Tuesday, February 8, 2011

முரளிக்குப் பின் சுழற்பந்துவீச்சு....

ரெஸ்ற் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வுபெறுகின்ற நிலையில் முரளிதரனுக்குப் பின்னரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சுழற்பந்துவீச்சாளர்களைப் பற்றி ஆராய்கிறது இப்பகுதி.


ராஜா

தட்டையான ஆடுகளங்கள், குறுகிய எல்லைக்கோடுகள், தடிப்பான துடுப்பு மட்டைகள், பவர் பிளேக்கள் என்று சுழற்பந்துவீச்சுக்கு எதிரான எல்லாவற்றையும் கொண்ட தற்போதைய ஒருநாள் போட்டிகளில் இன்னமும் சுழற்பந்துவீச்சாளர்கள் திறமையாகச் செயற்படுகிறார்கள் என்பது சுழற்பந்துவீச்சின் தனித்தன்மைகளில் ஒன்று.
முரளிதரனுக்குப் பின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட வாய்ப்புண்டு என அறிவதற்காக கடந்த 5 வருடங்களில் வீரர்களின் பெறுபேறுகளை ஆராய்ந்து அது தொடர்பாக இந்தப் பதிவு.

கடந்த 5 வருடங்களில் சுழற்பந்து அல்லது மெதுவான பந்துவீசுபவர்களில் முன்னிலை வகிக்கும் சிலராக,
பங்களாதேஷின் அப்துர் ரஷாக் மற்றும் ஷகிப் அல் ஹசன், விற்றோரி, முரளிதரன், அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்றைஸ், போத்தா, சுவான் ஆகியோரைக் குறிப்பிடலாம்.


இதில் அப்துர் ரஷாக் 105 போட்டிகளில் 155 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடந்த 5 வருடங்களில் சிறப்பாகப்பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளராக இருக்கிறார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அப்துர் ரஷாக் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை அண்மையில் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக 4 தடவைகள் யாரும் இதுவரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை 4 விக்கெட் பெறுதிகள், 3 முறை 5 விக்கெட் பெறுதிகள் என்று ஏனைய சுழற்பந்துவீச்சாளர்களிடமிருந்து தனித்துத் தெரிகிறார் ரஷாக். சிறந்த சுழற்பந்துவீச்சாளராக பரவலாக பேசப்படாமலேயே ஏனைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் என்று கருதப்படுபவர்களை விட அணிக்காக சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார் ரஷாக்.


அடுத்தவரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரே. பங்களாதேஷ் அணியின் தற்போதைய தலைவராக ஷகிப் அல் ஹசனே அவர். 101 இனிங்ஸ்களில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் அல் ஹசன், ஓர் சகலதுறை வீரர் என்பதிலிருந்து கடந்த காலங்களில் பங்களாதேஷ் முன்னேறியிருப்பதற்கான தெளிவான காரணம் புலப்படுகிறது. தங்கள் அணிக்காக தனியே சுழற்பந்துவீச்சாளராக விளையாடுபவர்களை விட ஒரு சகலதுறை வீரர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பது, அதுவும் பங்களாதேஷ் போன்ற ஓர் சிறிய, வலிமை குறைநத நாட்டிலிருந்து கைப்பற்றியிருப்பது அல் ஹசனின் திறமையை தனித்து சிறப்பித்துக் காட்டுகிறது.

சுழற்பந்துவீச்சு இரட்டையர்கள்!


முதலிரண்டு இடங்களில் இரு பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது இந்த உலகக்கிண்ணத்தில் அவர்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை ஆவலுடன் உற்றுநோக்க வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


அதற்கடுத்த நிலையில் விற்றோரி இருக்கிறார். 92 இனிங்ஸ்களில் 118 விக்கெட்டுகள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம், முதல் 3 பேரும் இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பதுதான்.

அடுத்த இடத்தில் முரளி, அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்ரட் ஹொக், ப்றைஸ், போத்தா, ஸ்வான், யுவ்ராஜ் என்று அந்த வரிசை நீண்டு செல்கிறது. எனினும் முதல் 3 பேரோடும் ஒப்பிடும்போது முரளி, ஸ்வான் இருவரைத்தவிர ஏனையவர்கள் சிறப்பாகப்பந்துவீசுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.


இதில் குறிப்பிடத்தக்க ஒரு வீரர், க்ரேம் ஸ்வான். ஓஃவ் ஸ்பின்னர் என்றால் தூஸ்ராவைக் கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் நிலைக்கலாம் என்று முரளிக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத விதிக்கு மாறாக தூஸ்ரா இல்லாமல் சர்வதேசக் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் பிரகாசித்து வருபவர். உலகின் தற்போதைய முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராகக் கணிக்கப்படும் வீரர், எனினும் ஸ்வான் தன்னை நிரூபிக்க வேண்டிய விடயங்களும் உண்டு.



