாந்துப் போட்டியை நான் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதுவும் அந்த முறையற்ற பந்துகள் இரண்டை நான் பார்த்தேன், மொகமட் ஆமிர் முதலாவது முறையற்ற பந்தை வீசியபோது ஓடும்இடம் ஈரமாக இருக்கிறது என்றுசொல்லி அதற்கு அந்த மண்ணை/கலவையை இன்னொருவர் பந்துவீச்சாளர் ஓடிவந்து காலை மிதிக்கும் இடத்தில் போட்டபோதும், ரமீஸ் ராஜா அந்த முறையற்ற பந்தைப் பார்த்து 'He's inexperienced. But he's clever, we know that. May be he's finding it difficult because of the wet patches' என்றவாறு சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தேன்.
பின்பு மொகமட் ஆசிஃவ் அந்த முறையற்ற பந்தை வீசியபோது மைக் ஆதர்ட்டன் 'We've seen couple of biggish no balls' என்றபோது ஆடுகளம் சறுக்குகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
நேற்றுக்காலை எழுந்தபோது ஏமாற்றப்பட்டதாக, முட்டாளாக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
காலை முழுவதும் ஒரே ஏமாற்ற உணர்வு. :(
அத்தோடு வீரர்கள் இவ்வாறு ஆட்ட நிர்ணய, சூதாட்ட, spot fixing சர்ச்சைகளில் மாட்டும்போது எதிரணிவீரர்கள் கடினமாக உழைத்து, திறமையால் வென்றவை கூட சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படுகிறது என்பது கொடிய வேதனை.
இங்கிலாந்தின் ஸ்ருவேர்ட் ப்ரோட், ட்ரொட் இன் அருமையாக துடுப்பாட்டம், மைக் ஹசியின் துடுப்பாட்டம், பீற்றர் சிடிலின் அருமையான ஒத்துழைப்பு, இலங்கையின் ரங்கன ஹேரத் இன் அருமையான பந்துவீச்சு ஆகியன முன்பிருந்தளவிற்கு மதிக்கப்படுமா அனைவராலும் என்பது சந்தேகமே...
கிறிக்கற் உலகம் கண்ட சிறந்த இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உலகம் கொண்டாடிவரும் ஒரு 18 வயதுச் சிறுவன் ஆரம்பத்திலேயே இதில் மாட்டிக்கொண்டது எனக்குப் பெருங்கவலை.
இதுவரை தன்சொந்த நாட்டில் ஒரு சர்வதேசப் போட்டியைத்தானும் விளையாடாத இந்த இளைஞன்/சிறுவன் தன்னை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக மைக்கல் ஹோல்டிங், மைக் ஆதர்ட்டன், நஷீர் ஹூசைன், ஷேன் வோண் போன்ற ஜாம்பவான்களால் புகழப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டு திடீரென இன்று வேண்டாவெறுப்பான ஒருவராக மாறிப்போயிருக்கிறான்.
ஆமிர் தன்னை முழுமையான பந்துவீச்சாளராக நிரூபிக்க வேண்டிய ஏராளமான விடயங்கள் இன்னும் உண்டு உ+ம்: இங்கிலாந்தில் பந்துவீச்சாளர்களுக்கு முழுமையான சாதகமான ஆடுகளங்களிலேயே சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார். மற்றைய இடங்களில் தன்னை நிரூபிக்க வேண்டி இருந்தது. இங்கிலாந்தில் கூட ஆடுகளம் துடுப்பாட்டத்திற்குச் சாதகமாக மாறியபோது தடுமாறியிருக்கிறார். ஆனால் இவையெல்லாவற்றையும் தாண்டி, ஒரு 18 வயது சிறுவன் மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தையும் தாண்டி வீசி பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து பொன்ரிங், கெவின் பீற்றர்சன், ஸ்ரோஸ், கொலிங்வூட், மைக் ஹஸி, கற்றிச், வொற்சன், ட்ரொட், சங்கக்கார உட்பட ஏராளமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் என்றால் அந்த திறமை சாதாரணமானதல்ல...
இது கிறிக்கற்றிற்கு புதிதானதல்ல, கடைசியாக மாட்டுப்பட்டவர் மார்லன் சாமுவேல்ஸ் என்று நினைக்கிறேன். 1000 அமெரிக்க டொலர்களுக்கு போட்டியின் ஆடுகளம் மற்றும் வானிலை பற்றிய விடயங்களை வெளியிட்டதற்காக 2 வருட போட்டித்தடை மேற்கிந்திய கிறிக்கற் சபையால் விதிக்கப்பட்டது.
