சக பதிவர்களுக்கு வணக்கம்....
எதிர்வரும் 19ம் திகதி காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள்.
ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
சந்திப்பினை வழமைபோல ஹக்கர் கெளபோய்மது அவர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.
அதைத்தவிர,
பதிவர்களிடையே அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக, ஒருநாளை மகிழ்வுடன் களிக்கும் விதமாக நாளை காலை 9 மணிமுதல் இடம்பெறவுள்ள கிறிக்கற் போட்டியையும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்போவதாக ஹக்கர் கெளபோய்மது அறிவித்துள்ளார்.
மைதானம் என்பதால் தெளிவாக இருப்பது சிறிது கடினம் எனினும் தான் நேரடி ஒளிபரப்பு செய்வதில் குறியாக இருக்கிறார்.
அந்தப் போட்டியையும் நீங்கள் http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் போட்டி தொடங்கியவுடன் பார்வையிடலாம்.
நன்றி.
சந்திப்போம் நண்பர்களே.
பி.கு: இது பம்பல் பதிவு கிடையாது. உண்மையாகவே தகவலை அறிவிப்பதற்கான பதிவு.
Friday, December 17, 2010
Monday, December 13, 2010
அதிகார மையம், பதிவர் சந்திப்புக்கள், கூச்சல்கள் - விளக்கங்கள்
பதிவர் சந்திப்பு நெருங்கிவரும் வேளையில் தனிநபர் தாக்குதல்களும், சில வேண்டத்தகாத பிரிவினைவாதங்களும் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.
எனக்கு மாற்றுக்கருத்துகளில் மிகுந்த ஏற்றுக்கொள்கை மனப்பான்மை உண்டு, அது தெளிவாக முன்வைக்கப்படுமிடத்து.
கடந்த 9ம் திகதி எக்சார் அல்லது என்ன கொடுமை சார் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சகோதரர் (அவரின் உண்மைப் பெயர் நானறிவேன். அது இங்கு தேவையற்றது) பதிவொன்றை எழுதியிருந்தார்.
எதிர்வரும் பதிவர் சந்திப்பைப் பற்றி எதிர்வினையென்றிராமல் குற்றச்சாட்டு வகையான அந்தப் பதிவு அமைந்திருந்தது.
அந்தப் பதிவின் குற்றச்சாட்டுகளை பார்க்க முன்பு, பேஸ்புக்கில் பதிவர் சந்திப்புத் தொடர்பான நிகழ்வில் எக்சார்,
// Make this event more useful.. Like tweetupsl.. // என்று கருத்தளித்திருந்தார்.
அதற்கு நான்,
// ஏதாவது ஆலோசனைகளிருந்தா ஏற்பாட்டுக்குழுவுக்கு சொல்லலாம். // என்று பதிலளித்திருந்தேன்.
எக்சாரிற்கு பதிவர் சந்திப்பு மேல் அக்கறை அல்லது இவர் காட்டுகின்றதுபோன்ற நல்ல எதிர்பார்ப்பு இருந்திருந்தால் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவினரிடம் அவரது கருத்துக்களைக்கூறி முதலில் விளக்கம் பெற முயற்சித்திருக்கலாம், விளக்கங்கள் எதிர்பார்த்தளவு கிடைத்திராவிட்டால் குற்றஞ்சாட்டிப் பதிவு எழுதியிருக்கலாம்.
இனி எக்சார் குற்றஞ்சாட்ட முற்பட்ட விடயங்கள்.
பதிவர் சந்திப்பு ஏன் கொழும்பில் நடக்கிறது? ஏன் வேறு பிரதேசங்களில் நடப்பதில்லை?
பதிவர் சந்திப்பு என்ற எண்ணக்கரு இலங்கையில் தோன்ற முன்னரே தாங்களாகவே முன்வந்து பதிவர் லோஷன், வந்தியத்தேவன், ஆதிரை மற்றும் புல்லட் ஆகியோர் முதன்முதலில் ஏற்பாடு செய்த சந்திப்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
அது ஏன் கொழும்பில் நடைபெற்றது என்ற கேள்வி இராது என்று நம்புகிறேன். அது கொழும்பிலிருந்தவர்கள் முன்வந்து ஆரம்பித்து வைத்தது.
இரண்டாவது சந்திப்பு திரும்பவும் கெளபோய்மது, சுபாங்கன், மதுவதனன், கீர்த்தி, மு.மயூரன், மன்னார் அமுதன், கனககோபி ஆகியோர் முன்வந்து நடத்தியதே. அந்தச் சந்திப்பு ஏற்கனவே பதிவர்கள் கொழும்பில் ஒரு சஞ்சிகை நடாத்திய சந்திப்பு நிகழ்வின்போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் நடத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பெற்றது.
அது நடந்தது கடந்த வருடம் டிசம்பர் 13ம் திகதி.
அதன் பின்னர் சிறுசிறு சந்திப்புக்கள் இடம்பெற்றாலும் சந்திப்புக்கள் என்று ஒன்றும் நடக்கவில்லை.
பின்னர், இந்த வருடம் மே மாதம் 7ம் திகதி இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
( முழுமையாக வாசிக்க: http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/c53efed659a31252/bf79fe39c8864426?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&lnk=ol& )
அங்கு பதிவர் சந்ரு "பதிவர் சந்திப்பொன்றை நானும் எதிர் பார்க்கின்றேன். இந்த சந்திப்பு எங்கே எப்போது இடம்பெறவேண்டும். கொழும்பில்தானா அல்லது வெளி மாவட்டங்களில் ஏற்பாடு செய்யலாமா" என்று கேட்ட கேள்விக்கு,
பதிவர் ஆதிரை,
"கொழும்பில்தான் நடாத்த வேண்டுமென்று சட்டமா இருக்கின்றது?
அனைவருக்கும் வசதியான இடமொன்றை தெரிவு செய்யலாம். " என்று பதிலளித்திருந்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்திருந்த பதிவர் லோஷன்
" உள்ளேன் ஐய்யா அம்மாமாரே..
கொழும்பில் சந்திப்பில் கலந்து கலந்து அலுத்துவிட்டது..
எங்கேயாவது குளு குளு இடத்திலே அல்லது கனடா லண்டன் மாதிரி இடங்களில் வைப்பது பற்றி யாராவது யோசியுங்களேன்.. ;) " என்று தெரிவித்திருந்தார்.
பதிவர் லோஷனின் கருத்தை வழிமொழிவதாக பதிவர் சுபாங்கனும் தெரிவித்திருந்தார்.
பின்னர், பதிவர் சந்ரு மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு நடத்தினால் யார் யார் கலந்தகொள்வீர்கள் என்று கேட்டதற்கு,
பொருத்தமான நாளில் நடத்தப்பட்டால் கலந்துகொள்ளத் தயார் என்று பதிவர்கள் கன்கொன், ஆதிரை, லோஷன், சுபாங்கன், பவன், பால்குடி, கெளபோய் மது ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
அதன்பிறகு ஏதோ காரணத்தால் மட்டக்களப்பில் சந்திப்பு நடத்துவது பற்றிய கதையை பதிவர் சந்ரு தொடர்ந்து முன்வைக்கவில்லை.
பின்னர் வதீஸ், அனுதினன், பவன் ஆகியோர் முன்வந்து தாங்கள் திருகோணமலை அல்லது கொழும்பில் பதிவர் சந்திப்பை நடத்த முன்வருவதாகச் சொல்லியிருந்தார்கள்,
அதற்கும் திரும்ப பதிவர் லோஷன், ஆதிரை, கன்கொன், சுபாங்கன், சந்ரு, யோவொய்ஸ், மயூரேசன், ரமேஸ் ஆகியோர் வருவதாகவும், இறுதியில் திருகோணமலை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்த ஏற்பாட்டுக்குழுவும் ஏதோ காரணங்களால் தாங்களாகவே பின்வாங்கிக் கொண்டது.