Drift and spin from Swann.
எதிர்வரும் உலகக்கிண்ணத்தில் ஸ்வானின் திறமை வெளிப்பாடுகள் ஸ்வான் மீதான கணிப்பீடுகளை மேற்கொள்ள அளவீடாகப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.


இங்கு சிம்பாப்வேயின் றே ப்றைஸ், புரொஸ்பர் உற்செயா இருவர் பற்றியும் பார்க்க வேண்டிய கட்டாயமுண்டு.




சிம்பாப்வே சார்பாக ஆரம்பப் பந்துவீச்சாளர்களாகவும் அடிக்கடி செயற்படும் இந்த இருவரும் தற்போதைய ஒருநாள் போட்டிகள் சுழற்பந்துவீச்சாளர்களிடம் எதிர்பார்க்கும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தல் என்ற பணியை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
ஏனைய முன்னணிச் சுழற்பந்துவீச்சாளர்களளவுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறன் இல்லாவிட்டாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி அழுத்தங்களை அதிகரித்து மற்றைய புறத்தில் பந்துவீசும் பந்துவீசும் பந்துவீச்சாளருக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வாய்ப்பினை அதிகரிப்பதற்கு இவ்வகையான பந்துவீச்சு நிச்சயமாக உதவக்கூடிய ஒன்று.


முடிவாக,
எதிர்காலத்தில் சுழற்பந்துவீச்சு அழியக்கூடிய அல்லது வெற்றிபெற முடியாத ஒன்றாக கருதப்பட்டிருந்தாலும், ரஷாக், ஹகிப் அல் ஹசன், ஸ்வான் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.

குறிப்பு: இது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியான V for Vettri, V for விளையாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஒலிபரப்பான 4 தலைப்புகளில் ஒன்று.
பதிவுக்காக இதைக் கொஞ்சம் நீட்டி எழுதலாம் என்று வைத்திருந்தால் அது நடப்பதாகக் காணோம்.
எனவே அப்படியே பதிவிடுகிறேன். அடுத்த வாரத் தலைப்புக்களில் ஒன்றை முடியுமானளவு விரிவாகத் தர முயற்சிக்கிறேன்.

15 பின்னூட்டங்கள்:

றமேஸ்-Ramesh said...

mmmm :) 1st wkt

ம.தி.சுதா said...

வாழ்த்தக்களும் நன்றிகளும் கோபி..

மைந்தன் சிவா said...

இனி வரும் காலங்களில் "முன்னணி சுழல்பந்து வீச்சாளர்களாக" என்று தான் குறிப்பிட முடியுமே அன்றி முன்னணி சுழல் பந்து வீச்சாளர் என்று யாரையும் குறிப்பிட முடியாது.
அப்படி இருந்தாலும் நீண்ட காலத்துக்கு இருக்க முடியாது..

நிரூசா said...

இதில் சுழற்பந்து வீச்சாளரான சகலதுறை வீரர் கோபிகிருஷ்ணாவின் பெயரைக் காணவில்லையே?

LOSHAN said...

நல்ல அலசல்.
என் குரலிலேயே இது நிகழ்ச்சியில் ஒலித்தததால் நானே இதை அதிகம் சிலாகிக்கக் கூடாது.
ஆனால் கங்கோனை விட்டால் இப்படி அலச வேறு யாரும் கிடையாது

LOSHAN
www.arvloshan.com

LOSHAN said...

நிரூசா said...
இதில் சுழற்பந்து வீச்சாளரான சகலதுறை வீரர் கோபிகிருஷ்ணாவின் பெயரைக் காணவில்லையே?//
AHEM

வதீஸ்-Vathees said...

:)))

“நிலவின்” ஜனகன் said...

நல்ல அலசல்....


லோஸன் அண்ணா சொன்னதை அப்படியே சொல்கிறேன்..
/////கங்கோனை விட்டால் இப்படி அலச வேறு யாரும் கிடையாது////

வந்தியத்தேவன் said...

நல்லதொரு அலசல். பல வேலைகள் இருந்தபடியால் வானொலியில் கேட்கமுடியவில்லை. முரளியின் சாதனையை உடைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை

நீருஷா

கோபி சுழல்பந்துவீச்சாளர் அல்ல வேகப்பந்து வீச்சாளர் மணிக்கு 100கிலோமீற்றர் வேகத்தில் வீசும் ஆற்றல் அஅவரிடம் உண்டு,

தர்ஷன் said...

நல்ல அலசல்

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லதொரு அலசல், இந்த உலக கிண்ண போட்டிகளில் சுழல்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நம்பலாம்

Subankan said...

:)

அருமையான அலசல் கன்கொன். அடுத்ததாக பவனிற்குப்பின் வேகப்பந்துவீச்சு என்பதை அலசவும் #நேயர் விருப்பம்

SShathiesh-சதீஷ். said...

இதில் சுழற்பந்து வீச்சாளரான சகலதுறை வீரர் கோபிகிருஷ்ணாவின் பெயரைக் காணவில்லையே?//
AHEM

டக்கால்டி said...

நல்ல அலசல்.

கன்கொன் || Kangon said...

வருகை தந்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.