சாமுவேல்ஸோடு ஒப்பிடும்போது புரியப்பட்ட குற்றமும் பெரிது, பரிமாறப்பட்டிருக்கிற பணமும் பல மடங்கு அதிகமானது.
ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் போட்டிகள், இருபதுக்கு இருபது போட்டிகளில் இலகுவாக கஷ்ரப்படாமல் விளையாடுவதால் இலகுவாக பணம் உழைக்கக்கூடிய நிலைமை போன்றவற்றால் கிறிக்கற்றின் போக்கு பணத்தை நோக்கி திரும்ப வைத்திருப்பதுவும், ரெஸ்ற் கிறிக்கற்றில் சில நாட்டு வீரர்கள் பெரிதாக விருப்புடன் பங்கேற்காமையும் அவதானிக்கபடவேண்டியது.
இருபதுக்கு இருபதுக்குரிய விசேடித்த வீரரென விமர்சகர்களால் அழைக்கப்படுகின்ற அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்ணர் ரெஸ்ற் போட்டிகளில் விளையாடுவது தான் தன் இலக்கு, விருப்பம் என்று திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார். ஆனால் சில நாடுகளில் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு பாரிய விருப்பம் ஏற்பட்டுவருகிறது.
அதற்கு அவுஸ்ரேலிய கிறிக்கற் வீரர்கள் அதிகபட்சமான சம்பளங்களைப் பெறுவதும் ஓர் காரணம். அவர்களுக்கு தங்கள் நாட்டு சபை வழங்கும் சம்பளமே போதுமானது என்ற நிலை இருக்கிறது.
அதிக பணத்தை ஊதியமாகப் பெறாத வீரர்கள் வேறு வழியில் பணத்தைத் தேடிச் செல்லப் பணிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாட்டில் போட்டிகள் இல்லாதபடியால் சொந்த நாட்டு இரசிகர்கள் பெரிதாக கொண்டாடப்போவதில்லை, முன்பளவிற்கு விளம்பரதாரர்கள் கிடைக்கப் போவதில்லை, தன்சொந்தநாட்டில் கொண்டாடப்படும் சுகம் கிடைக்கப்போவதில்லை போன்றவற்றை யோசித்துப் பார்த்தால் மனரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு இருக்கப் போகிறது.
அதுவும் பக்கத்துநாடான இந்தியாவில் சர்வதேச ரீதியாக போட்டிகளில் விளையாடாமல், சர்வதேச ரீதியாக தங்களை நிரூபிக்காத ஏராளமான வீரர்கள் சொகுசு வாழ்க்கை வாழ தாங்கள் சர்வதேச ரீதியாக நிரூபித்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கிறோமே என்று யோசித்திருக்கலாம்.
உண்மையாக பாகிஸ்தான் வீரர்களின் பணம் தேவை என்ற எண்ணத்தைப் பிழை சொல்ல முடியாது, வாழ்க்கையில் அனைவரும் பணத்தை நோக்கித்தான் நகர்கிறோம், ஆனால் அதற்கான வழிமுறைதான் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக அமைந்துவிட்டது.
மறுபுறத்தில் சிலர் கேள்வியெழுப்பலாம் அனைவருமே எப்படியோ பணத்தை நோக்கிச் செயற்படுகிறோம், எங்கே ஒருகட்டத்தில் பிழை செய்கிறோம் இவர்களின் பிழைகள் மட்டும் தூக்கிவைத்துப் பேசப்படுகின்றன என்று.
சாதாரணமாக ஒரு அரச ஊழியர் சாதனை செய்தாலோ அல்லது சாதாரண ஊழியர் ஒருவர் சாதனை செய்தாலோ அது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை, ஆனால் ஒரு கிறிக்கற் வீரரோ அல்லது திரையுலக நட்சத்திரமோ சிறிய சாதனை செய்தாலும் அது பெரிதாகக் கொண்டாடப்படுகிறது, அதை அவர்கள் விரும்பவும் செய்கிறார்கள்.
ஆகவே கொண்டாடப்படும் நபர்கள் மற்றவர்களை விட ஒருபடி சிறப்பாக செயற்படவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஆமிர் 5 விக்கற்றுகளை எடுத்தபோது பாகிஸ்தான் இரசிகர்கள் ஆமிரை தங்கள் நாட்டின் கதாநாயகனாகக் கொண்டாடியிருப்பார்கள், தங்கள் நாட்டின் புகழை உலகெங்கும் பரப்ப வந்த ஒருவனாக நினைத்திருப்பார்கள்.