அதன்பின்னர் பதிவர் சந்திப்பு நடத்துங்கள் என்று பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டாலும் பொதுவாக யாருமே முன்வரவில்லை.
இதன் பின்னர் அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வடலி வெளியீடுகள் அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தபோது இலண்டனிலிருந்து அப்போது தான் கொழும்பு திரும்பியிருந்த பதிவர் பதிவர் மாலவனை சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அவரும் பதிவர் சந்திப்பிற்கு ஆர்வமாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். அன்று அதில் வைத்து பதிவர் சந்திப்பொன்றை நடத்துவது என்று ஓரளவுக்கு உறுதியான நிலைப்பாடெடுத்தோம்.
அதன்பின்னர் அவரை சந்திக்கும்போது நானே எதிர்வரும் 19ம் திகதி பதிவர் சந்திப்பொன்றை நடத்துங்களேன் என்று பிரேரித்தேன்.
டிசம்பர் 5, 12 ஆகியனவற்றில் நடத்த நாட்போதாது என்பதோடு டிசம்பர் 26 சுனாமி தாக்கிய நாள் என்பதால் அந்த நாளை அதை அனுஷ்டிக்க விடுவது நல்லது என்பதால் டிசம்பர் 19 மட்டுமே தெரிவாக இருந்தது.
அவரும் உடன்பட்டதன் பின்பு பதிவர் பவன், அனுதினன், வதீஸ் மற்றும் பதிவர் வரோ ஆகியோர் முன்வந்து ஏற்பாட்டுக்குழுவில் இணைந்து செயற்பட்டார்கள்.
இதில்,
பவன், அனுதினன் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள், மாலவன் இலண்டனிலிருந்து அண்மையில் கொழும்பு திரும்பியவர்.
பதிவர்களிடையே அதிகார மையம்:
முன்பு ஒருமுறை பதிவர் சங்கம் அல்லது அமைப்பாக பதிவர்கள் வளரவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டபோது அங்கு சங்கத்திற்கு எதிராக வைக்கப்பட்ட முதலாவது விடயம் "சங்கமென்று வந்தால் தலை, கால் என்ற பாகுபாடு வரும், அதனால் குழுவாகவே இயங்குவோம்" என்பது தான்.
பதிவர்களிடையே அதிகார மையமென்று உருவாகினாலும் அதைவைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலையில், இல்லாத ஒன்றைக் குறிவைத்து உள்ள விசமமான கருத்து அது.
எக்சார் கருதுகிற, சொல்ல வருகிற அதிகார மையத்தோடு அண்மைக்காலத்தில் மிகவும் கடுமையாக முரண்பட்டுக்கொண்ட பதிவர் வரோ இந்தமுறை ஏற்பாட்டுக்குழுவில் இருப்பது அதிகார மையம் என்ற பேச்சை இல்லாமல் செய்துவிடுகிறது.
// தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். //
உண்மையில் எக்சார் கொழும்பை பதிவர்கள் மையப்படுத்தக்கூடாது என்று விரும்பினால் யாழ்ப்பாணத்தை வெறுப்பது ஏன்?
யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையின் பின்புலத்திலுள்ள இவரது கொள்கை என்ன?
ஆக,
அதிகார மையம் என்று சொல்லப்படுகிற கொழும்புவாழ் பதிவர்களிடம் இருப்பதாகச் சொல்கிற பிரதேசவாதம், உண்மையில் எக்சாரிடமே இருக்கிறது.
இவரிற்கு யாழ்ப்பாணத்தின் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஏற்கனவே தெரிந்தது தான். (யாழ் நூலகம் பற்றிய பதிவு இதற்கு சான்றானது).
அடுத்து இவரது இன்னொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு பதிவர் அகிலன் கொழும்பிற்கு வந்திருந்தபோது குறிப்பிட்ட அதிகார மையமே சந்தித்ததாகவும், ஏனைய பதிவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் கூகிள் குழுமத்தில் பதிவர் அகிலனை சந்திப்பதற்கான அறிவிப்பு பகிரங்கமாக இடப்பட்டே சந்திக்கப்பட்டது.
இந்தச் சுட்டியை நாடவும்.:
http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/a781bafb3dfe76a0/6912c7c138e6cdfc?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D#6912c7c138e6cdfc
ஆக,
அர்த்தமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பதிவின் மூலமாக வைத்து புதிதாக இணைந்த/இணைகிற பதிவர்களுக்கு நச்சு விதையை விதைக்க நினைக்கிற இவருக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்,
நாங்கள் இங்கு அரசியல் நடத்த வரவில்லை, எங்கள் எண்ணங்களையும், விருப்புக்களையும் பகிரவே வந்திருக்கிறோம். உங்கள் குழப்பகரமான எண்ணங்களும், புத்திகளையும் எங்கள் மீது காட்ட முற்படவேண்டாம்.
இதுவரை நீ்ங்கள் குழப்பங்கள் விளைவித்தபோதெல்லாம் அமைதியாக இருந்த நாங்கள், இம்முறை பதிவர் சந்திப்பையொட்டி அதை வைத்து sensitive ஆன விடயங்களை வைத்து பதிவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தமையால் தான் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது.
நீங்கள் குறிப்பிட்ட அதிகார மையத்திலிருந்தவர்கள் தான் பதிவர் சந்திப்புக்கள் வேறு இடங்களில் நடத்துவோம் என்றதும் முதன்முதல் பதிலளித்திருக்கிறார்கள், வெளிப்படையாகச் சொன்னால் அவர்கள் மட்டுமே பதிலளித்திருக்கிறார்கள்.
ஒரு விடயத்தில் செயற்பாட்டு நிலையில் (active) இருப்பது அவர்கள் அந்த விடயத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை உங்களுக்குத் தருமாயின் உங்களுக்காக மனவேதனைப்படுவதைத்தவிர எனக்கு வேறு வழிகள் கிடையாது.
அங்கு இருந்த பின்னூட்டமொன்றிற்கான பதில்,
குழுமத்தில் யாரும் பதிலிடலாம், யாரும் கருத்துத் தெரிவிக்கலாம்.
ஈ சீக் பதிவர் குழுமத்தில்
// என்னையும் எனது இணைய தளத்தையும் எனது பல்கலைக் கழகத்தினையும் பிரபலப்படுத்தும்
நோக்கில் ஒரு இணைய தளத்தில் வெளியாகியுள்ள விளம்பரத்தையும் கீழுள்ள முகவரிக்கு
சென்று காணுங்க மக்கள்ஸ்..
என்னுடைய ஆக்கங்களை பிரதி
செய்யக்கூடாது என்று சொன்னதற்கு எனக்கு கிடைத்த பரிசு.. இப்படியும் மனிதன்
இருக்கிறான் எனபுரியவைத்த இறைவனுக்கு நன்றி.. நான் அந்த இணைய தளத்தை முடக்க
முயன்றேனாம்.. இது தொடர்பான மேலதிக விளக்கம் வேண்டுமென்றால் என்னைக் கேளுங்க..
நான் செய்த உதவிகளுக்கு அந்த குறிப்பிட்ட நபர் தந்த பரிசு..
http://sammanthurainews.com/?p=726&isalt=0 //
என்று குழுமத்தில் இணைத்ததற்கே அவ்வாறு செய்வது சரியல்ல என்று அறிவிப்பு வழங்கப்பட்டது.
