Saturday, December 31, 2011
2011ம் ஆண்டின் இறுதிப் புலம்பல்.
பதிவுலகிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாகவே விலகியிருந்தேன். நான் தவறவிடாமல் வாசிக்கும் பதிவுகளைக்கூட வாசிப்பதை அண்மைக்காலத்தில் தவறிவிட்டிருந்தேன்.
முன்பளவுக்கு வெட்டி இல்லை என்றபோதிலும், பதிவுகளை வாசிக்க முடியாதளவுக்கு வேலைப்பழுவுடன் இருக்கிறேனே என்ற கேள்வியை எனக்கு நானே அடிக்கடி கேட்டுப் பார்ப்பதுண்டு. நேரமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.
இந்த வருடத்தில் எழுதிய பதிவுகள் மிகச் சொற்பம், வாசித்தவையும் சொற்பம்.
இந்த வருடம் இன்றுடன் நிறைடைகிறது/முடிவடைகிறது.
இந்த 2011 என்ற முடிவடைந்தால் என்ன, ஏன் இந்தப் பெரும் ஆரவாரங்கள் என்று யோசித்துப் பார்த்தேன். 2011 என்பது வெறும் எண் தானே. 2011ம் ஆண்டு இரவு 11.59 இற்கு இருக்கும் சூழ்நிலைகள், வெறும் 1 ஒரு நிமிடத்தில் தலைகீழாக மாறி ஏதாவது நடக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பிப் பார்த்தேன்.
இதில் இன்றா 2012ம் ஆண்டு பிறக்கிறது என்று வேறு குழம்பிப் போனேன். காலையில் எழுந்து பேஸ்புக் பக்கம் வந்து பார்த்தால், நிறையப் பேர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அலைபேசியில் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், பக்கத்தில் இருந்த அலுவலக/அறை சகோவிடம் இன்றா, நாளையா 2012 பிறக்கிறது என்று வேறு கேட்டுத் தொலைத்தேன்.
இந்த வருடம் தனிப்பட்டு மோசமான வருடங்களில் ஒன்றாக அமைந்தது. 2008 இற்குப் பின் மிக மோசமான வருடமாக அமைந்து போனது. வரும் போது தான் யோசித்துப் பார்த்தேன், 2008ம் ஆண்டு ஓரளவு பரவாயில்லாத ஆண்டாக அமைந்திருந்தாலும் கூட இந்தாண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கலாம். ம் ம்... அனுபவங்கள், பாடங்கள்... வேறு என்ன சொல்ல.
இந்த ஆண்டு கிழித்தது என்று ஒன்றும் கிடையாது என்று நினைக்கிறேன்.
வெற்றியில் இணைந்தது, கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது, என்னால் முடிந்தளவு பணியாற்றியிருக்கிறேன்/பணியாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்த ரீதியில் இவ்வாண்டு புதிதான அனுபவம்.
வெற்றியின் காரணமாக பெற்ற நண்பர்கள், விசேடமானவர்கள் என்று ஒரு பக்கமாக நல்ல விடயங்களையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் நிறைய இழந்திருக்கிறேன், 3 வருடங்களுக்கு முன்னர் இருந்த எனக்கும், இன்றுள்ள எனக்குமிடையிலான வித்தியாசங்களை என்னால் உணரமுடிகிறது, கடந்த வருடத்தில் இருந்த எனக்கும் இப்போது இருக்கிற எனக்குமிடையிலான வித்தியாசங்களையும் உணரமுடிகிறது.
இன்னும் ஒரு மணித்தியாலத்தில் பிறக்கப் போகிற அல்லது பிறப்பதாக நாங்கள் எண்ணப் போகிற 2012ஆம் ஆண்டிலாவது ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா என்று பார்ப்போம்..
அத்தோடு அதிகம் காயப்பட்ட ஆண்டாகவும் இந்த ஆண்டு மாறிப்போனது. சில விமர்சனங்களை அல்லது விஷங்களை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. அதுவும் நாங்கள் எதிர்பார்க்காத, அதிகம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் விஷங்களை கக்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதுடன், நிறையக் காயங்களும் ஏற்படும்.
பேஸ்புக்கில் ஸ்ரேற்றஸ் போட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கிலும், ட்விற்றரிலும் புலம்புகிறேன், ஏன் இங்கு பதிவில் ஒருநாள் புலம்பக்கூடாது என்று யோசித்தேன்.
அதுதான் இந்தப் புலம்பல்.
இந்தப் பதிவை(?) எழுதும் போது பின்னால் 7ஆவது தடவையாக திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது "ஆருயிரே மன்னிப்பாயா?"
ஹ்ம்ம்...
"இல்லாமலே வாழ்வது இன்பம்,
இருந்தும் இல்லை என்பது துன்பம்".
புதுவருடம், புத்தாண்டு என்று கணக்கெடுப்பவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Labels:
அலட்டல்,
கடுப்பு,
புலம்பல்,
மனிதர்கள்,
மீள்பார்வை
Subscribe to:
Posts (Atom)