அவர்கள் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென்று ஒட்டுமொத்த நாடே நினைத்திருக்கும், வேண்டியிருக்கும்.
அப்படி இருக்கையில் அவர்களுக்கென்று பொறுப்புகளும் அதிகமாகின்றன என்பதை மறுக்கமுடியாது.
இதை முழுமையாக நிறுத்த முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிச்சயமாக குறைத்துக் கொள்ள முடியும்.
ஒரு பத்திரிகையால் இவ்வளவற்றைக் கண்டுபிடிக்க முடியுமெனில், அவ்வளவுக்கு வெளிப்படையாக விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றால் பாகிஸ்தான் கிறிக்கற் சபையும், இங்கிலாந்துக் காவல்துறையினரும், ஐசிசியும் என்ன செய்துகொண்டிருந்தன என்ற கேள்வி எழுகின்றது.
சூதாட்டம், போட்டி நிர்ணயம் போன்றவற்றில் ஈடுபட்ட வீரர்களை ஐசிசி தடை செய்யும் வழக்கமுண்டா என்று தெரியாது, கடந்த காலங்களில் கிறிக்கற் சபைகளை இவற்றைச் செய்துவந்திருக்கின்றன.
பாகிஸ்தான் கிறிக்கற் சபை என்பதால் இம்முறை நான் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.
நடப்பது நடக்கட்டும்.
நேற்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி இது.
"என்னிடம் ஒருவன் வந்து 50000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களைத் தந்து 2 முறையற்ற பந்துகளை வீசு என்று சொன்னால் நான் 50,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களை மறந்துவிட்டு ஒழுங்காக விளையாடுவேனா?"
(50000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ் என்பது சும்மா ஒரு தொகை)
குறித்த சந்தர்ப்பத்திற்கு நாங்கள் வெளிப்படுத்தப்படாதவரை நாங்கள் நல்லவர்களாகவே இருப்போம்.
ஆமிர் ஒழிக... ஆசிஃவ் ஒழிக... பாகிஸ்தான் கிறிக்கற் ஒழிக....
ரமீஸ் ராஜா நேற்று சொன்னதை திரும்பச் சொல்கிறேன்.
ஆரம்பகாலத்தில் வீரர்கள் கிறிக்கற்றிற்காக விளையாடினார்கள், புகழ், பணம் எல்லாம் பின்னால் வந்தது.
ஆனால் இன்றைய காலத்தில் விளையாடவரும்போதே புகழ், பணத்தை நோக்காகக் கொண்டு வருகிறார்கள், கிறிக்கற்றை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
(இந்தப் பதிவு மனவருத்தத்தின் நடுவே கவலையுடன் எழுதியது. திரும்ப வாசிக்கவில்லை. வாக்கியங்களில், கருத்துக்களில் தொடர்ச்சி இருக்காது என்று நம்புகிறேன். :( )
(படங்கள்: நன்றி, பதிப்புரிமை - News of the world )
Monday, August 30, 2010
பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....
Labels:
spot fixing,
ஆசிஃவ்,
ஆட்ட நிர்ணயம்,
ஆமிர்,
கிறிக்கற்,
பாகிஸ்தான்
Thursday, August 26, 2010
நிலாக்காதல் - 04
பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்
பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....
பிறந்ததிலிருந்து யாழ்ப்பாணத்தையே வாழிடமாகக் கொண்டிருந்தாலும், வெறுமனே சில வருடங்கள் மாத்திரம் இலண்டனிலே கழித்திருந்தாலும் இந்த மண்ணுக்கு தன்னை புதியவளாக உணர்ந்தாள் லாவண்யா.
தான் இலண்டன் செல்லும்போது இல்லாதளவுக்கு விமானநிலையத்தில் சால்வைப் போராளி எங்குமே சிரித்துக் கொண்டிருக்கிறார், விமானநிலையத்தில் கேட்டறிந்து கொண்டதில் நாடு முழுதும் இப்படித்தான் என்றார்கள், இலங்கையை விட்டு தான் எவ்வளவு தூரம் விலகியிருப்பதை உணர்ந்துகொண்டாள்.