அது அஸ்பர் என்பவர் இன்னொருவரின் தளத்தை ஹக் செய்துவிட்டதாகத் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றி இன்னொரு தளத்தில் வெளியான பதிவு.
அதைக்குழுமத்தில் என்ன காரணத்திற்காக இணைத்தார் என்பது விசித்திரமானது.
அவர் அந்தப் பதிவுக்கு மறுப்பொன்றை தன் பதிவில் எழுதிவிட்டு அதைக் குழுமத்தில் புதிய பதிவுகள் பகுதியில் இணைத்திருந்தால் அது வேறு விடயம்.
குழுமத்தில் இல்லாத பதிவுகளை இணைப்பதில்லை என்ற கொள்கை ஒருபுறமிருக்க, அந்த இணைப்பு குழுமத்தில் வரக் காரணமே இல்லை.
அதை அந்தப் பதிவரும் ஏற்றுக்கொண்டார்.
சர்ச்சையான பின்னூட்டங்களும், காழ்ப்புணர்ச்சி மிக்க பின்னூட்டங்களும் எக்சாரின் பதிவில் மட்டும் எப்போதுமே வருவதும் வியப்பானது தான்.
பதிவுலக அரசியல் வாழ்க.
நன்றி.
பின் குறிப்பு: 1: நான் hits இற்காக எழுதுகிறேன் என்ற கூச்சல் வேண்டாம், என் தளத்தில் hits counter கிடையாது.
சர்ச்சைகளால் புகழடைய நினைக்கிறேன் என்ற கூச்சலும் வேண்டாம், நான் மாதமொன்றுக்கு 1 அல்லது 2 பதிவு போடும் ஒருவன்.
பின் குறிப்பு: 2: என்னைத் தவிர வேறு பதிவர்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கிவருகிற பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
அவை தவிர எல்லாப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறேன்.
பின்குறிப்பு: 3: இந்தப் பதிவை திரட்டிகளில் இணைக்கவில்லை.
நண்பர்கள் யாரும் இணைக்கவும் வேண்டாம்.

http://sammanthurainews.com/?p=726&isalt=0

Labels:
பதிவர் சந்திப்பு,
பதிவர்வட்டம்
Saturday, December 11, 2010
பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.
எதிர்வரும் 16ம் திகதி ஆஷஷ் தொடரின் மூன்றாவது போட்டி ஆரம்பமாகிறது.
முக்கியமான போட்டியும் கூட. முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்த பின்னர் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றிருப்பதால், W.A.C.A மைதானத்தில் (பேர்த் என்று இனிக் குறிப்பிடுகிறேன்.) இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே செல்லும், கடைசி இரண்டில் அவுஸ்ரேலியா அதிசயமாக வென்றாலும் கூட, ஏனென்றால் தற்போது ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே உள்ளது, தொடர் சமநிலையில் முடிவடைந்தால் முன்னைய தொடரைக் கைப்பற்றிய அணிக்கே கிண்ணம் உரித்துடையதாகும்.
போட்டிக்கான அவுஸ்ரேலிய குழாம் அறிவிக்கப்பட்டு விட்டது, இங்கிலாந்து அணியில் 10 பேர் ஏற்கனவே விளையாடிய அணியில் விளையாடியவர்கள் என்பதால் அவர்களின் தெரிவும் முடிவடைந்துவிட்டது, அணிகளைப் பற்றிப் பார்க்க முன்னர் பேர்த் மைதானம் பற்றிப் பார்ப்போம்.
பேர்த் மைதானம் பொதுவாக அதன் வேகத்துக்கும், பவுண்ஸ் இற்கும் பெயர் போனது. உலகின் மிக வேகமான மைதானங்களில் ஒன்றாக, இல்லையெனில் உலகின் வேகமான மைதானமாகவே, கணிக்கப்பட்ட ஒன்று.
அண்மைக்காலத்தில் அதன் வேகத்தை சிறிது இழந்ததாகக் கருதப்படினும், இன்னும் உலகின் வேகமான மைதானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆனால், அண்மையில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் பழைய பேர்த் மைதானம் போன்று ஆடுகளம் வேகமாக இருந்தது. குறிப்பிட்டுச் சொன்னால் ஆடுகளத்தை வேகமாக அடித்துப் பந்துவீசும் (Bang in type bowlers. கொச்சையாகச் சொன்னால் pitch ஐ வேகமாக குற்றிப் போடுவோர். ஜோன்சன், மோர்னி மோக்கல் போன்றவர்கள் சிறந்த உதாரணம்) பந்துவீச்சாளர்களான பெர்னான்டோ மற்றும் திஸ்ஸர பெரெரா ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினர். அத்தோடு உயரமான சுழற்பந்துவீச்சாளரான ரந்தீவிற்கும் ஆடுகளம் சிறப்பாக உதவி செய்தது.
அப்போது பேர்த் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு மட்டும் சாதகமானதா என்றால் இல்லவே இல்லை.
துடுப்பாட்ட வீரராக நீங்கள் ஓட்டங்களைக் குவிக்க முடியும். அதற்கு நீங்கள் மிகச்சிறந்த back-foot வீரராக இருக்க வேண்டும்.
நானறிந்து தற்போது விளையாடும் வீரர்களில் குமார் சங்கக்காரவை மிகச்சிறந்த back-foot player என்பேன்.
உங்களால் back foot இல் மிகச்சிறப்பாக ஆடமுடியும் என்றால் ஓட்டங்களைக் குவிக்க முடியும்.
அத்தோடு சுழற்பந்துவீச்சாளராக உங்களுக்கு பவுண்ஸ் கிடைக்கும். ஆக இது வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், துடுப்பாட்ட வீரர்கள் ஆகிய எல்லோருக்கும் சாதமான அல்லது உதவும் ஆடுகளம் ஆகும்.
காலநிலை -
பொதுவாக பேர்த் வெயிலான பகுதி ஆகும்.
எனினும் மைதானம் கடலுக்கு அண்மையாக அமைந்திருப்பதால் மாலைநேரக் காற்று மைதானத்திற்கு குறுக்காக வீசும். இது வெப்பத்தைக் குறைப்பதோடு ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதனால் ஸ்விங் பந்துவீச்சாளர்களும் பேர்த் மைதானத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.
என்ன மாதிரிப் பந்துவீசுவார்கள்?
பிரதானமாக back of the length எனப்படும் பகுதியில் அதிகமாகப் பந்துவீசி பெறும் extra bounce மூலம் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிப்பார்கள்.
ஸ்விங் பந்துவீச்சாளர்கள் வழமையைப் போன்று fuller length இல் பந்துவீசுவார்கள்.
யார் யார் இங்கு சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?
back of the length என்று வந்த பின் மக்ரா(த்) ஐ தவறவிட முடியாது. 12 போட்டிகளில் 52 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
மக்ரா தவிர லீ, மேர்வ் ஹியூஸ் போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
அண்மைக்காலத்தில் மிற்சல் ஜோன்சன் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
இதைத் தவிர இதே மைதானத்தில் இதே டிசம்பர் 16ம் திகதியில் நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது.
2009ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ம் திகதி கேமர் றோச் இன் பந்துவீச்சில் றிக்கி பொன்ரிங் காயமடைந்து retired hurt ஆனது மிகமுக்கியமானது.
பொன்ரிங்கின் துடுப்பாட்டத்தில் சரிவை ஏற்படுத்திய நிகழ்வு அது.
அத்தோடு டெனிஸ் லில்லியின் அலுமினியத் துடுப்பு விவகாரமும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அது நடைபெற்றது 1979ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி. (டிசம்பர் 14 தான் ரெஸ்ற் தொடங்கியது. நடைபெற்றது இரண்டாம் நாளில்)
சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷேன் வோண் அவுஸ்ரேலியாவில் விரும்பாத ஆடுகளம் பேர்த் மைதானம் தான்.
12 போட்டிகளில் 37 விக்கற்றுகள். SR: 77.1, சராசரி 36.45
ஆனால் அண்மைக்காலத்தில் பேர்த் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாகச் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2006 ஆஷஷ் தொடரில் மொன்ரி பனசரின் 5 விக்கற் பெறுதி, சுலைமான் பென் ஓரளவு சிறப்பாக வீசியமை குறிப்பிடத்தக்கன.
இனி மைதானத்தில் அணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால்,
அவுஸ்ரேலிய அணி பேர்த் இல் 37 போட்டிகளில் 21 இல் வென்றிருக்கிறது, 9 இல் தோற்றிருக்கிறது, 7 சமநிலையில்.
இங்கிலாந்திற்கெதிராக 11 போட்டிகளில் 7இல் வென்று, ஒன்றில் தோற்று, மூன்றைச் சமப்படுத்தியிருக்கிறது.
அண்மைக்காலத்தில் என்று பார்த்தால்,
2009ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக தோற்றமையையும், 2008ம் ஆண்டு டிசம்பரில் தென்னாபிரிக்காவுடன் தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.
அது தவிர, கடந்த ஆண்டு இதே டிசம்பர் 16 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மயிரிழையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
359 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 323 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தவிர தென்னாபிரிக்கா 414 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறுமனே 4 விக்கற்றுகளை இழந்து பெற்றதுவும் மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவது ஒன்றும் பெரிய சிரமமில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
இனி அணி விபரங்களைப் பார்த்தால்,
இங்கிலாந்தில் கடந்த ரெஸ்ற் இல் விளையாடிய 10 பேர் விளையாடுவது உறுதி. மகள் பிறப்பதற்காக இலண்டன் திரும்பிய அன்டர்சன் தேவையானளவு முன்பே பேர்த் இற்கு திரும்பிவிடுவார்.
அவர்களின் ஒரே பிரச்சினை ப்ரொட் இற்குப் பதிலாக யாரை விளையாட வைப்பது என்பதே ஆகும். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி அன்டி பிளவர், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே தன்னிடம் யோசனை/திட்டமிருக்கதாக சொல்லியிருந்தார்.
அனேகமாக ட்ரம்லெட் விளையாடவே வாய்ப்புண்டு.
தவிர சஷாத் மற்று் ப்ரஸ்னன் ஆகியோரும் விளையாட வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. றிவேர்ஸ் ஸ்விங் எதிர்பார்க்கப்படுவதால் ப்ரஸ்னன், சஷாத் ஆகியோர் பின்னிற்கப் போவதில்லை. எனினும் ட்ரெம்லெட் இன் உயரம் அவருக்கு மற்றையவர்களை விட அதிகமான வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி:
குக், ஸ்ட்ரோஸ், ட்ரொட், கெவின் பீற்றர்சன், கொலிங்வூட், பெல், ப்ரயர், ஸ்வான், ட்ரெம்லட், அன்டர்சன், ஃபின்
இதில் அலஸ்ரயர் குக் சிறந்த backfoot வீரர் என்றபடியால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒருவர் ஆகிறார்.
குக் இன் pull shot/hook shot விளையாடும் திறன் பேர்த் மைதானத்திற்கு உதவும்.
கடந்த பேர்த் ஆஷஷ் போட்டியில் இங்கிலாந்து 206 ஓட்டங்களால் (படு)தோல்வியடைந்த போதிலும், அப்போட்டியில் நான்காம் இனிங்ஸ் இல் குக் போராடிப் பெற்ற 116 ஓட்டங்கள் மிகமுக்கியமானவை, மிகப் பெறுமதிவாய்ந்தவை.
அத்தோடு தற்போதைய form இல் குக் மிகமுக்கிய நபராகிறார்.
பந்துவீச்சில் ட்ரெம்லட், ஃபின் மற்றும் அன்டர்சன் ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவமுடையவர்களாக மாறுகிறார்கள்.
அன்டர்சனின் form உம், பேர்த் இல் கிடைக்கும் ஸ்விங் ஐயும் பயன்படுத்த வேண்டியது அன்டர்சனின் பொறுப்பாகும்.
ப்ரோட் இல்லாத காரணத்தில் பந்துவீச்சை தொடக்கிவைக்கப் போகும் ஃபின் தனது உயரத்தின் காரணமாக பெறும் பவுண்ஸை சரியாகப் பயன்படுத்தினால் விக்கற்றுகளைக் கைப்பற்றலாம்.
ட்ரெம்லட்டின் உயரம் அவருக்கு சாதகத்தன்மையை வழங்கும்.
அவுஸ்ரேலியா சார்பாக ஹியூஸ், வொற்சன், பொன்ரிங், கிளார்க், ஹசி, ஹடின், ஸ்மித், ஜோன்சன், ஹரிஸ், ஹில்பன்ஹோஸ், சிடில் என்ற அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரரான மைக்கல் பியர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அரிது.
நோர்த் ஐ கழற்றிவிட்ட தேர்வாளர்கள் அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர்கள் யாரையும் அறிவிக்காத நிலையில், ஏற்கனவே அடிலெய்ட் இல் இலகுவாக ஆட்டமிழந்த 7 பேர் கொண்ட துடுப்பாட்ட வரிசைக்குப் பதில் 6 பேர்கொண்ட துடுப்பாட்ட வரிசை களமிறக்கப்படமாட்டாது என்பதால் ஸ்மித் விளையாடுவது நிச்சயம்.
மற்றையது ஸ்மித், பியர் இருவரும் பேர்த் ஆடுகளத்தில் விளையாடுவது அவுஸ்ரேலியக் கிறிக்கற்றில் நடப்பதற்கு சாத்தியமற்றது.
ஆகவே 5 துடுப்பாட்ட வீரர்கள், விக்கற் காப்பாளர், ஒரு சகலதுறை வீரர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற அணியே களமிறங்கும்.
எனினும் பியரின் தெரிவு அவுஸ்ரேலியத் தெரிவாளர்கள் மீதான விமர்சனத்தைக் கிளப்பிவிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
சுழற்பந்துவீச்சாளர்களை எந்தவித முன்யோசனையுமின்றித் தெரிவுசெய்து பின்னர் உடனே அவர்களை அணியிலிருந்து கழற்றிவிடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.
பியரை ஷேன் வோண் பிரேரித்திருந்த போதிலும், நதன் ஹொரிட்ஸின் form உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இருக்கும் நிலையில் ஏன் ஹொரிட்ஸைத் தெரிவுசெய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
யார் முதல்நிலைச் சுழற்பந்துவீச்சாளர் என்று பார்க்காமல் "நாங்கள் இதுவரை யாரைப் பரீட்சிக்கவில்லை" என்ற மனநிலையில் தேர்வாளர்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில்/தொடருக்கு முன்னைய பயிற்சி ஆட்டங்களில் பிலிப் ஹியூஸ் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்பட்டார்.
முதலிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததன் பின்பு அப்போது தகுதியற்றவர் என்று கருதப்பட்ட ஷென் வொற்சனால் மூன்றாவது போட்டிக்கு ஹியூஸ் பிரதியிடப்பட்டார்.