தன்னை விமானநிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வருவதாக சொல்லியிருந்த தூரத்து உறவினரை தன்னால் அடையாளம் காணமுடியுமா, அவருக்கு தன்னை அடையாளம் காணமுடியமா என்ற குழப்பத்தில் இருந்தவள் அங்கே ஹரிஷைக் கண்டதும் முழுமையாகக் குழம்பிப் போனாள்.
'இவன் எங்கே இங்கே வந்தான்' என்று குழம்பிக் கொண்டாலும், இலண்டன் சென்றபின் அவள் மதங்கள், இனங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மனிதர்களோடு பழகிவிடப் பழகியிருக்கிறாள் என்ற தைரியத்தில் ஹரிஷின் காதலை மறுத்தபோது இருந்த மனநிலை இப்போது தன்னிடம் இல்லாததை கண்டு தன்னையே ஒருகணம் இரசித்துக் கொண்டாள். அவளின் கடவுச் சொல்லாக இலண்டன் சென்றது அவன் பெயர் சார்ந்த சொல்லொன்றைப் பயன்படுத்தியபோது இருந்த உணர்வைவிட இது புதிதாக இருந்தது.
அவனிடம் சென்று பேசுவோமோ என்று நினைத்துக் கொண்டாலும் ஈகோவா அல்லது குற்றவுணர்ச்சியா அல்லது வெட்கமா என்றறியாத ஒரு உணர்வு அவளைத் தடுத்தது. ஆணாதிக்கத்தை வெறுக்கும் அவள் இந்தக் கணத்தில் மட்டும் ஆணாதிக்கத்தை எதிர்பார்த்தாள், அவனை வந்து கதைக்க எதிர்பார்த்தாள்.
கற்பனைகள், குழப்பங்களுக்கு மத்தியில் அவன் என்ன காரணத்திற்காக நிற்கிறான், அவன் தன்னைக் கண்டுவிட்டானா என்பதைப் பற்றி யோசிக்காமல் தன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
'என்னம்மா இங்கே நிற்கிறாய்? பிளேன் பிந்திட்டுதோ?' குரலைக் கேட்டு ஹரிஷாக இருக்குமோ யோசித்தாலும் குரலும், மொழியும் ஒரு வயதானவரினதாக இருந்ததால் இது வேறு யாரோ என்று முடிவுசெய்துகொண்டு திரும்பினாள், எங்கோ பார்த்த நினைவு, வயதானவர். 'ஸ்ரீ அங்கிள்?' ஓரளவுக்கு அடையாளம் கண்டுகொண்டாலும் சிறிய சந்தேகத்துடன் கேட்டாள், தன்னை அழைத்துச் செல்லும் ஸ்ரீ அங்கிளை தன்னால் அடையாளம் காணமுடிந்ததை எண்ணிச் சந்தோஷித்த கணத்தில் ஹரிஷை காணவில்லை அங்கே என்றபோது மலரொன்று உடனே மலர்ந்து வாடியதைப் போலிருந்தது அவள் முகம். 'போகலாமா?' என்றழைத்த அங்கிளின் குரலோடு கதைபேசாது பின்னால் சென்றாள்.
வாகனத்தில் ஏறியபின் அவ்வளவு நேரமும் அழகாகத் தெரிந்த விமானநிலையம் பாலைவனமாய்த் தெரிந்தது, ஸ்ரீ அங்கிள் கடத்தல்காரர் போல் தெரிந்தார், அவள் தபு ஆனாள், ஹரிஷ் அஜித்குமார் ஆனான், வீதியோரப் பிச்சைக்காரனின் பாடல் சந்தனத் தென்றலே ஆனது.
'நான் ஏன் இங்கே வந்தேன்?' சிலோனிற்கு வந்தபின் முதன்முதலாய் நிஜத்திற்கு எண்ணத்தைத் திருப்பினாள் லாவண்யா. 'காதலிற்காக விமானம்பறந்து இங்கே வருமளவிற்கு எப்போது பில்கேட்ஸ் பரம்பரை ஆனோம்?', 'விசேட பயிற்சிக்காய் இலண்டன் சென்ற அவளுக்கு வைத்தியசாலை தந்த ஒருவார விடுப்பில் எதைமுடிக்கப் போகிறோம்' கேள்விகளை தன்மீது அடுக்கிக் கொண்டாள்.
ஹரிஷைக் கண்டநொடி முதல் யதார்த்தத்திற்கு தன்னை தானே திருப்பிக் கொள்வதாக உணர்ந்தாள் லாவண்யா.