இன்று அதே ஷேன் வொற்சனோடு சேர்ந்து ஆடப் போகிறார்.
(இதே மூன்றாவது போட்டிக்கு முன்னர்தான் ஹியூஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்பு ருவிற்றரில் தான் தெரிவாகாதாததை அறிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.)
கடந்த ஆண்டு 16ம் திகதி பொன்ரிங் பந்தொன்றால் தாக்கப்பட்டு தனது கிறிக்கற் வாழ்வில் முன்முதலாக retired hurt ஆனார்.
அதன்பின்னர் பொன்ரிங் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்படுவதும், முன்பைப் போலல்லாது பொன்ரிங் தற்போது பவுண்சர்களை அடித்தாடுவது குறைந்து பவுண்சர் பந்துகள் அவரது பிரச்சினைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக பொன்ரிங்கை நோக்கி பவுண்சர் மழை பொழிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
அத்தோடு இந்த ஆஷஷ் தொடரில் பொன்ரிங் அவ்வளவு சிறப்பாகச் செயற்படாமை அவர் மீதான அழுத்தத்தை வழங்கும்.
கிறிக்கற் அவுஸ்ரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் "பொன்ரிங் மீது எங்களுக்கு வீரராகவும், அணித்தலைவராகவும் முழு நம்பிக்கையுண்டு. அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு" என்று சொல்லியிருக்கிற போதிலும், மேல்நிலை அதிகாரி ஒருவர் "இந்த வீரருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அவரின் நம்பிக்கை உண்டு" என்று அறிக்கை விடுகிறாரானால் ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் என்பதை அனுபவமிக்க பொன்ரிங் அறியாமலிருப்பார் என்று நான் நம்பவில்லை.
ஜோன்சன் இங்கு விளையாடி 3 போட்டிகளில் 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பதோடு 135 ஓட்டங்களையும் மொத்தமாகப் பெற்றிருக்கிறார்.
பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
கடந்த இரண்டு போட்டிகளை விட அவுஸ்ரேலியா புதிய தெம்புடன் களமிறங்கப் போகிறது, தங்கள் களத்தடுப்பை விருத்திசெய்தார்களாயின் இங்கிலாந்திற்கு நிச்சயமாக நெருக்கடி வழங்கமுடியும்.
களத்தடுப்பு என்பது அணியில் வீரர்களின் மனநிலையை இலகுவாக வெளிப்படுத்தும், கடந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய வீரர்கள் 100 வீதம் சிறந்த மனநிலையில் இருக்கவில்லை என்பதை அவர்களின் களத்தடுப்பு உணர்த்தியது.
எது எப்படியோ, அவுஸ்ரேலியா வழமைக்கு மாறாக தங்கள் கோட்டைகளில் ஒன்றான பேர்த் இல் underdogs என்று சொல்லப்படுகின்ற, வெற்றிபெற வாய்ப்புக் குறைந்த அணியாகக் களமிறங்குகிறது, இது அவர்களுக்குப் புதிதானது, எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பி.கு 1: தனியாகக் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய படங்கள் ESPNcricinfo.com இலிருந்து பெறப்படடவை.
பி.கு 2: தலைப்பு சொல்கிறபடி ஆய்வேதும் இல்லை. சுருக்கிய தலைப்பிற்காக ஆய்வு என்று பயன்படுத்தினேன்.

வேகம் மட்டுமல்ல, அழகும் தான்.

அந்தத் தருணம்
அத்தோடு டெனிஸ் லில்லியின் அலுமினியத் துடுப்பு விவகாரமும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அது நடைபெற்றது 1979ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி. (டிசம்பர் 14 தான் ரெஸ்ற் தொடங்கியது. நடைபெற்றது இரண்டாம் நாளில்)
சர்ச்சை இடம்பெறுகிறது. நன்றி இன்டிபென்டன்ற்.
சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷேன் வோண் அவுஸ்ரேலியாவில் விரும்பாத ஆடுகளம் பேர்த் மைதானம் தான்.
12 போட்டிகளில் 37 விக்கற்றுகள். SR: 77.1, சராசரி 36.45
ஆனால் அண்மைக்காலத்தில் பேர்த் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாகச் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2006 ஆஷஷ் தொடரில் மொன்ரி பனசரின் 5 விக்கற் பெறுதி, சுலைமான் பென் ஓரளவு சிறப்பாக வீசியமை குறிப்பிடத்தக்கன.
இனி மைதானத்தில் அணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால்,
அவுஸ்ரேலிய அணி பேர்த் இல் 37 போட்டிகளில் 21 இல் வென்றிருக்கிறது, 9 இல் தோற்றிருக்கிறது, 7 சமநிலையில்.
இங்கிலாந்திற்கெதிராக 11 போட்டிகளில் 7இல் வென்று, ஒன்றில் தோற்று, மூன்றைச் சமப்படுத்தியிருக்கிறது.
அண்மைக்காலத்தில் என்று பார்த்தால்,
2009ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக தோற்றமையையும், 2008ம் ஆண்டு டிசம்பரில் தென்னாபிரிக்காவுடன் தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.
அது தவிர, கடந்த ஆண்டு இதே டிசம்பர் 16 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மயிரிழையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
359 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 323 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தவிர தென்னாபிரிக்கா 414 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறுமனே 4 விக்கற்றுகளை இழந்து பெற்றதுவும் மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவது ஒன்றும் பெரிய சிரமமில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
இனி அணி விபரங்களைப் பார்த்தால்,
இங்கிலாந்தில் கடந்த ரெஸ்ற் இல் விளையாடிய 10 பேர் விளையாடுவது உறுதி. மகள் பிறப்பதற்காக இலண்டன் திரும்பிய அன்டர்சன் தேவையானளவு முன்பே பேர்த் இற்கு திரும்பிவிடுவார்.
அவர்களின் ஒரே பிரச்சினை ப்ரொட் இற்குப் பதிலாக யாரை விளையாட வைப்பது என்பதே ஆகும். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி அன்டி பிளவர், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே தன்னிடம் யோசனை/திட்டமிருக்கதாக சொல்லியிருந்தார்.
அனேகமாக ட்ரம்லெட் விளையாடவே வாய்ப்புண்டு.
தவிர சஷாத் மற்று் ப்ரஸ்னன் ஆகியோரும் விளையாட வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. றிவேர்ஸ் ஸ்விங் எதிர்பார்க்கப்படுவதால் ப்ரஸ்னன், சஷாத் ஆகியோர் பின்னிற்கப் போவதில்லை. எனினும் ட்ரெம்லெட் இன் உயரம் அவருக்கு மற்றையவர்களை விட அதிகமான வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயரம் தான் ட்ரெம்லற் இற்கு சாதகமாக...
இங்கிலாந்து அணி:
குக், ஸ்ட்ரோஸ், ட்ரொட், கெவின் பீற்றர்சன், கொலிங்வூட், பெல், ப்ரயர், ஸ்வான், ட்ரெம்லட், அன்டர்சன், ஃபின்
இதில் அலஸ்ரயர் குக் சிறந்த backfoot வீரர் என்றபடியால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒருவர் ஆகிறார்.
குக் இன் pull shot/hook shot விளையாடும் திறன் பேர்த் மைதானத்திற்கு உதவும்.
கடந்த பேர்த் ஆஷஷ் போட்டியில் இங்கிலாந்து 206 ஓட்டங்களால் (படு)தோல்வியடைந்த போதிலும், அப்போட்டியில் நான்காம் இனிங்ஸ் இல் குக் போராடிப் பெற்ற 116 ஓட்டங்கள் மிகமுக்கியமானவை, மிகப் பெறுமதிவாய்ந்தவை.
அத்தோடு தற்போதைய form இல் குக் மிகமுக்கிய நபராகிறார்.
2006ஆண்டு சதத்தைக் கொண்டாடும் குக்.
பந்துவீச்சில் ட்ரெம்லட், ஃபின் மற்றும் அன்டர்சன் ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவமுடையவர்களாக மாறுகிறார்கள்.
அன்டர்சனின் form உம், பேர்த் இல் கிடைக்கும் ஸ்விங் ஐயும் பயன்படுத்த வேண்டியது அன்டர்சனின் பொறுப்பாகும்.
ப்ரோட் இல்லாத காரணத்தில் பந்துவீச்சை தொடக்கிவைக்கப் போகும் ஃபின் தனது உயரத்தின் காரணமாக பெறும் பவுண்ஸை சரியாகப் பயன்படுத்தினால் விக்கற்றுகளைக் கைப்பற்றலாம்.
ட்ரெம்லட்டின் உயரம் அவருக்கு சாதகத்தன்மையை வழங்கும்.
அவுஸ்ரேலியா சார்பாக ஹியூஸ், வொற்சன், பொன்ரிங், கிளார்க், ஹசி, ஹடின், ஸ்மித், ஜோன்சன், ஹரிஸ், ஹில்பன்ஹோஸ், சிடில் என்ற அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரரான மைக்கல் பியர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அரிது.
நோர்த் ஐ கழற்றிவிட்ட தேர்வாளர்கள் அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர்கள் யாரையும் அறிவிக்காத நிலையில், ஏற்கனவே அடிலெய்ட் இல் இலகுவாக ஆட்டமிழந்த 7 பேர் கொண்ட துடுப்பாட்ட வரிசைக்குப் பதில் 6 பேர்கொண்ட துடுப்பாட்ட வரிசை களமிறக்கப்படமாட்டாது என்பதால் ஸ்மித் விளையாடுவது நிச்சயம்.
மற்றையது ஸ்மித், பியர் இருவரும் பேர்த் ஆடுகளத்தில் விளையாடுவது அவுஸ்ரேலியக் கிறிக்கற்றில் நடப்பதற்கு சாத்தியமற்றது.
ஆகவே 5 துடுப்பாட்ட வீரர்கள், விக்கற் காப்பாளர், ஒரு சகலதுறை வீரர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற அணியே களமிறங்கும்.
எனினும் பியரின் தெரிவு அவுஸ்ரேலியத் தெரிவாளர்கள் மீதான விமர்சனத்தைக் கிளப்பிவிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
சுழற்பந்துவீச்சாளர்களை எந்தவித முன்யோசனையுமின்றித் தெரிவுசெய்து பின்னர் உடனே அவர்களை அணியிலிருந்து கழற்றிவிடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.
பியரை ஷேன் வோண் பிரேரித்திருந்த போதிலும், நதன் ஹொரிட்ஸின் form உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இருக்கும் நிலையில் ஏன் ஹொரிட்ஸைத் தெரிவுசெய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மைக்கேல் பியர், தேர்வாளர்களின் புதிய தெரிவு.
யார் முதல்நிலைச் சுழற்பந்துவீச்சாளர் என்று பார்க்காமல் "நாங்கள் இதுவரை யாரைப் பரீட்சிக்கவில்லை" என்ற மனநிலையில் தேர்வாளர்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில்/தொடருக்கு முன்னைய பயிற்சி ஆட்டங்களில் பிலிப் ஹியூஸ் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்பட்டார்.
முதலிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததன் பின்பு அப்போது தகுதியற்றவர் என்று கருதப்பட்ட ஷென் வொற்சனால் மூன்றாவது போட்டிக்கு ஹியூஸ் பிரதியிடப்பட்டார்.
இன்று அதே ஷேன் வொற்சனோடு சேர்ந்து ஆடப் போகிறார்.
(இதே மூன்றாவது போட்டிக்கு முன்னர்தான் ஹியூஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்பு ருவிற்றரில் தான் தெரிவாகாதாததை அறிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.)
அவசரப்பட்ட ஹியூஸ். (நன்றி http://www.abc.net.au )
கடந்த ஆண்டு 16ம் திகதி பொன்ரிங் பந்தொன்றால் தாக்கப்பட்டு தனது கிறிக்கற் வாழ்வில் முன்முதலாக retired hurt ஆனார்.
அதன்பின்னர் பொன்ரிங் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்படுவதும், முன்பைப் போலல்லாது பொன்ரிங் தற்போது பவுண்சர்களை அடித்தாடுவது குறைந்து பவுண்சர் பந்துகள் அவரது பிரச்சினைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக பொன்ரிங்கை நோக்கி பவுண்சர் மழை பொழிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
அத்தோடு இந்த ஆஷஷ் தொடரில் பொன்ரிங் அவ்வளவு சிறப்பாகச் செயற்படாமை அவர் மீதான அழுத்தத்தை வழங்கும்.
கிறிக்கற் அவுஸ்ரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் "பொன்ரிங் மீது எங்களுக்கு வீரராகவும், அணித்தலைவராகவும் முழு நம்பிக்கையுண்டு. அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு" என்று சொல்லியிருக்கிற போதிலும், மேல்நிலை அதிகாரி ஒருவர் "இந்த வீரருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அவரின் நம்பிக்கை உண்டு" என்று அறிக்கை விடுகிறாரானால் ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் என்பதை அனுபவமிக்க பொன்ரிங் அறியாமலிருப்பார் என்று நான் நம்பவில்லை.
ஜோன்சன் இங்கு விளையாடி 3 போட்டிகளில் 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பதோடு 135 ஓட்டங்களையும் மொத்தமாகப் பெற்றிருக்கிறார்.
பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
பந்துவீசுவது யாரென்று நினைக்கிறீர்கள்? (தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்ரேலியா. Cape town இல்)
கடந்த இரண்டு போட்டிகளை விட அவுஸ்ரேலியா புதிய தெம்புடன் களமிறங்கப் போகிறது, தங்கள் களத்தடுப்பை விருத்திசெய்தார்களாயின் இங்கிலாந்திற்கு நிச்சயமாக நெருக்கடி வழங்கமுடியும்.
களத்தடுப்பு என்பது அணியில் வீரர்களின் மனநிலையை இலகுவாக வெளிப்படுத்தும், கடந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய வீரர்கள் 100 வீதம் சிறந்த மனநிலையில் இருக்கவில்லை என்பதை அவர்களின் களத்தடுப்பு உணர்த்தியது.
தனது பந்துவீச்சில் பிடிதவறவிடப்பட்ட பின்னர் பொலிஞ்சர்.
எது எப்படியோ, அவுஸ்ரேலியா வழமைக்கு மாறாக தங்கள் கோட்டைகளில் ஒன்றான பேர்த் இல் underdogs என்று சொல்லப்படுகின்ற, வெற்றிபெற வாய்ப்புக் குறைந்த அணியாகக் களமிறங்குகிறது, இது அவர்களுக்குப் புதிதானது, எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பி.கு 1: தனியாகக் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய படங்கள் ESPNcricinfo.com இலிருந்து பெறப்படடவை.
பி.கு 2: தலைப்பு சொல்கிறபடி ஆய்வேதும் இல்லை. சுருக்கிய தலைப்பிற்காக ஆய்வு என்று பயன்படுத்தினேன்.