இப்போது காதலா, கடமையா முதலில் என்பதற்கு விடை தேட முயன்றுகொண்டிருந்தாள்.
இறுதியில் காதலோ, கடமையோ சந்தோஷ் மூலம்தான் இரண்டுமே நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவளாய், சந்தோஷிற்கு அழைப்பெடுத்தாள்,
“அடடா மழைடா அடை மழைடா..” அலைபேசி அலறியது...
077******* calling...
யாரது புதிய இலக்கமாக இருக்கிறதே என்று நினைத்தவாறு அழைப்பை ஏற்றுக்கொண்டான்.
'ஹலோ' 'ஹலோ' இரண்டுபேரும் ஒரே நேரத்தில் 'ஹலோ' சொன்னார்கள்.
'ஹலோ... This is Lavanya, from Colombo'
'Who?' குழப்பத்தில் கேட்டான் சந்தோஷ்.
தான் விடுமுறைக்காக கொழும்பிற்கு வந்திருப்பதாக பொய் சொல்லிக் கொண்டாள் லாவண்யா.
பழைய நண்பர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், குறிப்பாக ஹரிஷைப் பற்றி விசாரித்தாள்.
அவனின் அலைபேசி இலக்கத்தைக் கேட்டாள் லாவண்யா.
கடமையை மறந்தாள், காதல் உணர்வுகள் கடமையை வென்றன...
*****
'துளித்துளி மழையாய் வந்தாளே...' சிணுங்கியது ஹரிஷின் அலைபேசி.....
பதிவர் ஆதிரை தொடர்வார்.....

Tuesday, August 17, 2010
ரந்தீவ் இன் நோ போல் உம் என் கருத்துக்களும்....
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
அந்த வெற்றியையும் தாண்டி செவாக் 99 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நின்றமை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி என் கருத்துக்கள்.
1. ரந்தீவ் செய்தது விதிகளின் படி ஒருபோதும் பிழையாகாது.
2. ஐசிசி இன் spirit of the cricket விருதை 2007, 2008ம் ஆண்டுகளில் வென்ற அணி இலங்கை, 2009இற்கான தேர்வில் நியூசிலாந்திடம் தோற்றது என்று நினைக்கிறேன். ஆகவே இதுவொன்றும் இலங்கை காலங்காலமாக செய்து வந்த ஒன்றல்ல.
3. இலங்கை அணி காலம்காலமாக ஏற்படுத்தி வந்த நல்ல பெயருக்கு ரந்தீவின் இந்தச் செயல் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.
4. இலங்கை அணியின் கனவான் விளையாட்டை, சிறிய அணியாக இருந்து வளர்ச்சியடைந்த அணியின் வீரத்தை இரசித்த எனக்கு ரந்தீவின் செயலை இரசிக்க முடியவில்லை. ரந்தீவ் என்ற வீரனின் சுழற்பந்து வீச்சை இரசிக்கும் என்னால் ரந்தீவின் அந்த செயலை இரசிக்க, ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
5. ஆனால் இது செவாக் இற்கு நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி.
செவாக் என்ற அற்புதமான துடுப்பாட்ட வீரரை இரசிக்குமளவிற்கு அவரின் சில செய்கைகள் எனக்குப் பிடிப்பதில்லை.
செவாக் தென்னாபிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 2ஆவது ரெஸ்ற் போட்டியில் ஹசிம் அம்லா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஹசிம் அம்லா கடைநிலைத் துடுப்பாட்ட வீரருடன் நின்றிருந்தார்.
ஒரு பந்துப் பரிமாற்றத்தின் 5ஆவது பந்து என்று நினைக்கிறேன், அம்லா பந்தை அடித்து விட்டு ஒரு ஓட்டமொன்றைப் பெற்று அடுத்த பந்துப் பரிமாற்றத்தில் தான் துடுப்பெடுத்தாட விரும்ப, எல்லைக் கோட்டை நோக்கிச் சென்ற பந்தை செவாக் எல்லைக் கோட்டிற்கு அங்கால் உதைத்து அம்லா ஓட்டம் பெறுவதைத் தடுக்க முனைந்தார்.
ரந்தீவ் செய்தது has no place in good cricket என்று செவாக்கால் உணர முடிந்தால் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பார்.
இவ்வளவு காலம் கிறிக்கற் விளையாடி வரும் செவாக்கிற்கு உணர முடியாதது வெறுமனே சில போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் ரந்தீவால் உணர முடிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது செவாக் இற்கே வெளிச்சம்.