Labels:
அவுஸ்ரேலியா,
ஆஷஷ்,
இங்கிலாந்து,
கிறிக்கற்
Thursday, December 9, 2010
அடிவாங்கிய அவுஸ்ரேலியாவும், ஏறி மிதித்த இங்கிலாந்தும்.
5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் முதலிரண்டு (முதலாவது என்றே சொல்லலாம்) போட்டிகள் முடிவடைந்த பின்னர் போட்டித் தொடரை நடாத்தும் அணி உளரீதியாக மோசமாக அடிவாங்கியது எனக்குத் தெரிந்து இந்த ஆஷஷில் தான்.
அன்டி பிளவரின் பயிற்றுவிப்பின் கீழ் இங்கிலாந்தின் அண்மைக்கால வேகமான முன்னேற்றமும், consistency உம் இங்கிலாந்தை வெற்றிபெற அதிக வாய்ப்புடையவர்கள் என்று முத்திரை குற்றியிருந்தாலும் அவுஸ்ரேலியாவை ஒரேயடியாக கவனிக்காமல் விடவும் முடியாமலிருந்தது. குறிப்பாக சொந்த நாட்டில் அவுஸ்ரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரை இலகுவாக இழக்கும் என்று கிறிக்கற் விமர்சகர்களால் தவறவிடவும் முடியாதிருந்தது.
எனினும் இங்கிலாந்தை அனேகமானோர் favourites ஆக முத்திரை குற்றியிருந்தார்கள்.
அந்த முத்திரை முதற்போட்டியில் மூன்றாவது பந்திலேயே ஆட்டம் கண்டது.
ஸ்ட்ரோஸ் 3ஆவது பந்தில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இது பொட்டித்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பின்னர் அவுஸ்ரேலியா இங்கிலாந்தை 260 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய அதன்பின்னர் அவுஸ்ரேலியா திடீரென வெற்றியாளர்கள் போல் தென்பட்டது.
அதுவும் 78 ஓட்ட ஆரம்பத் துடுப்பாட்ட இணைப்பாட்டம் திடீரென இங்கிலாந்தை பின்னிலைக்குத்தள்ளியது. ஆனால் தொடர்ச்சியான விக்கற்றுகளின் விளைவால் அவுஸ்ரேலியா திடீரென 143 ஓட்டங்களுக்கு 5 விக்கற்றுகளை இழக்க அவுஸ்ரேலியா 117 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது, களத்தில் out of form என்று கருதப்பட்ட ஹசியும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரெஸ்ற் போட்டிகள் விளையாடாத ஹடினும் இருக்க இங்கிலாந்து 200 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலியாவை ஆட்டமிழக்கச் செய்யும் என எதிர்பார்க்க ஹசியும், ஹடினும் மிக அருமையாக ஆடி தங்கள் அணி 481 ஓட்டங்களைப் பெற உதவினார்கள்.
ஹசி தனது இரட்டைச் சதத்தை 5 ஓட்டங்களால் தவறவிட்டார்.
221 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இங்கிலாந்திடம் கேட்கப்பட்டது இனிங்ஸ் தோல்வியா அல்லது சாதாரண தோல்வியா என்பது மட்டுமே. ஆனால் 188 ஓட்ட ஆரம்பத்துடுப்பாட்ட இணைப்பாட்டம் போட்டியின் போக்கை முழுவதுமாக மாற்றியது. ஸ்ட்ரோஸ், ட்ரொட் ஆகியோர் சதமடிக்க குக் இரட்டைச்சதத்தை எந்தவித அழுத்தமும் இன்றி பெற்றார்கள்.
517 ஓட்டங்களை வெறுமனே ஒரே ஒரு விக்கற்றை இழந்து பெற்றது.
அவுஸ்ரேலியா சார்பாக ஷேன் வொற்சன் மற்றும் நோர்த் ஆகியோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசினார்கள்.
எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் டொகேர்ட்டி எந்த வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
முதல் இனிங்ஸில் ஹட் ட்ரிக் எடுத்த சிடிலும் ஒழுங்காக வீசவில்லை. ஹில்பன்ஹோஸ் உம் போதியளவு சிறப்பாக வீசவில்லை.
ஜோன்சன் மோசமாக வீசினார். ஒரு பந்துப்பரிமாற்றத்தில் ஒரு பந்து நேராக வீசுவதே ஜோன்சனுக்கு சாதனையாகப் போய்விட்டது.
ஸ்ட்ரோஸ் இற்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்பில் ஒரு weakness இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரோஸ் இந்த உலகத்தில் விரும்பும் பந்துவீச்சாளராக ஜோன்சன் தான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அவுஸ்ரேலிய அணி இரண்டாவது இனிங்ஸில் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.26 பந்துப்பரிமாற்றங்களில் 107 ஓட்டங்களைப் பெற்றது, ஒரு விக்கற்றை இழந்து. பொன்ரிங் மிகச்சிறப்பாக ஆடினார்.
பொன்ரிங்கை short பந்துகள் மூலம் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சிகள் இங்கிலாந்துக்கு எதிராகவே முடிந்தது.
என்றாலும் 517 ஓட்டங்கள், 152 பந்துப்பரிமாற்றங்களில் வெறுமனே ஒரே ஒரு விக்கற்றை மட்டும், அதுவும் பகுதிநேரப்பந்துவீச்சாளராலேயே கைப்பற்றப்பட்டது இங்கிலாந்தை சிறந்த மனநிலையுடனும், அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சுப் பற்றிய ஏராளமான கேள்விகளையும் எழுப்பியது.
இதன்படி இரண்டாவது போட்டிக்கான அணியில் ஹில்பன்ஹோஸ், ஜோன்சன் ஆகியோர் நீக்கப்பட்டு ஹரிஸ் மற்றும் பொலிஞ்சர் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.
இம்முறை துடுப்பாட்ட வீரர்கள் காலை வாரிவிட முதலாவது இனிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு அவுஸ்ரேலியா ஆட்டமிழக்க புதிய பந்துவீச்சு இணை ஸ்ட்ரோஸை விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்து நம்பிக்கை அளித்தாலும் இம்முறை முன்பைவிட மோசமாக 152 பந்துப்பரிமாற்றங்களில் 620 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது. 5 விக்கற்றுகளைக் கைப்பற்றியது.
கெவின் பீற்றர்சன் இரட்டைச்சதமடித்தார்.
இனிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தல், சமநிலை முடிவு என்ற இரண்டையும் நோக்கிக் களமிறங்கிய அவுஸ்ரேலியா 304 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இன்னும் சிறிது பொறுப்பாக 5ஆம்நாளில் மேலும் 10 அல்லது 15 பந்துப்பரிமாற்றங்கள் ஆடியிருந்தால் பின்னேர மழை காரணமாக சமநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அவுஸ்ரேலியாவின் கீழ்நிலை நம்பிக்கை மட்டத்தால் அதைச் செய்ய முடியாமல் போனது.
பேர்த் இல் நடைபெறவுள்ள போட்டி தொடர்பில் ஏராளமான குழப்பங்கள் அவுஸ்ரேலியா சார்பாக.
எனக்குத் தெரிந்து அவுஸ்ரேலியாவின் நிறையக் குழப்பங்களுக்கு இலங்கையுடனான ஒருநாள் தொடரும் ஒரு காரணம்.