6. சங்கக்கார தான் அதைச் செய்யச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார், ஆகவே அணி மீது மொத்தமாக குற்றச்சாட்டு எழுப்பப்படலாகாது.
அடுத்தது,
சில கேள்விகள்.
7. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள்.
இறுக்கமான தருணத்தில் துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் பந்து படவில்லை என்று தெரிந்த பின்னரும் பந்து அருகால் சென்றது என்பதால் ஆட்டமிழப்பு கோரமாட்டீர்களா? - இந்தக் கேள்வி எனதல்ல. ஹர்ஷா போக்லே இன்று எழுப்பிய கேள்வி.
9. தனிநபரின் செயல்களுக்கு ஒரு இனமோ, நாடோ குறை சொல்லப்படுவது முடியாதது.
நான் சிலருடன் கதைத்த போது சிங்களவன் தன் குணத்தைக் காட்டிவிட்டான் என்ற அடிப்படையிலான கதைகள் வந்தன.
ரந்தீவ் உண்மையில் வேறு ஒரு மதத்திலிருந்து தான் பெளத்த மதத்தைத் தழுவினார். ஆகவே எந்த மதத்தைக் குறை சொல்வீர்கள்?
இதற்குள் மதம், இனம் எதுவும் கிடையாது. வெறுமனே தனிப்பட்ட மனிதன் ஒருவனின் செயல்.
செவாக் பந்தை எல்லைக் கோட்டிற்கு தட்டிவிட்டபோது செவாக்கின் இனம், மதம், நாடு கொண்டா திட்டியிருப்பீர்கள்?
சில விடயங்களைப் பொதுமைப்படுத்தாமலிருப்பது நலம்.
பொதுமைப்படுத்துவதன் மூலம் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் சகோதரர்களே.
10. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது.
இதுவரை பிரச்சினைக்குள் அகப்படாத வீரரொருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இது தொடர்பாக நான் நேற்று ருவீற்றிய சில ருவீற்றுகள்.
@kangon- Ok... I'm not with Randiv. Unfair... He should've bowled a legal delivery. Shouldn't have done this. Sorry Randiv, u were just wrong.
@kangon - @kaasethu randiv's wrong. but i think sehwag deserves this. i remember his kicking the ball to the boundary of Amla to deny him the single
@kangon- Nice to see Sehwag's positive. Of course, he can't come and complain that Randiv's denied me a century, but Viru seems positive.
@kangon- @ikarthik_ yeah... nothing gonna lose by giving a well deserved century. he should've bowled a legal delivery.
RT: @kaasethu: If Randiv himself did that then not a big shame -can excuse an youth, but if he was instructed by any senior(s) that's shame
(@kangon என்பது நான். )
எங்களுக்கு சார்பான விடயங்களுக்கு மட்டுமே கருத்துச் சொல்வதை நிறுத்துங்கள் சகோதரர்களே.
செவாக் பந்தை உதைத்த போதும் அதை விரும்பவில்லை, இதையும் விரும்பவில்லை.
அப்போது மெளனமாக இருந்தவர்கள் இப்போது கதைத்தால் நீங்கள் பச்சோந்திகள்.
என் முடிவுக் கருத்து:
ரந்தீவ் செய்தது தவறு, பிழை.
இலங்கைக் கிறிக்கற்றை இரசிப்பவன் என்ற ரீதியில் எனக்கு ஏமாற்றமான விடயம்.
ரந்தீவ் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க, அல்லது தன் வருத்தத்தைத் தெரிவிக்க எதிர்பார்க்கிறேன். நான் இரசிக்கும் வீரர் ஒருவர், ஒரு மாபெரும் கனவானின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் வீரர் என்பதால் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமே இல்லை.
பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒன்று:
நேற்று நான் இரசித்த காட்சி இது.
எல்லோருமே இப்படி இருத்தல் நலம்.
படங்களுக்கு நன்றி: கிறிக்கின்போ
(கருத்துக்களை பதிவிடும் இடம்தான் பதிவுலகம் என்றார்கள். அதுதான் என் கருத்தை சிறிய பதிவாகப் பதிந்திருக்கிறேன். :) )
பிற்சேர்க்கை: செவாக் இன் ருவீற் இது:
Hi guys Randiv came to my room n apologize
https://twitter.com/sehwagvirender/status/21377872957
(நன்றி Karthik Narayan )

Subscribe to:
Posts (Atom)