தனது அறிமுகப் போட்டியில் டொகேர்ட்டி சிறப்பாகப் பந்துவீசியதும், இந்தியத் தொடரில் ஹொரிட்ஸ் தடுமாறியதும் சேர்ந்து டொகேர்ட்டியை அணிக்குள் கொண்டுவந்தன. ஆனால் டொகேர்ட்டியின் தெரிவு பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரின் முதற்தரப்போட்டிப் பெறுபேறுகள் மோசமானவையாக இருந்தபோதிலும் கெவின் பீற்றர்சனுக்காக இத்தெரிவு ஏற்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கப்படுகிறது.
இறுதியில் கெவின் பீற்றர்சன் டொகேர்ட்டியை அடித்துத் துவைத்தெடுத்தார்.
ரெஸ்ற் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் flight மற்றும் பந்தை மெதுவாக வீசும் ஆற்றல் டொகேர்ட்டியிடம் இல்லை.
ஹர்பஜன் சிங்கின் அண்மைக்கால ரெஸ்ற் பந்துவீச்சுச் சரிவுக்கும் இதுதான் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக,
வெறுமனே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட தெரிவு அவுஸ்ரேலியாவை மோசமாகவே பாதித்தது.
தவிர முன்னிலை வீரர்களின் மோசமான form உம் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக அமைந்தது.
கற்றிச் தடுமாறியது, ஷேன் வொற்சன் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற்றுவந்தாலும் பெரிய சதமொன்றைப் பெறாமல் ஆட்டமிழப்பதும், பொன்ரிங் தேவையான நேரத்தில் அணிக்குக் கைகொடுக்காமையும், கிளார்க் ஒரு இனிங்ஸைத் தவிர மோசமாக விளையாடியதும், நோர்த் தொடர்ந்து மோசமாக விளையாடியதும் அவுஸ்ரேலியா தோற்பதற்கு தேவையை விட அதிகமாகவே உதவியது.
ஹசி, ஹடின், வொற்சனையும் தவிர அவுஸ்ரேலியத் துடுப்பாட்ட வீரர்கள் தேவையானளவு துடுப்பெடுத்தாடவில்லை.
பந்துவீச்சில் இதுவரை விளையாடியவர்களின் நோர்த், வொற்சன் ஆகியோர் ஓரளவு பரவாயில்லாமல் பந்துவீசினார்கள். ஹரிஸ் இரண்டாவது போட்டியில் ஓரளவு பரவாயில்லாமல் பந்துவீசினார்.
டொகேர்ட்டி ரெஸ்ற் அரங்கிற்கு ஏற்றவாறு வீசவில்லை, ஜோன்சன் மோசமாக வீசினார், சிடில் - அந்த ஹட் ட்ரிக் தவிர பெரிதான வீசவில்லை,
பொலிஞ்சர் உடல் ரீதியாக 100% தயாரில்லை என்று வெளிப்படையாகவே தெரிந்தது, ஹில்பன்ஹோஸ் எதிர்பார்த்தளவு வீசவில்லை.
அடுத்த போட்டியில் காயமடைந்த கற்றிச் இற்குப் பதிலாக ஹியூஸ் அணிக்குள் வருவது ஓரளவு உறுதி.
டொகேர்ட்டிக்குப் பதில் ஹொரிட்ஸ் வருவதும் ஓரளவு உறுதி.
பொலிஞ்சர் வெளியேறி, பொலிஞ்சருக்குப் பதில் ஜோன்சனும், சிடிலுக்குப் பதில் ஹில்பன்ஹோஸூம் அணிக்குள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
தவிர, நோர்த் இற்குப் பதில் கவாஜா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளைகளில் நோர்த் இற்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படலாம் போலும் இருக்கிறது.
ஆரம்பகாலங்களில் இருந்தது போன்றல்லாவது, பேர்த் ஆடுகளம் இப்போது பொதுவாக வேகத்திலும், பவுண்சிலும் குறைந்திருந்தாலும் அண்மையில் நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் பழைய பேர்த் ஆடுகளம் போன்று வேகமாக இருந்தது. ஆகவே மிற்சல் ஜோன்சன் பந்தை நேரே வீசினால் விக்கற்றுகளைக் கைப்பற்ற இயலும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து பேர்த் மைதானத்தில் காணப்படும் காற்று ஹில்பன்ஹோஸின் ஸ்விங் பந்துவீச்சுக்கு உதவும், கடந்த போட்டியைப் போன்று ஹரிஸ் பந்துவீசினால் அதிக விக்கற்றுகளைக் கைப்பற்றலாம் என்று தெரிவாளர்கள் எதிர்பார்க்கலாம்.
கடந்த இருபதுக்கு இருபது போட்டியில் ரந்தீவ் பெற்ற சுழற்சியும் பவுண்சும் ஹொரிட்ஸிற்கு உதவலாம்.
வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சுமுகமாகத் தெரிந்தாலும் இவை எந்தளவுக்கு உதவப் போகின்றன என்பதுவும், சாத்தியமா என்பதும் கேள்விக்குரியது.
அத்தோடு இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களின் அசுர form இற்கு இவை தாக்குப் பிடிக்குமா என்பதுவும் பெரிய கேள்விக்குரிய விடயம்.
மறுபுறத்தில், இங்கிலாந்து பெரியளவுக்குப் பிரச்சினைகளின்றி ஆடிவருகிறது. காயமடைந்த ப்ரோட் இற்குப் பதில் ட்ரெம்லட் அல்லது சஷாத் அணிக்குள் வருவார்கள். ட்ரெம்லட் வர அதிக வாய்ப்புண்டு.
பேர்த் ஆடுகளத்தில் ப்ரோட்டின் பந்துவீச்சை இங்கிலாந்து தவறவிடும் என்றாலும், ஸ்ரிவ் ஃபின் இன் உயரம் காரணமாக கிடைக்கும் பவுண்ஸ் நிச்சயமாக இங்கிலாந்துக்கு உதவும்.
அத்தோடு இங்கிலாந்தின் பலமான துடுப்பாட்ட வரிசையை அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை குறைவான பந்துவீச்சு வரிசையால் இரண்டுமுறை ஆட்டமிழக்கச் செய்ய முடியுமா என்பது போட்டி தொடங்கும்வரை கேள்விக்குறியே.
அவுஸ்ரேலியா சார்பாக யாராவது ஒரு பந்துவீச்சாளர் கதாநாயகத்தனத்துடன் பந்துவீசினாலொழிய அவுஸ்ரேலிய பேர்த் இலும் கடந்த போட்டிகளைப் போன்று சரிவையே சந்திக்க வேண்டி ஏற்படும்.
தென்னாபிரிக்காவை பேர்த் இல் உருட்டியெடுத்த மிற்சல் ஜோன்சனின் பாதி கூட அவுஸ்ரேலியாவுக்கு பெரிதும் உதவும்.
http://bringbackwarne.com/ போன்றனவற்றில் பெரியளவு logic இருப்பதாக எனக்குப்படவில்லை. ஷேன் வோணா அல்லது ஹொரிட்ஸா என்றால் என் தெரிவு ஹொரிட்ஸாகவே இருக்கும்.
இது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு எழுப்பப்படும் கோசமே ஆகும்.
(இங்கிலாந்தினர் எவ்வளவு மகிழ்வாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். வாகனத்தை வேகமாக ஓட்டிய குற்றச்சாட்டில் கெவின் பீற்றர்சனுக்கு 239 டொலர்கள் அபராதமும், 3 புள்ளிகள் கழிக்கப்பட்டிருப்பதாகவும் அறியக் கிடைத்தது. இங்கிலாந்தினர் வேகமாகவே இருக்கிறார்கள்.

Subscribe to:
Posts (Atom)